- வங்கி முறைகேள் அலுவலர் (Banking Ombudsman) என்பவர் வங்கி வாடிக்கையாளருக்கு ஏற்படும் குறைகளைக் களைபவர். இந்திய அரசின் அறிவுறுத்தல்களின்படி, வங்கி முறைகேள் திட்டம் (Banking Ombudsman Scheme) 1 சனவரி 2006ஆம் நாள் முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
- இத்திட்டத்தை இந்திய ரிசர்வ் வங்கி நடைமுறைப்படுத்துகிறது. இத்திட்டத்தின்படி இந்தியாவில் அனைத்துப் பகுதிகளில் வங்கி முறைகேள் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- வங்கி வாடிக்கையாளர், தனது வங்கி நடவடிக்கைகள் தொடர்பான குறைகளை, அனைத்து வழிகளிலும் முயன்றும், குறிப்பிட்ட வங்கியால் தீர்க்கப்படவில்லை எனில் வங்கி முறைகேள் அலுவலரிடம் முறையிட்டுத் தீர்வு காணலாம்.
- வங்கி வாடிக்கையாளர்களின் குறைகளைக் களைய, நாட்டின் பல்வேறு பகுதிகளில் வங்கி முறைகேள் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- வங்கி முறைகேள் அலுவலர், ஒரளவு நீதிமன்ற அதிகாரத்துடன் செயல்படுபவர். வங்கி முறைகேள் அலுவலரின் முடிவு, தனக்குச் சாதகமாக இல்லாத போது, வங்கி வாடிக்கையாளரோ அல்லது வங்கியோ நீதிமன்றத்தை அணுகலாம்.
- இணையவழி வங்கி நடவடிக்கைகளில், வங்கிகளின் குறைபாடுகள் குறித்தும் வங்கி முறைகேள் அலுவலரிடம் புகார் மனு அளிக்கலாம்.
வங்கி முறைகேள் அலுவலர் / Banking Ombudsman
April 17, 2020
0
Tags