Type Here to Get Search Results !

19th DECEMBER 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

உள்ளாட்சி துறைக்கு 12 தேசிய விருதுகள்

  • மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை சார்பில், விருது வழங்கும் விழா, நேற்று டில்லியில் நடந்தது. விழாவில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை, தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தியதற்காக, மாநில அளவில், இரண்டு; மாவட்ட அளவில், நான்கு; ஊராட்சி ஒன்றிய அளவில், கிராம ஊராட்சி அளவில், தலா, ஒன்று என, மொத்தம் எட்டு தேசிய விருதுகள் வழங்கப்பட்டன.
  • மேலும், மாநில ஊரக வளர்ச்சி மற்றும் கிராம ஊராட்சி நிறுவனத்தின், சிறப்பான செயல்பாட்டிற்காக, ஒரு தேசிய விருது மற்றும் இரண்டு விருதுகள் வழங்கப்பட்டன.
  • தீன்தயாள் உபாயத்யாயா திட்டத்தின் கீழ், வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தமைக்காக, தேசிய தங்க விருது வழங்கப்பட்டது. இவ்விருதுகளை, மத்திய ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் நரேந்திர் சிங் தோமரிடம் இருந்து, உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி பெற்றார்.நடப்பாண்டு, ஊரக வளர்ச்சித் துறை, ஏற்கனவே, 19 தேசிய விருதுகளை பெற்றுள்ளது. 

சர்வதேச திரைப்பட விழாவில் ஒத்தசெருப்பு படம் சிறந்த படமாக தேர்வு
  • 17-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் பார்த்திபனின் ஒத்தசெருப்பு படம் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. தமிழ் திரைப்படங்கள் போட்டி பிரிவில் பார்த்திபனின் ஒத்தசெருப்பு படத்துக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.



ஒடிசாவில் நடத்தப்பட்ட மேம்படுத்திய பினாகா ராக்கெட் சோதனை வெற்றி
  • ஒடிசாவில் நடத்தப்பட்ட மேம்படுத்திய பினாகா ராக்கெட் சோதனை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 12 ராக்கெட்டுகளை 12 வெவ்வேறு இலக்குகளை குறிவைத்தும் ஏவும் தொழில் நுட்பத்தை கொண்டது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முழுக்க சோலார் மயமான ஆப்பிரிக்காவின் முதல் கிராமம்
  • மொராக்கோவின் Id Mjahdi என்ற கிராமத்தில் மொத்தம் 32 சோலார் பேனல்கள் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யப்பட்டு பொருத்தப்பட்டது. 
  • இதன் மூலம் சுமார் 8.32 கிலோவாட்ஸ் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு அந்த கிராமத்தில் உள்ள 20 வீடுகள் பயன்பெறுகின்றன. ஆப்பிரிக்காவின் முதல் முழு சூரிய சக்தியுடன் இயங்கும் கிராமம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது Id Mjahdi கிராமம்.
  • சோலார் பேனல் பயன்படுத்துவதற்கு முன் இந்த கிராமத்தில் வசிப்பவர்கள் வெளிச்சத்திற்காக மெழுகுவர்த்தியையும், அடுப்பெரிக்க விறகுகளையும் பயன்படுத்தி வந்துள்ளனர். தற்போது இந்திய மதிப்பில் ரூபாய் 1.33 கோடி நிதியில், Id Mjahdi கிராமம் முழுவதுமே சோலார் மின்சாரத்தால் இயங்குவது குறிப்பிடத்தக்கது.
  • சோலார் மின்சாரம் பயன்படுத்தப்படுவதால் தற்போது இந்த கிராமமக்கள் பிரிட்ஜ், வாட்டர் ஹீட்டர், டிவி உள்ளிட்ட அனைத்து நவீன சாதனங்களையும் பயன்படுத்துகின்றனர்.உற்பத்தி செய்யப்படும் அதிக மின்சாரம் பேட்டரியில் சேமித்து பயன்படுத்தப்படுகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel