
2021-2022 ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.4 % ஆக இருக்கும் -ரிசர்வ் வங்கி ஆளுநர்
- 2021-2022 ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார்.
- இந்த ஆண்டு நெல் பயிரிடும் அளவு 37 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தியாவில் அரிசி, கோதுமை இருப்பு உள்ளதால் தட்டுப்பாடு ஏற்படாது. மார்ச் மாதம் வாகன உற்பத்தி பெருமளவு குறைந்தூள்ளது. 2021-22 நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.4%ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது." எனத் தெரிவித்தார்.
- விவசாயிகளுக்கும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், வீட்டு வசதி ஆகிய துறைகளுக்கும் எளிதில் கடனுதவி கிடைக்க வேண்டும் என்பதற்காக, நபாா்டு, இந்திய சிறுதொழில் வளா்ச்சி வங்கி, தேசிய வீட்டு வசதி வங்கி ஆகியவற்றுக்கு ரூ.50,000 கோடி கடனுதவி அளிக்கப்படவுள்ளது.
- இதில், நபாா்டு வங்கிக்கு ரூ.25,000 கோடி, இந்திய சிறுதொழில் வளா்ச்சி வங்கிக்கு ரூ.15,000 கோடி, தேசிய வீட்டு வசதி வங்கிக்கு ரூ.10,000 கோடி வழங்கப்படவுள்ளது.
- பிற வா்த்தக வங்கிகளிடம் இருந்து ரிசா்வ் வங்கி பெறும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் (ரிவா்ஸ் ரெப்போ) 4 சதவீதத்தில் இருந்து 3.75 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
- இதனால், வங்கிகளின் பணம் ரிசா்வ் வங்கியிடம் தேங்குவது குறைந்து, கடன் வழங்குவது அதிகரிக்கும். அதேசமயத்தில், பிற வா்த்தக வங்கிகளுக்கு ரிசா்வ் வங்கி அளிக்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் (ரெப்போ விகிதம்) மாற்றம் எதுவுமின்றி 4.40 சதவீதமாகவே தொடரும். கடந்த மாதம்தான் ரெப்போ விகிதம் 5.15 சதவீதத்தில் இருந்து 4.40 சதவீதமாக குறைக்கப்பட்டது.
- மாநில அரசுகள் கூடுதல் கடன் பெற அனுமதி: ரிசா்வ் வங்கியிடம் இருந்து மாநில அரசுகள் கூடுதலாக 60 சதவீதம் கடனுதவி பெறுவதற்கு செப்டம்பா் 30-ஆம் தேதி வரை அனுமதி அளிக்கப்படுகிறது.
- கரோனா பரவலுக்குப் பிறகு, சா்வதேச பொருளாதாரம் நெருக்கடியைச் சந்தித்துள்ளது. இருப்பினும் ஜி20 கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள உறுப்பு நாடுகளில் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 1.9 சதவீதமாக இருக்கும் என பன்னாட்டு நிதியம் கணித்திருப்பது ஆறுதல் அளிக்கிறது.
- தேசிய ஊரடங்கு மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பொருளாதாரச் சவால்களை ரிசா்வ் வங்கி தொடா்ந்து கண்காணிக்கும்.
- சவால்களுக்குத் தீா்வு காண்பதற்கான அனைத்து வழிமுறைகளையும் ரிசா்வ் வங்கி கையாளும். கடந்த மாா்ச் 1-ஆம் தேதி முதல் ஏப்ரல் 14-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் நாடு முழுவதும் ரூ.1.2 லட்சம் கோடி ரொக்கம் புழக்கத்தில் விடப்பட்டுள்ளது என்று சக்திகாந்த தாஸ் கூறினாா்.
நூறு நாள் வேலைத் திட்டம்: ரூ.256-ஆக ஊதியம் அதிகரிப்பு
- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தினசரி ஊதியத்தை ரூ.256 ஆக உயா்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவானது ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வருவதாகவும் தெரிவித்தது.
- இந்த நிலையில், நாடு முழுவதும் கரோனா பாதிப்பு காரணமாக நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெறவில்லை. தமிழகத்தில் கடந்த 15-ஆம் தேதி முதல் நூறு நாள் வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
கொரோனா சிகிச்சை ; திருப்பதி தேவஸ்தானம் ரூ. 20 கோடி நிதியுதவி
- கொரோனா சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்டுள்ள, திருச்சானுார் பத்மாவதி மருத்துவமனையில், தற்போது, 390 படுக்கை வசதிகளும், 110 வென்டிலேட்டர்களும் பயன்பாட்டில் உள்ளன.
- படுக்கை வசதியை, இன்னும் இரண்டு நாட்களில், 500 ஆக உயர்த்த, மருத்துவமனை நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், 100 வென்டிலேட்டர்களை, தயார் நிலையில் வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- கொரோனா பரிசோதனைக்கு தேவைப்படும், மருத்துவ உபகரணங்கள் வாங்க, தேவஸ்தானம், இதுவரை சித்துார் மாவட்ட நிர்வாகத்திற்கு, 20 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது.
- ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து, தினசரி, 1.40 லட்சம் என இதுவரை, 26 லட்சம் உணவு பொட்டலங்களை, ஆதரவற்றோருக்கு வழங்கியுள்ளது.
நிலக்கரி இறக்குமதியில் தூத்துக்குடி வஉசி துறைமுகம் புதிய சாதனை
- துறைமுகத்தின் சரக்கு தளம் 9-ல் எம்.வி. தியோடர் ஓல்டென்டோர்ப் என்ற கப்பலில் இருந்து இந்த நிலக்கரி இறக்கப்பட்டது. இது முந்தைய 24 மணி நேர சாதனையான 54,020 மெட்ரிக் டன் நிலக்கரியை விட அதிகமாகும். இந்த கப்பல் இந்தோனேஷியாவில் இருந்து 73,507 டன் நிலக்கரியுடன் தூத்துக்குடி வஉசி துறைமுகம் வந்தது.
- இங்குள்ள அதிநவீன மூன்று நகரும் பளுதூக்கி இயந்திரங்கள் மூலம் நிலக்கரி வேகமாக இறக்கப்பட்டன. இதில் 24 மணி நேரத்தில் மட்டும் 55,105 மெட்ரிக் டன் நிலக்கரி இறக்கப்பட்டது.
பாகிஸ்தானுக்கு அமெரிக்கா 8.4 மில்லியன் டாலர் நிதியுதவி
- பாக்.,கில் கொரோனா பரவலை தடுக்கவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையிலும், அமெரிக்கா 8.4 மில்லியன் டாலர் தொகையை நிதியாக அளிக்க உள்ளது.
- பாக்.,கில் கொரோனா 'ஹாட் ஸ்பாட்'டாக அடையாளம் காணப்பட்டுள்ள 3 இடங்களில் புதிய ஆய்வகங்கள் அமைக்க, மொத்த உதவித் தொகையிலிருந்து 3 மில்லியன் டாலர்கள் பயன்படுத்தப்பட உள்ளது.
- பாக்., பொருளாதார பாதிப்பை சரி செய்யும் விதத்தில், சர்வதேச நாணய நிதியம்(ஐ.எம்.எப்), கடந்த 16ம் தேதி பாகிஸ்தானுக்கு 1.3 பில்லியன் அமெரிக்க டாலர் அவசர நிதியுதவி அளிக்க ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் சங்கத்தின் இயக்குநராக கிரீம் ஸ்மித் நியமனம்
- கடந்த டிசம்பர் மாதம் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் சங்கத்தின் இடைக்கால இயக்குநராக முன்னாள் கேப்டன் கிரீம் ஸ்மித் நியமிக்கப்பட்டார். தற்போது அவருடைய பதவிக்காலம் மார்ச் 2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
- 22 வயதில் கேப்டனான ஸ்மித், தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் இளம் கேப்டன் என்கிற பெருமையை அடைந்தார். 117 டெஸ்டுகளில் விளையாடி, 9265 ரன்களை எடுத்தார். மேலும் 197 ஒருநாள், 33 டி20 ஆட்டங்களிலும் அவர் விளையாடியுள்ளார்.