Type Here to Get Search Results !

5th APRIL 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

கொரோனா தடுப்பு பணிகளுக்கு 101 கோடி ரூபாய் ஒதுக்கீடு: தமிழக அரசு உத்தரவு
  • கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் தமிழக போலீசாருக்கு 33 நாட்களுக்கு தலா 250 ரூபாய் வீதம் உணவுப்படியாக 8250 ரூபாய் வழங்க ஆணையிட்டுள்ளது அதற்காக 75.27 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
  • அத்யாவசியப்பணிகளை மேற்கொண்டுவரும் குடிமைப்பொருள் வழங்கல் துறையின் 35 ஆயிரம் பணியாளர்களுக்கு மாஸ்க், கிருமிநாசினி வாங்க 1.42 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • மக்கள் நெருக்கம் அதிகம் கொண்ட குடிசைமாற்று வாரிய குடியிருப்புகளில் நோய்த்தடுப்பு பணிகளை செய்யத்தேவையான உபகரணங்கள், ரசாயனங்கள் வாங்க 1.9 கோடியும், தற்காலிக தனிமைப்படுத்துதல் முகாம்களை அமைக்க சுகாதாரத்துறைக்கு 22.57 கோடியும், பேரிடர் மேலாண்மை குழுவிற்குத்தேவையான நோய்த்தடுப்பு பொருட்கள் வாங்க ₹50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 



பிரதமரின் வேண்டுகோளை ஏற்று நாடு முழுவதும் விளக்கேற்றும் மக்கள்
  • பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று நாடு முழுவதும் பல்வேறு பகுதியில் மின் விளக்குகளை அணைத்து டார்ச் லைட்டுகள் மற்றும் அகல் விளக்குகளை ஏற்றி வருகின்றனர்.
  • கடந்த சில தினங்களுக்கு முன்பு நாட்டு மக்கள் மத்தியில் உரையாற்றிய மோடி, "ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணி முதல் 9 நிமிடம் வீட்டின் விளக்குகளை அணைத்துவிட்டு, டார்ச், அகல் விளக்குகளை ஏற்ற வேண்டும். 
  • 9 நிமிடங்கள் விளக்கு ஏற்றும் போது, அமைதியாக இருந்து நாட்டு மக்களை குறித்து சிந்தியுங்கள். செல்போன் மூலமாகவும் 9 நிமிடங்கள் ஒளியேற்ற வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.
கொரோனா விவகாரம் ஊடகங்களுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
  • ஊடகங்கள் தவறான செய்திகளை வெளியிடுவதால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இடையூறு ஏற்படுவதாக மத்திய அரசு உச்ச்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. 
  • அதனால் மத்திய அரசு அளிக்கும் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் ஊடகங்கள் செய்தி வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் மனுதாக்கல் செய்திருந்தது.
  • இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, கொரோனா வைரஸூக்கு எதிரான போராட்டத்தில் போலி செய்திகள் பெரும் தடையாக இருப்பதாக மத்திய அரசு வாதிட்டது. 
  • இதனை அடுத்து, அரசு வழங்கிய நெறிமுறைகளில் இருந்து விலகி, உண்மை அறியாமல் எந்த ஊடக நிறுவனமும், பத்திரிகையும் செய்தி வெளியிடவோ, அச்சிடவோ கூடாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel