ஊரடங்கு தளர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய உள்துறை அமைச்சகம்
- கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நான்காவது முறையாக நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி 14/04/2020 உரையாற்றினார்.
- கரோனாவைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே மாதம் 3- ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாகவும், ஏழைகள், தினக்கூலி தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வரும் பகுதிகளில் ஏப்ரல் 20- ஆம் தேதிக்குப் பிறகு ஊரடங்கு தளர்த்தப்படும் என்றும் கூறினார்.
- அதன் தொடர்ச்சியாக ஊரடங்கு தளர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று (15/04/2020) வெளியிட்டுள்ளது.
- அதன் படி ஏப்ரல் 20- ஆம் தேதி முதல் விவசாயம், தோட்டக்கலை, பண்ணைத்தொழில், விளைப்பொருள், கொள்முதலுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 20- ஆம் தேதிக்குப் பிறகு எலெக்ட்ரீசியன், பிளம்பர், தச்சர், மெக்கானிக் தொழில் செய்வோருக்கு அனுமதி. சிறு, குறு தொழில் ஈடுபடுவோர் பணிகளைத் தொடரலாம்.
- முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் தொழிலாளர்கள் பணியாற்ற அனுமதி. 100 நாள் வேலை உறுதித் திட்டத்தில் பணிகளைத் தொடரலாம்.
- விவசாயம் சார்ந்த இயந்திர நிறுவனங்கள், பழுது நீக்கும் நிறுவனங்கள் செயல்பட அனுமதி. பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூபாய் 500 வசூலிக்க மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. அதேபோல் நாடு முழுவதும் மக்கள் வெளியே செல்லும் போது மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
- பொதுமக்கள் தங்களது மாநிலங்களில், மாவட்டங்களை விட்டு பிற மாநிலம், மாவட்டத்துக்குச் செல்ல தடை நீடிப்பு. திரையரங்குகள், வணிக வளாகங்கள், அரசியல் நிகழ்வுகள், வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிலையங்கள், பயிற்சி மையங்கள், பொதுக்கூட்டங்களுக்குத் தடை தொடரும்.
- மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் தயாரிக்க மத்திய அரசு தொடர்ந்து அனுமதியளித்துள்ளது. கிராமப் பகுதிகள், சிறப்பு பொருளாதார மண்டலங்களில் உள்ள ஆலைகள், ஏற்றுமதி தொடர்பான நிறுவனங்கள் செயல்படலாம். சமூக இடைவெளியுடன் ஆலைகள் இயங்கலாம்.
- கரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகள், பாதிப்பு உள்ளவர்கள் வசித்ததற்காக முடக்கப்பட்ட பகுதிகளுக்கு தளர்வு பொருந்தாது. ஏப்ரல் 20- ஆம் தேதி முதல் நெடுஞ்சாலையோர ஓட்டல்களான தாபாக்களைத் திறக்க அனுமதி.
- கனரக வாகன பழுது பார்ப்பு கடைகளைத் திறக்க அனுமதி. அரசு நடவடிக்கைகளுக்கான கால் சென்டர் மையங்களைத் திறக்கலாம். கரோனா அதிகம் உள்ள இடங்களில் ஊரடங்கு தளர்வுகள் பொருந்தாது.
- ஊரடங்கின் போது மளிகை, காய்கறி கடைகள், பால் விற்பனை நிலையங்கள் செயல்படலாம். இறைச்சிக்கடைகள், மீன் விற்பனை கடைகளை ஊரடங்கின் போது திறக்கலாம். ஐ.டி. நிறுவனங்கள், ஐ.டி. தொடர்பான சேவைகள் 50% ஊழியர்களுடன் இயங்கலாம்.
- கூரியர் நிறுவனங்கள், ஆன்லைன் வணிக நிறுவனங்கள் இயங்க அனுமதி; அத்தியாவசியப் பொருட்களை மட்டும் விநியோகிக்கலாம். கேபிள், DTH சேவை நிறுவனங்களும் இயங்கலாம்".
170 மாவட்டங்களை COVID-19 ஹாட்ஸ்பாட்களாக அறிவித்த சுகாதார அமைச்சகம்
- இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களும் மூன்று மண்டலங்களாக வகைப்படுத்தப்பட்ட பின்னர், 170 மாவட்டங்கள் கொரோனா வைரஸ் ஹாட்ஸ்பாட்களாகவும், 207 மாவட்டங்களை நாடு முழுவதும் கிளஸ்டர் கொள்கலன்களாகவும் அடையாளம் கண்டுள்ளன என்று மத்திய சுகாதார அமைச்சகம் புதன்கிழமை வலியுறுத்தியது.
- நாட்டின் மாவட்டங்கள் ஹாட்ஸ்பாட் மாவட்டங்கள், ஹாட்ஸ்பாட் அல்லாத மாவட்டங்கள் என மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்படும்--ஆனால் வழக்குகள் பதிவாகும் மற்றும் பசுமை மண்டல மாவட்டங்கள் பிரிக்கப்படும்.
- ஹாட்ஸ்பாட்கள் இரண்டு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன என்று இணை செயலாளர் கூறினார், ஒன்று வழக்குகள் அதிகமாக வெளிவருகின்றன, மற்றொன்று இரட்டிப்பு விகிதம் அதிகமாக உள்ளது. ஒரு பகுதியில் 15 வழக்குகளுக்கு குறைவாகவோ அல்லது சமமாகவோ இருந்தால், அது ஒரு கிளஸ்டர் கட்டுப்பாட்டு மண்டலமாக கருதப்படுகிறது.
- ஊரடங்கு காலம் சரியாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்று அனைத்து மாநிலங்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வழக்குகள் பதிவாகும் ஆனால் ஹாட்ஸ்பாட்கள் இல்லாத மாவட்டங்கள், விரைவாகச் செயல்பட வேண்டும் மற்றும் கட்டுப்பாட்டு உத்திகளைத் தொடங்க வேண்டும்.
- அகர்வால் மேலும் கூறுகையில், பொருத்தமான மருந்து மற்றும் மருந்து அல்லாத தலையீடுகளை ஊக்குவிக்கவும், தொற்று கட்டுப்பாட்டில் ஈடுபட்டுள்ள அனைத்து ஊழியர்களுக்கும் மருத்துவ மேலாண்மை ஊழியர்களுக்கும் பயிற்சி அளிக்க மாவட்ட நிர்வாகங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
- தமிழகத்தில் 22 மாவட்டங்களை கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
- கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1,000-த்தை கடந்துள்ளது. இதனிடையே முன்னதாக அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவானது, மே 3 வரை நீட்டிக்கப்படுவதாக பிரதமர் அறிவித்தார்.
- அந்த பட்டியலில் தமிழகத்தில் 22 மாவட்டங்கள் உள்ளன. சென்னை, திருச்சி, கோவை, நெல்லை, ஈரோடு, வேலூர், திண்டுக்கல், விழுப்புரம், திருப்பூர், தேனி, நாமக்கல், செங்கல்பட்டு, மதுரை, தூத்துக்குடி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி, கடலூர், திருவள்ளூர், திருவாரூர், சேலம், நாகை ஆகியவற்றை ஹாட்ஸ் பாட் மாவட்டங்களாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஜி20 நிதி அமைச்சர்கள் மாநாடு; இந்தியாவின் நடவடிக்கைகளை விளக்கிய நிர்மலா
- சவுதி அரேபியா தலைமை வகிக்கும் விர்ச்சுவல் முதல் மாநாடு, கடந்த மார்ச் 31ல் நடந்தது. அதில், 'ஜி -20' நாடுகளின் நிதி அமைச்சர்கள் தொடர்ந்து உரையாடுவதென முடிவெடுக்கப்பட்டது.
- இதனையடுத்து இன்று 2வது மாநாடு, 'வீடியோ கான்பரன்சிங்' முறையில் நடந்தது. இதில் இந்தியா சார்பில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார்.
- மாநாட்டில், 'ஜி-20' தலைவர்களின் முடிவுகளுக்கு, சவுதி அதிபர் எடுத்த முயற்சிகளை நிர்மலா பாராட்டினார். குறிப்பாக கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பின்னடைவுகளை எதிர்கொள்வதற்கான, 'ஜி20' செயல் திட்டத்தை உருவாக்கும் பணிக்கு பாராட்டு தெரிவித்தார்.
- மாநாட்டில், கொரோனா காலகட்டத்திலும் பொருளாதாரத்தை மேம்படுத்த இந்தியா எடுத்துள்ள நடவடிக்கைகளை அவர் விளக்கினார்.
- மேலும் அவர் கூறுகையில், 'இரண்டு வாரங்களுக்குள் 320 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு, 3.9 பில்லியன் டாலர் நிதி உதவியை இந்தியா வழங்கியுள்ளது.
- டிஜிட்டல் தொழில்நுட்பத்தால், இந்தியாவில் பொது இடங்களில் மக்கள் கூடுவது குறைந்தது. பிரதமர் மோடி மேற்கொண்ட நிர்வாக சீர்திருதிருத்தங்களால் இந்தியா தற்போது பலன் பெற்று வருகிறது' என்றார்.
ரூ.1,750 கோடி மதிப்பில் சூரிய மின்சக்தி நிலையம்: விக்ரம் சோலாா் அமைக்கிறது
- '300 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின்சக்தி நிலையத்தை அமைப்பதற்கான திட்டத்தை என்டிபிசி எங்களிடம் வழங்கியுள்ளது. ராஜஸ்தானில் 1,500 ஏக்கரில் அமைக்கப்படவுள்ள மின்சக்தி நிலையத்தின் கட்டுமானப் பணிகள் 18 மாதங்களில் நிறைவடையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
- ஏற்கெனவே, மத்தியப் பிரதேச மாநிலம் மந்த்சௌரில் 50 மெகாவாட் சூரிய மின்சக்தி திட்டம், ராஜஸ்தானின் பத்லா பகுதியில் 130 மெகாவாட் சூரிய மின்சக்தி திட்டம் போன்றவற்றை என்டிபிசிக்காக அமைத்துத் தந்துள்ளோம்' என்று கூறப்பட்டுள்ளது.
PM CARES நிதிக்கு சுமார் 2 மில்லியன் நன்கொடை அளித்த ரஷ்யா
- ரஷ்ய அரசாங்கத்தின் முக்கிய பாதுகாப்பு ஏற்றுமதி அமைப்பான ரோசோபொரோனெக்ஸ்போர்ட், கொரோனா வைரஸ் நெருக்கடியை எதிர்த்துப் போராடுவதற்காக உருவாக்கப்பட்ட பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழ்நிலைகளில் நிவாரணத்திற்கு (PM CARES Fund) சுமார் 2 மில்லியன் நன்கொடை அளித்துள்ளது.
- கொரோனா நோய்த்தொற்றை கண்டறிவதற்கு, தமிழக அரசுக்கு, டாடா நிறுவனம் சார்பில் 40, 032 பிசிஆர் கிட் (PCR Kits) வழங்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 8 கோடி என்று கூறப்படுகிறது. மொத்தம் 40 ஆயிரத்து 32 உபகரணங்கள் தமிழக அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது.
- பிசிஆர் கிட்ஸ் என்பவை, நோயை சரியாக கண்டுபிடித்துவிடும். Polymerase chain reaction என்பதன் சுருக்கம்தான், பிசிஆர். அதிக ஆபத்து உள்ள நோயாளிகளுக்கு ரேப்பிட் டெஸ்ட் கிட்ஸ் பலன்தராது. பி.சி.ஆர் சோதனைதான் சரியாக கண்டுபிடிக்கும்.
- சமூக அளவிலான பரவலான சோதனைகளுக்கு வேண்டுமானால், ரேப்பிட் டெஸ்ட் பயன்படும். ரேப்பிட் டெஸ்ட்டில், பாசிட்டிவ் காட்டினால் உடனே சிகிச்சை தொடங்கப்படாது.
அடாஸ், ஹூண்டாய் மோட்டார் நிறுவனங்கள் முதல்வர் நிதிக்கு தலா ரூ5 கோடி- சிஎஸ்கே ரூ 1கோடி
- கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ134 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதில் ஹூண்டாய் மோட்டார் நிறுவனம், அடாஸ் நிறுவனம் ஆகியவை தலா ரூ5 கோடி வழங்கியுள்ளன.