Type Here to Get Search Results !

மத்திய பட்ஜெட் / UNION BUDGET 2020


வரலாற்றில் மிக நீண்ட பட்ஜெட் உரை வாசித்த நிதி அமைச்சர்
  • மத்திய பட்ஜெட், பிப்ரவரி மாதத்தின் கடைசி நாளில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும் வழக்கம் இருந்து வந்தது. இந்த வழக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான முதலாவது பாரதீய ஜனதா கூட்டணி அரசு கடந்த 2017-ஆம் ஆண்டு மாற்றியது. அப்போது முதல் பிப்ரவரி 1-ஆம் தேதியன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
  • இந்த நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் இந்த நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். காலை 11 மணியளவில் தொடங்கிய பட்ஜெட் உரை 2.45 மணியளவில் முடிவுற்றது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சரியாக 2 மணி நேரம் 42 நிமிடங்கள் பட்ஜெட் உரையை வாசித்துள்ளார்.
  • இதன் மூலமாக இதுவரை இல்லாத அளவுக்கு வரலாற்றிலேயே முதல்முறையாக நீண்ட உரையை வழங்கியுள்ளார். முன்னதாக, 2019-20ஆம் ஆண்டு அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2 மணி நேரம் 15 நிமிடங்கள் பட்ஜெட் உரையாற்றினார்.
  • 2014ஆம் ஆண்டில் அமைச்சர் அருண் ஜேட்லி 2 மணி நேரம் 10 நிமிடங்களும், 2003ஆம் ஆண்டில் அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா 2 மணி நேரம் 13 நிமிடங்களும் பட்ஜெட் உரையாற்றியுள்ளனர்.
  • எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தல், பொருளாதாரத்தை மேம்படுத்துதல், சமூதாயத்தின் மீது அக்கறை செலுத்துதல் ஆகிய மூன்று தான் இப் பட்ஜெட்டின் முக்கிய அம்சம் முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு அஞ்சலி செலுத்துகிறோம். 
  • பொருளாதாரத்தின் அடிப்படை மற்றும் கட்டமைப்பை சீரமைப்பதில் கவனம் செலுத்தியுள்ளோம் ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, நாட்டை ஒருங்கிணைத்துள்ளது ஜி.எஸ்.டி.,யால் சாமானிய மக்களின் மாதாந்திர வருமானம், 4 சதவீதம் உயர்ந்துள்ளது. 
  • ஜி.எஸ்.டி., மூலம் மாதம் 1 லட்சம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டப்படுகிறது வரும் ஏப்ரல் முதல் எளிமைப்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி., நடைமுறைப்படுத்தப்படும் புதிதாக, 16 லட்சம் வரி செலுத்துபவர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர். 
  • கடந்த நிதியாண்டில், 40 கோடி ஜி.எஸ்.டி., ரிட்டர்ன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது 2006 - 2016 காலகட்டத்தில், 27.10 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்கப்பட்டனர். ஒவ்வொரு குடிமகனும் எளிமையாக வாழ்வதற்கு வழிவகை செய்துள்ளோம். 
  • அரசின் கடன் வீதம், 2014ல், 52.2 சதவீதமாக இருந்தது. இது, 2019ல், 48.7 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. 
  • விவசாய துறைக்கு, 2.83 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது 2022ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • விவசாய துறையை போட்டிமிக்க துறையாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது மத்திய அரசின் நவீன விவசாய சட்டங்களை மாநில அரசுகளும் பின்பற்ற ஊக்குவிப்போம் 
  • 20 லட்சம் விவசாயிகளுக்கு சூரிய ஒளியில் இயங்கும் மோட்டார் பம்ப் வழங்கப்படும் தானிய லெட்சுமி திட்டம் (விதைகளை சேமித்து விநியோகிக்கும் திட்டம்) அறிமுகம் 
  • மகளிர் சுய உதவி குழுக்களுக்கு அதிக கடன் உதவி 'கிருஷி உடான்' திட்டத்தில் தேசிய, சர்வதேச விமான போக்குவரத்து மூலம் விவசாய பொருட்கள் ஏற்றிச் செல்ல வசதி 
  • 2020 - 21 நிதியாண்டில் கல்வித் துறைக்கு, 99,300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு. திறன் மேம்பாட்டுக்கு, 3,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு நீர் தட்டுப்பாடால் பாதிக்கப்படும் என கணிக்கப்பட்டுள்ள, 100 மாவட்டங்களில், தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் விவசாயிகள் தங்களது வேளாண் பொருட்களை கொண்டு செல்ல குளிர்சாதன வசதியுடன், 'கிசான் ரயில்' சேவை தொடங்கப்படும் விவசாயிகளுக்கு கடன் வழங்குவதற்காக, 
  • 15 லட்சம் கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது 2022 - 23 நிதியாண்டுக்குள் மீன் உற்பத்தி, 200 லட்சம் டன்னாக உயர்த்தப்படும் ரசாயன உரம் தவிர, இயற்கை உரம் தயாரிக்கவும் ஊக்குவிக்கப்படும் 
  • சுகாதார துறைக்கு கூடுதலாக, 69 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு 2020 - 21 நிதியாண்டில் துாய்மை இந்தியா திட்டத்துக்கு, 12 ஆயிரத்து, 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு 'ஆயுஷ்மான் பாரத்' திட்டத்தின் கீழ் மேலும், 
  • 112 மாவட்டங்களில் மருத்துவ வசதி சுத்தமான குடிநீர் வழங்க, 'ஜல் ஜீவன் மிஷன்' திட்டத்துக்கு, 3.6 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு அரசு - தனியார் பங்களிப்பு மூலம், 100 தனியார் ரயில்கள் இயக்கப்பட உள்ளது
  • குறைந்த விலையில் மருந்துகள் வழங்கும் மருந்தகம், நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் 2025ம் ஆண்டுக்குள், டி.பி., எனப்படும் 
  • காசநோய் முற்றிலும் ஒழிக்கப்படும் கல்வி துறைக்கு, 99 ஆயிரத்து, 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு தரமான கல்விக்கு நடவடிக்கை எடுக்கப்படும் நாட்டின் 'டாப் - 100' கல்வி நிறுவனங்களில் 'ஆன்லைன்' டிகிரி பாடப்பிரிவு தொடங்கப்படும் தேசிய காவல்துறை 
  • தேசிய தடய அறிவியல் பல்கலை அமைக்க நடவடிக்கை கல்வி துறையில் நேரடி அன்னிய முதலீடுக்கு அனுமதி 2026க்குள் பல்கலையில், 150 புதிய பாடப்பிரிவுகள் உருவாக்க நடவடிக்கை ஆசிய, ஆப்ரிக்க நாடுகளின் மாணவர்கள் இந்தியாவில் கல்வி பயில்வதற்கு, 'இன்ட்சாட்' நுழைவுத்தேர்வு நடத்தப்படும். 
  • அலைபேசி மற்றும் மின்சார உபகரணங்கள் இந்தியாவில் தயாரிக்க திட்டம் தொடங்கப்படும். 2020 - 21 நிதியாண்டில் தொழில் மற்றும் வணிக துறையின் வளர்ச்சி மற்றும் மேம்படுத்துவதற்கு, 27 ஆயிரத்து, 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு டில்லி - மும்பை எக்ஸ்பிரஸ் மற்றும் இரண்டு சாலை திட்டங்கள்
  • 2023க்குள் நிறைவேற்றப்படும் ரயில் பாதைகளின் ஓரம், சோலார் பேனல்கள் அமைக்கப்படும் அடுத்த மூன்றாண்டுகளுக்குள் பிரிபெய்டு மீட்டர் அறிமுகப்படுத்தப்படும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறைக்கு 
  • 20 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு நாடு முழுவதும் தகவல் மையம் அமைப்பதற்கு தனியார் துறைக்கு அனுமதி வழங்கப்படும் தொழில் மற்றும் வர்த்தக மேம்பாட்டு துறைக்கு, 27 ஆயிரத்து, 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு சென்னை - பெங்களூரு இடையே வர்த்தக வழித்தடம் கூடுதல் தேஜஸ் ரயில் இயக்கப்படும் ரயில் பாதைகளை மின்மயமாக்க, 27 ஆயிரம் கோடி ரூபாய் போக்குவரத்து கட்டமைப்புக்கு 
  • 1.7 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு சத்துணவு தொடர்பான திட்டத்துக்கு, 35 ஆயிரத்து, 600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைக்கு, 22 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு பாரத் நெட் திட்டத்துக்கு, 6,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு. 
  • தபால் நிலையம், மருத்துவமனை, காவல் நிலையம், பள்ளிகள் இணைக்கப்படும் ஒரு லட்சம் கிராம பஞ்சாயத்துகள் ஆப்டிக்கல் பைபர் மூலம் இணைக்கப்படும் உடான் திட்டத்தின் கீழ், 2026க்குள், 100 புதிய விமான நிலையம் பிற்படுத்தப்பட்டோர் 
  • எஸ்.சி., பிரிவு நலன் துறைக்கு, 85 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு பழங்குடியினர் நலனுக்கு, 53 ஆயிரத்து, 700 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு முதியோர் நலனுக்கு, 9,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு சுற்றுலா துறைக்கு, 2,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு 
  • கலாசார துறைக்கு, 3,150 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு 10 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கும் நகரங்களில் சுத்தமான காற்று நிலவுவதற்கு வழிவகை செய்யப்படும் காற்று மாசுபாட்டை தவிர்த்து, சுத்தமான காற்று திட்டத்துக்கு, 4,400 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு தேசிய பாதுகாப்பு என்பது இந்த அரசின் முக்கிய நோக்கமாக உள்ளது. 
  • நான் கெஜட்டட் பிரிவு பதவிகளுக்கு ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடத்துவதற்கு தேசிய ஆள்சேர்ப்பு மையம் அமைக்கப்படும் 2022ம் ஆண்டுக்கான, 'ஜி - 20 மாநாடு' டில்லியில் நடத்துவதற்கு, 
  • 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு வங்கி டெபாசிட்தாரர்களுக்கான காப்பீடு, 1 லட்சம் ரூபாயில் இருந்து,5 லட்சம் ரூபாயாக உயர்வு ஐந்து லட்சம் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், கடன் பாதிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளன வரி என்ற பெயரில் மக்களை துன்புறுத்துதல் என்பதை இந்த அரசு சகித்துக்கொள்ளாது. 
  • வரி செலுத்துபவர்கள் இந்நாட்டின் மதிப்பு மிக்கவர்கள் தேசிய தொழில் நுட்பம் டெக்ஸ்டைல் திட்டத்துக்கு, 1,480 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு வெளிநாடு வாழ் இந்தியர்களும் அரசின் திட்டங்களில் முதலீடு செய்யலாம் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் வாராக்கடனை வங்கிகள் வசூலிப்பதற்கான காலக்கெடு 2020 மார்ச்சில் இருந்து, 2021 மார்ச் வரை நீட்டிக்க வேண்டுமன ரிசர்வ் வங்கியை மத்திய அரசு வலியுறுத்துகிறது. 
  • சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் வியாபாரம், 5 கோடி ரூபாய் வரை தணிக்கை சமர்ப்பிக்க தேவையில்லை. இது முன், 1 கோடி ரூபாயாக இருந்தது நிதிப் பற்றாக்குறை, 3.8 சதவீதமாக இருக்கும்.
  • 2020 - 21ல் நாட்டின் பொருளாதார வளர்ச்சி,10 சதவீதமாக இருக்கும் அரசின் செலவு, 30.42லட்சம் கோடி ரூபாய் காஷ்மீருக்கு, 30 ஆயிரத்து, 757 கோடி ரூபாய், லடாக் யூனியன் பிரதேசத்துக்கு, 5958 கோடிரூபாய் திட்டங்கள் எல்.ஐ.சி.,யில் உள்ள மத்திய அரசின் சில பங்குகள் தனியாருக்கு விற்பனை செய்யப்படும். 
  • புதிய வருமான வரி விதிப்பு முறையால்,ஆண்டுக்கு, 40 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் இழப்பு ஏற்படும் மின்சார உற்பத்தி நிறுவனங்களுக்கு, 15 சதவீதம் வருமான விலக்கு வழங்கப்படும். 
  • ஆதார் அடிப்படையில் உடனடி பான்கார்டு திட்டம் அறிமுகப்படுத்தப்படும் துாத்துக்குடியின் ஆதிச்சநல்லுார் உட்பட ஐந்து இடங்களில் தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.



பாரத்நெட்
  • பாரத்நெட் மூலம் நடப்பாண்டில் ஆண்டில் ஒரு லட்சம் கிராமப் பஞ்சாயத்துகள் பைபர் ஆப்டிக்கல் வாயிலாக இணைக்கப்படும். அங்கன்வாடி, சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்கள், அரசுப் பள்ளிகள் போன்ற அனைத்து பொது அமைப்புகளுக்கும் டிஜிட்டல் இணைப்பை வழங்கும் நோக்கம் இதன் மூலம் நிறைவேற்றப்படும்.
  • பாரத் நெட் திட்டத்தின் இந்த நோக்கத்திற்காக 2020-21 ஆம் ஆண்டில் ரூ.6,000 கோடி வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் தேசிய குவாண்டம் தொழில்நுட்பங்கள் மற்றும் பயன்பாடுகள் திட்டத்திற்கு ரூ.8,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
உடான் திட்டத்தின் கீழ் 2024-க்குள் மேலும் 100 புதிய விமான நிலையங்கள்
  • இந்திய துறைமுகங்களின் திறனை மேம்படுத்த அரசு குறைந்தபட்சம் ஒரு முக்கியமான துறைமுகத்தை நிறுவனமயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. இதன் மூலம் பங்குச்சந்தை பட்டியலில் அந்தத் துறைமுகத்தை இடம் பெறச் செய்யவும் முடிவு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
  • உடான் திட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் 2024 ஆம் ஆண்டுக்குள் மேலும் 100 புதிய விமான நிலையங்களை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
  • நாட்டில், விமானப் போக்குவரத்து உலகளாவிய சராசரி அளவைக்காட்டிலும், வெகு தீவிரமாக வளர்ச்சியடைந்து வருகிறது. போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள விமானங்களின் எண்ணிக்கை தற்போதுள்ள 600 என்ற நிலையிலிருந்து விரைவில் 1,200 என்ற அளவிற்கு உயரும்.
  • க்ரிஷி உடான் என்ற திட்டத்தின் அடிப்படையில், விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் சர்வதேச மற்றும் தேசிய வழித்தடங்களில் வேளாண் விளைபொருட்களை ஏற்றிச்செல்லும் விமானப் போக்குவரத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. 
  • வடகிழக்கு மற்றும் பழங்குடியின மாவட்டங்களில் இருந்து விளையும் பொருட்களுக்கு சரியான மதிப்பு கிடைக்கும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
  • 2020-21 ஆம் ஆண்டில் மின்சார மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் மேம்பாட்டை ஏற்படுத்தும் வகையில், அந்தத் துறைக்கு 22,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
  • அடுத்த 3 ஆண்டுகளில் ஏற்கனவே உள்ள பாரம்பரிய மின்சார மீட்டர்களை மாற்றிவிட்டு, ஸ்மார்ட் மீட்டர்களைப் பொறுத்துமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
  • தேசிய சமையல் எரிவாயு குழாய் அமைக்கும் திட்டம் தற்போதுள்ள 16,200 கிலோமீட்டர் தொலைவு என்ற அளவிலிருந்து 27,000 கிலோமீட்டர் தொலைவு என்ற அளவிற்கு விரிவுபடுத்தப்பட உள்ளது. வெளிப்படையான எரிவாயு கண்டறியும் திட்ட செலவினம் மற்றும் எளிய முறையிலான பரிவர்த்தனை ஆகிய சீர்திருத்தங்களும் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.



துறை வாரியாக ஒதுக்கீடு
  • சுகாதாரத்துறைக்கு - ரூ.69 ஆயிரம் கோடி 
  • தூய்மை இந்தியா திட்டத்திற்கு - ரூ.12,300 கோடி 
  • விவசாயத்துறைக்கு ரூ.2.83 லட்சம் கோடி
  • ஜல் ஜீவன் திட்டத்திற்கு - ரூ. 11,500 கோடிகல்வித்துறைக்கு -ரூ.99,300 கோடி.
  • போக்குவரத்து கட்டமைப்பிற்கு ரூ.1.7 லட்சம் கோடி ஒதுக்கீடு
  • மின் மற்றும் புதுப்பிக்கதக்க ஆற்ற துறைக்கு ரூ.22,000 கோடி
  • உணவு ஊட்டச்சத்து திட்டத்திற்கு ரூ.35,600 கோடி
  • தேசிய ஜவுளி திட்டத்திற்கு ரூ.1480 கோடி ஒதுக்கீடு
  • தொழில் மற்றும் வர்த்தக துறையை ஊக்குவிக்க ரூ.27,300 கோடி
  • திறன் மேம்பாட்டிற்கு ரூ.3 ஆயிரம் கோடி 
  • வீடுகள் தோறும் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு - ரூ.3.6 லட்சம் கோடி
  • தேசிய ஜவுளி திட்டத்திற்கு ரூ.1480 கோடி 
  • 5 ஆண்டுகளில் உள்கட்டமைப்பு துறைக்கு ரூ.100 லட்சம் கோடி
  • தொழில் மற்றும் வர்த்தக மேம்பாட்டிற்கு - ரூ.27,300 கோடி 
  • ரயில்வேத்துறையை மின்மயமாக்க ரூ.27,000 கோடி
  • போக்குவரத்து கட்டமைப்புக்காக ரூ.1.7 லட்சம் கோடி
  • மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைக்கு ரூ.22 ஆயிரம் கோடி
  • தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினரின் வளர்ச்சிக்கு ரூ.85 ஆயிரம் கோடி
  • ஊட்டச்சத்து திட்டங்களுக்கு - ரூ.35,600 கோடி
  • கலாசார அமைச்சகத்திற்கு - ரூ. 3,150 கோடி 
  • சுற்றுலா துறைக்கு - ரூ.2500 கோடி
  • பெண்கள் தொடர்புடைய திட்டங்களுக்கு - ரூ.28,600 கோடி
  • சுத்தமான காற்று திட்டத்திற்கு -ரூ.4,400 கோடி
  • 2022ல் ஜி20 நாடுகளின் மாநாடு நடத்த 100 கோடி
  • லடாக் யூனியன் பிரதேசத்திற்கு - ரூ.5958 கோடி
  • காஷ்மீருக்கு - ரூ. 30,757 கோடி
  • மூத்த குடிமக்கள் மேம்பாட்டிற்கு - ரூ.9,500 கோடி.
  • பாதுகாப்பு துறை பாதுகாப்பு துறைக்கு 3.37 லட்சம் கோடி ஒதுக்கீடு 
  • கடந்த ஆண்டு 3.18 லட்சம் கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், தற்போது 6 சதவீத நிதி கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.
  • பாதுகாப்பு படைகளை நவீனப்படுத்தவும், ஆயுதங்கள் வாங்கவும் ரூ.1,10,734 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டதை விட ரூ.10,340 கோடி அதிகம்.
  • இதே போன்று பாதுகாப்பு பென்சன் திட்டத்திற்காக கடந்த பட்ஜெட்டில் ரூ.1.17 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், இன்றைய பட்ஜெட்டில் இத்தொகை ரூ.1.33 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. 
  • பாதுகாப்புத்துறை பென்சன் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட தொகை, பாதுகாப்புத்துறை மூலம் கிடைக்கும் வருவாய் மற்றும் தலைநகர் பாதுகாப்பிற்காக ஒதுக்கப்படும் நிதியை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
  • எல்ஐசி பங்குகளை விற்க முடிவு வங்கிகளில் டெபாசிட்தாரர்களின் பணம் பாதுகாக்கப்படும். வாடிக்கையாளர் பணம் பாதுகாப்பாக உள்ளதை உறுதி செய்வோம். டெபாசிட்களுக்கான காப்பீடு தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுகிறது. எல்ஐசியில் தனக்குள் பங்குகளில் ஒரு பகுதியை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.வங்கி திவாலானால், ரூ.5 லட்சம் வரை பணம் எடுக்க டெபாசிட்தாரர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
  • மத்திய அரசிடம் உள்ள ஐடிபிஐ வங்கியின் பங்குகள் விற்பனை செய்யப்படும். சுற்றுலா தளங்களை இணைக்க தேஜஸ் ரயில்கள்: ரயில் பாதையை ஒட்டி சூரிய மின் நிலையங்கள் அமைக்கப்படும். ரூ.18,500 கோடியில் பெங்களூருவில் புறநகர் ரயில் சேவை அமைக்கப்படும்.
  • சுற்றுலா தளங்களை இணைக்கும் வகையில் கூடுதல் தேஜஸ் ரயில்கள் இயக்கப்படும். மும்பை - ஆமதாபாத் இடையே விரைவு ரயில் இயக்கப்படும். ரயில்வே துறையில் சூரிய மின்சக்தி பயன்பாடு அதிகரிக்கப்படும். 2,700 கி.மீ., ரயில் பாதைகள் மின்மயமாக்கப்படும்.
  • டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் ரயில்வே நிலையங்களில் 'வைபை' மற்றும் அது தொடர்புடைய வசதிகள் ஏற்படுத்தப்படும். பொதுத்துறை- தனியார் ஒத்துழைப்புடன் 1,150 ரயில்கள் மறுசீரமைக்கப்பட்டு இயக்கப்படும். 
  • தனியார் உதவியுடன் நான்கு ரயில்நிலையங்கள் மறுசீரமைக்கப்படும். விவசாயத்துறைக்கு உதவும் வகையில், பொதுத்துறை தனியார் ஒத்துழைப்பு திட்டம் மூலம் கிஷான் ரயில் ஒன்றை ரயில்வே இயக்கும். இதில், விவசாய பொருட்கள் கொண்டு செல்லப்படும்.
  • கல்வித்துறையில் நேரடி அன்னிய முதலீடு கல்வித்துறையில் நேரடி அன்னிய முதலீட்டிற்கு அனுமதி வழங்கப்படும். புதிய கல்விக்கொள்கை விரைவில் அமலுக்கு வரும். நாட்டில் உள்ள 100 பெரிய கல்வி நிலையங்களில் ஆன்லைன் மூலம் படித்து பட்டம் பெறும் வசதி கொண்டு வரப்படும். 2025க்குள் நாட்டில் உள்ள பல்கலைகளில 150 புதிய பாடப்பிரிவுகள் ஏற்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • உ.பி,யில் தேசிய போலீஸ் பல்கலை அமைக்கப்படும். விவசாய துறைக்கு 2.83 லட்சம் கோடி ஒதுக்கீடு சூரிய ஓளியில் மின்சாரம் தயாரிக்கும் இயந்தரம் அமைக்க ரூ.20 லட்சம் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கப்படும். விதைகளை சேமித்து விநியோகிக்கும் தானியலட்சுமி என்ற திட்டத்தில் கிராமப்புற பெண்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். தண்ணீர் பற்றாக்குறையை உள்ள 100 மாவட்டங்களில் தனிக்கவனம் செலுத்தப்படும் .
  • 20 லட்சம் விவசாயிகள் சோலார் பமபுகள் அமைக்க உதவி செய்யப்படும். அனைத்து வகையான உரங்களையும் சமமாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். வேளாண் சந்தையை தாராளமயமாக்கப்படும். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க அரசு தீவிரமாக உள்ளது.
  • மாவட்ட வாரியாக தோட்டகலைத்துறை பொருட்கள் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். ரசாயன உரங்கள் அதிகளவில் பயன்படுத்துவதை கட்டுப்படுத்கப்படும். விவசாயிகளுக்கு 15 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
  • விவசாயத்தை மேம்படுத்த 16 அம்ச திட்டங்கள் கொண்டு வரப்படும். பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் 6.11 கோடி விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர் விவசாய விளைபொருட்கள் கொண்டு செல்லும் செலவை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விவசாய துறைக்கு 2.83 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
தானியலட்சுமி திட்டத்தில் கிராமப்புற பெண்கள்
  • சூரிய ஓளியில் மின்சாரம் தயாரிக்கும் இயந்தரம் அமைக்க ரூ.20 லட்சம் விவசாயிகளுக்கு நிதியுதவி. விதைகளை சேமித்து விநியோகிக்கும் தானியலட்சுமி என்ற திட்டத்தில் கிராமப்புற பெண்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.
  • தண்ணீர் பற்றாக்குறையை உள்ள 100 மாவட்டங்களில் தனிக்கவனம் செலுத்தப்படும். 20 லட்சம் விவசாயிகள் சோலார் பமபுகள் அமைக்க உதவி செய்யப்படும். அனைத்து வகையான உரங்களையும் சமமாக பயன்படுத்த நடவடிக்கை. வேளாண் சந்தையை தாராள மயமாக்கப்படும்.
  • விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க அரசு தீவிரமாக உள்ளது. மாவட்ட வாரியாக தோட்டகலைத்துறை பொருட்கள் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். ரசாயன உரங்கள் அதிகளவில் பயன்படுத்துவதை கட்டுப்படுத்கப்படும்.
  • விவசாயிகளுக்கு 15 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்படும். விவசாயத்தை மேம்படுத்த 16 அம்ச திட்டங்கள் கொண்டு வரப்படும். பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் 6.11 கோடி விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர். விவசாய விளைபொருட்கள் கொண்டு செல்லும் செலவை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு 30,757 கோடி ஒதுக்கீடு
  • யூனியன் பிரதேசமான லடாக் மேம்பாட்டிற்காக 5,958 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு 30,757 கோடி ரூபாய் ஒதுக்கீடு 
  • மேலும் அனைத்து வகையான ரசாயன உரங்களை பயன்படுத்துவதற்கு ஊக்கமளிக்கப்படும். அதிக அளவில் இத்தகைய உரங்களை பயன்படுத்துவதற்கு தேவையான ஊக்கத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அவர், ஜி20 நாடுகளின் உச்சிமாநாட்டை 2022-ஆம் ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதற்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்றார்.
ஆத்திச்சூடியை தொடர்ந்து.. பிணியின்மை என்ற குறளையும் மேற்கோள் காட்டிய நிர்மலா சீதாராமன்
  • ஆத்திச்சூடியில் ஔவையார் கூறிய பூமி திருத்தி உண் என்பதை மேற்கோள் காட்டினார். நிர்மலா கூறுகையில் மூன்று வார்த்தையில் விவசாயத்தின் மகத்துவத்தை ஔவையார் கூறியுள்ளார். எனவே நிலத்தை பயனுள்ள வகையில் விவசாயிகள் பயன்படுத்த வேண்டும் என்பதன் பொருள் ஆகும் என்றார்.
  • இதைத் தொடர்ந்து திருக்குறளையும் நிர்மலா மேற்கோள் காட்டி பேசினார். "பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிவ் வைந்து" என்ற குறளை கூறி அதன் பொருளையும் விளக்கினார்.
  • அதாவது நோயில்லாதிருத்தல், செல்வம், விளை பொருள் வளம், இன்பமான வாழ்க்கை, நல்ல பாதுகாப்பு அல்லது காவல் ஆகிய 5 செல்வங்கள் மட்டுமே நாட்டிற்கு அழகு சேர்க்கும். எனவே திருக்குறளில் கூறியுள்ளபடி சிறப்பான ஆட்சியை பிரதமர் நரேந்திர மோடி செயல்படுத்தி வருகிறார் என்றார். மேலும் மோடியை மாமன்னர் என புகழாரம் சூட்டினார்.
2020-21 நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 10% இருக்கும்: நிர்மலா சீதாராமன்
  • 2020-21 நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 10% இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 
  • 2020-21-ல் மத்திய அரசின் வருமானம் ரூ.22.46 லட்சம் கோடியாக இருக்கும். 2020-21-ல் இந்திய அரசின் மொத்தச் செலவுகள் ரூ.30,42 லட்சம் கோடியாக இருக்கும் எனவும் கூறியுள்ளார்.
ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்
  • தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் சிறப்பு வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிரமலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மேலும் அவர், சுற்றுலா துறையில், இந்தியா 34 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 
  • ராஞ்சியில் பழங்குடியினருக்காக அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்றார்.
  • தமிழகத்தின் ஆதிச்சநல்லூர், ஹரியானாவின் ராக்கி கார்க்கி, உ.பி.,யின் ஹஸ்தினாபுர், மஹாராஷ்டிராவின் திவ்சாகர், குஜராத்தின் தோலாவிரா ஆகிய இடங்களில் அருங்காட்சியகங்கள் அமைக்கப்படும்  
  • கலாசார துறைக்கு 3,150 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.



லடாக் யூனியன் பிரதேச வளர்ச்சிக்கு ரூ.5,958 கோடி ஒதுக்கீடு: நிர்மலா சீதாராமன்
  • ஜம்மு-காஷ்மீரின் வளர்ச்சிக்கு ரூ .30,757 கோடி ஒதுக்கீடு செய்வதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். லடாக் யூனியன் பிரதேச வளர்ச்சிக்கு ரூ.5,958 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 
  • காஷ்மீர் யூனியன் பிரதேச வளர்ச்சிக்கு ரூ.30,757 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. 2022ல் ஜி20 நாடுகளின் மாநாடு நடத்த 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கல்வித்துறையில் நேரடி அன்னிய முதலீட்டிற்கு அனுமதி
  • கல்வித்துறையில் நேரடி அன்னிய முதலீட்டிற்கு அனுமதி
  • புதிய கல்விக்கொள்கை விரைவில் அமலுக்கு வரும்
  • நாட்டில் உள்ள 100 பெரிய கல்வி நிலையங்களில் ஆன்லைன் மூலம் படித்து பட்டம் பெறும் வசதி கொண்டு வரப்படும்.
  • 2025க்குள் நாட்டில் உள்ள பல்கலைகளில 150 புதிய பாடப்பிரிவுகள் ஏற்படுத்த இலக்கு
  • உ.பி,யில் தேசிய போலீஸ் பல்கலை அமைக்கப்படும்
விவசாய துறைக்கு 2.83 லட்சம் கோடி ஒதுக்கீடு
  • சூரிய ஓளியில் மின்சாரம் தயாரிக்கும் இயந்தரம் அமைக்க ரூ.20 லட்சம் விவசாயிகளுக்கு நிதியுதவி
  • விதைகளை சேமித்து விநியோகிக்கும் தானியலட்சுமி என்ற திட்டத்தில் கிராமப்புற பெண்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.
  • தண்ணீர் பற்றாக்குறையை உள்ள 100 மாவட்டங்களில் தனிக்கவனம் செலுத்தப்படும்
  • 20 லட்சம் விவசாயிகள் சோலார் பமபுகள் அமைக்க உதவி செய்யப்படும்
  • அனைத்து வகையான உரங்களையும் சமமாக பயன்படுத்த நடவடிக்கை
  • வேளாண் சந்தையை தாராளமயமாக்கப்படும்
  • விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க அரசு தீவிரமாக உள்ளது.
  • மாவட்ட வாரியாக தோட்டகலைத்துறை பொருட்கள் உற்பத்திக்கு முக்கியத்துவம்
  • ரசாயன உரங்கள் அதிகளவில் பயன்படுத்துவதை கட்டுப்படுத்கப்படும்.
  • விவசாயிகளுக்கு 15 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு
  • விவசாயத்தை மேம்படுத்த 16 அம்ச திட்டங்கள் கொண்டு வரப்படும்
  • பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் 6.11 கோடி விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர்
  • விவசாய விளைபொருட்கள் கொண்டு செல்லும் செலவை குறைக்க நடவடிக்கை
  • விவசாய துறைக்கு 2.83 லட்சம் கோடி ஒதுக்கீடு
மின்மயமாகும் 27 ஆயிரம் கி.மீ., ரயில்ப்பாதை
  • ரயில் பாதையை ஒட்டி சூரிய மின் நிலையங்கள் அமைக்கப்படும்
  • 27 ஆயிரம் கி.மீ., தூரம் ரயில் பாதை மின்மயமாக்கப்படும்
  • ரூ.18,500 கோடியில் பெங்களூருவில் புறநகர் ரயில் நிலையங்கள் அமைக்கப்படும்
  • சுற்றுலா தங்களை இணைக்க கூடுதல் தேஜஸ் ரயில் இயக்கப்படும்
  • 2024க்குள் நாடு முழுவதும் மேலும் 100 விமான நிலையங்கள் அமைக்கப்படும்
2023-ஆம் ஆண்டுக்குள் ப்ரி-பெய்டு டிஜிட்டல் மீட்டர் வசதி
  • மின்சாரத் துறைக்கு புதிய உத்வேகம் அளிக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளததாக கூறிய மத்திய நிதியமைச்சர், புதிய ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்த நடவடிக்கை, 2023 ஆம் ஆண்டுக்குள் ப்ரி-பெய்டு டிஜிட்டல் மீட்டர் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அறிவித்தார். 
  • ரயில்வேத் துறையில் தனியார் பங்களிப்பு ஊக்குவிக்கப்படும், கூடுதலாக தேஜாஸ் ரயில்கள் இயக்கப்படும், 27,000 கிமீ தொலைவுக்கு ரயில்பாதை
  • மின்மயமாக்கல் ஆக்கப்படும் என்று கூறிய நிதியமைச்சர், தண்ணீர் பற்றாக்குறை உள்ள 100 மாவட்டங்களுக்கு விரிவான திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றார். மேலும் டெல்லி-மும்பை இடையேயான அதிவிரைவுச் சாலை 2023 ஆம் ஆண்டுக்குள் முடிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.



நாடு முழுக்க சோலார் பேனல் விவசாயிகளுக்கு இலவசமாக மின்சாரம்
  • விவசாயத்துறை ஊக்கத்திற்கு 16 அம்ச திட்டங்களை கொண்டு வருகிறோம். இந்த 16 அம்ச திட்டங்கள் மூலம் விவசாய துறை முன்னேறும். இந்தியா முழுக்க 100 மாவட்டங்களில் நீர் மேலாண்மை திட்டங்கள் கொண்டு வரப்படும்.
  • விவசாயிகளின் வருமானத்தை 2022ம் ஆண்டிற்குள் இரட்டிப்பாக்குவதற்காக கடுமையாக முயற்சி செய்துவருகிறது 2022 ஆண்டுக்குள் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாகும். 2025-ஆம் ஆண்டுக்குள் பால் உற்பத்தியை இரண்டு மடங்காக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • நாடு முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை உள்ள 100 மாவட்டங்களில் நீர் மேலாண்மையை மேம்படுத்த திட்டம். மீன் உற்பத்தியை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். 200 லட்சம் டன் மீன் உற்பத்தி செய்ய ஏற்பாடு செய்யப்படும்.
  • விவசாய துறை, அது தொடர்பான செயல்பாடுகள், நீர் மேலாண்மை, கிராமப்புற மேம்பாடு அனைத்தும் சேர்த்தும் 2.83 கோடி ரூபாய் செலவு செய்யப்படும். 2020-2021ல் இந்த நிதி பயன்படுத்தப்படும்.
  • க முக்கியமாக விவசாயிகளுக்காக நாடு முழுக்க அவர்கள் பயன்படுத்த நிலங்களில் சோலார் பேனல்கள் அமைத்து தரப்படும். இலவசமாக இந்த சோலார் பேனல்கள் அமைத்து தரப்படும். இதன் மூலம் உருவாக்கப்படும் மின்சாரம் இலவசமாக, விவசாய தேவைக்கு பயன்படுத்தப்படும், என்று குறிப்பிட்டுள்ளார்.
மின்சாரம் மற்றும் புதிப்பிக்கத்தக்க எரிசக்தி துறைக்கு 22,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு
  • மின்சாரம் மற்றும் புதிப்பிக்கத்தக்க எரிசக்தி துறைக்கு 22,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
  • போக்குவரத்து கட்டமைப்புகளுக்காக 1.7 லட்சம் கோடி ரூபாய், குடிநீர் வள திட்டங்களுக்காக ரூ.3.06 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விளைபொருட்களை கொண்டு செல்ல கிஷான் ரயில்
  • விவசாயிகளின் விளைபொருள்களை கொண்டு செல்ல உருவாக்கப்படும் கிஷான் ரயில், குளிர்பதன வசதி கொண்டதாக இருக்கும்
  • மேலும், 'கிருஷி உடான்' என்ற புதிய திட்டத்தில் தேசிய, சர்வதேச விமான போக்குவரத்து மூலம் விவசாயப் பொருள்கள் எடுத்துச்செல்ல வசதி ஏற்படுத்தப்படும். 
  • விவசாயிகளுக்கு ரூ.15 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், விவசாயிகளுக்கான கடன் அட்டை திட்டம் செயல்படுத்தப்படும்.
மலிவு விலையில் மருந்து விற்க மக்கள் மருந்தகங்கள்
  • 2025க்குள் பால் உற்பத்தி இருமடங்காக்கப்படும்
  • 2021க்குள் 108 மில்லியன் மெட்ரிக் டன் பால் உற்பத்திக்கு இலக்கு
  • சாகர் மித்ரா எனும் புதிய திட்டம் மூலம் மீனவர்கள் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படும்
  • ஆயுஷ்மான் திட்டத்தில் மேலும் 112 மாவட்டங்களில் சிகிச்சை அளிக்க நடவடிக்கை
  • இந்த திட்டத்தின் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் மரத்துவமனைகள் அமைக்கப்படும்
  • 2025க்குள் காசநோய் நாட்டில் இருந்து முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை
  • மலிவு விலையில் மருந்து விற்க அனைத்து மாவட்டங்களிலும் '' மக்கள் மருந்தகங்கள்'' துவக்கப்படும்
  • செயற்கை நுண்ணறிவு மூலம் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் சிகிச்சை
  • மருத்துவ கல்லூரிகளை மாவட்ட மருத்துவமனைகளுடன் இணைக்க நடவடிக்கை
  • பெரிய மருத்துவமனைகளில் முதுநிலை மருத்துவ பட்டங்களை வழங்க நடவடிக்கை

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel