Type Here to Get Search Results !

3rd APRIL 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

ஒருங்கிணைந்து செயல்பட ஐ.நா., சபையில் தீர்மானம் நிறைவேற்றம்
  • உலகம் முழுதும் பெரும் உயிரிழப்புகளையும் பொருளாதார பாதிப்புகளையும் கொரோனா வைரஸ் ஏற்படுத்தி வருகிறது. இதை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசிப்பதற்காக ஐ.நா. பொதுச் சபைகூட்டம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் நடந்தது. 
  • அப்போது இந்தியா உட்பட 188 நாடுகள் இணைந்து 'கொரோனா வைரசை ஒழிக்க சர்வதேச நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம்' என்ற தலைப்பிலான தீர்மானத்தைதாக்கல் செய்தன.இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.
  • தீர்மானத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.மனித குலத்துக்கு மிகப் பெரிய சவாலாகவும் பாதுகாப்புக்கு ஆபத்தாகவும் விளங்கும் இந்த வைரஸ் அனைவருக்கும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
  • இதற்கு முன் இந்த உலகம் சந்தித்திராத வகையில் சமூகத்திலும் பொருளாதாரத்திலும் பெரும் பாதிப்பை இந்த வைரஸ் ஏற்படுத்தி வருகிறது. கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் சீர்குலைந்துள்ளது.
  • எனவே கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் சர்வதேசநாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்; இந்த செயல்பாடு மிகவும் தீவிரமாக இருக்கவேண்டும்.
  • தகவல்கள் மருத்துவவசதிகளை பகிர்ந்து கொள்வது உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள வழிகாட்டும் குறிப்புகளை பின்பற்றுவது போன்றவற்றில் ஒருங்கிணைந்த செயல்பாடு அவசியம்.
  • இந்த நெருக்கடியான நேரத்தில் மனித உரிமைகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும். இன ரீதியாகபாகுபாடு காட்டும்நடவடிக்கை கூடாது.
  • இவ்வாறு அந்ததீர்மானத்தில் கூறப்பட்டு உள்ளது.இந்தியாவுக்கு ரூ.7,600 கோடி உலக வங்கி தாராளம்கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக உலக வங்கி சார்பில் இந்தியாவுக்கு 7,600 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. 
  • கொரோனா அறிகுறி உள்ளவர்களை கண்டறிதல் பரிசோதனை செய்தல் நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல் ஆய்வகம் அமைத்தல் மருத்துவ கருவிகள் வாங்குதல் சிறப்பு வார்டுகள் அமைத்தல் ஆகியவற்றுக்காக இந்த நிதியை மத்திய அரசு பயன்படுத்த உள்ளது.
  • இதுதவிர பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட ஏழை நாடுகளுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஒட்டுமொத்தமாக 6,840 கோடி ரூபாயை உலக வங்கி வழங்கியுள்ளது.
கரோனா வைரஸை எதிர்கொள்ள மாநிலங்களுக்கு ரூ.11,092 கோடி- மத்திய அரசு ஒப்புதல்
  • கரோனா வைரஸ் பாதிப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2-ம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு தேவையான நிதி ஒதுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
  • இதன்படி கரோனா வைரஸை எதிர்கொள்ள மாநிலங்களுக்கு ரூ.11,092 கோடி வழங்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று ஒப்புதல் வழங்கினார். மத்திய அரசு ஒதுக்கியுள்ள நிதி மாநிலங்களின் பேரிடர் நிவாரண நிதியில் சேர்க்கப்பட உள்ளது.
  • இதன்மூலம் அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். தனிமை முகாம்கள் அமைக்கப்படும். மருத்துவமனை, தனிமை முகாம்களில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு தேவையான உணவு, தண்ணீர், உடைகள், மருத்துவ வசதிகள் செய்து தரப்படும். அனைத்து மாநிலங்களிலும் கூடுதல் ஆய்வகங்கள் அமைக்கப்படும். தெர்மல் ஸ்கேனர்கள், வென்டிலேட்டர்கள் உள்ளிட்ட கருவிகளும் வாங்கப்பட உள்ளன.



பிரதமா் நிதிக்கு பொதுத் துறை மின் நிறுவனங்கள் ரூ.925 கோடி நன்கொடை
  • மின் துறை அமைச்சகம் மற்றும் புதிய & புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சக கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய பொதுத் துறை நிறுவனங்கள் சாா்பில் பிரதமா் நிதிக்கு ரூ.925 கோடி நன்கொடை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என மின் துறை அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
  • பொதுத் துறை நிறுவனங்களில் பிரதமா் நிதியின் பங்களிப்பாக, என்டிபிசி ரூ.250 கோடியும், பவா் பைனான்ஸ் காா்ப்பரேஷன் ரூ.200 கோடியும், பவா் கிரிட் ரூ.200 கோடியும், ஆா்இசி ரூ.150 கோடியும், என்எச்பிசி நிறுவனம் ரூ.50 கோடியும் வழங்கவுள்ளன.
  • வேதாந்தா நிறுவனம் ரூ.101 கோடி நன்கொடையை பிரதமா் நிதிக்கு அறிவித்துள்ளது. இதுதவிர, கரோனா பாதிப்பிற்கான நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ரூ.100 கோடி மதிப்பிலான திட்டங்களை செயல்படுத்த உள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
  • நிதி சேவையில் ஈடுபட்டு வரும் ஸ்ரீராம் குழுமம் பிரதமா் நிதிக்கு ரூ.10 கோடியை வழங்குவதாக அறிவித்துள்ளது. இதில், ரூ.8 கோடி ஏற்கெனவே பிரதமா் நிதியில் சோக்கப்பட்டு விட்டது. எஞ்சியுள்ள ரூ.2 கோடி இந்த வாரத்தில் செலுத்தப்படும் என ஸ்ரீராம் குழுமம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 7 முதல் பங்குவர்த்தம் நேரம் மாற்றம்
  • கொரோனா வைரஸ் இந்தியா முழுவதும் மிக வேகமாக கடந்த சில நாட்களில் பரவி வருவதை அடுத்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்றாலும் அதன் பின்னரும் நிலமையை அனுசரித்து ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
  • இந்த நிலையில் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக கடந்த சில நாட்களாக பங்கு வர்த்தகம் படு வீழ்ச்சி அடைந்து வருகிறது என்பது தெரிந்ததே. 
  • கடந்த ஜனவரி மாதம் 40 ஆயிரத்திற்கும் மேல் இருந்த சென்செக்ஸ் தற்போது 27 ஆயிரத்திற்கு வந்துவிட்டது. அதேபோல் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்து கொண்டே வருகிறது. இன்றைய தேதியில் 76.60 என உள்ளது என்பதால் முதலீட்டாளர்கள் பெரும் கவலையில் உள்ளனர்
  • இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கமாடிட்டி மார்க்கெட் இரவு 11.30 மணிவரை நடந்து வந்த நிலையில் மாலை 5 மணி வரை மட்டுமே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து தற்போது மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் வர்த்தகம் நடைபெறும் நேரமும் மாற்றப்பட்டுள்ளது
  • ஏப்ரல் 7 முதல் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே பங்கு வர்த்தகம் நடத்த வேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு செய்துள்ளது. முன்னதாக காலை 9 மணி முதல் மதியம் 3.30 மணி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து 40 முன்னணி வீரர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை; சச்சின், யுவராஜ், பி.வி.சிந்து உள்ளிட்டோர் பங்கேற்பு
  • ஊரடங்கின் 9ம் நாளான நேற்று, கொரோனாவை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து பல்வேறு மாநில முதல்வர்களுடன் காணொளி காட்சி மூலம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். 
  • இதற்கிடையே, கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது குறித்து தினமும் பிரதமர் மோடி, டாக்டர்கள், சுகாதாரத்துறையினர், தொண்டுநிறுவனங்கள், ஆன்மிக அமைப்புகள் என பல்வேறு துறையினருடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். 
  • இந்நிலையில், நாடு முழுவதும் கொரோனா மேலும் பரவாமல் தடுப்பது பற்றி விளையாட்டு வீரர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
  • இந்த ஆலோசனையில், இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங், பிசிசிஐ தலைவர் கங்குலி, இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, தடகள வீராங்கனை ஹிமா தாஸ் உள்ளிட்ட 40 முன்னணி விளையாட்டு வீரர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆலோசனையில், கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அரசின் உத்தரவுகளை பின்பற்றவும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.



கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அனைத்து மாநில ஆளுநர்களுடன் ஜனாதிபதி ஆலோசனை: வீடியோ கான்பரன்சில் துணை ஜனாதிபதியும் பங்கேற்பு
  • கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில கவர்னர்கள் மற்றும் துணை நிலை கவர்னர்களுடன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார்.
  • இதில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவும் கலந்து கொண்டார். இந்த ஆலோசனையின் போது கொரோனா பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி கேட்டறிந்தார். மேலும், கொரோனாவை தடுப்பது குறித்து ஆளுநர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
கரோனா தடுப்பு; தமிழக அரசின் சிறப்புக் குழுவில் 3 நிபுணர்கள்: அரசாணை பிறப்பித்தது தமிழக அரசு
  • கரோனா நோய்த் தடுப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவில் ஓய்வுபெற்ற பல்துறை மருத்துவ நிபுணர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை கண்காணிப்புக்குழுத் தலைவர் தலைமைச் செயலர் சண்முகம் பிறப்பித்துள்ளார்.
  • முதல் குழு மத்திய, மாநில அரசுகளுக்கிடையேயான ஒருங்கிணைப்புப் பணிகளையும், பிற மாநிலங்களுடன் ஒருங்கிணைப்புப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும், கரோனா வைரஸ் தொடர்பான 24 மணிநேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறையும் இவர்களது கண்காணிப்பில் இருக்கும்.
  • இரண்டாவது குழு அத்தியாவசியப் பொருட்கள் உற்பத்தி தொடர்பாகவும், பிற மாநிலங்களுக்கு இடையேயும், மாநிலத்திற்குள்ளேயும் அத்தியாவசியப் பொருட்கள் நகர்வினை உறுதி செய்ய வேண்டும்.
  • மூன்றாவது குழு அத்தியாவசியப் பொருட்கள் மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் செல்வதைக் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும்.
  • நான்காவது குழு ஊடக ஒருங்கிணைப்புப் பணிகளையும், பொதுமக்களுக்கு கரோனா வைரஸ் தடுப்பு பற்றி துண்டுப் பிரசுரங்கள், ஒலிப்பெருக்கி போன்றவை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளையும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • ஐந்தாவது குழு கரோனா வைரஸ் பரவுவதைக் கண்காணிப்பதோடு, தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான உபகரணங்களுடன் கூடிய தனிமைப்படுத்தப்பட்ட சிறப்பு வார்டுகள் அமைப்பதை உறுதி செய்யும் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
  • ஆறாவது குழு அத்தியாவசியப் பொருட்கள் எடுத்துச் செல்லும் வாகனங்கள் தடையின்றிச் செல்ல ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
  • ஏழாவது குழு கரோனா வைரஸ் தாக்கப்பட்டவர்களைக் கண்டறிந்து அவர்களைத் தனிமைப்படுத்துவதோடு, அவர்களோடு தொடர்பில் இருந்தவர்களைக் கண்டுபிடித்து அவர்களையும் தனிமைப்படுத்திக் கண்காணிக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சையும் கிடைக்க ஏற்பாடு செய்யும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
  • எட்டாவது குழு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராமப் பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணி மற்றும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படுவதைக் கண்காணிக்க வேண்டும்.
  • ஒன்பதாவது குழு அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஆகியோரது நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்க வேண்டும். தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்கள், வயது முதிர்ந்தோர், நோய்வாய்ப்பட்டவர்களுக்கு உதவும் பணியினை மேற்கொள்ள வேண்டும்.
  • இதில் ஐந்தாவது குழு கே.கோபால், பி.சந்திரமோகன், சு.நாகராஜன் ஆகியோர் கரோனா வைரஸ் பரவுவதைக் கண்காணிப்பதோடு, தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான உபகரணங்களுடன் கூடிய தனிமைப்படுத்தப்பட்ட சிறப்பு வார்டுகள் அமைப்பதை உறுதி செய்யும் பணிகளையும் மேற்கொள்ள அமைக்கப்பட்டுள்ளது.
  • இந்தக் குழுவின் முக்கியத்துவம் கருதி ஓய்வுபெற்ற நிபுணர்களை இக்குழுவில் இணைத்து டாஸ்க் ஃபோர்ஸின் தலைவர் தலைமைச் செயலர் சண்முகம் அரசாணை பிறப்பித்துள்ளார்.
  • 1. டாக்டர் எஸ்.பி. தியாகராஜன், நுண்ணுயிரியலாளர் (மைக்ரோ பயாலஜிஸ்ட்) முன்னாள் துணைவேந்தர் மற்றும் டீன் ராமச்சந்திரா உயர்கல்வித்துறை மற்றும் ஆராய்ச்சித்துறை.
  • 2. சித்த மருத்துவர் கு.சிவராமன் தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி மைய உறுப்பினர்.
  • 3. டாக்டர் குகாநந்தம் ( தொற்று நோயியல் நிபுணர்) முன்னாள் சுகாதாரத்துறை அலுவலர் சென்னை மாநகராட்சி.
ஏப்ரல்5 அன்று இரவு 9 மணிக்கு விளக்குகளை 9 நிமிடம் அணையுங்கள் பிரதமர் மோடி
  • கொரோனா வைரஸின் அழிவுக்கு மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை வீடியோ உரையில் நாட்டு மக்களிடம், 'இன்று கொரோனா உலகளாவிய தொற்றுநோய்க்கு எதிராக 9 நாட்கள் பூட்டப்பட்டிருக்கிறது, இதன் போது நீங்கள் ஒழுக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளீர்கள் கொடுக்கப்பட்டால், இது முன்னோடியில்லாதது. 
  • மார்ச் 22, ஞாயிற்றுக்கிழமை கொரோனாவுக்கு எதிராகப் போராடிய அனைவருக்கும் நீங்கள் நன்றி தெரிவித்த விதம், இது எல்லா நாடுகளுக்கும் ஒரு முன்மாதிரியாக மாறியது, இன்று பல நாடுகள் அதை மீண்டும் செய்கின்றன. நாடு ஒன்றுபட்டு கொரோனாவுக்கு எதிராக போராட முடியும் என்று தோன்றியது.
  • நண்பர்களே, இது நிச்சயமாக பூட்டுதலுக்கான நேரம், ஆனால் நம்மில் யாரும் தனியாக இல்லை. 130 கோடி நாட்டு மக்களின் கூட்டு சக்தி ஒவ்வொரு நபரிடமும் உள்ளது. இந்த கூட்டு சக்தியின் மகத்துவத்தை உணர வேண்டியது அவசியம். 
  • ஜந்தா ஜனார்தன் கடவுளின் வடிவம். இந்த கொரோனா நெருக்கடியிலிருந்து எழுந்திருக்கும் நிச்சயமற்ற தன்மையை நாம் அகற்ற வேண்டும். அதைத் தோற்கடிக்க, ஒளியின் தீவிரத்தை நான்கு திசைகளிலும் பரப்ப வேண்டும். 
  • எனவே, ஏப்ரல் 5, ஞாயிற்றுக்கிழமை கொரோனாவின் இருளை சவால் செய்ய வேண்டும். 130 கோடி நாட்டு மக்களின் சக்தியை எழுப்ப. தீர்மானம் புதிய உயரத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டும். இரவு 9 மணிக்கு நீங்கள் அனைவரும் 9 நிமிடங்கள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். 
  • வீட்டின் அனைத்து விளக்குகளையும் அணைத்துவிட்டு வீட்டின் கதவு அல்லது பால்கனியில் நின்று மெழுகுவர்த்தி, விளக்கு, ஒளிரும் விளக்கு அல்லது மொபைல் ஃபிளாஷ் லைட் ஏற்றி வைக்கவும். 
  • ஒவ்வொரு நபரும் ஒவ்வொரு விளக்கையும் எரிக்கும்போது, அந்த ஒளியின் வல்லரசின் உணர்வு இருக்கும். அந்த வெளிச்சத்தில், நாம் தனியாக இல்லை என்று நம் மனதில் ஒரு தீர்மானத்தை உருவாக்குவோம்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel