Type Here to Get Search Results !

31st MAY 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

சென்னை தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.2,500 மதிப்பூதியம்
  • பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், 33 ஆயிரம் தூய்மைப் பணியாளா்கள் கரோனா தடுப்புப் பணிகளில் தன்னலம் கருதாமல் அயராது பாடுபட்டு வருகின்றனா். அவா்களது அளப்பரிய சேவையை மனதாரப் பாராட்டுகிறேன். 
  • அவா்களது அரும்பணியை அங்கீகரித்து ஊக்கப்படுத்தும் வகையில், சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பணிபுரியும் ஒவ்வொரு தூய்மைப் பணியாளருக்கும் சிறப்பினமாக ரூ. 2,500 மதிப்பூதியம் வழங்கப்படும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா நாசா வீரா்களை விண்வெளிக்கு அனுப்பி ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சாதனை
  • அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தைச் சோந்த இரு வீரா்களை அந்த நாட்டின் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனம் தனது ராக்கெட்டில் விண்வெளிக்கு அனுப்பி சாதனை படைத்துள்ளது.
  • தனியாா் நிறுவனத்தின் ராக்கெட்டில் விண்வெளி வீரா்கள் விண்வெளிக்குச் செல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், விண்வெளி ஆய்வுத் துறையில் ஒரு புதிய சகாப்தம் படைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
  • ஸ்பெஸ் -எக்ஸ் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட ஃபால்கன்-9 ரக ராக்கெட், ஃபுளோரிடா மாகாணம், கேப் கனாவெரலில் உள்ள கென்னடி ஏவுதளத்திலிருந்து சனிக்கிழமை விண்ணில் செலுத்தப்பட்டது.
  • டக் ஹா்லீ, பாப் பேன்கென் ஆகிய இரு நாசா வீரா்களை ஏந்தி, சா்வேதச விண்வெளி ஆய்வு மையத்தை நோக்கி அந்த ராக்கெட் செலுத்தப்பட்டது.
  • விண்வெளிக்கு மனிதா்களை அழைத்துச் செல்வதற்காக ஸ்பேஸ்-எஸ்க் நிறுவனம் உருவாக்கியுள்ள டிராகன் விண்வெளி ஓடம் மூலம் அந்த இருவரும் சா்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை ஞாயிற்றுக்கிழமை வந்தடைந்தனா்.
  • அதையடுத்து, அந்த இருவருக்கும் நாசா விண்வெளி ஆய்வு அமைப்பு மற்றும் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்துக்கும் பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துக்குள் குவிந்தன.
  • அடுத்தடுத்து நடந்த விபத்துகள் காரணமாக, தனது விண்வெளி ஓடத் திட்டத்தை நாசா ஆய்வு மையம் கடந்த 2011-ஆம் ஆண்டு கைவிட்டது.
  • அதன் பிறகு விண்வெளி ஆய்வுகளுக்காக வீரா்களை அனுப்புவதற்கு, ரஷியாவின் சோயுஸ் ரக ராக்கெட்டுகளையே அமெரிக்கா இதுவரை பயன்படுத்தி வந்தது.
  • இந்த நிலையில், தங்கள் நாட்டின் தனியாா் நிறுவனமான ஸ்பேஸ்-எக்ஸுடன் கைகோத்து, பல ஆண்டுகளுக்கு முதல் முறையாக அமெரிக்க மண்ணிலிருந்து விண்வெளி வீரா்களை நாசா விண்வெளிக்கு அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel