Type Here to Get Search Results !

26th FEBRUARY 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

திருப்புவனம் அருகே முதுமக்கள் தாழி கண்டெடுப்பு
  • கீழடியில் 6 ஆம் கட்ட அகழாய்வுப் பணியை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கடந்த 19 ஆம் தேதி தொடங்கி வைத்தாா். 6 ஆம் கட்ட அகழாய்வு பணியின் போது கீழடி மற்றும் இதன் அருகேயுள்ள கொந்தகை, மணலூா், அகரம் ஆகிய கிராமங்களிலும் அகழாய்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 
  • தற்போது கீழடியில் அகழாய்வுக்காக குழிகள் தோண்டும் பணி நடந்து வருகிறது. கொந்தகையில் அடுத்த மாா்ச் மாதம் அகழாய்வுப் பணியை தொடங்க முடிவு செய்யப்பட்டு, தற்போது அங்கு அகழாய்வு நடத்துவதற்கான இடம் தோவு செய்யப்பட்டுள்ளது. 
  • இந்த இடத்தை சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது. இப்பணியை மேற்கொண்டிருந்த தொழிலாளா்கள் பானை போல் ஒரு பொருள் இருந்ததைக் கண்டு அது உடையாமல் வெளியே எடுத்தனா். 
  • அப்போது அது பழங்காலத் தமிழா்கள் பயன்படுத்திய முதுமக்கள்தாழி என்பது தெரியவந்தது. கொந்தகையில் அகழாய்வு தொடங்கப்படாத நிலையில் இடத்தை சுத்தம் செய்யும்போதே பழங்காலத்தமிழா்கள் பயன்படுத்திய பொருள் கண்டறியப்பட்டுள்ளதால் அகழாய்வின்போது பழங்காலப் பொருள்கள் ஏராளம் கிடைக்க வாய்ப்புள்ளது என்ற எதிா்பாா்ப்பு தமிழாா்வலா்கள் மற்றும் கிராம மக்களிடம் அதிகரித்துள்ளது.
ரூ.1,480 கோடியில் தேசிய ஜவுளி தொழில்நுட்ப மையம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • ரூ.1,480 கோடியில் தேசிய ஜவுளி தொழில்நுட்ப மையம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
தஞ்சையில் இந்திய பயிர் பதனிடும் நிறுவனத்தை தரம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • தஞ்சையில் இந்திய பயிர் பதனிடும் நிறுவனத்தை தரம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஹரியானாவில் உள்ள இந்திய பயிர் பதனிடும் நிறுவனத்தையும் தரம் உயர்த்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.



`மாதவிடாய் நாப்கின்கள் இனி முற்றிலும் இலவசம்!- மசோதா நிறைவேற்றிய ஸ்காட்லாந்து அரசு
  • மாதவிடாய்க் காலத்துக்கான இலவசப் பொருள்கள் மசோதாவை அவை உறுப்பினர்களின் முழு ஒப்புதலுடன் நிறைவேற்றியிருக்கிறது ஸ்காட்லாந்து நாடாளுமன்றம். 
  • இதன்மூலம் 31.2 மில்லியன் டாலர் மதிப்பிலான சானிட்டரி நாப்கின் உள்ளிட்ட மாதவிடாய்க் காலத்துக்குத் தேவையான பொருள்கள் சமூகநலக் கூடங்கள், இளைஞர் விடுதிகள், மருந்தகங்கள் உள்ளிட்ட பொதுஇடங்களில் அந்த நாட்டுப் பெண்களுக்கும் மாற்றுப்பாலினத்தவர்களுக்கும் இனி இலவசமாகக் கிடைக்கும். 
  • சானிட்டரி பொருள்களுக்காக பிரிட்டன் அரசு 5 சதவிகிதம் வரை வரி விதித்து வருகிறது. இந்த வரியை விலக்கிக்கொள்வதாக 2016ம் ஆண்டிலேயே அந்த நாட்டு அரசு அறிவித்தாலும் இதுவரை அது அமலுக்கு வரவில்லை. 
  • 2018 ல் ஜி.எஸ்.டி வரி அறிமுகப்படுத்திய இந்திய அரசு சானிட்டரி நாப்கின்கள் மீது 12 சதவிகித வரி விதித்து, பின்னர் அதை விலக்கிக்கொண்டது இதற்கிடையேதான் ஸ்காட்லாந்து அரசு தங்களது பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரிகளில் இலவசமாக சானிட்டரி பொருள்கள் கிடைக்கும் என உலகிலேயே முதன்முறையாக அறிவித்தது. 
நெதர்லாந்து துணை தூதராக கோபால் சீனிவாசன் நியமனம்
  • சென்னையில் உள்ள டிவிஎஸ் கேபிடல் பண்ட் நிறுவனத்தின் நிறுவனர், தலைவர் மற்றும் மேலாண் இயக்குநராக கோபால் சீனிவாசன் உள்ளார். சென்னை லயோலா கல்லூரியில் இளநிலை பட்டம், மிச்சிகன் பல்கலையில் எம்பிஏ பட்டம் பெற்றுள்ளார். இவர் தற்போது நெதர்லாந்து நாட்டின் கவுவர துணைத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். 
போர்க்குற்ற தீர்மானத்தில் இருந்து விலகல்; இலங்கை அதிகாரப்பூர்வ அறிவிப்பு
  • இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில், இலங்கை ராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகக்கூறி, ஷவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தாருக்கு, தங்கள் நாட்டிற்குள் நுழைய அமெரிக்கா தடை விதித்தது. 
  • இதற்கு, இலங்கை அரசிற்கு ஆலோசனைகள் வழங்கும் பவுத்த மத அமைப்பு கண்டனம் தெரிவித்தது.'இலங்கையில் நடைபெற்ற உள் நாட்டுப் போரின் போது, போர்க்குற்றங்கள் நடந்தன. மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன. 
  • அதுகுறித்து விசாரிக்க வேண்டும்' என, ஐக்கிய நாடுகள் சபையின், மனித உரிமை பேரவையில் 30/1 மற்றும் 40/1 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதற்கு அப்போதைய இலங்கை அரசு உடன்பட்டு, தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது. 
  • அந்த தீர்மானங்களில் இருந்து விலகுவதாக, இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சே கடந்த 19ம் தேதி அறிவித்தார்.இந்நிலையில், கடந்த, 24ம் தேதி, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின், 43வது அமர்வு ஜெனிவாவில் துவங்கியது. 
  • அதில் நேற்று, இலங்கையின் வெளி விவகாரத் துறை அமைச்சர் தினேஷ் குணவர்த்தன பேசியதாவது:ஐ.நா.,வின் 30/1 மற்றும் 40/1 தீர்மானங்களில் குறிப்பிட்டுள்ளவை, இலங்கை அரசியல் அமைப்பின் கட்டமைப்பிற்குள் செயற்படுத்த முடியாதவையாக உள்ளன. மேலும், இலங்கை மக்களின் இறையாண்மைக்கு எதிராகவும் உள்ளன.
  • இந்தத் தீர்மானங்களுக்கு அப்போதைய அரசு, அமைச்சரவையில் அங்கீகாரம் பெறவில்லை; நாடாளுமன்றத்திலும் இவற்றை சமர்ப்பிக்கவில்லை. அப்போதைய ஜனாதிபதியிடமும் ஆலோசனை பெறவில்லை. 
  • இப்படி, ஜனநாயக நடைமுறைகளைப் பின்பற்றாமல் தீர்மானத்தை அப்போதைய அரசு ஏற்றுள்ளது.நடைமுறைக்குச் சாத்தியமற்ற, அரசியல் அமைப்பிற்கு எதிரான இந்தத் தீர்மானங்களில் இருந்து இலங்கை அரசு விலகுகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel