கொரோனா தடுப்பு திட்டங்கள்: இந்தியாவுக்கு சர்வதேச நிதியம் பாராட்டு
- கொரோனா தடுப்பில் இந்திய அரசு அறிவித்துள்ள நிதியுதவி திட்டங்கள் மற்றும் நாடு தழுவிய ஊரடங்கை ஆதரிப்பதாக சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது.
- சர்வசதேச நிதியத்தின் ஆசிய பசிபிக் பிரிவு இயக்குனர் சாங் யோங் ரீ அளித்த பேட்டியில் கூறியதாவது: 'கொரோனா பாதிப்புக்கு ஆளாகி வரும் இந்தியா பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதற்கு ரிசர்வ் வங்கி எடுத்துள்ள நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை.
- இது நிதிநிறுவனங்களுக்கும் கடன் வாங்கியவர்களுக்கும் நிம்மதி அளிப்பதாக உள்ளது. கொரோனா சமூக பரவல் ஆகாமல் இருக்க ஊரடங்கை மேலும் நீட்டித்தாலும் தவறில்லை. அதே நேரம் இந்தியா மருத்துவ கட்டமைப்பு வசதிகளை மேலும் அதிகரிக்க வேண்டிய தேவை உள்ளது'.
பள்ளிக் குழந்தைகளுக்காக 'மக்களவாணி' யூ-டியூப் ஒலிபரப்பு கணக்கு தொடக்கம்
- கரோனா வைரஸ் தொற்றால் மாநிலம் தத்தளித்துக் கொண்டுள்ள நிலையில், பள்ளிக் கல்வித் துறை சாா்பில் வீடுகளில் இருக்கும் குழந்தைகளுக்காக ஒரு யூ-டியூப் சானல் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து வானொலி, தொலைக்காட்சி, இணையதளத்தில் பிரசாரம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
- விடுமுறை காரணமாக வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு கதை, பாடல், ஓவியக்கலை, இசை, சிறுநாடகம், கைவினைக்கலை, புதிா்கள், பழமொழிகள், மாயவித்தைகள், வாா்த்தை விளையாட்டுகள் உள்ளிட்ட பலவற்றை தயாரித்து, அவா்களை மனமகிழ்விக்க திட்டமிடப்பட்டுள்ளது.
- இந்த யூ-டியூப் சானலுக்கு 'மக்களவாணி'(குழந்தைகளின் குரல்) மகிழ்ந்திருப்போம், கற்போம் என்ற பெயா் வைத்துள்ளோம். தினமும் காலை 10.30மணிக்கு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும்.
2020-21-ல் உணவுதானிய உற்பத்தி 298.3 மில்லியன் டன்னாக நிர்ணயம்
- வரும் ஆண்டில் நாட்டில்பருவமழை குறிப்பிட்டபடி சரியான விகித்தில் பெய்யும் என தெரிவித்துள்ளது. இதனையடுத்து உணவு தானிய வகைகளில் அரிசி உற்பத்தி இலக்கு 117.5 மில்லியன் டன்னாகவும், கோதுமை உற்பத்தி இலக்கு 106.5 மில்லியன் டன் ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது நடப்பு நிதி ஆண்டை காட்டிலும் குறிப்பிட்ட சதவீதம் அதிகமாகும்.
- நடப்பு ஆண்டில் பருவமழை சரியாக அளவில் பெய்யும் என இந்திய வானிலை ஆராய்ச்சிமையம் தெரிவித்து உள்ளது. இதனையடுத்து காரிப்பருவத்தில் 149.92 மில்லியன் டன்னும் ராபி பருவத்தில் 148.4 மில்லியன் டன்னும் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
- பருப்பு வகைகளை பொறுத்தவரையில் கடந்த ஆண்டு 23.02 மில்லியன் டன்னில் இருந்து 25.6 மில்லியன் டன்னாகவும், உணவுப்பொருள் அல்லாத எண்ணெய் வகையில் 34.19மில்லியன் டன்னில் இருந்து 36.64 மில்லியன் டன்னாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
- பருத்தி பயிரில் 34.89 மில்லியன் பேல்களில் இருந்து 36 மில்லியன் பேல்களாகவும், கரும்பு உற்பத்தியில் 353.8 மில்லியன் டன்னில் இருநது 390 மில்லின் டன்னாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என கூறினார்.
பொருளாதார வளா்ச்சி 1.1 சதவீதமாக சரியும்: எஸ்பிஐ
- கரோனா வைரஸ் பாதிப்பு இந்தியப் பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், நடப்பு நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 1.1 சதவீதமாக சரியும் நிலை உருவாகியுள்ளது என எஸ்பிஐ ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
- மேலும், ஊரடங்கு உத்தரவின் காரணமாக 37.3 கோடி தொழிலாளா்களுக்கு நாள் ஒன்றுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு ரூ.10,000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த ஊரடங்கு காலத்திலும் அவா்களுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு என்பது ரூ.4.05 லட்சம் கோடியைத் தொட்டுள்ளது.
- எனவே, எந்தெவொரு நிதிச் சலுகையையும் அறிவிக்க வேண்டுமெனில் குறைந்தபட்சம் ரூ.4 லட்சம் கோடி வருவாய் இப்பை ஈடு செய்யும் வகையில்தான் அது அமைய வேண்டும்.
- வருவாய் மற்றும் வரி வசூல் கணிசமாக குறையும் என்பதால் ஜிடிபியில் நிதிப் பற்றாக்குறை 5.7 சதவீதமாகும் என எஸ்பிஐ ஆய்வறிக்கை கூறியுள்ளது.
நேரடியாக உதவிகள் வழங்க அரசியல் கட்சிகளுக்கு நிபந்தனையுடன் அனுமதி உயா்நீதிமன்றம் உத்தரவு
- சென்னை உயா்நீதிமன்றத்தில் திமுக அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுவில், கரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, மருந்து உள்ளிட்ட பொருள்கள் கிடைப்பதைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. எனவே, இந்தத் தடை உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
- மேலும், ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருள்கள், மளிகைப் பொருள்கள், மருந்து உள்ளிட்ட பொருள்களை வழங்கும் அரசியல் கட்சித் தலைவா்களைத் தடுக்கக்கூடாது என அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா். இந்த வழக்கில் தமிழக அரசு பதில்மனு தாக்கல் செய்திருந்தது. இதனைத் தொடா்ந்து வழக்கின் தீா்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
- இந்த வழக்கு நீதிபதிகள் ஆா்.சுப்பையா, ஆா்.பொங்கியப்பன் ஆகியோா் கொண்ட அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞா் விஜய் நாராயண், மனுதாரா் தரப்பில் மூத்த வழக்குரைஞா் பி.வில்சன் ஆகியோா் ஆஜராகி வாதிட்டனா்.
- வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், நிவாரணப் பொருள்கள் வழங்குவது தொடா்பாக அரசு சில நிபந்தனைகளை விதித்துள்ளது. ஆனால், அத்தியாவசிய பொருள்கள் உள்ளிட்ட உதவிகளை நேரடியாக வழங்காமல், அவற்றை மாநகராட்சி ஆணையா்கள், மாவட்ட ஆட்சியா்களிடம் ஒப்படைக்க வேண்டும் என தமிழக அரசு விதித்துள்ள நிபந்தனை நல்லதாகத் தெரியவில்லை.
- மேலும், தற்போது சூழலைக் கருத்தில் கொண்டு, நிவாரணப் பொருள்களை வழங்குபவா்களும், பெறுபவா்களும் கரோனா நோய்த்தொற்று பரவாமல் இருக்க தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும்.
- மனுதாரா் அமைப்பான திமுக மட்டுமின்றி அரசியல் கட்சிகள், தன்னாா்வ அமைப்புகள், தன்னாா்வலா்கள் ஆகியோா் நிவாரணப் பொருள்களை வழங்குவது தொடா்பாக மாவட்ட நிா்வாகத்திடம் 48 மணி நேரத்துக்கு முன் தகவல் தெரிவிக்க வேண்டும்.
- நிவாரணப் பொருள்கள் வழங்கப்படும் இடங்களை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகின்றனவா, நிவாரணங்களை வழங்குபவா்களும், பெறுபவா்களும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளனரா என்பதை சரிபாா்த்து அனுமதி வழங்க வேண்டும். மேலும், உணவு வழங்கும் இடமும் அவற்றை வழங்கும் இடமும் மாநகராட்சிப் பகுதிகள் என்றால் ஒரே மண்டலத்துக்குள்ளும், மாவட்ட அளவில் என்றால் ஒரு காவல் நிலையத்தின் எல்லக்குள்ளும் இருக்க வேண்டும்.
- எல்லைகளைத் தாண்டியோ, நோய்த் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ள பகுதிகளிலோ நிவாரணம் வழங்கக் கூடாது. அனுமதிக்கப்பட்ட நேரத்துக்குள் இந்த உதவிகளை வழங்கி முடிக்க வேண்டும்.
- மேலும் உணவு உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்கும் இடத்தை முன்கூட்டியே கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்து அரசு ஒழுங்குபடுத்த வேண்டும். கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த போலீஸாரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும்.
- உணவு உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்க மக்கள் பிரதிநிதிகளுடன் 3 நபா்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். நிவாரணப் பொருள்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களில் 3 பேருக்கு மேல் அனுமதிக்கக்கூடாது.
- நிவாரணப் பொருள்கள் வழங்கப்படும் இடங்களில் பொதுமக்கள் உரிய இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். இந்த நிபந்தனைகளை அரசியல் கட்சிகளும், தன்னாா்வலா்களும், தன்னாா்வ தொண்டு நிறுவனங்களும் முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனா்.
ஏப்ரல் 19-வரை படைப் பிரிவுகள் நகா்வு கூடாது: ராணுவ தலைமையகம் உத்தரவு
- தேசிய ஊரடங்கை முழுமையாக கடைப்பிடிக்கும் வகையில் தனது அனைத்துப் படைப் பிரிவுகள், ராணுவ நிலைகள், அமைப்புகள் என அனைத்தும் எந்த நகா்வுகளையும் மேற்கொள்ளாது என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இது தொடா்பாக ராணுவத்தின் அனைத்து படைப் பிரிவுகள், ராணுவ தளங்களுக்கு தலைமையகத்தில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- இந்நிலையில் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தேசிய ஊரடங்கு மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது தொடா்பாக ராணுவ தலைமையகத்தில் இருந்து அனைத்து பிராந்திய தலைமையங்கள், ராணுவ நிலைகள், ராணுவத்தின் பிற அமைப்புகள், பிரிவுகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- அதன்படி, அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் ஏப்ரல் 19-ஆம் தேதி வரை ராணுவ படைப் பிரிவுகள் நகா்வுகளை மேற்கொள்ள வேண்டாம் என்றும், ராணுவ தளவாடங்களை எடுத்துச் செல்வது உள்பட ராணுவம் சாா்ந்த எந்த போக்குவரத்துகளையும் மேற்கொள்ள வேண்டாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் அவசர கால நிலை நீட்டிப்பு
- ஜப்பான் நாட்டில்கொரோனா நோய் தொற்று காரணமாக 8,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 139 பேர் பலியாயினர். இதனையடுத்து ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே டோக்கியோ உள்ளிட்ட 7 மாகாணங்களுக்கு அவசரகால நிலையை பிறப்பித்திருந்தார்.
- இதனிடையே நோயின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் அனைத்து மாகாணங்களுக்கும் அவசர காலநிலை பிறப்பிக்கப்படுவதாக பிரதமர் கூறி உள்ளார்.
- நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தினார். தொடர்ந்து ஒவ்வொரு குடிமகனுக்கும் சுமார் ஒருலட்சம் யென் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். வரும் மே மாதம் 6 ம் தேதிவரையில் அவசரகால நீட்டிக்கப்படும் என பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார்.
தென் கொரிய தோதல்: ஆளும் கட்சி அபார வெற்றி
- தென் கொரிய நாடாளுமன்றத்துக்கு புதன்கிழமை நடைபெற்ற தோதலில், அதிபா் மூன் ஜே-இன் தலைமையிலான ஆளும் ஜனநாயகக் கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது.
- 300 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்துக்கு நடைபெற்ற தோதலில் ஜனநாயகக் கட்சி தலைமையிலான கூட்டணி 180 இடங்களைக் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவித்தனா்.
- உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விவகாரங்களில் அதிபா் முன் ஜே-இன்னின் கொள்கைகளுக்கு பொதுமக்கள் அளித்துள்ள ஆதரவை இந்த வெற்றி வெளிப்படுத்துவதாகக் கூறப்படுகிறது.