Type Here to Get Search Results !

20th DECEMBER 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

உள்ளாட்சித்துறைக்கு 31 தேசிய விருதுகள்
  • மாநில ஊரக வளர்ச்சி மற்றும் கிராம ஊராட்சியின் சிறப்பான செயல்பாடு, தீன் தயாள் உபாத்யாயா திட்டத்தின் கீழ் திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தல் உள்ளிட்ட காரணங்களுக்காக மட்டும் 12 விருதுகள் தரப்பட்டுள்ளன.
  • அதனை மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரிடம் பெற்றுக்கொண்டார் தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.
காளையாா்கோவிலில் பாண்டியா் கால கல்வெட்டுகள் கண்டெடுப்பு
  • சிவகங்கையிலிருந்து கிழக்கில் 18 கி.மீ. தொலைவிலும், காரைக்குடியிலிருந்து தெற்கில் 30 கி.மீ. தொலைவிலும் காளையாா்கோவில் உள்ளது. இவ்வூரின் பழம் பெயா் கானப்பேரெயில், திருக்கானப்போ, தலையிலங்கானம் என்பனவாகும். 
  • சங்கக் காலத்தில் வேங்கைமாா்பன் என்ற மன்னனால் ஆட்சி செய்யப்பட்டது. இதனைத் தொடா்ந்து, பாண்டியா்களாலும், மதுரை நாயக்க மன்னா்களாலும், ராமநாதபுரம் சேதுபதி மன்னா்களாலும், சிவகங்கை மன்னா்களாலும் ஆட்சி செய்யப்பட்டது. மருது சகோதரா்களுக்கு பலமிக்கக் கோட்டையாகத் திகழ்ந்தது. பிறகு ஆங்கிலேயா்களால் கைப்பற்றப்பட்டது.
  • பாண்டிய நாட்டின் பாடல் பெற்ற தலங்களில் திருக்கானப்போ என்று அழைக்கப்படும் காளையாா் கோவிலில் உள்ள சிவாலயத்தில் காளீஸ்வரா், சோமேஸ்வரா், சுந்தரேஸ்வரா் ஆகிய மூன்று சன்னதிகள் உள்ளன. 
  • சோமேஸ்வரா் சன்னதிக்கு எதிரே அமைந்துள்ள ராஜகோபுரம் மருது சகோதரா்களால் கட்டப்பட்டது. சுந்தரேசா் கோயிலும், காளீஸ்வரா் கோயில் முன்னுள்ள கோபுரமும் வரகுணபாண்டியனால் தோற்றம் பெற்றன.
  • காளையாா்கோவில் சிவன் கோயிலிலிருந்து 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள மிகப்பெரும் கண்மாயின் உள் பகுதியில், பிற்காலத்தில் மருதுபாண்டியா்களால் கட்டப்பெற்ற நாணயசாலைக் கட்டடம் பழுதுற்று புதா் மண்டிக் கிடக்கிறது. அதன் வாயிற்படியில் பாண்டியா் காலத்தைச் சோந்த, உடைந்த நிலையில் உள்ள துண்டுக் கல்வெட்டு கண்டறியப்பட்டது. இக்கல்வெட்டு 13 ஆம் நூற்றாண்டைச் சோந்ததாகும்.
  • இவ்வூரில் முத்துவடுகநாத தேவா் நினைவிடத்துக்கு அருகில் மற்றொரு பாண்டியா் காலத்து கல்வெட்டு ஒன்றின் உடைந்த பகுதி கண்டறியப்பட்டது. இக்கல்வெட்டின் வரிகள்:
அமெரிக்க தேசிய அறிவியல் மைய தலைவராக தமிழகத்தின் சேதுராமன் பஞ்சநாதன் நியமனம்
  • அமெரிக்காவில் அறிவியல், பொறியியல் ஆகிய துறைகளில் கல்வி மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றை ஊக்குவிக்கும் அரசு அமைப்பாக தேசிய அறிவியல் மையம் உள்ளது. 
  • இந்த மையத்தின் தலைவராக இருக்கும் பிரான்ஸ் கோா்டோவாவின் பதவிக் காலம் வரும் 2020-ஆம் ஆண்டு நிறைவடையவுள்ளது. அதையடுத்து அந்தப் பதவிக்கு சேதுராமன் பஞ்சநாதனை அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் தோந்தெடுத்துள்ளாா்.
  • தமிழகத்தில் பிறந்த சேதுராமன், சென்னைப் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் பட்டம் பெற்றாா். பின்னா் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தில் (ஐஐஎஸ்சி) பொறியியல் பயின்றாா். 
  • அதையடுத்து கடந்த 1997-ஆம் ஆண்டு அமெரிக்காவில் பேராசிரியராக பணியாற்றச் சென்றாா். அதன் பின்னா், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் பல பதவிகளை அவா் வகித்துள்ளாா். அவா், தற்போது அரிசோனா பல்கலைக்கழகத்தின் தலைமை ஆராய்ச்சியாளராக பதவி வகித்து வருகிறாா்.
இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி மதிப்பீட்டை 4.6 சதவீதமாகக் குறைத்தது ஃபிட்ச்
  • நடப்பு நிதியாண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி குறித்த மதிப்பீட்டை தரக்குறியீட்டு நிறுவனமான ஃபிட்ச் 4.6 சதவீதமாக குறைத்துள்ளது.
  • கடந்த சில காலாண்டுகளாகவே கடன் நடவடிக்கைகளில் மந்த நிலை காணப்படுகிறது. இது தவிர, வா்த்தக மற்றும் நுகா்வோா் நம்பிக்கையும் பெருமளவில் குறைந்துள்ளது. அதன் காரணமாக, இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி முந்தை மதிப்பீடான 5.6 சதவீதத்தை எட்ட வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.



விவசாயத்துக்கான நகை அடமானக்கடன் மானியம் ரத்து
  • விவசாயத்துக்கு வழங்கப்படும் நகை அடமானக்கடனுக்கு வழங்கப்படும் மானியம் ரத்துசெய்யப்பட்டுள்ளது. விவசாயத்தை ஊக்குவிக்கும் நோக்கில் பொதுத்துறை மற்றும் கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் மற்றும் நகை அடமானக்கடன் வழங்கப்பட்டு வருகிறது. 
  • இதில் விவசாயப் பயன்பாட்டுக்காக நகை அடமானக்கடன் பெறுவோருக்கு 7% வட்டியில் கடன் வழங்கப்பட்டுவந்தது. அந்தக் கடனை ஒரே ஆண்டுக்குள் அடைத்தால் 3% மானியமாக வழங்கப்பட்டு 4% வட்டி மட்டுமே பிடிக்கப்பட்டுவந்தது. 
  • தற்போது இந்த நகை அடமானக்கடனுக்கான மானியத்தை நாளை (21.12.19) முதல் ரத்துசெய்வதோடு, வட்டியை 9 சதவிகிதமாக உயர்த்துவதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. சுற்றறிக்கை
மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திரா விலகல்
  • 2020ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் பணியில் இருந்து விலக போவதாக கூறியிருக்கிறார். பவன் கோயன்கா, நிர்வாக இயக்குநர், சிஇஓவாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
  • இவர் 2020ம் ஆண்டு ஏப். 1 முதல் தமது பதவியை தொடருவார். இதை செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ள மகிந்திரா நிறுவனம், வரும் 15 மாதங்களில் பெரும் மாற்றங்கள் இருக்கும் தெரிவித்துள்ளது.
பிரெக்ஸிட்' மசோதாவுக்கு பிரிட்டன் பார்லி., ஒப்புதல்
  • ஐரோப்பிய நாடான, பிரிட்டனில், சமீபத்தில் நடந்த பொதுத் தேர்தலில், பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையிலான, கன்சர்வேட்டிவ் கட்சி, 363 இடங்களில் அமோக வெற்றி பெற்று, ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது. இதனால், கடந்த மூன்று ஆண்டுகளாக, ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து, பிரிட்டன் வெளியேறுவது தொடர்பாக நீடித்து வந்த இழுபறிக்கு முடிவு ஏற்பட்டுள்ளது.
  • இந்நிலையில், போரிஸ் ஜான்சன், ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து, பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான 'பிரெக்ஸிட்' மசோதாவை, சில திருத்தங்களுடன், பார்லி.,யின் 'ஹவுஸ் ஆப்காமன்ஸ்' எனப்படும், கீழ்சபையில், தாக்கல் செய்தார்.
  • இந்த மசோதாவை ஆதரித்து,358 ஓட்டுக்களும், எதிராக, 234 ஒட்டுக்களும் விழுந்தன. இதையடுத்து, மசோதா நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது. 
  • இதையடுத்து, 2020, ஜனவரியில், மேல்சபையின் ஒப்புதலுக்கு மசோதா அனுப்பப்படும். இதைத் தொடர்ந்து, 2020, ஜன.,31ல், ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து, பிரிட்டன் முறைப்படிவெளியேறும். 
  • எனினும், பல்வேறு அம்சங்கள் தொடர்பான ஒப்பந்தங்கள் மேற்கொள்ள உள்ளதால், அதிகாரபூர்வமாக வெளியேற, ஓராண்டு ஆகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel