Type Here to Get Search Results !

4th APRIL 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 47,556 கோடி டாலராக உயா்வு
  • நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு மாா்ச் 20 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்தது. அந்த வாரத்தில், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 76 வரை சரிந்தது. 
  • இதையடுத்து, ரூபாய் மதிப்பு சரிவைக் கட்டுப்படுத்த ரிசா்வ் வங்கி டாலா்களை அதிக அளவில் செலாவணி சந்தையில் விற்பனை செய்தது. இதன் காரணமாக, அந்த வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பானது 1,198 கோடி டாலா் சரிந்து 46,991 கோடி டாலரானது.
  • முந்தைய மாா்ச் 13 ஆம் தேதியுடன் நிறைவடைந் வாரத்திலும் செலாவணி கையிருப்பு 534 கோடி டாலா் குறைந்து 48,189 கோடி டாலராக இருந்தது. ஏறக்குறைய ஆறு மாதத்துக்குப் பிறகு இந்த வாரத்தில் தான் அந்நியச் செலாவணி கையிருப்பு முதல் முறையாக குறைந்தது.
  • இந்த நிலையில், தொடா் வீழ்ச்சிக்குப் பிறகு நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு மாா்ச் 27 ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 565 கோடி டாலா் அதிகரித்து 47,556 கோடி டாலரை எட்டியுள்ளது. இதற்கு அந்நியச் செலாவணியின் சொத்து மதிப்பு அதிகரித்ததே முக்கிய காரணம்.
  • ஒட்டுமொத்த கையிருப்பில் அதிக பங்களிப்பைக் கொண்டுள்ள அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு மாா்ச் 27-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 256 கோடி டாலா் அதிகரித்து 43,966 கோடி டாலராக இருந்தது.
  • தங்கத்தின் கையிருப்பு 303 கோடி டாலா் உயா்ந்து 3,089 கோடி டாலரானது. சா்வதேச நிதியத்தில் எஸ்டிஆா் 1.4 கோடி டாலா் ஏற்றம் கண்டு 142 கோடி டாலராகவும், நாட்டின் கையிருப்பு நிலை 4.4 கோடி டாலா் அதிகரித்து 358 கோடி டாலராகவும் இருந்தது என புள்ளிவிவரத்தில் ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.
  • மாா்ச் 6 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில்தான் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 569 கோடி டாலா் உயா்ந்து வரலாற்றில் முதல் முறையாக 48,723 கோடி டாலரை எட்டியிருந்தது நினைவுகூரத்தக்கது.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் எல்லா அரசு வேலைகளும் இனி, உள்ளூர் மக்களுக்கே: உத்தரவை மாற்றியது மத்திய அரசு
  • ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக கடந்தாண்டு அக்டோபரில் உருவாக்கப்பட்டன. 
  • சிறப்பு அந்தஸ்துடன் இருந்தபோது, காஷ்மீரில் வேறு மாநிலத்தினர் அரசு வேலையில் சேர முடியாது. இந்நிலையில், மத்திய அரசு கடந்த 1ம் தேதி பிறப்பித்த உத்தரவில், 'ஜம்மு காஷ்மீர் அரசு பணியில் குரூப் 4 பதவிகள் வரை மட்டுமே, உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கப்படும்,' என அறிவிக்கப்பட்டது. 
  • இதற்கு உள்ளூர் அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, இந்த உத்தரவை இரண்டே நாளில் மத்திய அரசு நேற்று மாற்றியது. நேற்று இரவு பிறப்பிக்கப்பட்ட புதிய உத்தரவில், 'காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் அனைத்து பதவிகளிலும் உள்ளூர் மக்களே பணியமர்த்தப்படுவர். 
  • காஷ்மீரைச் சேராதவர்கள் யாரும், காஷ்மீர் சிவில் சர்வீசில் பணி நியமனம் செய்ய தகுதியில்லை. உள்ளூர்வாசிகள் சட்டப்படி, ஜம்மு காஷ்மீரில் குறைந்தது 15 ஆண்டுகள் வசித்தவர்கள் அல்லது காஷ்மீரில் 7 ஆண்டுகள் படித்து 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு எழுதியவர்கள் மட்டுமே உள்ளூர்வாசிகளாக கருதப்படுவர். 
  • குடிபெயர்ந்தவர்களாக பதிவு செய்தவர்களும் உள்ளூர்வாசிகளாக கருதப்படுவர். அகில இந்திய பணியில் உள்ளவர்கள், காஷ்மீரில் 10 ஆண்டுகள் பணியாற்றி இருந்தால், அவர்களின் குழந்தைகளும் உள்ளூர்வாசிகள் பிரிவில் வருவார்கள்,' என கூறப்பட்டுள்ளது.
மத்திய அரசு புதிய வியூகம் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாநிலங்களில் தொகுப்பு திட்டம்: 211 மாவட்டங்களில் அமலாகிறது
  • நாட்டில் கொரோனா வைரஸ் அதிகமாக பரவுவதை கட்டுப்படுத்த, பாதிக்கப்பட்ட பகுதி முழுவதையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் 'தொகுப்பு திட்டம்' என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. 
  • இந்நிலையில் மகாராஷ்டிரா, கேரளா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கர்நாடகா, தெலங்கானா, டெல்லி மற்றும் லடாக்கில் கொரோனா மேலும் பரவுவதை தடுக்க, 'தொகுப்பு திட்டம்' என்ற கட்டுப்பாட்டு திட்டத்தை மத்தியங அரசு தயாரித்துள்ளது. நாடு முழுவதும் 211 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உள்ளது கண்டறிப்பட்டுள்ளது. 
  • இங்கு நோய் மேலும் பரவும் வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளன. இதனால், இந்த பகுதிகளை ஒட்டு மொத்தமாக கட்டுப்படுத்தி, நோய் பரவாமல் தடுக்கும் யுக்திகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதான் 'தொகுப்பு திட்டம்' யுக்தி.
  • இந்த தொகுதிப்பு திட்டத்தில், பாதிக்கப்பட்ட பகுதி முழுவதும் தனிப்படுத்தப்படும். இங்கு, சமூக இடைவெளி முறைகள் கடுமையாக கடைப்பிடிக்கப்படும்.
  • கண்காணிப்பை தீவிரமாக்கி, இப்பகுதியில் சந்தேக நபர்கள் அனைவரையும் பரிசோதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நோய் அறிகுறி உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.
  • பொது சுகாதார தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நடவடிக்கை மூலம் ஒரு பகுதியில் இருந்து கொரோனா தொற்று அடுத்த பகுதிக்கு செல்லாதவாறு கட்டுப்படுத்தப்படும். 



எப்போது வெளியே சென்றாலும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும்: மத்திய அரசு உத்தரவு
  • 'இனி வரும் நாட்கள் மிகவும் ஆபத்தானது என்பதால், மக்கள் அத்தியாவசிய தேவைக்காக எப்போது வெளியே சென்றாலும், குறைந்தப்பட்சம் வீட்டில் தயாரிக்கப்பட்ட முகக்கவசங்களை கட்டாயமாக அணிந்து செல்ல வேண்டும்,' என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. 
  • பயன்படுத்திய சுத்தமான பருத்தி துணிகளை, வீட்டில் முகக்கவசம் தயாரிக்க பயன்படுத்தலாம். இதற்கு நிறம் முக்கியமல்ல. அந்த துணியை வெந்நீரில் 5 நிமிடங்கள் ஊற வைத்து, நன்கு துவைத்து காய வைத்ததாக இருக்க ேவண்டும். முகக்கவசம் தயாரிக்கும்போது, முகத்தில் இடைவெளி ஏற்படாமல், கச்சிதமாக பொருந்துவதை உறுதி செய்ய வேண்டும்.
  • வீட்டில் தயாரித்த முகக் கவசங்களை பயன்படுத்துவது, ஒட்டு மொத்த சுகாதாரத்தையும் கடைப்பிடிக்க உதவும்.
  • இந்த முகக் கவசங்களை சுகாதார பணியாளர்கள், கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருக்கும் மருத்துவ பணியாளர்கள் பயன்படுத்தக் கூடாது. இவர்கள் மருத்துவ தரத்திலான முககவசங்களை அணிய வேண்டும்
  • நோய் பாதிப்பு இல்லாதவர்கள், சுவாச பிரச்னை இல்லாதவர்கள் கையால் தயாரிக்கப்பட்ட முகக் கவசங்களை பயன்படுத்தலாம். குறிப்பாக மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள இடங்களில், முகக் கவசத்தை கட்டாயம் அணிய வேண்டும்.
கொரோனா நோயாளிகளை காக்க வென்டிலேட்டர் தயாரிக்கிறது ஐஐடி
  • ஐதராபாத்தில் இயங்கி வரும் ஐஐடியில் உள்ள ஹெல்த்கேர் தொழில் முனைவோருக்கான மையம், அவசரகால வென்டிலேட்டர் தயாரிக்கும் பணியில் இறங்கியுள்ளது. 
  • இந்த வென்டிலேட்டர்கள் குறைந்த விலை மற்றும் ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்துக்கு எளிதில் எடுத்துச் செல்லக் கூடிய வகையில் தயாரிக்கப்படும். இதற்கு 'ஜீவன்லைட்' என்று பெயரிடப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 50 முதல் 70 வென்டிலேட்டர்களை தயாரிக்கவும் ஐஐடியில் திட்டமிடப்பட்டுள்ளது.
இரண்டு புதிய ஹெல்ப்லைன் எண்ணை வெளியிட்டது MHA கோவிட் -19
  • கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு மத்தியில் தேவைப்படுபவர்களுக்கு உதவ மத்திய உள்துறை அமைச்சகம் தனது கட்டுப்பாட்டு அறையில் இரண்டு புதிய ஹெல்ப்லைன் எண்களை அறிமுகப்படுத்தியுள்ளது. 
  • ஹெல்ப்லைன் எண்கள் 1930 (அகில இந்திய கட்டணமில்லா எண்) மற்றும் 1944 (வடகிழக்குக்கு அர்ப்பணிக்கப்பட்டவை). முன்னதாக, கோவிட் -19 நோய் தொடர்பான புகார்களுக்கு பதிலளிக்க உள்துறை அமைச்சக கட்டுப்பாட்டு அறையில் ஏழு ஹெல்ப்லைன்கள் செயலில் இருந்தன.
மாநில அரசுகளுக்கு ரூ.17,287 கோடி நிதி: விடுவித்தது மத்திய நிதியமைச்சகம் 
  • கொரோனா பிரச்னையால் மாநில அரசுகளின் நிதிநிலையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றுக்கு 17 ஆயிரத்து 287 கோடி ரூபாய் தொகையை மத்திய அரசு விடுவித்துள்ளது.
  • இத்தொகையில் 11 ஆயிரத்து 92 கோடி ரூபாய் மாநில பேரிடர் சமாளிப்பு நிதியில் முதல் தவணையாக தரப்பட்டுள்ளது. இது தவிர 15-ஆவது நிதிக்குழு பரிந்துரைத்தபடி வருவாய் பற்றாக்குறை மானிய வகையில் 6 ஆயிரத்து 195 கோடி ரூபாய் மாநிலங்களுக்கு தரப்படுவதாகவும் மத்திய நிதியமைச்சக அறிக்கை தெரிவிக்கிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel