Type Here to Get Search Results !

22nd MARCH 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF


முகக் கவசத்தை பதுக்கினால் குண்டர் சட்டம்: தமிழக அரசு அதிரடி
  • முகக் கவசத்தை பதுக்கினால் குண்டர் சட்டம் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க மக்கள் வெளியே போவதை தவிர்த்தும் அத்தியாவசிய பணி காரணமாக வெளியே சென்றால் முகக்கவசம் அணிந்தும் சென்று வருகின்றனர். 
  • ஆனால் இந்த நிலைமையை பயன்படுத்தி கொண்டு ஒருசில மெடிக்கல் கடைக்காரர்கள் முகக்கவசங்களை பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக புகார்கள் குவிந்து வருகின்றாது
  • கொரானாவில் இருந்து காப்பாற்ற ஒரு பக்கம் தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து கோடிக்கணக்கில் செலவு செய்தும் மருத்துவர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் சேவை செய்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் இலாப நோக்கத்தை கருத்தில் கொண்டு ஒரு சில மருந்தகங்கள் முகக் கவசம் மட்டும் சானிடைசர்களை பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்
  • இந்த நிலையில் முகக் கவசம் மற்றும் சானிடைசர்களை பதுக்கி, அதிக விலைக்கு விற்றால் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்று தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
சத்தீஸ்கர் பெண், உதகை சிறுவனுக்கு உலக சுகாதார அமைப்பு புகழாரம்
  • கரோனா வைரஸ் தொற்றை தடுக்க அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு(டபிள்யூஎச்ஓ) அறிவுறுத்தியுள்ளது. 
  • இதுதொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானான் கேப்ரியாசஸ் தனது ட்விட்டர் பக்கம் மூலம் 'பாதுகாப்பான கைகள்' என்ற புதிய சவாலை அண்மையில் அறிமுகம் செய்தார். 
  • இந்த சவாலை ஏற்று பல்வேறு பிரபலங்கள் தங்களது கைகளை சோப்பு போட்டு கழுவி ட்விட்டரில் வீடியோ வெளியிட்டு வருகின்றனர். இவற்றை டெட்ராஸ் அதானான் கேப்ரியாசஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து புகழாரம் சூட்டி வருகிறார்.
  • தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த சிறுவன், கைகளை எவ்வாறு கழுவ வேண்டும் என்பது குறித்து புன்னகை ததும்பும் முகத்துடன் விளக்கம் அளித்துள்ளார். அந்த சிறுவனுடன் மேலும் 2 சிறுவர்கள் வீடியோவில் உள்ளனர். 
  • இதேபோல சத்தீஸ்கர் மாநிலம் அம்பிகாபூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில், கிராம சுகாதார பெண் ஊழியர் ஒருவர், சோப்பு போட்டு கைகளை கழுவுவது எப்படி என்பது குறித்து தெருக் குழாயில் கிராம பெண்களுக்கு விரிவான விளக்கம் அளித்தார். 



நாட்டில் முதல் முதலாக பிஎஸ்-6 எரிபொருள் விற்பனையை தொடங்கியது ஐஓசி
  • இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமாகத் திகழும் ஐஓசியின் தலைவா் சஞ்சீா் சிங் இதுகுறித்து கூறியதாவது. உலகின் மிக சுத்தமான எரிபொருளாக பிஎஸ்-6 கருதப்படுகிறது. இதனை நாடு முழுவதும் நாங்கள் வெற்றிகரமாக கொண்டு சோத்துள்ளோம்.
  • அதன்படி, நிறுவனத்துக்கு சொந்தமான 28,000 பெட்ரோல் நிலையங்களில் மிக குறைந்த அளவு கந்தகத்தைக் கொண்ட பிஎஸ்-6 எரிபொருளை இறுதிக் காலக்கெடுவான ஏப்ரல் 1-ஆம் தேதிக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே கொண்டு சோத்து விநியோகத்தை தொடங்கியுள்ளோம்.
  • ஐஓசியைத் தொடா்ந்து, பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட இதர எண்ணெய் நிறுவனங்களும் ஒரு வார காலத்துக்குள் பிஎஸ்-6 தர எரிபொருள் விற்பனையை நாடு முழுவதும் தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
  • முன்னதாக, நாடு முழுவதும் பிஎஸ்-4 தர எரிபொருளுக்கு மாறுவதற்காக எண்ணெய் நிறுவனங்கள் சுத்திகரிப்பை மேம்படுத்துவதற்கு ரூ.60,000 கோடியை முதலீடு செய்தன. இந்த நிலையில், பிஎஸ்-6 எரிபொருளை உருவாக்குவதற்காக ஆலைகளை மேம்படுத்த பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் ரூ.35,000 கோடியை செலவிட்டுள்ளன.
  • தேசிய தலைநகா் தில்லியில் பிஎஸ்-6 தர எரிபொருள்களின் விற்பனையை எண்ணெய் நிறுவனங்கள் கடந்த 2018 ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதியே தொடங்கி விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி உட்பட நாடு முழுக்க 13 மாநிலங்களில் மொத்தமாக லாக் டவுன் 
  • கொரோனா வைரஸை எதிர்க்கும் பொருட்டு மொத்தமாக தலைநகர் டெல்லியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மொத்தம் 13 மாநிலங்களில் இந்த லாக் டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை காலையில் இருந்து இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது.
  • இந்தியாவில் கொரோனாவின் தீவிரம் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இதுவரை 344 பேருக்கு கொரோனா பரவி உள்ளது. மொத்தமாக மகாராஷ்டிராவில் 74 பேருக்கு கொரோனா உள்ளது. இந்தியாவில் 7 பேர் இதனால் பலியாகி உள்ளனர்.
  • கேரளாவில் மொத்தம் 52 பேருக்கு கொரோனா பரவி உள்ளது. உத்தர பிரதேசம் மற்றும் டெல்லியில் தலா 26 பேருக்கு வைரஸ் தாக்கியுள்ளது.
  • இந்த நிலையில் கொரோனாவை எதிர்கொள்ளும் வகையில் நாடு முழுக்க 75 மாவட்டங்கள் லாக் டவுன் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, ஈரோடு, காஞ்சிபுரம் லாக் டவுன் செய்யப்பட உள்ளது. 
  • இந்த நிலையுள் தலைநகர் டெல்லியில் நாளை முதல் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வருகிறது. டெல்லி மொத்தமாக நாளை முதல் மார்ச் 31 வரை லாக் டவுன் செய்யப்படும். அங்கு பேருந்துகள் குறைவாக இயங்கும். ஆனால் அதிலும் 25% பயணிகள் மட்டும் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
  • அதேபோல் கர்நாடகாவில் பெங்களூரிலும் நாளை முதல் மார்ச் 31 வரை லாக் டவுன் செய்யப்படுகிறது. பெங்களூரில் பேருந்துகள் மிக குறைவான அளவில் இயங்கும். தனியார், அரசு அலுவலகங்கள் எல்லாம் மூடப்படும். முன்பு பாதியாக இருந்த லாக் டவுன் பெங்களூரில் மொத்தமாக அமலுக்கு வருகிறது. ஆட்டோக்கள், டாக்சிகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  • அதேபோல் இன்னொரு பக்கம் ஆந்திர பிரதேசம் தற்போது லாக் டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது, ஆந்திரப்பிரதேசம் முழுக்க லாக் டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 31ம் தேதி வரை அங்கு கடைகள், அலுவலகங்கள் எதுவும் செயல்படாது. அங்கு வெள்ளை ரேஷன் அட்டை உள்ளவர்களுக்கு நாளை 12 கிலோ, அரிசி, 1500 ரூபாய் பணம் அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
  • இந்த 75 மாவட்டங்கள் போக மொத்தமாக 13 மாநிலங்கள் லாக் டவுன் செய்யப்படுகிறது. கேரளா,ஹரியானா, உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரகாண்ட், மேற்கு வங்கம், ஆந்திர பிரதேசம், தெலுங்கனா, பஞ்சாப், டெல்லி, நாகலாந்து, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் லாக் டவுன் செய்யப்படுகிறது. இந்தியா ஏறத்தாழ அவசர நிலையை நெருங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
  • ஆந்திரா  - பிரகாசம், விஜயவாடா, விசாகப்பட்டினம்
  • சண்டிகர் - சண்டிகர் 
  • சத்தீஸ்கர் - ராய்ப்பூர் 
  • டெல்லி - மத்திய, கிழக்கு, வடக்கு, வடமேற்கு, வடகிழக்கு, மேற்கு, டெல்லி மாவட்டங்கள் 
  • குஜராத் - கட்ச், ராஜ்கோட், காந்திநகர், சூரத், வதோதரா, அகமதாபாத் ஹரியாணா - பரீதாபாத், சோனிபட், பஞ்ச்குலா, பானிபட், குர்கிராம்
  • இமாச்சல் - கங்கிரா
  • கர்நாடகா - பெங்களூரு, சிக்கப்பல்லபுரா, மைசூரூ, குடகு, கல்பரூகி
  • கேரளா - ஆலப்புழா, எர்ணாகுளம், இடுக்கி, கண்ணூர், காசர்கோடு, மலப்புரம், பத்தனம் திட்டா, திருவனந்தபுரம், கோட்டயம், திருச்சூர்
  • லடாக் - கார்கில், லே
  • ம.பி. - ஜபல்பூர்
  • மகாராஷ்டிரா - அகமதுநகர், அவுரங்காபாத், மும்பை, நாக்பூர், புனே, ரத்னகிரி, ராய்கட், யவத்மால், தானே, மும்பை புறநகர்
  • ஒடிசா - குத்ரா 
  • புதுச்சேரி - மாஹே
  • பஞ்சாப் - ஹோசியாபூர், எஸ்ஏஎஸ் நகர், எஸ்பிஎஸ்நகர்
  • ராஜஸ்தான் - பில்வாரா, ஜுனிகுன்ஹா, சிகார், ஜெய்பூ
  • தமிழகம் - சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு
  • தெலங்கானா - பத்ராத்ரி, கோதகுடம், ஹைதரபாத், ரங்காரெட்டி, சங்கா ரெட்டி, மேட்சாய்
  • உ.பி - ஆக்ரா, ஜி.பி.நகர், காசியாபாத், வாரணாசி
  • உத்தரகண்ட் - டேராடூன்
  • மேற்குவங்கம் - கொல்கத்தா, 24 பர்கானா

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel