Type Here to Get Search Results !

2nd FEBRUARY 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

பிரதமர் மோடியின் பாதுகாப்புக்காக மட்டும் ரூ.600 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கினார் நிர்மலா சீதாராமன்
  • முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, தன் பாதுகாப்புப் படையினராலேயே கொல்லப்பட்ட பிறகு பிரதமருக்கு எனத் தனிச் சிறப்பு பாதுகாப்புப் படை உருவாக்கப்பட்டது. 
  • அதன்படி உருவாக்கப்பட்ட அமைப்புதான் சிறப்பு பாதுகாப்புக் குழு (எஸ்.பி.ஜி) . முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குண்டு வெடிப்பால் கொல்லப்பட்ட பிறகு இந்த பாதுகாப்பு முன்னாள் பிரதமர் குடும்பத்தினருக்கும் விரிவு படுத்தப்பட்டது.
  • இதன்படி சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோருக்கு எஸ்.பி.ஜி பாதுகாப்பு வழங்கப்பட்டது. அதன்பிறகு மாநில முதல்வர்கள் மற்றும் முக்கிய தலைவர்களுக்கும் எஸ்.பி.ஜி பாதுகாப்பு நீட்டிக்கப்பட்டது.
  • எஸ்.பி.ஜி பாதுகாப்பு என்பது பாதுகாப்பு என்பதை தாண்டி ஒரு கௌரவமாக பார்க்கப்பட்டது. இதனிடையே எஸ்.பி.ஜி என அழைக்கப்படும் கருப்பு பூனை பாதுகாப்பு படை பிரதமர் மோடிக்கு மட்டும் வழங்கும் சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. இதன் காரணமாக 28 ஆண்டுக்கு பின்னர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோருக்கு வழங்கப்பட்ட எஸ்.பி.ஜி பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது. இதேபோல் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் முதல்வர்கள் மற்றும் முன்னாள் முதல்வர்கள் ஆகியோருக்கு வழங்கப்பட்ட எஸ்.பி.ஜி பாதுகாப்பும் வாபஸ் பெறப்பட்டது.
  • தற்போது இந்தியாவில் (எஸ்.பி.ஜி) சிறப்பு பாதுகாப்புக் குழு கொண்ட ஒரே மனிதர் பிரதமர் மோடி உள்ளார். அவரது பாதுகாப்புக்காக சுமார் 592.5 கோடி ரூபாயை இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒதுக்கி உள்ளார். 
  • கடந்த ஆண்டு பிரதமர் மோடியின் பாதுகாப்புக்காக 540 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. முன்னதாக 2018 ம் ஆண்டு 420 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருந்தது. தற்போது ஒரே ஆண்டில் பிரதமர் மோடியின் பாதுகாப்புக்காக 52 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கப்பட்டு உள்ளது.



இந்தூர் - வாரணாசி இடையே வருகிறது மூன்றாவது Tejas Express
  • டெல்லி-லக்னோ மற்றும் அகமதாபாத்-மும்பை ஆகிய இரு வழித்தடங்களில் ஏற்கனவே தனியார் ரயில்கள் இயக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையல் மூன்றாவது தனியார் ரயில் இந்தூர்-வாரணாசி பாதையில் இயக்கப்படும் என்று யாதவ் தெரிவித்துள்ளார். 
  • இந்த ரயில் வண்டியில் நாற்காளி பெட்டி இருக்காது என கூறப்படுகிறது. அதாவது, IRCTC-யால் இயக்கப்படும் இந்த வகையின் முதல் ரயிலாக இது இருக்கும், ஆனால் ஸ்லீப்பர் கோச் கூடுதலாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பிப்ரவரி 20-ஆம் தேதி தனது சேவையினை தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
  • அகமதாபாத்தில் இருந்து மும்பைக்கு செல்லும் நாட்டின் இரண்டாவது தனியார் ரயிலான தேஜாஸ் 2020 ஜனவரி 19-ஆம் தேதி இயக்கத் தொடங்கியது. நாட்டின் இரண்டாவது தனியார் ரயிலை ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி ஆகியோர் கொடியசைத்து துவங்கி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா- வங்கதேச கூட்டு போர் பயிற்சிக்கான ஏற்பாடுகள் மும்முரம்
  • மேகாலயாவில் நடைபெறவுள்ள இந்தியா மற்றும் வங்கதேச ராணுவங்களின் கூட்டு போர் பயிற்சிக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுவருகின்றன.
  • இரு நாட்டு ராணுவ படைகளுக்கு இடையே உறவுகளை வளர்த்தெடுக்கும் விதமாகவும், படைகளை பலப்படுத்தி, ஊக்குவிக்கும் விதமாகவும் சம்பிரிதி என்ற கூட்டு ராணுவ போர் பயிற்சி, ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
  • அந்த வகையில், இந்த பயிற்சியானது சம்பிரிதி- 9 என்ற பெயரில் மேகாலயாவில் உள்ள ஷில்லாங்கில் இம்முறை நடைபெறவுள்ளது. நாளை தொடங்கி வருகிற 16ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த போர் பயிற்சிக்கான ஆயத்த பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கொரோனா வைரஸ் எதிரொலி: சீனர்களுக்கு இ-விசா சேவையை தங்காலிகமாக நிறுத்தியது மத்திய அரசு
  • சீனர்கள் மற்றும் சீனாவில் வசிக்கும் வெளிநாட்டினருக்கு இ-விசா வழங்குவது தங்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சீனாவில் 323 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பாதுகாப்பு கருதி மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
கோபால் பாக்லே இலங்கைக்கான புதிய இந்திய தூதராக நியமனம்
  • இலங்கை தூதராக இருந்த தரன்ஜித் சிங் சாந்துவை அமெரிக்காவுக்கான தூதராக இந்திய அரசு அண்மையில் நியமித்தது. இதையடுத்து காலியான இலங்கைத் தூதர் பதவியில் 1992ம் ஆண்டு இந்திய வெளியுறவு சேவை பிரிவுஅதிகாரி பாக்லேயை இந்திய அரசு நியமித்துள்ளது.
  • 1992 ஆம் ஆண்டு இந்திய வெளியுறவு சேவையின் அதிகாரியான பாக்லே இலங்கையில் தரஞ்சித் சிங் சந்துவுக்குப் பின் வெற்றி பெறுகிறார். தற்போது பிரதமர் அலுவலக இணை செயலாளராக பாக்லே பணிபுரிந்து வருகிறார். இதற்கு முன்பு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் உள்ளிட்ட பல முக்கிய பதவிகளை பாக்லே வகித்துள்ளார்.
  • பாகிஸ்தானுக்கான இந்திய துணைத் தூதராகவும் அவர் பணியாற்றியுள்ளார். வெளியுறவு அமைச்சகத்திலுள்ள பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான் விவகார பிரிவையும் கையாண்டுள்ளார். அமெரிக்காவின் இந்திய தூதராக சந்தூ நியமிக்கப்பட்டுள்ளார். பாக்லே தற்போது பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார்.



வெட்டுக்கிளி தாக்குதலை சமாளிக்க முடியவில்லை.. பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடனம்
  • கூட்டம் கூட்டமாக பறந்த வரும் வெட்டுக்கிளிகள் சில நிமிடங்களில் காடுகளில் உள்ள பயிர்களை அழித்துவிட்டு பறக்கின்றன. இந்த பிரச்சனை காரணமாக பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் தேசிய அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
  • பாகிஸ்தானில் இருந்து குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் சில மணி நேரத்தில் மொத்தமாக கோதுமை பயிர்களை அழித்து நாசம் செய்து அதிரவைத்தன. சில வாரங்கள் இந்தியாவின் பஞ்சாப்பில் புகுந்து பயிர்களை அழித்த அவை, இப்போது பாகிஸ்தானின் பஞ்சாபில் முகாமிட்டு பயிர்களை அழித்து வருகின்றன.
  • 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பயிர்களை வெட்டுக்கிளிகள் நாசம் செய்திருக்கின்றன. லட்சக்கணக்கான ஹெக்டேர் விவசாய நிலம் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. இதனால் பல ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
  • தொடர்ந்து லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் படையெடுத்து பயிர்களை நாசம் செய்து வருவதால், பாகிஸ்தானில் தேசிய அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
  • மேலும், வெட்டுக்கிளிகளிடம் இருந்து பயிர்களை காப்பாற்றும் பணிகளுக்காக ரூ.730 கோடி ஒதுக்கீடு செய்ய பிரதமர் தலையிலான கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்
  • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவின் டொமினிக் தீமை 4-6, 6-4, 6-2, 3-6, 4-6 என்ற கணக்கில் ஜோகோவிச் வீழ்த்தினார்.
இந்திய அணி அசத்தல் வெற்றி: தொடரை 5-0 என வென்றது
  • நியூசிலாந்துக்கு எதிரான ஐந்தாவது 'டுவென்டி-20' போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடரை 5-0 என முழுமையாக வென்றது. 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel