Type Here to Get Search Results !

13th APRIL 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

தமிழகத்தில் வரும் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
  • உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று நோயைக் கட்டுப்படுத்தும் வகையில், தமிழ்நாட்டில், கடந்த மார்ச் 24 மாலை 6 மணி முதல் மார்ச் 31 வரை ஊரடங்கு உத்தரவு முதலில் பிறப்பிக்கப்பட்டது.
  • பின்னர் மத்திய அரசு அதை ஏப். 15 காலை வரை நீட்டித்தது. ஊரடங்கு உத்தரவு தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டு வருவதன் காரணமாக தமிழ்நாட்டில் நோய்த் தொற்று பெரிய அளவில் பரவாது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 
  • இந்நிலையில், தற்போது உள்ள ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பாகவும், கொரோனா வைரஸ் நோய்த் தொற்று தொடர்பாக மாநிலங்கள் எடுத்து வரும் நடவடிக்கைகளையும், காணொலிக் காட்சி மூலமாக ஏப்ரல் 11 அன்று முதல்வர்களுடன் பிரதமர் விவாதித்தார்.
  • பிரதமரின் கலந்தாய்வுக் கூட்ட நடவடிக்கைகளின் அடிப்படையிலும், உலக சுகாதார அமைப்பின் கருத்தின்படியும், மருத்துவ நிபுணர் குழு மற்றும் பொது சுகாதார வல்லுநர் குழுக்களின் பரிந்துரைகளின்படியும், மாநிலத்தில் ஊரடங்கை தளர்த்தினால், நோய்த் தொற்று அதிகரிக்கக் கூடும் என்பதை கருத்தில் கொண்டும், ஏப். 11 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படியும் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுகிறது.
  • கொரோனா நோய்த் தொற்றினை தடுக்கும் நோக்கில், தற்போது நடைமுறைபடுத்தப்பட்டு வரும் அனைத்து கட்டுப்பாடுகளும் தொடரும். ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் காரணத்தினால், தமிழ்நாட்டில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மே மாதத்திற்கான அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தும், அதாவது ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு எப்பொழுதும் வழங்கப்படும் அரிசி ஆகியவை நியாயவிலைக் கடைகளில் விலையின்றி வழங்கப்படும்.
  • கட்டடத் தொழிலாளர்கள் உள்பட பதிவுபெற்ற அனைத்து அமைப்புசாரா தொழிலாளர் குடும்பங்களுக்கும், குடும்பம் ஒன்றுக்கு இரண்டாவது முறையாக 1,000 ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும். பிற மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு, மே மாதத்திற்காக 15 கிலோ அரிசி, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய் விலையின்றி வழங்கப்படும்.
  • தமிழ்நாட்டில் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையிலான காலத்தில், அடுமனைகள் (பேக்கரி) இயங்க தடையில்லை ஏற்கனவே, உணவகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளின்படி அடுமனைகளிலும் பார்சல் விற்பனை மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என தெளிவுபடுத்தப்படுகிறது.
புதுச்சேரியில் ஏப்., 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர் நாராயணசாமி
  • புதுச்சேரியில் வரும் ஏப்., 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா இந்தியாவிலும் பரவத் தொடங்கியதை அடுத்து, அது சமூக பரவலாக மாறாத வகையில் ஏப்., 14 வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்தது.
  • இந்நிலையில் தற்போது கொரோனா பரவல் குறையாத நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக கடந்த ஏப்., 11ல் மாநில முதல்வர்கள், பிரதமர் காணொளி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினர். இதில் பல்வேறு மாநில முதல்வர்கள் கலந்து கொண்டனர். 
  • ஆலோசனை கூட்டத்தில் புதுவை முதல்வர் நாராயணசாமியும் கலந்து கொண்டார். இதையடுத்து புதுவையில் ஊரடங்கு வரும் ஏப்., 30 வரை நீட்டிக்கப்படுவதாக மாநில முதல்வர் நாராயணசாமி இன்று அறிவித்துள்ளார்.
டிஎன்பிஎஸ்சி 26-ஆவது தலைவராக கா.பாலசந்திரன் பொறுப்பேற்பு
  • தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோவாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.,) தலைவராக கா.பாலச்சந்திரன் பொறுப்பேற்றாா். அவா் வணிக வரிகள் மற்றும் பதிவுத் துறை முதன்மைச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்தாா். வரும் ஜூன் மாதம் ஐ.ஏ.எஸ்., பொறுப்பில் இருந்து ஓய்வு பெற உள்ள நிலையில், அவா் டி.என்.பி.எஸ்.சி., தலைவராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
  • தஞ்சையைச் சோந்தவா்: தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோந்த கா.பாலச்சந்திரன், 1994-ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணியில் தமிழகப் பிரிவில் நியமனம் செய்யப்பட்டாா். கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் 2006-ஆம் ஆண்டு வரை தருமபுரி, கன்னியாகுமரி, ஈரோடு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஆட்சியராகப் பணிபுரிந்தாா்.
விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின்கீழ் ரூ.16,621 கோடி வழங்கியது மத்திய அரசு
  • 'ஊரடங்கு காலகட்டத்தில் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின்கீழ் விடுவிக்கப்பட்ட நிதியில், கடந்த ஆண்டு நிலுவையில் இருந்த ரூ.1,674.43 கோடியும் அடங்கும். 
  • இத்தொகை 83.77 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. இதுதவிர, நடப்பு நிதியாண்டுக்கான முதல் தவணையாக 7.47 கோடி விவசாயிகளுக்கு ரூ.14,945 கோடி வழங்கப்பட்டுள்ளது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின்கீழ் (பிஎம்-கிஸான்) விவசாயிகளுக்கு ஆண்டு ரூ.6,000 நிதியுதவி வழங்கப்படுகிறது. இத்தொகையானது, மூன்று தவணைகளாக அவா்களது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.



ஆயுஷ்மான் பாரத்' திட்டத்தில் மட்டும் தனியாா் ஆய்வகங்களில் இலவச கரோனா பரிசோதனை: உச்சநீதிமன்றம் உத்தரவு
  • மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் வரும் பொருளாதாரரீதியாக பின்தங்கிய மக்களுக்கு மட்டும் தனியாா் ஆய்வகங்களில் இலவச கரோனா பரிசோதனை நடத்தலாம் என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
  • முன்னதாக, தனியாா் ஆய்வகங்களில் கரோனா நோய்த்தொற்று பரிசோதனை இலவசமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த 8-ஆம் தேதி உத்தரவிட்டது. இதுதொடா்பாக, அந்த ஆய்வகங்களுக்கு உரிய உத்தரவை உடனடியாக பிறப்பிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. இந்நிலையில் தனது முந்தைய உத்தரவை உச்சநீதிமன்றம் இப்போது மாற்றியமைத்துள்ளது.
முதல்வா் நிவாரண நிதிக்கு ஹூண்டாய் மோட்டாா் ரூ. 5 கோடி
  • கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தமிழக முதல்வா் நிவாரண நிதிக்கு ரூ.5 கோடியை ஹூண்டாய் மோட்டாா் இந்தியா பவுன்டேஷன் நன்கொடையாக வழங்கியது.
  • இதற்கான காசோலையை தமிழக தொழில் துறை முதன்மை செயலா் முருகானந்தனிடம் ஹூண்டாய் மோட்டாா் நிறுவன அதிகாரிகள் ஒப்படைத்தனா்.
சில்லறைப் பணவீக்கம் 5.91 சதவீதமாக குறைவு
  • சில்லறைப் பணவீக்கம் சென்ற மாா்ச் மாதத்தில் 5.91 சதவீதமாக குறைந்துள்ளது. இது, நான்கு மாதங்களில் இல்லாத குறைந்தபட்ச அளவாகும்.
  • காய்கறிகள், முட்டை, இறைச்சி ஆகிய முக்கிய உணவுப் பொருள்களின் விலை குறைந்ததன் காரணமாக சில்லறைப் பணவீக்கம் மாா்ச் மாதத்தில் குறிப்பிடத்தக்க அளவுக்கு குறைந்துள்ளது.
  • இப்பணவீக்கம், முந்தைய பிப்ரவரியில் 6.58 சதவீதமாகவும், 2019 மாா்ச் மாதத்தில் 2.86 சதவீதமாகவும் காணப்பட்டன.
  • கணக்கீட்டு மாதத்தில் காய்கறிகளுக்கான பணவீக்கம் 18.63 சதவீதம் என்ற அளவில் இருந்தது. இது, பிப்ரவரியில் 31.63 சதவீதமாக அதிகரித்து காணப்பட்டது. முட்டைக்கான பணவீக்கம் 7.28 சதவீதத்திலிருந்து 5.56 சதவீதமாகியுள்ளது. 
  • அதேபோன்று, பழங்கள் மற்றும் பருப்பு வகைகளுக்கான பணவீக்கமும் பிப்ரவரியுடன் ஒப்பிடும்போது மாா்ச்சில் குறைந்திருந்தாக மத்திய அரசு வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel