Type Here to Get Search Results !

14th APRIL 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

மே 3 வரை ஊரடங்கு நீட்டிப்பு: பிரதமா் மோடியின் முழுமையான உரை
 • கரோனா நோய்த்தொற்று பரவல் இந்தியாவில் அதிகரித்ததை அடுத்து கடந்த மாதம் 24-ஆம் தேதி தேசிய ஊரடங்கை பிரதமா் மோடி அறிவித்தாா். அப்போது ஏப்ரல் 14-ஆம் தேதி வரை (21 நாள்களுக்கு) ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அவா் கூறினாா். 
 • இந்த 21 நாள்களில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. எனினும், இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்தது; 350-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். 
 • எனினும், அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி உள்ளிட்ட வளா்ந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் பாதிப்பு மற்றும் இறப்பு விகிதம் குறைவாகவே உள்ளது.
 • நோய்த்தொற்று பரவல் முற்றிலுமாக கட்டுக்குள் வரவில்லை. இதையடுத்து ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மத்திய அரசு தீவிரமாகப் பரிசீலித்தது. இதுதொடா்பாக அனைத்து மாநில முதல்வா்கள் கூட்டத்திலும் பிரதமா் மோடி ஆலோசித்தாா். தமிழ்நாடு, கா்நாடகம், தெலங்கானா, மகாராஷ்டிரம், ஒடிஸா, பஞ்சாப், மேற்கு வங்கம், அருணாசலப் பிரதேசம் ஆகிய 8 மாநிலங்கள் ஏற்கெனவே ஊரடங்கை நீட்டிப்பதாக அறிவித்துவிட்டன.
 • மக்களின் தியாகம்: இந்நிலையில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேசிய ஊரடங்கின் இறுதி நாளான செவ்வாய்க்கிழமை, நாட்டு மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி தொலைக்காட்சி மூலம் உரையாற்றினாா். 
 • இந்தியாவில் தேசிய ஊரடங்கை மே 3 வரை நீட்டிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இப்போது நாம் கடைப்பிடித்து வரும் ஒழுக்கத்தைத் தொடா்ந்து கடைப்பிடிக்க வேண்டும்.
 • வரும் 20-ஆம் தேதி வரை ஒவ்வொரு நகா்ப்புறமும், ஒவ்வொரு காவல் நிலையமும், ஒவ்வொரு மாவட்டமும், ஒவ்வொரு மாநிலமும் ஊரடங்கை நடைமுறைப்படுத்துவதை எந்த அளவுக்குப் பின்பற்றுகின்றன என்பது மதிப்பீடு செய்யப்படும்.
7 உறுதிமொழிகள்
 1. மூத்த குடிமக்களை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக, ஏற்கனவே நோய்களால் அவதிப்பட்டு வருபவர்களை மிகவும் கவனத்துடன் பார்த்துக் கொள்ள வேண்டும்
 2. சமூக விலகல் நடவடிக்கைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்
 3. அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் செல்ல நேர்ந்தால், கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்; அது, கைக்குட்டையாக கூட இருக்கலாம் 
 4. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும். மருத்துவ உதவி தேவைப்படுவோர், மத்திய அரசின், 'ஆரோக்கிய சேது' என்ற, 'ஆப்' எனப்படும் செயலியை பதிவிறக்கம் செய்யலாம்
 5. ஏழைகளுக்கு முடிந்த வரை உதவ வேண்டும். அவர்களது உணவுத் தேவையையாவது பூர்த்தி செய்ய வேண்டும்
 6. உங்கள் நிறுவனத்தில் அல்லது தொழிற்சாலையில் பணியாற்றுவோரிடம் கருணை காட்டுங்கள். அவர்களை பணி நீக்கம் செய்து விடாதீர்கள்; அவர்களது வாழ்வாதாரத்தை சீர்குலைத்து விடாதீர்கள்
 7. கொரோனா ஒழிப்பு பணியில் போர் வீரர்களாக செயல்பட்டு வரும், டாக்டர், நர்ஸ், சுகாதார ஊழியர்கள், போலீசார் ஆகியோருக்கு மரியாதை செலுத்துங்கள். 
போர் கப்பல்களை அழிக்கும் ஏவுகணைகள் இந்தியாவுக்கு விற்க அமெரிக்கா ஒப்புதல்
 • இந்தியாவுக்கு போர் கப்பல்களை அழிக்கும் ஏவுகணைகளை விற்க, அமெரிக்க பார்லிமென்ட் ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்கா, இந்தியாவை, நெருங்கிய ராணுவ கூட்டாளி என, 2016ல் அங்கீகரித்தது. 
 • இதன் மூலம், ராணுவத்தில், நவீன தொழில்நுட்ப வசதிகளை, இந்தியா அமெரிக்காவிடமிருந்து பெற, வழி கிடைத்தது.இந்நிலையில், இந்தியாவுக்கு, 74 கோடி ரூபாய் மதிப்பில், போர் கப்பல்களை அழிக்கும், 10 ஹெலிகாப்டர் தாங்கி ஏவுகணைகளை விற்க, அமெரிக்க பார்லி., ஒப்புதல் அளித்துள்ளது.
 • அத்துடன், 51 கோடி ரூபாய்க்கு, 16 இலகு ரக, 'டார்பிடோக்கள்' எனப்படும், நீர்மூழ்கி கப்பல்களிலிருந்து செலுத்தப்படும் ஏவுகணைகள் மற்றும் மூன்று, பயிற்சிக்கான டார்பிடோக்களையும் விற்க, ஒப்புதல் அளித்துள்ளது. 25 ஏழை நாடுகளுக்கு கடன் நிவாரணம் ஐஎம்எப் ஒப்புதல்
 • கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள ஐஎம்எப்பில் அங்கம் வகிக்கும் ஏழை நாடுகளுக்கு கடன் நிவாரணம் வழங்க ஐஎம்எப் அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் ஆப்பிரிக்கா, ஆப்கான், ஏமன், நேபாளம், ைஹதி போன்ற நாடுகள் பயன்பெறும். 
 • இது தவிர உலக நாடுகளுடன் இணைந்து பணக்கார நாடுகள் ஏழை நாடுகளுக்கு வழங்கியுள்ள கடன் தொகையை வசூலிப்பதை வரும் மே1ம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜூன் வரை நிறுத்தி வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 
 • இதற்கிடையில், கொரானா வைரஸ் பாதிப்பால் இந்திய பொருளாதாரம் இந்த ஆண்டில் 1.9 சதவீதமாக இருக்கும் என தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பிற்கு நிதி நிறுத்தம்: அறிவித்தார் டிரம்ப்
 • கொரோனா வைரஸ் விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பு (WHO ) சீனா சார்பு நிலையில் உள்ளதாக குற்றம்சாட்டியிருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் அந்த அமைப்பிற்கு வழங்கும் நிதியை நிறுத்துவதாக அறிவித்தார்.
 • இந்நிலையில் முதற்கட்டமாக உலக சுகாதார அமைப்பிற்கு ரூ. 3000 கோடி நிதியை டிரம்ப் நிறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
கரோனா எதிா்ப்பு நடவடிக்கைக்கு ஐசிஐசிஐ வங்கி ரூ.100 கோடி நிதி
 • தனியாா் துறையைச் சோந்த ஐசிஐசிஐ வங்கி குழுமம் மத்திய அரசு மேற்கொண்டு வரும் கரோனா எதிா்ப்பு நடவடிக்கைகளுக்கு ரூ.100 கோடி நிதி உதவி வழங்குவதாக தெரிவித்துள்ளது.
 • அதற்கு வங்கி குழுமத்தின் பங்களிப்பாக பிரதமா் நிதிக்கு ரூ.80 கோடியும், மாநில அரசுகளுக்கு ரூ.20 கோடியும் வழங்கப்படும் என்றாா்.
ஆரோக்கிய சேது ' செயலி உலக வங்கி பாராட்டு
 • நாடு முழுவதும் வேகமாகப் பரவி வரும் கொரோனாவைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் சூழலில், மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
 • அதன் ஒரு நிலையாக, மக்கள் தங்களது சுயபாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வழிவகுக்கும் சில செயலிகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் வெளியிட்டு வருகின்றன. 
 • இதில் மிக முக்கியமான செயலியாகத் தற்போது பார்க்கப்படுவது 'ஆரோக்கிய சேது ' செயலி. ஆண்ட்ராய்டு மற்றும் ஐ-போன்களில் இயங்கும் இந்தச் செயலியை மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
 • சுமார் 11 மொழிகளில் பயன்படுத்தக்கூடிய இந்தச் செயலியில் அரசாங்க தரவுகளின்படி ஒவ்வொரு பகுதியிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்கள் எண்ணிக்கை குறித்த தரவுகள் தரப்பட்டுள்ளன. 
 • இந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்து நாம் பயன்படுத்தும்போது இந்தச் செயலி நமது அருகில் இருப்பவர்களின் தூரம் மற்றும் மக்கள் நெருக்கத்தை ஆராய்ந்து நாம் இருக்கும் பகுதியில் கொரோனா பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்பதைக் கூறும்.
 • பிரதமர் மோடியின் இன்றைய உரையிலும் கூட இந்த செயலியை மக்கள் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில் இந்தச் செயலியை உலக வங்கி பாராட்டியுள்ளது. உலக வங்கி சார்பில் தெற்கு பொருளாதாரப் பார்வை என்ற தலைப்பிலான ஆய்வறிக்கை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.
 • அதில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது அவசியம். அந்தவகையில் இந்தியா வடிவமைத்துள்ள 'ஆரோக்கிய சேது ' செயலி அதற்கு முன் உதாரணமாக வழிகாட்டியாக உள்ளது என தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel