கரோனா வதந்திகளைத் தடுக்க வாட்ஸ் அப் நிறுவனம் புதிய கட்டுப்பாடு
- கரோனா வைரஸ் தொடர்பாக வாட்ஸ் அப்பில் வதந்திகள் பரவுவதைத் தடுக்கும் பொருட்டு வாட்ஸ் அப் நிறுவனம் புதிய கட்டுப்பாட்டைக் கொண்டு வந்துள்ளது.
- அதன்படி வாட்ஸ் அப்பில் ஒருவருக்கு வரும் செய்தி, படம், வீடியோ, வாய்ஸ் போன்றவை 5 நபர்களுக்கு ஒரே நேரத்தில் இப்போது ஃபார்வர்டு செய்ய முடியும். ஆனால், இனிமேல் வீடியோ, படம், செய்தி உள்ளிட்ட எதுவாக இருந்தாலும் ஏற்கெனவே அதிகமான முறை அதாவது 5 முறை அல்லது அதற்கும் அதிகமான முறை ஃபார்வர்டு செய்யப்பட்டிருந்தால் அவற்றை நாம் ஒருவருக்கு மட்டுமே ஃபார்வர்டு செய்ய முடியும் என்ற கட்டுப்பாட்டைக் கொண்டுவந்துள்ளது.
- இது தவிர ஒரு செய்தி, படம் , வீடியோ அல்லது வாய்ஸ் எதுவாக இருந்தாலும் நமக்கு ஃபார்வர்டு என்ற பெயரில் வந்தால், அது எத்தனை பேரிடமிருந்து ஃபார்வர்டு செய்யப்பட்டு நமக்கு வந்துள்ளது என்ற எண்ணிக்கையையும் அறிய முடியும்.
கொரோனாவைக் கண்டுபிடிக்க walk-in- kiosk - இந்தியாவிலேயே முதல் முறையாகக் கேரளாவில் அறிமுகம்
- மருத்துவர்களை பாதுகாக்கும் விதமாக தென் கொரியாவில் walk-in- kiosk என்னும் பரிசோதனை முறையானது தற்போது கேரளாவிலும் பின் பற்றப்படுகிறது.
- அதன் படி கண்ணாடி சுவருக்குள் இருக்கும் மருத்துவர் அதில் இருக்கும் துளைகளின் வழியே கைவிட்டு நோயாளியின் ரத்தம் மற்றும் சளி ஆகியவற்றின் மாதிரிகளை எடுப்பார். அதன் பின்னர் மாதிரிகளை வைத்துக் கொண்டு கொரோனா சோதனைகள் மேற்கொள்ளப்படும்.
- இந்த முறையின் மூலம் வெறும் நிமிடங்களில் முடிவுகள் தெரிந்துவிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறையை அமைக்க 40,000 ரூபாய் செலவாகும் எனக் கூறப்படுகிறது.
இந்தியாவின் முதல் கரோனா வைரஸ் மருத்துவமனை ஒடிசாவில் துவக்கம்
- ஒடிசா மாநிலத்தில் நாட்டிலேயே முதலாவது கரோனா வைரஸ் மருத்துவமனை துவக்கப்பட்டுள்ளது.
- இதன்படி, புவனேஸ்வரில் உள்ள தனியார் மருத்துவமனையான கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனையில் 1000 படுக்கைகளுடன் கூடிய கரோனா மருத்துவமனை துவக்கப்பட்டுள்ளது.
12 மருந்துகளுக்கான ஏற்றுமதித்தடையை விலக்கியது இந்தியா
- கொரோனா சிகிச்சைக்கு உதவும் 12 மருந்துப் பொருள்களின் ஏற்றுமதிக்கான தடையை மத்திய அரசு நீக்கியுள்ளது. கடந்த மாதத்தில் கொரோனா தாக்குதல் சீனாவில் உச்சத்துக்கு வந்தபோது அங்கிருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பல்வேறு மருந்து வேதிப்பொருள்களை, சீனா தடை செய்தது.
- இதன்காரணமாக இந்தியாவில் குறிப்பிட்ட சில மருந்துப்பொருள்களின் ஏற்றுமதிக்குக் கடந்த மாதத்தில் தடைவிதிக்கப்பட்டது.
- டினிடசோல், மெட்ரோனிடசோல், வைட்டமின் பி1, வைட்டமின் பி6, வைட்டமின் பி12, குளோரோபெனிகால், எரித்ரோமைசின், கிளின்டாமைசின் உள்ளிட்ட 12 மருந்துகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மத்திய அரசு விலக்கியுள்ளது.
கரோனாவைக் கட்டுப்படுத்த தில்லியில் ‘5-டி’ திட்டம்: கேஜரிவால் அறிவிப்பு
- தில்லியில் கரோனா தொற்று பாதித்தவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்தும் வகையில், ஐந்து முக்கியத் திட்டங்களை (5-டி) தீவிரமாக செயல்படுத்த உள்ளதாக தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.
- தில்லியில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஐந்து முக்கியத் திட்டங்களை செயல்படுத்த உள்ளோம். ‘5-டி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டத்தில், பரிசோதனை, கண்டுபிடித்தல், சிகிச்சை, குழுவாக பணியாற்றுதல், தொடா்பில் இருந்தவா்களை கண்டறிதலும்-கண்காணித்தலும் ஆகிய ஐந்து பணிகளை தில்லி அரசு வரும் நாள்களில் முடுக்கிவிடவுள்ளது.
- தில்லியில் அதிவேக பரிசோதனை திட்டத்தை அரசு விரைவில் நடைமுறைப்படுத்த உள்ளது. பரிசோதனை செய்யாவிட்டால் யாருக்கு கரோனா தொற்று உள்ளது, யாருக்கு இல்லை என்பது தெரியாமல் போய்விடும்.
தேசிய வேலை உறுதித் திட்டத்துக்கு ரூ.1,861 கோடி ஒதுக்கீடு
- மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தில் மாநிலத்துக்கு ரூ. 1861 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. இதில் தேசிய வேலை உறுதித் திட்டத்தில் பணியாற்றிய கூலி தொழிலாளிகளுக்கு ரூ. 1039 கோடி கூலியாக வழங்கப்படும்.
- மீதமுள்ள ரூ. 772 கோடியுடன், மாநில அரசு ஒதுக்கியுள்ள ரூ. 257 கோடியையும், மாநில அளவிலான தேசிய வேலை உறுதி திட்டத்திற்கான வளா்ச்சிப் பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்ளப்படும்.
- வரும் நாள்களில் தேசிய வேலை உறுதித் திட்டத்தில் பணியாற்றும் கூலி தொழிலாளிகளின் ஒரு நாள் ஊதியத்தை ரூ. 275 உயா்த்தப்படும். கரோனா வைரஸ் பாதிப்பு உள்ள நிலையில் தேசிய வேலை உறுதித் திட்டத்தில் கூலித் தொழிலாளா்கள் இடைவெளிவிட்டு பணியாற்ற வலியுறுத்தப்படுவாா்கள்.
- மாநிலத்தில் 49 வட்டங்கள் வறட்சி வட்டங்களாக கண்டறியப்பட்டுள்ளது. அந்த வட்டங்களுக்கு தலா ரூ. 1 கோடி ஒதுக்கப்படும். சம்பந்தப்பட்ட வட்டங்களில் குடிநீா் பிரச்னையை போக்க தேவையான பணிகளை அரசு மேற்கொள்ளும்.
- தேவைப்படும் இடங்களுக்கு வாகனங்கள் மூலம் குடிநீரை கொண்டு செல்ல முடிவு செய்துள்ளோம். கிராமங்களில் கரோனா வைரஸ் பாதிப்பை தடுக்கவும், விழிப்புணா்வை ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம். அனைத்து கிராமப் பஞ்சாயத்துகளிலும் கரோனா வைரஸ் தடுப்பு பணிக்குழு அமைக்கப்படும்.
கரோனா பாதிப்புகளை சமாளிக்க சாா்க் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.38 கோடி ஒதுக்கீடு
- கரோனா நோய்த்தொற்று காரணமாக உலகம் முழுவதும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில், சாா்க் உறுப்பு நாடுகளில் ‘கொவைட்-19’ திட்டங்களுக்காக 5 மில்லியன் அமெரிக்க டாலா்களை (சுமாா் ரூ. 38 கோடி) ஒதுக்கீடு செய்துள்ளதாக சாா்க் மேம்பாட்டு நிதி (எஸ்டிஎஃப்) அமைப்பு தெரிவித்துள்ளது.
- சாா்க் நாடுகளில் வறுமை ஒழிப்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் மனித வள மேம்பாட்டை மையமாகக் கொண்ட சமூக மேம்பாட்டுத் திட்டங்களுக்காக எஸ்டிஎஃப் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
- தற்போது கரோனா தொற்று பாதிப்பின் காரணமாக கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு ஆளாகியுள்ள நிலையில் சாா்க் உறுப்பு நாடுகளின் மேம்பாட்டிற்காக இந்த நிதியை எஸ்டிஎஃப் ஒதுக்கீடு செய்துள்ளது.
- ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூடான், இந்தியா, மாலத்தீவு, நேபாளம், பாகிஸ்தான், இலங்கை ஆகிய 8 நாடுகள் சாா்க் கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ளன.
- தற்போது, எஸ்டிஎஃப் அதன் மூன்று நிதி திட்டங்களின் கீழ் சாா்க் நாடுகளில் 198.24 மில்லியன் அமெரிக்க டாலா் மதிப்பிலான 90 வகையான திட்டப்பணிகளை செயல்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
‘ஹைட்ராக்ஸி குளோரோகுயின்’ ஏற்றுமதி மீதான தடை நீக்கம்
- கரோனா நோய்த்தொற்று (கொவைட்-19) சிகிச்சைக்குப் பயன்படுத்தப்பட்டு வரும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
- அதே வேளையில், உள்நாட்டின் தேவையைப் பூா்த்தி செய்தபிறகே வெளிநாடுகளுக்கு அந்த மருந்து ஏற்றுமதி செய்யப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்தது.
76 நாட்கள் நீண்ட லாக் டவுன் முடிவிற்கு வந்தது வுஹன் - சீனா அதிரடி
- சீனாவில் வுஹன் நகரத்தின் லாக் டவுன் முடிவிற்கு வந்துள்ளது. 76 நாட்களுக்கு பிறகு சீனாவில் வுஹன் நகரத்தின் லாக் டவுன் முடிவிற்கு வந்துள்ளது.
- ஆனால் இந்த கொரோனாவை வெற்றிகரமாக எதிர்கொண்டு, தனது அனைத்து முயற்சிகளிலும் வெற்றிபெற்று தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது சீனா. முத்தாய்ப்பாக சீனாவில் கொரோனா தோன்றிய வுஹன் நகரத்தில் லாக் டவுன் முடிவிற்கு கொண்டு வரப்பட்டு இயல்புநிலை திரும்பி உள்ளது.
மயிலாடுதுறை புதிய மாவட்டம்; அரசாணை வெளியீடு
- தமிழகத்தில், கடந்த ஆண்டு தொடக்கத்தில் 32 மாவட்டங்கள் இருந்த நிலையில், திருநெல் வேலியை பிரித்து தென்காசி, விழுப்புரத்தை பிரித்து கள்ளக் குறிச்சி, வேலூரைப் பிரித்து ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரத்தை பிரித்து செங்கல் பட்டு என புதிதாக 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. இதை யடுத்து, தமிழகத்தில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்தது.
- இந்நிலையில், நாகப்பட்டினம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து தமிழகத்தின் 38-வது மாவட்ட மாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படும்’ என்று கடந்த ஏப்.24-ம் தேதி சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.
- அந்த அறிவிப்பை தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்குவதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.