- புகையிலையால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதன் பயன்பாட்டினை குறைக்க வலியுறுத்தி மே 31ல் உலக புகையிலை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
- புகைப்பது ஒரு தவறான பழக்கம், புகைப்பது பணத்தை வீணடிக்கிறது, உடல்நலனுக்கு தீங்கு விளைவிக்கிறது. இதனால் அவர் சார்ந்த குடும்பமும் பாதிப்புக்கு உள்ளாகிறது. புகைபிடிப்பவரின் அருகில் இருப்பவர்களும் பாதிக்க நேரிடுகிறது.
- புகையிலையால் உலகில் ஒவ்வொரு நிமிடமும் 10 பேர் உயிரிழக்கின்றனர். பிரேசில், இந்தியா, சீனா ஆகிய நாடுகளில் தான் அதிகளவில் புகையிலை விளைவிக்கப்படுகிறது.
- இந்தியாவில் 12 கோடி பேர் புகைக்கின்றனர். புகையிலையால் ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.புகையிலை பயன்படுத்துவதால், நுரையீரல் கேன்சர், காசநோய், ஆஸ்துமா, மாரடைப்பு உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகிறது.
- இதை விளக்கும் வகையில் உலகின் 78 நாடுகளில், புகையிலை பாக்கெட்டுகளில், அதன் தீங்கு குறித்து பெரிய அளவில் எச்சரிக்கை விளம்பரம் இடம்பெற்றுள்ளது. 80 லட்சம் புகையிலை பயன்பாட்டால் உலகில் ஆண்டுதோறும் 80 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.
- இதில் 10 லட்சம் பேர், புகைப்பவர்களின் அருகே சுவாசிப்பவர்கள்.7.5 கோடிசிகரெட், புகையிலை தொடர்பான விளம்பரங்களுக்கு மணிக்கு ரூ. 7.5 கோடிக்கு மேல் செலவிடப்படுகிறது. நாள் ஒன்றுக்கு ரூ. 188 கோடி செலவிடுகின்றனர்.
உலக புகையிலை எதிர்ப்பு தினம் / World Anti-Tobacco Day
May 31, 2020
0
Tags