கீழடி அருகே கொந்தகை அகழாய்வில் மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு: ஆஸ்திரேலியா, அமெரிக்காவுடன் இணைந்து மரபணு சோதனை நடத்த முடிவு
- கொந்தகை அகழாய்வு தளத்தில் மனித எலும்புக்கூடு கிடைத்துள்ளது. சிவகங்கை மாவட்டம், கீழடியில் 6ம் கட்ட அகழாய்வு கடந்த பிப்.19ம் தேதி அகரம், கொந்தகை, கீழடியில் துவங்கியது.
- கொந்தகையில் சுரேஷ் என்பவரின் நிலத்தில் 3 குழிகள் தோண்டப்பட்டு நடந்த அகழாய்வில் 4 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன. பண்டை காலத்தில் இறந்தவர்களை மட்டுமின்றி, பராமரிக்க முடியாத முதியவர்களையும் பெரிய பானைகளுக்குள் உணவு, தண்ணீர் வைத்து புதைப்பதும் வழக்கத்தில் இருந்துள்ளது.
- கொந்தகையில் கண்டறியப்பட்ட முதுமக்கள் தாழிகள் இதுவரை எந்த வகையை சேர்ந்தது என கண்டறிய முடியவில்லை. எனவே தமிழக தொல்லியல் துறையினருடன் மதுரை காமராசர் பல்கலைக்கழக மரபணு பிரிவும் இணைந்து இதை கண்டுபிடிக்க திட்டமிடப்பட்டது.
- அதன்படி மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன், பேராசிரியர் பாலகிருஷ்ணன் (உயிரியல் பிரிவு), புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக பேராசிரியர் ராஜன் உள்ளிட்டோர் நேற்று காலை முதல் கொந்தகையில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அமர்ந்த நிலையில் ஒரு பானையினுள் மனித எலும்புக்கூடு கால்கள் மட்டும் நீட்டிய நிலையில் கண்டறியப்பட்டது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ரூ.2,570 கோடி நிதி; நிர்மலா சீதாராமன்
- உலகின் பல நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கொரோனாவிற்கான தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
- இந்தியாவில் இதுவரை 5 பேர் வரை பலியானதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாநிலங்களுக்கான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
- இது தொடர்பாக அவர் கூறுகையில், கொரோனா வைரஸின் எதிரொலியாக நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்களின் அடிப்படை சேவைகளை வழங்குவதில் உள்ளாட்சி அமைப்புகள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
- அதில் நகர பகுதிகளுக்கு ரூ.1,629 கோடியும், ஊரகப் பகுதிகளுக்கு ரூ.940 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மாநிலங்களின் வாரியாக, தமிழகத்திற்கு ரூ.987.85 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- தொடர்ந்து, ஆந்திராவிற்கு முதல் தவணையாக ரூ.431 கோடி மற்றும் 2வது தவணையாகரூ. 870.2363 கோடி நிதி , ஒடிசாவிற்கு முதல் தவணையாக ரூ.186.58 கோடி நிதியும் , மேகாலயா மற்றும் நாகலாந்துக்கு 2015 மற்றும் 2016ம் ஆண்டுக்கான நிதியாக முதல் தவணையில் முறையே ரூ.1.515 கோடி மற்றும் ரூ.6.115 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
- மேலும் அருணாச்சல பிரதேசத்திற்கு முதல் தவணையாக ரூ.16.215 கோடியும், 2வது தவணையாகரூ.70.57 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. அனைத்து பகுதிகளுக்கும் சேர்த்து ரூ.2,570 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆயுஷ் சிகிச்சை மையங்கள் அமைக்க அமைச்சரவை ஒப்புதல்
- ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் ஆயுஷ் சிகிச்சை மையங்களை அமைக்கவும், அவற்றை தேசிய ஆயுஷ் இயக்கத்தில் இணைக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- இதன்மூலம் மலிவு விலையில் உலகளாவிய சிறந்த சிகிச்சையை மக்களுக்கு வழங்க முடியும் என மத்திய அரசு தெரிவித்தது.
- இந்த திட்டத்திற்காக ரூ. 3399.35 கோடி மொத்தச் செலவாகும். இதில் மத்திய அரசு ரூ. 2209.58 கோடியும், மாநில அரசு ரூ. 1189.77 கோடி வீதம் பங்குத் தொகையை செலுத்தும்.
- ஆயுஷ் சிகிச்சை மையங்களை, தற்போதுள்ள பொது சுகாதார அமைப்புடன் ஒருங்கிணைப்பதன் மூலம் நோய்த் தடுப்பு செயல்பாடுகளை ஊக்குவிக்கவும், நோய் தீா்வு, புனா்வாழ்வு மற்றும் நோய்த்தடுப்பு சுகாதாரத்தை மையமாகக் கொண்டு ஆயுஷ் கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்படும்.
- நாடு முழுவதும் மொத்தம் 12,500 ஆயுஷ் சுகாதார மற்றும் சிகிச்சை மையங்கள் செயல்படுத்தப்படும்.
- உள்நாட்டில் மருத்துவ சாதனங்களின் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான ஊக்கத்தொகை அளிக்கும் பிஎல்ஐ திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை சனிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.
- இதையடுத்து ஊக்குவிப்பு தொகையாக ரூ. 3,420 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதற்கான ஒப்புதலையும் மத்திய அமைச்சரவை வழங்கியது.
மின்னணு பொருள்களின் உற்பத்தியை பெருக்க ரூ. 48,000 கோடி திட்டம்
- மின்னணு பொருள்களின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும் திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ரூ. 48,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்தும், அதன் கீழ் 3 திட்டங்களை செயல்படுத்தவும் மத்திய அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாக மத்திய தொலைத்தொடா்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சா் ரவிசங்கா் பிரசாத் சனிக்கிழமை தெரிவித்தாா்.
- இந்த திட்டங்களின் மூலம் 2025 ஆம் ஆண்டுக்குள் ரூ.10 லட்சம் கோடி வருவாய் ஈட்டவும், 20 லட்சம் மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரவும் அரசு திட்டமிட்டுள்ளதாக அவா் தெரிவித்தாா்.
சுரங்கத் துறை உற்பத்தி 4.4 சதவீதம் வளா்ச்சி
- நடப்பாண்டு ஜனவரி மாதத்துக்கான சுரங்கம் மற்றும் குவாரி துறையின் கனிம உற்பத்தி குறியீடு 124.3 என்ற அளவில் இருந்தது. இதையடுத்து, கடந்த ஆண்டு ஜனவரியுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டு ஜனவரியில் இந்த துறையின் உற்பத்தி 4.4 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது.
- முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 2019-20 ஏப்ரல்-ஜனவரி கால கட்டத்தில் இத்துறையின் வளா்ச்சி 1 சதவீதமாக உள்ளது.
- ஜனவரியில் 750 லட்சம் டன் நிலக்கரியும், 45 லட்சம் டன் லிக்னைட்டும், 21.46 லட்சம் டன் நேச்சுரல் பாக்ஸைட்டும், 4.45 லட்சம் டன் குரோமைட் உள்ளிட்ட இதர கனிமங்களும் உற்பத்தி செய்யப்பட்டதாக மத்திய சுரங்கத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அன்னிய செலாவணி இருப்பு முதன்முறையாக சரிவு
- மார்ச், 13ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு, 48 ஆயிரத்து, 189 கோடி டாலராக சரிந்தது. இது, இந்திய மதிப்பில், 36.14 லட்சம் கோடி ரூபாய். இதற்கு முன், இருப்பு, அதிகபட்சமாக, 48 ஆயிரத்து, 723 கோடி டாலராக இருந்தது. தற்போது குறைந்துள்ளது.
- கடந்த ஆறு மாதங்களாக, தொடர்ந்து, அன்னிய செலாவணி இருப்பு, புதிய உச்சத்தை தொட்டு வந்தது. ஆனால், மார்ச், 13ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், முதல் முறையாக சரிவைக் கண்டுள்ளது.
- கடந்த, 13ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், அன்னிய செலாவணி இருப்பு, 535 கோடி டாலர் சரிவைக் கண்டது.மார்ச், 6ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், அதிகபட்சமாக, 48 ஆயிரத்து, 723 கோடி டாலராக இருந்தது.
- இதற்கு முன், கடந்த ஆண்டு, செப்., 20ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் சரிவு ஏற்பட்டது. அப்போது, அதற்கு முந்தைய வார இருப்பான, 42 ஆயிரத்து, 858 கோடி டாலர் என்பதிலிருந்து, 38.8 கோடி டாலர் சரிந்தது.
- தற்போதைய சரிவுக்கு, வெளிநாட்டு பணத்தின் மதிப்பு குறைந்தது காரணமாக அமைந்தது. வெளிநாட்டு பண மதிப்பானது, 378 கோடி டாலர் குறைந்து, 44 ஆயிரத்து, 736 கோடி டாலராக சரிந்தது.
- கடந்த வெள்ளிக்கிழமையன்று, இந்திய ரூபாய், இதுவரை காணாத வகையில், 1 டாலருக்கு, 75.20 ரூபாய் என மதிப்பு குறைந்தது குறிப்பிடத்தக்கது.
- மேலும், அன்னிய முதலீட்டாளர்கள், இந்திய மூலதன சந்தைகளிலிருந்து, கடந்த வியாழனன்று மட்டும், 4,623 கோடி ரூபாயை வெளியே எடுத்துள்ளனர்.
- மேலும், மதிப்பீட்டு வாரத்தில், தங்கத்தின் இருப்பும் குறைந்தது. தங்கத்தின் இருப்பு மதிப்பு, 153 கோடி டாலர் குறைந்து, 2,947 கோடி டாலராக சரிந்தது. இது, இந்திய ரூபாய் மதிப்பில், 2.21 லட்சம் கோடி ரூபாய்.
இந்தியாவில் முதல்முறையாக தனியார் லேப்களிலும் கொரோனா பரிசோதனைக்கு அனுமதி
- வெளிநாட்டில் இருந்து வருவோருக்கு இந்த நோய் பாதிப்பு இருக்கிறதா என்பதை அறிய ரத்த மாதிரிகள் எடுத்து சோதனை செய்யப்படுகிறது. இது முழுக்க அரசு பரிசோதனை கூடங்களில் மட்டுமே செய்யப்பட்டு வருகிறது.
- இந்த நிலையில் டெஸ்டிக் பணிகளை விரிவுப்படுத்தவும் விரைவுப்படுத்தவும் தனியார் லேப்களிலும் சோதனை நடத்த அனுமதிக்குமாறு பலர் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இந்த வைரஸ் சமுதாய பரவலான 3ஆவது நிலைக்கு வந்துவிட்டால் பாதிப்புகள் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
- இந்தியாவில் எடுக்கப்படும் ரத்த மாதிரிகள் புணேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு சோதனை செய்யப்பட்டு வந்தன. இதையடுத்து 51 தனியார் மருத்துவமனை மற்றும் ஆய்வகங்களுக்கு கொரோனா சோதனை செய்ய உரிமம் வழங்க ஐசிஎம்ஆர் முடிவு செய்து அதற்கான அனுமதியை அளித்துள்ளது. இந்த சோதனைகள் அனைத்து ஐசிஎம்ஆரின் விதிகளுக்குட்பட்டு நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- அதன்படி இந்த கோவிட் சோதனைக்கான கட்டணங்கள் ரூ 4500 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இதுதான் அதிகபட்ச கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணத்தில் கோவிட் பாதித்தவர் என சந்தேகிக்கப்படும் நபருக்கு சோதனை கட்டணம் ரூ 1500 , உறுதி செய்வதற்கான கட்டணம் ரூ 3000 ஆகியவை அடங்கும்.