9 நிமிடத்தில் எவ்வளவு மின் நுகர்வு அளவு குறைந்தது
- கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மக்களின் ஒற்றுமையை நிரூபிக்க வேண்டி இரவு 9 மணிக்கு மின்விளக்குகளை அணைத்துவிட்டு தீபங்கள் மற்றும் மெழுகுவர்த்திகளை ஏற்ற பிரதமர் மோடி அறிவுறுத்தியிருந்தார்.
- மின்சார விளக்குகள் நிறுத்தப்பட்டதால் சென்னையில் மட்டும் 350 மெகாவாட் மின்சாரம் மிச்சப்பட்டதாக தெரிவிக்கப்படுள்ளது. அதோடு, தமிழகம் முழுவதும் 2200 மெகாவாட் மின்சாரம் சேமிக்கப்பட்டதாக தெரிகிறது.
- இதோடு, நாட்டின் தெற்கு மண்டலத்தில் மின் நுகர்வு அளவு இயல்பான அளவைவிட 5,978 மெகாவாட் குறைந்துள்ளது. வடக்கு மண்டலத்தில் 10,413 மெகாவாட், மேற்கு மண்டலத்தில் 8,464 மெகாவாட், கிழக்கு மண்டலத்தில் 6,136 மெகாவாட் அளவுக்கு மின் பயன்பாடு குறைந்தது என தகவல் வெளியாகியுள்ளது.
காணொலிக் காட்சி வழியாக மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
- கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் நடவடிக்கை தொடர்பாக மாநில முதல்வர்கள், அரசு அதிகாரிகள், மருத்துவ துறையினர் என பல தரப்பினருடன் பிரதமர் மோடி காணொலிக் காட்சி வசதி மூலம் உரையாடி வருகிறார்.
- காட்சி ஊடக பிரதிநிதிகள், பத்திரிகை ஆசிரியர்கள், ரேடியோ ஜாக்கிகளுடனும் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து நாட்டின் முன்னணி சமூக மற்றும் மத அமைப்பினருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
- பின்னர் உலகம் முழுவதும் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுடன் அவர் காணொலிக் காட்சியில் உரையாற்றினார். கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து முதல்வர்களுடனும் பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
- இதன் தொடர்ச்சியாக மத்திய அமைச்சரவைக் குழு கூட்டம் காணொலிக் காட்சி மூலம் இன்று நடந்தது. அவருடன் மூத்த அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷ உள்ளிட்டோரும் பங்கேற்றனர். வேறு சில அமைச்சர்கள் ஆங்காங்கே காணொலியில் இணைந்தனர்.
- கரோனா தொற்று பரவாமல் தடுப்பது இதற்காக அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து பணியாற்றுவது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் மாநில அரசுகளுடன் இணைந்து கரோனா ஒழிப்பு பணியை மேற்கொள்வது பற்றியும் அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசித்தார்.
கேரளத்தில் முதல் முறையாக நடமாடும் கரோனா பரிசோதனை மையம் அமைப்பு
- கேரளத்தில் கரோனா பரிசோதனை செய்யும் மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நவீன பாதுகாப்பு அறையை எர்ணாகுளம் மாவட்ட நிர்வாகம் நிர்மாணித்துள்ளது.
- கேரளத்தைச் சேர்ந்த கலாம்சேரி மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மருத்துவர் கணேஷ் மோகன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் இந்த பரிசோதனைக் கூடத்தை வடிவமைத்துள்ளனர்.
- இதுபோன்றதொரு கட்டமைப்புதான் தென் கொரியாவில் அதிகளவில் மருத்துவப் பரிசோதனை நடத்த பயன்படுத்தப்படுகிறது என்றும், இதன் மூலம் வெறும் 2 நிமிடத்தில் ஒருவருக்கு ரத்த மற்றும் சளி மாதிரிகளை எடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்த பாதுகாப்பு அறை மூலம், பரிசோதனை செய்து கொள்பவர்களுக்கும், மருத்துவப் பணியாளர்களுக்கும் நேரடியாக எந்த தொடர்பும் ஏற்படாது. இந்த பாதுகாப்பு அறையை அமைக்க ரூ.40 ஆயிரம் செலவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நான்கு பக்கமும் மூடப்பட்டு, ஒரு பக்கம் கண்ணாடி சுவரைக் கொடு இருக்கும். அதன் வெளிப்புறத்தில் இருக்கை அமைக்கப்பட்டிருக்கும், கண்ணாடி சுவரில் இரண்டு கையுறைகளும் பொருத்தப்பட்டிருக்கும். அதன் வழியாக மருத்துவப் பணியாளர் ரத்த மற்றும் சளி மாதிரிகளை எடுக்கலாம்.
- ஒவ்வொரு முறை பரிசோதனை நடத்தப்பட்டதும், கையுறைகளும், கேபினும் கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்தப்படும். தற்போதைக்கு இரண்டு மாதிரிகள் உருவாக்கப்பட்டுள்ளது. தேவைப்படின் குறுகிய காலத்தில் மேலும் பல பாதுகாப்பு அறைகள் உருவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தின் நிகர வருவாய் ரூ.161.05 கோடி: முந்தைய ஆண்டை விட 3.5 மடங்கு அதிகரிப்பு
- வ.உ.சிதம்பரனார் துறைமுகம் 2019-2020-ம் நிதியாண்டில் 36.08 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டுள்ளது. இது முந்தைய 2018-2019-ம் நிதியாண்டில் கையாளப்பட்ட 34.34 மில்லியன் டன் சரக்குகளை விட 5.05 சதவிகிதம் அதிகமாகும்.
- இறக்குமதியை பொருத்தவரையில் 25.82 மில்லியன் டன்களும் (71.57 சதவீதம்), ஏற்றுமதியை பொருத்தவரையில் 10.25 மில்லியன் டன்களும் (28.41 சதவீதம்) கையாளப்பட்டுள்ளது.
- சரக்கு பெட்டகங்களை பொறுத்தவரை 2019-2020-ம் நிதியாண்டில் 8.03 லட்சம் சரக்கு பெட்டகங்கள் கையாளப்பட்டுள்ளன. இது முந்தைய நிதியாண்டில் கையாளப்பட்ட அளவான 7.39 சரக்கு பெட்டகங்களை ஒப்பிடுகையில் 8.72 சதவீதம் கூடுதலாகும்.
- முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2019- 2020-ம் நிதியாண்டில் சரக்கு பெட்டகங்கள் 8.72 சதவீதம், தொழிலக கரி 29.54 சதவீதம், கால்நடை தீவனம் 225.40 சதவீதம், கந்தக அமிலம் 79.44 சதவீதம் மற்றும் ராக் பாஸ்பேட் 32.84 சதவீதம் கூடுதலாக கையாளப்பட்டுள்ளது.
- வ.உ.சிதம்பரனார் துறைமுகம் 2019-2020 நிதியாண்டில் 1,447 கப்பல்களை கையாண்டுள்ளது. இது முந்தைய 2018-2019 நிதியாண்டில் கையாளப்பட்ட 1,370 கப்பல்களை ஒப்பிடுகையில் 5.62 சதவிகிதம் கூடுதலாகும்.
- வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் 2019-2020 நிதியாண்டில் இயக்க வருவாய் ரூ.625.08 கோடியாகும். இயக்க உபரி வருவாய் ரூபாய் 375.75 கோடியாகும்.
- 2019-2020 நிதியாண்டில் வரி பிடித்ததற்கு பின்பு உள்ள நிகர உபரி வருவாய் ரூ.161.05 கோடியாகும். முந்தைய 2018- 2019-ம் ஆண்டில் நிகர உபரி வருவாய் ரூ.45.13 கோடி மட்டுமே. இந்த ஆண்டு சுமார் மூன்றரை மடங்கு வருவாய் அதிகரித்துள்ளது.
கொரோனா தடுப்புக்காக மாநிலங்களுக்கு மேலும் ரூ.3,000 கோடி நிதி - சுகாதாரத்துறை
- பல்வேறு மாநிலங்களும் தங்களுக்கு நிவாரண உதவி வழங்கவேண்டுமென மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துவருகிறது. இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மாநிலங்களுக்கு மேலும் ரூ.3,000 கோடி நிதி வழங்குவதாகவும் ஏற்கெனவே ரூ.1,100 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மாா்ச்சில் ரூ.1.18 லட்சம் கோடி முதலீடுகளை திரும்பப் பெற்ற அன்னிய முதலீட்டாளா்கள்
- கரோனா தொற்று அச்சுறுத்தலைத் தொடா்ந்து, இந்திய நிதிச் சந்தைகளில் இருந்து மாா்ச் மாதத்தில் மட்டும் சுமாா் 1.18 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகளை அன்னிய முதலீட்டாளா்கள் (எஃப்பிஐ) திரும்பப் பெற்றுள்ளனா்.
- சமீபத்திய தரவுகளின்படி, எஃப்.பி.ஐ.க்கள் கடந்த மாதம் பங்குச் சந்தையில் இருந்து ரூ .61,973 கோடி, கடன் சந்தையில் இருந்து ரூ .56,211 கோடி என மொத்தம் ரூ .1,18,184 கோடி அளவுக்கு முதலீடுகளை திரும்பப் பெற்றுள்ளனா்.
- 2019, செப்டம்பா் 9 முதல் எஃப்.பி.ஐ.க்கள் தொடா்ச்சியாக ஆறு மாத முதலீட்டிற்குப் பிறகு, தற்போதுதான் அதிகளவு முதலீட்டை திரும்பப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
- மேலும், இந்த ஏப்ரல் மாதத்தில் இரண்டு வா்த்தக நாள்களில் எஃப்பிஐக்கள் இதுவரை இல்லாத அளவாக மொத்தம் ரூ.6,735 கோடி அளவுக்கு முதலீடுகளை திரும்பப் பெற்றுள்ளனா். இதில் பங்குச் சந்தையில் பங்குகள் விற்பனை மூலம் ரூ.3,802 கோடி, கடன் சந்தையிலிருந்து ரூ.2,933 கோடி அளவுக்கு முதலீடுகளை திரும்பப் பெற்றுள்ளனா்.
இந்தியாவுக்கு 1.7 லட்சம் முழு கவச உடை இலவசமாக அளித்தது சீனா
- இந்தியாவில் கொரோனா ஒழிப்பு பணியில் ஈடுபடும் மருத்துவ பணியாளர்கள் பயன்படுத்துவதற்காக 1 லட்சத்து 70 ஆயிரம் முழு கவச உடைகளை(பிபிஇ) சீனா தானமாக அளித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று தெரிவித்தது. இது தவிர உள்நாட்டில் 20 ஆயிரம் முழு கவச உடைகள் வாங்கப்பட்டன.
- இத்துடன் சேர்த்து ஒரு லட்சத்து 90 முழு கவச உடைகள் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன. நம் நாட்டில் ஏற்கனவே 3 லட்சத்து 87 ஆயிரத்து 473 கவச உடைகள் உள்ளன.
- மாநிலங்களுக்கு இதுவரை 2.94 லட்சம் கவச உடைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 80 லட்சம் கவச உடைகள் சப்ளை செய்ய சிங்கப்பூர் நிறுவனத்திடம் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது.
தொகுதி மேம்பாட்டுக்கு வழங்கப்படும் எம்.பி.க்கள் நிதி 2 ஆண்டுக்கு நிறுத்தம்: ஜனாதிபதி, பிரதமர், ஆளுநர், அமைச்சர்களின் ஊதியத்தில் 30 சதவீதம் பிடித்தம்
- கொரோனா தடுப்பு பணிக்கு பயன்படுத்தும் வகையில் எம்.பி.க்கள் சம்பளம், படிகள், மற்றும் ஓய்வூதியத்தை ஓராண்டு காலத்துக்கு 30 சதவீதம் குறைக்கும் வகையில் அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது.
- இதற்கு மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. எம்.பி.க்களின் தொகுதி வளர்ச்சி நிதியையும், 2020-21 மற்றும் 2021-22ம் நிதியாண்டுகளுக்கு தற்காலிகமாக நிறுத்தவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
இந்தியாவுக்கு அமெரிக்கா ரூ.220.55 கோடி நிதியுதவி
- சா்வதேச பொது சுகாதாரத்துக்கு அச்சுறுத்தலாக இருக்கும் கரோனா நோய்த்தொற்றை அரசுகளும் சா்வதேச அமைப்புகளும் இணைந்து செயல்பட்டு ஒழிக்க முடியும்.
- இந்த நோய்த்தொற்றை ஒழிக்கும் பணியில் சா்வதேச வளா்ச்சிக்கான அமெரிக்க அமைப்பு(யுஎஸ்எய்ட்), நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம்(சிடிசி) ஆகியவற்றின் மூலமாக இந்தியாவுடன் இணைந்து அமெரிக்கா செயல்பட்டு வருகிறது.
- இதற்காக, சா்வதேச நாடுகளுக்கு 140 கோடி டாலா் (இந்திய மதிப்பில் ரூ.10,647 கோடி) நிதியுதவி வழங்குவதற்கு அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அதில், இந்தியாவுக்கு 2.90 கோடி டாலா் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.220.55 கோடி) வழங்கப்படும்.
- கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவுக்கு அமெரிக்கா சுமாா் 300 கோடி டாலா் (இந்திய மதிப்பில் ரூ.22,815 கோடி) வரை நிதியுதவி அளித்துள்ளது.
கொரோனா பாதிப்பு: ககன்யான் திட்ட பயிற்சியை நிறுத்தியது ரஷ்யா
- விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி ஆய்வு செய்யும் 'ககன்யான்' திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் இந்திய வீரர்களுக்கு பயிற்சியளிக்க ரஷ்ய நிறுவனத்துடன் 'இஸ்ரோ' ஒப்பந்தம் செய்துள்ளது.
- இதன்படி டிச. 2021ல் 'ககன்யான்' திட்டத்தின் மூலம் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப தேர்வு செய்யப்பட்ட வீரர்களுக்கு பயிற்சியை ரஷ்யா நிறுத்தி வைத்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலால் ஜப்பானில் அவசரகால நிலை பிரகடனம்
- அவசரகால நிலை பிரகடனம்... கொரோனா வைரஸின் பரவல் காரணமாக ஜப்பானில் டோக்கியோ உள்ளிட்ட 6 நகரங்களுக்கு அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
- இதேவேளை, ஸ்கொட்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளராக அனுராக் ஸ்ரீவாஸ்தவா பொறுப்பேற்பு
- இந்திய வெளியுறவு விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடா்பாளராக இந்திய வெளியுறவு பணி மூத்த அதிகாரி அனுராக் ஸ்ரீவாஸ்தவா திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.
- கடந்த 1999-ஆம் ஆண்டு பிரிவு இந்திய வெளியுறவு பணி அதிகாரியான இவா், எத்தியோப்பியா நாட்டுக்கான இந்தியத் தூதராக பணியாற்றியவா்.