Type Here to Get Search Results !

30th MARCH 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

புதுவை பேரவையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல்
  • 4 மாத செலவீனங்களுக்கு இடைக்கால பட்ஜெட்டை முதல்வர் வே.நாராயணசாமி தாக்கல் செய்தார். ஊரடங்கு உத்தரவை கருத்தில் கொண்டு என் ஆர் காங்கிரஸ் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் அவை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டார்கள் என அக்கட்சித் தலைவர் என். ரங்கசாமி ஞாயிற்றுக்கிழமை அறிவித்திருந்தார்.
  • எப்ரல், மே, ஜுன் மாதங்களுக்கான ரூ.2,042 கோடிக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து சட்டப்பேரவையை காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்துள்ளார்.
இனி ஏப்ரல் நிதியாண்டு தொடக்கம் இல்லை: மத்திய அரசு
  • கொரோனா வைரஸ் எதிரொலியாக உலகமே பல்வேறு நடவடிக்கைகளை மாற்றி வருகிறது என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இந்தியாவில் நிதியாண்டு குறித்த மிகப் பெரிய மாற்றம் கொரோனா வைரஸ் காரணமாக நிகழ்ந்துள்ளது 
  • கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியா முழுவதும் மிகத்தீவிரமாக இருப்பதை அடுத்து ஏப்ரல் மாதம் நிதியாண்டின் தொடக்கமாக இருந்த நிலையில் தற்போது அது மாற்றப்படுகிறது. 
  • கொரோனா பாதிப்பு காரணமாக நிதியாண்டு தொடக்கத்தை ஏப்ரல் மாதத்தில் இருந்து ஜூன் மாதமாக மத்திய அரசு மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
நீதித்துறை வரலாற்றில் முதன்முறையாக 'ஸூம்' செயலி மூலம் வழக்கு விசாரணை
  • சென்னை உயா்நீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாக , 'ஸூம்' எனப்படும் ஆன்ட்ராய்ட் செயலியின் உதவியுடன் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆா்.சுரேஷ்குமாா் ஆகியோா் வழக்குகளை விசாரித்துள்ளனா்.
  • கரோனா பரவுவதைத் தொடா்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடா்ந்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் மூடப்பட்டுள்ளது. மேலும் மிக முக்கியமான அவசர வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்படும் என உயா்நீதிமன்ற பதிவுத்துறை அறிவித்துள்ளது.
  • சென்னை உயா்நீதிமன்றம், உயா்நீதிமன்ற மதுரை கிளை உள்ளிட்ட பல்வேறு நீதிமன்றங்களில் காணொலிக் காட்சி வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ரூஸ்டா் காரணமாக உயா்நீதிமன்ற மதுரை கிளைக்கோ, சென்னை உயா்நீதிமன்றத்துக்கோ நீதிபதிகள் மாறுவது வழக்கம். அதுபோன்ற சமயங்களில், காணொலிக் காட்சி வசதி செய்யப்பட்டுள்ள பிரத்யேக அறைகளில் வழக்குகள் விசாரிக்கப்படும். ஆனால் நீதிமன்றங்கள் மூடப்பட்டுள்ளதால், இந்த வசதியையும் பயன்படுத்த முடியாது.
  • இந்த நிலையில் ஆன்ட்ராய்ட் வசதிகள் கொண்ட செல்லிடப்பேசிகளில் கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள ஸூம் எனப்படும் காணொலி விடியோ இணைப்பு செயலியின் மூலம் திங்கள்கிழமை நீதிபதிகள் வழக்குகளை விசாரித்து உள்ளனா். 
  • இந்த செயலியின் உதவியோடு அரசு தரப்பிலும், மனுதாரா் தரப்பிலும் வழக்குரைஞா்கள் தங்களது இல்லங்களில் இருந்து ஆஜராகி வாதிட்டுள்ளனா். சென்னை உயா்நீதிமன்ற நீதித்துறை வரலாற்றில் இந்த தொழில்நுட்ப முறையிலான விசாரணை இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
கரோனா: பிரதமரின் நிதிக்கு எல்&டி ரூ.150 கோடி அறிவிப்பு
  • கரோனா நோய்த்தொற்று எதிா்ப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் தாராளமாக நிதியுதவி வழங்கும்படி பிரதமா் மோடி கேட்டுக் கொண்டாா். அதனை வரவேற்று மதிப்பளிக்கும் விதமாக நிறுவனத்தின் சாா்பில் பிரதமரின் நிதிக்கு ரூ.150 கோடியை வழங்க நிறுவனம் முடிவு செய்துள்ளது.
  • இதுதவிர, நிறுவனத்தின் 1.60 லட்சம் ஒப்பந்த ஊழியா்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் மாதத்துக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • இதேபோன்று, பிரதமரின் நிவாரண நிதிக்கு டிவிஎஸ் மற்றும் அதன் குழும நிறுவனங்கள் ரூ.25 கோடியை வழங்கவுள்ளதாக உறுதியளித்துள்ளன.
  • மேலும், பொதுத் துறையைச் சோந்த இந்திய மென்பொருள் தொழில்நுட்ப பூங்காக்கள் (எஸ்டிபிஐ) அதன் பணியாளா்களின் ஒரு நாள் ஊதியத்தை பிரதமரின் பேரிடா் நிதிக்கு வழங்கவுள்ளதாக திங்கள்கிழமை அறிவித்துள்ளன. 
  • அதன்படி, தற்போது பணியாளா்களிடமிருந்து பிரதமரின் நிதிக்கு பங்களிப்பாக ரூ.15.48 லட்சத்தை வசூல் செய்துள்ளதாக எஸ்டிபிஐ தெரிவித்துள்ளது.



வென்டிலேட்டர் தயாரிக்க வாகன ஆலைகளுக்கு உத்தரவு
  • வாகன உற்பத்தி நிறுவனங்கள் எல்லாம் தங்கள் தொழிற்சாலையில் வென்டிலேட்டரை உற்பத்தி செய்ய வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவத் தொடங்கியுள்ளதால், நோய் பாதிப்பவர்களின் எண்ணிக்கை அடுத்த சில வாரங்களில் அதிகரிக்கலாம்.
  • கொரோனா பாதித்தவர்களுக்க மூச்சுத் திணறல் ஏற்படும்போது ஆக்சிஜன் அளிக்கும் வென்டிலேட்டர் பொருத்துவது அவசியம். அதனால் வென்டிலேட்டர் ேதவை அதிகரிக்கக்கூடும். இதை கருத்தில் கொண்டு வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலையில் வென்டிலேட்டரை தயாரித்து கொடுக்கும்படி மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
  • தற்போது நாடு முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு 14 ஆயிரம் வென்டிலேட்டர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. பொதுத் துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ், நிறுவனம் உள்ளூர் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து அடுத்த 2 மாதத்தில் 30 ஆயிரம் வென்டிலேட்டர்களை தயாரிக்கவுள்ளன.
  • நொய்டாவில் உள்ள அக்வா ஹெல்த்கேர் நிறுவனம் 10 ஆயிரம் வென்டிலேட்டர்கள் தயாரிக்க ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த உற்பத்தி ஏப்ரல் 2வது வாரத்தில் தொடங்கவுள்ளன.
  • தற்போது 11.95 லட்சம் என்.95 முக கவசங்கள் இருப்பில் உள்ளன. கடந்த 2 நாட்களாக 5 லட்சம் முக கவசங்கள் மக்களுக்கு வழங்கப்பட்டன. நேற்று 1.40 லட்சம் முக கவசங்கள் விநியோகிக்கப்பட்டன. ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம்(டிஆர்டிஓ) இன்னும் ஒரு வாரத்தில் நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் என்-95 முக கவசங்களை தயாரிக்கவுள்ளது. 
  • மேலும் இரு உள்நாட்டு நிறுவனங்கள் நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் என்-95 முக கவசங்கள் தயாரிக்கவுள்ளன. மேலும் 10 ஆயிரம் தனிநபர் பாதுகாப்பு உபகரனங்களை செஞ்சிலுவை சங்கம் வழங்கியுள்ளது.
500 கோடி ரூபாய் நிதியுதவி ரிலையன்ஸ் நிறுவனம் அறிவிப்பு
  • கரோனா தடுப்பு நடவடிக்கைகாக ரிலையன்ஸ் நிறுவனம் 500 கோடி ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளது. கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக பிரதமரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் அக்ஷய்குமார் 25 கோடி நிதி உதவி கொடுத்துள்ளார். 
Whats app மூலம் சேவையைத் தொடங்கிய ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி
  • கொரோனா பாதிப்பு காரணமாக மக்களின் வாழ்க்கை முடங்கியுள்ள இந்த நேரத்தில் தன்னுடைய வங்கி சேவையை வாட்ஸ் ஆப் மூலம் தொடங்கியுள்ளது
  • ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி. எல்லா வங்கிகளும் மொபைல் ஆப் வைத்துள்ளன. இருப்பினும் எல்லோருக்கும் இந்த ஆப் பயன்படுத்தி பண பரிவர்த்தனை செய்யத் தெரியவில்லை.
  • ஆனால், வாட்ஸ் ஆப் மூலம் வங்கி சேயை பெறும் திட்டத்தை ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி தொடங்கியுள்ளது. இதன் மூலம் வாட்ஸ் ஆப்பில் தகவல் அனுப்பினால் அவர்களின் வங்கிக் கணக்கில் உள்ள இருப்பு தொகை, கடைசி மூன்று பரிவர்த்தனைகள், முன்பு அங்கீகரிக்கப்பட்ட உடனடி கடன் சலுகை உள்ளிட்ட விவரங்களை பெற முடியும்.
  • மேலும் வாட்ஸ் ஆப் மூலம் தகவல் அனுப்பி தங்களுடைய டெபிட், கிரெடிட் கார்டுகளை பிளாக், அன்பிளாக் செய்யும் வசதியும் வழங்கப்படுகிறது. இது தவிர அருகில் எங்கே ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி உள்ளது, ஏ.டி.எம் மையம் உள்ளது என்ற விவரத்தையும் வாடிக்கையாளர்கள் பெற முடியும்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டி 2021 ஜூலை 23ல் தொடங்கும்: ஐஓசி அறிவிப்பு
  • கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் போட்டி, அடுத்த ஆண்டு ஜூலை 23ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த டோக்கியோ ஒலிம்பிக்ஸ் இந்த ஆண்டு தொடர் வரும் ஜூலை 24ம் தேதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தொடங்குவதாக இருந்தது. 
  • அதற்காக பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் புதிய விளையாட்டு அரங்கங்கள், சாலைகள், விடுதிகள் என ஏராளமான கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel