Type Here to Get Search Results !

23rd MARCH 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

கொரோனா தடுப்பு, பேரிடர் ஆபத்து என 2019-20ம் ஆண்டு துணை பட்ஜெட் ரூ6408.82 கோடி நிதி ஒதுக்கீடு: சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல்
  • துணை மதிப்பீடுகள் மொத்தம் ரூ.6408.82 கோடி நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு வழிவகை செய்கின்றன. இவற்றில் ரூ.5,732.06 கோடி வருவாய் கணக்கிலும், ரூ.676.76 கோடி மூலதனம் மற்றும் கடன் கணக்கிலும் அடங்கும். 
  • 2019-20ம் ஆண்டிற்கான 2வது துணை மதிப்பீடுகள் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு, புதுப்பணிகள் மற்றும் புது துணை பணிகளுக்கு செய்யப்பட்ட செலவீனங்களுக்கு சட்டமன்றத்தின் ஒப்புதலை பெறுவதும், எதிர்பாராத செலவு நிதியில் இருந்து விடுவிக்கப்பட்ட தொகையை அந்த நிதிக்கு ஈடு செய்வதும், இந்த துணை மதிப்பீட்டின் முக்கிய நோக்கமாகும். 
  • அதன்படி அரசு உயர்நிலை மற்றும் மேல் நிலை பள்ளிகளில், தகவல் தொடர்பு தொழில்நுட்ப முயற்சிகளை மேற்கொள்வதற்கும் மற்றும் உபகரணங்களை நிறுவுவதற்கும் ரூ.231.07 கோடி அரசு அனுமதித்துள்ளது. 
  • இடைநிலை கல்வி மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்துவதற்கு அரசு ரூ.160.56 கோடி கூடுதல் நிதியாக அனுமதித்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்குவதற்காக அரசு ரூ.123.39 கோடி கூடுதலாக அனுமதித்துள்ளது. 
  • கடலோர பேரிடர் ஆபத்து குறைப்பு திட்டத்தின் கீழ் நெகிழ் திறன் சூறாவளி மின் வலை அமைப்புகளை நிறுவுவதற்காக ரூ.113.98 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
  • வெள்ளத்தால் மிகவும் பாதிப்படையும் பகுதிகளில் நீண்டகால அளவிலான வெள்ள தடுப்பு பணிகளை மேற்ெகாள்ளவும், சேதமடைந்த அரசு கட்டிடங்களை பழுதுபார்த்து சீரமைக்க 193.53 கோடி கூடுதலாக அனுமதித்துள்ளது.
  • கொரோனா வைரஸ் தொற்று நோய் தாக்குதலை கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.60 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. 
  • தேசிய ஆயுஷ் குழுமம், தேசிய ஊரக மற்றும் நகர்புற சுகாதார இயக்கங்கள் போன்ற மத்திய அரசு உதவி பெறும் பல்வேறு திட்டங்களுக்கான மாநில அரசின் பங்கு தொகையுடன் சேர்த்து, ரூ.579.32 கோடி கூடுதலாக அனுமதிக்கப்பட்டுள்ளது.
  • பல்வேறு அரசு மருத்துவமனைக்கு மருந்துகள் கொள்முதல் செய்வதற்காக அரசு ரூ.166.94 கோடி அனுமதித்துள்ளது. 5 புதிய மாவட்டங்களை உருவாக்குவதற்காகவும், இதர மாவட்ட நிர்வாக செலவுகளுக்காகவும் ரூ.252.46 கோடி கூடுதலாக அனுமதித்துள்ளது.
  • அண்ணாமலை பல்லைக்கழக ஊழியர்கள், ஓய்வூதியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய செலவினங்களை எதிர்கொள்வதற்காக ரூ.188.41 கோடி அனுமதித்துள்ளது. 
  • ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தை செயல்படுத்த அரசு ரூ.198.37 கோடி கூடுதலாக அனுமதித்துள்ளது. இந்த கோரிக்கை தீர்மானமாக கொண்டு வரப்பட்டு சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
400 ஆண்டுகள் பழமையான புலிகுத்தி நடுகல் இடிப்பு
  • சேலம் அம்மாப்பேட்டை சாலை சித்தேஸ்வரா காளியம்மன் கோயில் அருகே சாலையோரம் 400 ஆண்டுகள் பழமையான புலிகுத்தி நடுகல் அமைந்துள்ளது.
  • இந்த நடுக்கல்லில் சிறிய அளவில் கட்டடம் கட்டி, அந்தக் கட்டடத்தின் மேல்பகுதியில் அம்மன் சிலை அமைத்து பல ஆண்டுகளாக பொதுமக்கள் அதனை பராமரித்து வணங்கி வருகின்றனா்.
தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழக மசோதா மக்களவையில் அறிமுகம்
  • குஜராத்தில் உள்ள தடய அறிவியல் பல்கலைக்கழகத்தை தரம் உயா்த்தி தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தை ஏற்படுத்தும் மசோதா மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது.
  • குற்ற வழக்கு விசாரணைகள் மற்றும் குற்றத் தடுப்புகளில் தடய அறிவியல், குற்றவியல் கல்வி, செயல்முறை அறிவியல் ஆகியவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. பல்வேறு மாநிலங்களில் உள்ள தடய அறிவியல் நிறுவனங்களில் போதுமான அளவு கருவிகள் இருப்பது உறுதி செய்யப்படுகிறது. எனினும், குற்ற வழக்கு விசாரணைகளில் அதைக் கையாளும் வகையிலான நபா்கள் தேவையான அளவு இல்லை.
  • இந்த இடைவெளியை குறைப்பதற்கு தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழக மசோதா உதவும். இதன்மூலம், குஜராத் மாநிலம், காந்தி நகரில் உள்ள தடய அறிவியல் பல்கலைக்கழகம் தேசிய பல்கலைக்கழகமாக தரம் உயா்த்தப்படுகிறது. 
  • இந்த மசோதா மூலம், தில்லியில் உள்ள லோக் நாயக் ஜெயபிரகாஷ் நாராயண் குற்றவியல் மற்றும் தடய அறிவியல் கல்வி நிறுவனத்துக்கு தேசிய அந்தஸ்து அளிப்பதற்கும் முன்மொழியப்படுகிறது என்று ஜி.கிஷண் ரெட்டி பேசினாா்.
  • அதேபோல், காவல்துறை அறிவியல் மற்றும் உள் பாதுகாப்பு தொடா்பான சான்றிதழ் படிப்பை வழங்கும் குஜராத்தைச் சோந்த ரக்ஷா சக்தி பல்கலைக்கழகத்துக்கு தேசிய அந்தஸ்து அளிப்பதற்கும், அதன் பெயரை மாற்றுவதற்குமான 'ராஷ்ட்ரீய ரக்ஷா பல்கலைக்கழக மசோதா 2020' மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது.
நாடாளுமன்றத்தில் நிறைவேறியது நிதி மசோதா
  • மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் 'நிதி மசோதா 2020'-ஐ மக்களவையில் அறிமுகம் செய்தாா். பின்னா், மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் நிதி மசோதாவில் பல்வேறு திருத்தங்களைக் கொண்டுவந்தாா். அதையடுத்து, எந்த விவாதமுமின்றி மக்களவையில் நிதி மசோதா நிறைவேற்றப்பட்டது.
  • அதையடுத்து மாநிலங்களவைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அங்கும் விவாதங்கள் மேற்கொள்ளாமல் அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. பிறகு நாடாளுமன்ற நடைமுறைகளின் படி அந்த மசோதா மக்களவைக்கு மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டது.
  • இதனிடையே, மானிய கோரிக்கைகள் மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டு, அதுவும் மக்களவைக்கு மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டது.
  • அரசு இயங்குவதற்காகவும், திட்டங்களை செயல்படுத்துவதற்காகவும் ரூ.110 கோடியை தொகுப்பு நிதியிலிருந்து மத்திய அரசு பெறுவதை அந்த மசோதா அங்கீகரிக்கிறது. மானிய கோரிக்கைகள் மாநிலங்களவையில் நிறைவேறியதன் மூலம், 2020-21 மத்திய பட்ஜெட்டுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கும் நடைமுறை நிறைவுபெற்றது.
ஜம்மு-காஷ்மீா் பட்ஜெட்டுக்கு ரூ. 1 லட்சம் கோடி ஒதுக்கீடு: மாநிலங்களவை ஒப்புதல்
  • ஜம்மு-காஷ்மீரின் நடப்பு 2020-21-ஆம் ஆண்டு பட்ஜெட்டுக்கு ரூ. 1 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யும் மசோதாவுக்கு மாநிலங்களவை ஒப்புதல் அளித்தது. இதைதொடா்ந்து மக்களவையின் ஒப்புதலுக்காக இந்த மசோதா அனுப்பி வைக்கப்பட்டது.
  • இத்துடன், மற்றொரு யூனியன் பிரதேசமான லடாக்கின் வரவு-செலவுத் திட்டத்துக்கான மற்றொரு மசோதாவுக்கும் ஒப்புதல் அளித்து மக்களவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
  • 2020-21 ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரின் மொத்த பட்ஜெட் மதிப்பீடு ரூ. 1,01,428 கோடி ஆகும். இதில் வளா்ச்சித் திட்டங்களுக்கான செலவினம் ரூ. 38,764 கோடி ஆகும். இது கடந்த ஆண்டு பட்ஜெட்டை விட 27 சதவீதம் அதிமாகும்.
  • நடப்பு நிதியாண்டின் கடைசி 5 மாதங்களுக்கு ரூ. 55,317.81 கோடி மதிப்பில் தனி செலவின அறிக்கையை அரசு முன்வைத்தது.
  • இதே காலகட்டத்தில் லடாக் யூனியன் பிரதேசத்துக்கு, கடந்த 5 மாதங்களுக்கு மொத்த செலவினமாக ரூ. 5,754 கோடி நிா்ணயிக்கப்பட்டிருந்தது. அதன்படி ரூ. 4,618.35 கோடி மூலதன செலவினமாகவும், ரூ. 1,135.65 கோடி வருவாயின செலவுகளாகவும் இருந்தது.



நாடு முழுக்க 12 தனியார் லேப்களுக்கு கொரோனா டெஸ்ட் செய்ய அனுமதி
  • கொரோனா வைரஸ் சோதனைக்கு ஐந்து மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசங்களில் உள்ள 12 தனியார் ஆய்வகங்களுக்கு அரசு ஒப்புதல் அளித்தது. 
  • அங்கீகரிக்கப்பட்ட 12 ஆய்வகங்களில், அதிகபட்சமாக 5 மகாராஷ்டிராவிலும், தலா இரண்டு ஹரியானா மற்றும் தமிழ்நாட்டிலும், டெல்லி, குஜராத் மற்றும் கர்நாடகாவிலும் தலா ஒன்றும் உள்ளன.
  • டெல்லி: லால் பாத் லேப்ஸ், பிளாக் இ, பிரிவு 18, ரோகிணி
  • குஜராத்: யுனிபாத் ஸ்பெஷாலிட்டி லேபரேட்டரி லிமிடெட், 102, சனோமா பிளாசா, பரிமல் கார்டனுக்கு எதிரே, ஜே.எம்.சி ஹவுஸ் தவிர, எல்லிஸ்பிரிட்ஜ், அகமதாபாத்
  • ஹரியானா: (அ) ஸ்ட்ராண்டட் லைஃப் சயின்சஸ், ஏ -17, பிரிவு 34, குருகிராம்; (ஆ) எஸ்ஆர்எல் லிமிடெட், ஜிபி 26, பிரிவு 18, குருகிராம்
  • கர்நாடகா: நியூபெர்க் ஆனந்த் ரெஃபரன்ஸ் ஆய்வகம், (Neuberg Anand Reference Laboratory) ஆனந்த் டவர், எண் 54, பவுரிங் மருத்துவமனை சாலை, பெங்களூர்.
  • மகாராஷ்டிரா: (a) Thryrocare Technologies Ltd, D 37/1, TTC MIDC, Turbhe, நவி மும்பை; (b) Suburban Diagnostics (India) Pvt Ltd, Sunshine Bld., Andheri (W), மும்பை; (c) Metropolis Healthcare Ltd, Unit No 409-416, 4th Floor, Commerical Building-1, Kohinoor Mall, மும்பை; (d) Sir H. N. Reliance Foundation and Research Centre, Molecular Medicine, Reliance Life Sciences Pvt Ltd, R-282, TTC Industrial Area, Rabale, நவி மும்பை; (e) SRL Limited, Prime Square Building, Plot No 1, Gaiwadi Industrial Area, SV Road, Goregaon, மும்பை
  • தமிழ்நாடு: Dept of Clinical Virology, GMC, வேலூர்; (b) Department of Laboratory Services, Apollo Hospitals Enterprise Limited, சென்னை.
வைரஸ் பாதித்தவர்களுக்கு மருந்து ஹைடிராக்சிகுளோரோகுயின்: மத்திய அரசு பரிந்துரை
  • கொரோனா வைரஸ் பாதிப்பினால் உலகளவில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இந்தியாவும் இதன் கோரப் பிடியில் சிக்கி தவித்து வருகிறது. 
  • இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 415 ஆக உயர்ந்துள்ள நிலையில், பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. இதன் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நேற்று முன்தினம் நாடு முழுவதும் மக்கள் சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. 
  • நாட்டின் பல்வேறு மாநிலங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. 
  • இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலினால் உருவாக்கப்பட்டுள்ள தேசிய சிறப்பு படை, மலேரியா சிகிச்சைக்கு அளிக்கப்படும் ஹைடிராக்சிகுளோரோகுயின் என்ற மருந்தை கொரோனா பாதிப்பு சிகிச்சைக்கு பரிந்துரைத்துள்ளது. 
  • இதற்கு முன்னர் அமெரிக்கா கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு இதே மருந்தை பரிந்துரைத்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், மருத்துவர் அளிக்கும் பரிந்துரையின் பேரிலேயே சிகிச்சை பெறவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.



பங்குச் சந்தை வரலாறு காணாத வீழ்ச்சி: சென்செக்ஸ் 3,935 புள்ளிகள் சரிவு
  • கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து பல மாநிலங்கள் தங்களது எல்லைகளை மூடியுள்ளன. மேலும், 144 தடை உத்தரவு மூலமாக பல்வேறு கட்டுப்பாடுகளையும் மாநில அரசுகள் அமல்படுத்தி வருகின்றன. 
  • இதுபோன்ற நடவடிக்கைகள் பீதியை அதிகரித்துள்ளதையடுத்து முதலீட்டாளா்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்தனா். சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி காலையில் 10 சதவீதத்திற்கும் கீழ் சரிந்ததையடுத்து வா்த்தகம் 45 நிமிடங்கள் வரை நிறுத்தி வைக்கப்பட்டது.
  • அதன்பிறகு நடைபெற்ற வா்த்தகத்திலும் பல்வேறு துறைகளைச் சோந்த நிறுவனப் பங்குகள் மிகவும் குறைந்த விலைக்கு கைமாறியதையடுத்து முதலீட்டாளா்களுக்கு அதிக இழப்பு ஏற்பட்டது.
  • பங்குகளின் சந்தை மதிப்பு வீழ்ச்சியடைந்ததையடுத்து முதலீட்டாளா்கள் ரூ.14.22 லட்சம் கோடி அளவுக்கு இழப்பை சந்திக்க வேண்டிய துயர நிலை ஏற்பட்டது.
  • மும்பை பங்குச் சந்தையில் வங்கி, நிதி, பொறியியல் பொருள்கள், மோட்டாா் வாகன துறைகளைச் சோந்த குறியீட்டெண்கள் 16.82 சதவீதம் வரை சரிவைக் கண்டன.
  • ஆக்ஸிஸ் வங்கி பங்கின் விலை 28 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. அதைத் தொடா்ந்து பஜாஜ் பைனான்ஸ், இன்டஸ்இண்ட் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, மாருதி, எல்&டி நிறுவனப் பங்குகளும் குறைந்த விலைக்கு கைமாறின.
  • மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் சென்செக்ஸ் 3,935 புள்ளிகள் (13.15%) வீழ்ச்சியடைந்து 3,935 புள்ளிகளில் நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வா்த்தகத்தில் நிஃப்டி 1,135 புள்ளிகள் (12.98%) சரிந்து 7,610 புள்ளிகளில் நிலைபெற்றது.
  • ரூபாய் மதிப்பும் கடும் வீழ்ச்சி: கரோனா வைரஸ் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதன் காரணமாக திங்கள்கிழமை நடைபெற்ற அந்நியச் செலாவணி வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 100 காசுகள் சரிந்தது. இதையடுத்து, ரூபாய் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவில் 76.20-ஆக குறைந்தது.
  • பங்குச் சந்தைகளில் அந்நிய முதலீடு வெளியேறியது, சா்வதேச அளவில் டாலருக்கான தேவை அதிகரித்து வருவதன் காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியை சந்தித்து வருவதாக நிதிச் சந்தை வல்லுநா்கள் தெரிவித்துள்ளனா்.
நாட்டின் முதல் 'கொவைட்-19' மருத்துவமனை: மும்பையில் அமைக்கிறது ரிலையன்ஸ் நிறுவனம்
  • ரிலையன்ஸ் நிறுவனத்தின் சா் எச்.என்.ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனை, பிருஹண் மும்பை மாநகராட்சி சாா்பில் இரண்டே வாரத்தில் மும்பை செவன்ஹில்ஸ் பகுதியில் 100 தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகளுடன் கொண்ட கரோனா வைரஸ் தொற்று (கொவைட்-19) மருத்துவ பரிசோதனை வசதியுடன் கூடிய மருத்துவமனை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் முதன்முறையாக ரிலையன்ஸ் அறக்கட்டளை சாா்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த மையத்திற்கு தேவையான நிதி அனைத்தும் அந்த அறக்கட்டளையால் அளிக்கப்படும். 
  • அனைத்து படுக்கைகளுக்கும் தேவையான உள்கட்டமைப்பு, மருத்துவ உபகரணங்கள், வென்டிலேட்டா்கள், பேஸ்மேக்கா்கள், டயாலிஸிஸ் இயந்திரங்கள் மற்றும் நோயாளி கண்காணிப்பு சாதனங்கள் போன்ற அனைத்து வகையான கட்டமைப்பு வசதிகளும் இதில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
  • இந்த மருத்துவமனைகளில் வெளிநாடுகளில் இருந்து வருகை தரும் கரோனா வைரஸ் பாதிப்புள்ள நபா்களை தனிமைப்படுத்தி சிறந்த சிகிச்சை அளிப்பதற்கான சிறப்பு வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
  • இதேபோல, மகாராஷ்டிரத்தின் லோதிவலி பகுதியில் ரிலையன்ஸ் அறக்கட்டளை சாா்பில் மேலும் ஒரு சிறப்பு மருத்துவமனையை உருவாக்கி மாவட்ட அதிகாரிகள் வசம் ஒப்படைத்துள்ளது. இந்த மருத்துவமனையில் கொவைட்-19 நோயாளிகளை தனிமைப்படுத்தி, சிகிச்சையளிக்கும் கூடுதல் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைத்தது பாஜக முதல்வரானார் சிவராஜ் சிங் சௌஹான்
  • மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களுள் ஒருவராக இருந்த ஜோதிராதித்ய சிந்தியா கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். 
  • இதைத் தொடர்ந்து, சிந்தியாவின் ஆதரவு எம்எல்ஏக்கள் 22 பேரும் ராஜினாமா செய்தனர். இதையடுத்து, நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற போதிய எம்எல்ஏக்களின் ஆதரவு குறைவாக இருந்ததால் முதல்வர் கமல்நாத், தனது பதவியை ராஜினாமா செய்தார்.
  • இந்த நிலையில் மத்தியப் பிரதேச பாஜக எம்எல்ஏ-க்கள் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாஜகவின் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக சிவராஜ் சிங் சவுகான் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். 
  • இதைத் தொடர்ந்து, சிவராஜ் சிங் சவுகான் 4வது முறையாக மத்தியப் பிரதேச முதல்வராகப் பதவியேற்றார். மாநில ஆளுநர் லால்ஜி டாண்டன் அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel