சென்னையில் சா்வதேச வாா்ப்படத் துறை கண்காட்சி
- சென்னை வா்த்தக மையத்தில் சா்வதேச வாா்ப்படத் துறை கண்காட்சிக்கு (ஐஎஃப்இஎக்ஸ் 2020) இந்திய வாா்ப்பட மையம் ஏற்பாடு செய்துள்ளது.
- நாடு தழுவிய அளவில் 4,500 வாா்ப்படத் தொழிற்சாலைகளைக் கொண்டு இந்தியா அதன் உற்பத்தியில் உலக அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பெருமளவு ஆதிக்கம் செலுத்தும் இத்தொழில் 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கி வருகிறது.
- இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த வாா்ப்படத் துறையின் சிறப்புகளை எடுத்துக்காட்டும் விதமாக, சா்வதேச வாா்ப்படத் துறை கண்காட்சிக்கு சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை வா்த்தக மையத்தில் 2020 பிப்ரவரி 28 முதல் மாா்ச் 1 வரையில் இந்த கண்காட்சி நடைபெறவுள்ளது. இதில், ஏராளமான நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களது வாா்ப்பட தொழில்நுட்பம், சாதனங்கள், சேவைகளை காட்சிப்படுத்தவுள்ளன.
மொழி பெயர்ப்பாளர் ஜெயஸ்ரீக்கு விருது
- இந்திய மொழிகளின் சிறந்த இலக்கியங்களுக்கான அங்கீகாரமாக, சாகித்ய அகாடமி விருது மதிக்கப்படுகிறது. அந்த வகையில், 2019க்கான சிறந்த தமிழ் நாவலுக்கான சாகித்ய அகாடமி விருது, 'சூல்' நாவலுக்காக, எழுத்தாளர் சோ.தர்மனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
- இந்நிலையில், நேற்று டில்லியில் உள்ள, சாகித்ய அகாடமியின் அலுவலகமான ரவீந்திர பவனில், அதன் தலைவர், சந்திரசேகர் கம்பரின் தலைமையில் கூடிய தேர்வு குழுவினர், ஹிந்தி, அசாமி, பெங்காலி, குஜராத்தி, தமிழ், மலையாளம் உள்ளிட்ட, 23 மொழிகளுக்கான மொழிபெயர்ப்பு விருதாளர்களின் பட்டியலை அறிவித்தனர்.
- இந்த விருதுக்கான தேர்வுக்குழுவில், ஒவ்வொரு மொழியிலும், மூன்று பேர் இடம் பெற்றிருந்தனர். தமிழுக்கான தேர்வுக்குழுவில், ஆர்.வெங்கடேஷ், பிரேமா நந்தகுமார், எஸ்.தேவதாஸ் ஆகியோர் இடம் பெற்றனர்.
- அவர்கள், தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளர் விருதுக்கு, 'நிலம் பூத்து மலர்ந்த நாள்' நாவலை மொழிபெயர்த்த, எழுத்தாளர் கே.வி.ஜெயஸ்ரீயை தேர்வு செய்தனர்.
- எழுத்தாளர் மனோஜ் குரூர் மலையாளத்தில் எழுதிய நாவலை, 'நிலம் பூத்து மலர்ந்த நாள்' என்ற தலைப்பில், தமிழில் மொழிபெயர்த்ததற்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
- விருதுக்கு தேர்வாகி உள்ள, 23 பேருக்கும், தலா, ஒரு செப்பு பட்டயமும், 50 ஆயிரம் ரூபாய் ரொக்கமும் வழங்கப்படும். 'விருது வழங்கும் தேதி, பின்னர் அறிவிக்கப்படும்' என, சாகித்ய அகாடமி தெரிவித்துள்ளது.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு ராணுவ ஒப்பந்தம்; இந்தியா - அமெரிக்கா இடையே கையெழுத்தானது
- இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்தியா-அமெரிக்கா இடையிலான பல்வேறு துறை விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் பேசினர்.
- முதலில் டிரம்ப்பும், மோடியும் தனியாக பேச்சு நடத்தினார்கள். வர்த்தகம், ராணுவம் மற்றும் இரு நாட்டு ராஜ்ஜிய உறவுகள் குறித்து விவாதித்தனர். இதைத் தொடர்ந்து இரு நாட்டு அதிகாரிகள் குழு அளவிலான பேச்சு நடத்தப்பட்டது.
- இந்த பேச்சுவார்த்தையின் நிறைவில் இந்தியா- அமெரிக்கா இடையே எரிசக்தி உள்ளிட்ட 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
- மேலும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் 300 கோடி டாலர் (ரூ.21,606 கோடி) மதிப்பிலான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. டிரம்ப்-மோடி முன்னிலையில் இதற்கான ஒப்பந்தத்தில் அதிகாரிகள் கையெழுத்திட்டனர்.
- இந்த ஒப்பந்தத்தின்படி அமெரிக்காவின் அப்பாச்சி மற்றும் எம்எச்-60 ரோமியோ ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட நவீன ராணுவ உபகரணங்கள் இந்திய ராணுவத்திற்கு வாங்கப்படும்.
- நாட்டின் பாதுகாப்புக்காக மிக அதிநவீன ஆயுதங்களை உருவாக்கி இருப்பதாக சமீபத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி இருந்தார். அந்த அதிநவீன பாதுகாப்பு கருவிகளை இந்தியாவுக்கு வழங்க அமெரிக்கா முன்வந்துள்ளது. குறிப்பாக பயங்கரவாதத்துக்கு எதிராக அதிநவீன ஆயுதங்களை இந்தியா பயன்படுத்த அமெரிக்கா உதவும் என்று கூறப்படுகிறது.
- எம்.எச்.60 ரோமியோ வகையை சேர்ந்த அந்த ஹெலிகாப்டர்கள் பல்வேறு பணிகளுக்கும் பயன்படுத்தக் கூடிய சிறப்புகள் கொண்டது. நீண்ட நேரம் பறக்கும் ஆற்றல் வாய்ந்த அந்த ஹெலிகாப்டர்கள் மூலம் கடற்படைக்கு மேலும் வலிமை கொடுக்க முடியும். பாதுகாப்புத் துறையில் செய்யப்பட்ட இந்த புதிய ஒப்பந்தங்கள் இந்திய ராணுவ துறைக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மன நலம், எண்ணெய், மருந்துப் பொருள் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்து
- டெல்லியில் டிரம்பும் மோதியும் சந்தித்ததில் அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கிடையே சுகாதாரம் மற்றும் எண்ணெய் வளத்துறையில் மூன்று ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.
- இரு நாடுகளின் சுகாதாரத்துறைகளுக்கு இடையே மனநலம் குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
- அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திற்கும் இந்திய மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பிற்கும் இடையே மருத்துவ பொருள் பாதுகாப்பு குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
- இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், எக்சான் மொபில் இந்தியா நிறுவனம் மற்றும் அமெரிக்க சார்ட் தொழிற்சாலைகள் இடையே ஒத்துழைப்புக் கடிதம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
CAA-க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய பீகார் சட்டமன்றம்
- குடியுரிமை எதிர்ப்புச் சட்டம், குடிமக்களின் தேசிய பதிவு (NRC) மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவு (NPR) தொடர்பாக பீகாரின் பல்வேறு பகுதிகளில் நடந்து வரும் போராட்டங்களுக்கு மத்தியில், பீகார் சட்டமன்றம் பிப்., 25 NRC-யை மாநிலத்தில் செயல்படுத்தக்கூடாது என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது.
- சட்டசபை தேசிய மக்கள் தொகை NPR-யை அதன் 2010 வடிவத்தில் ஒரு திருத்தத்துடன் செயல்படுத்த ஒரு தீர்மானத்தையும் நிறைவேற்றியது.
- இந்த தீர்மானம் சபையில் சபாநாயகர் விஜய் குமார் சவுத்ரி தாக்கல் செய்து ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தில் பீகாரில் NRC தேவையில்லை என்றும், 2010 வடிவத்தில் NPR நிறைவேற்றபட்டது.