Type Here to Get Search Results !

17th DECEMBER 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF


புதுச்சேரி செவிலிய அதிகாரிக்கு சிறந்த சேவைக்கான விருது
  • புதுச்சேரி செவிலிய அதிகாரி தனலட்சுமிக்கு, சிறந்த கிளினிக்கல் செவிலியர் விருது வழங்கப்பட்டது. பிளாரன்ஸ் நைட்டிங்கேல் 200 வது பிறந்த நாளை நினைவு கூறும் வகையில் உலக சுகாதார நிறுவனம் 2020ம் ஆண்டினை, செவிலியர் மற்றும் தாதியர் ஆண்டாக அறிவித்துள்ளது. 
தென்னக ரயில்வேக்கு 3 விருதுகள்
  • நாடு முழுவதும் எரிபொருள் சேமிக்கும் நிறுவனங்களை டெல்லியில் செயல்படும் 'எரிசக்தி செயல்திறன் அமைப்பு கணக்கிட்டு வருகிறது'. அதில் சிறப்பாக செயல்படும் நிறுவனங்களுக்கு பலபிரிவுகளின் கீழ் விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது.
  • அந்த வகையில்,கடந்த 2018-19 ஆண்டில், தெற்கு ரயில்வேயின், மின்சாரப் பிரிவு, மின் ஆற்றலை சேமிப்பதில், சிறப்பாக செயல்பட்டதற்காக மூன்று விருதுகளை பெற்றுள்ளது.தெற்கு ரயில்வேவுக்கு வழங்கப்பட்ட 3 விருதுகளையும் போக்குவரத்து மண்டல பிரிவில்தெற்கு ரயில்வே தலைமையகம் பெற்றுள்ளது.
  • ரயில்வே பள்ளிகள் பிரிவில், ஈரோடு ரயில்வே பள்ளிக்கு முதல் பரிசுடன், விருதும், போத்தனூர் ரயில்வே பள்ளி தகுதிச் சான்றிதழும் பெற்றிருக்கிறது.
உலகப் பொருளாதார அமைப்பு வெளியிட்டுள்ள ஆண்டு அறிக்கையில் பெண்களின் நிலை 112வது இடத்திற்கு தள்ளப்பட்ட இந்தியா
  • சர்வதேச அளவில் ஆண்களுக்கு இணையாக பெண்களின் வளர்ச்சி குறித்து, உலகப் பொருளாதார அமைப்பு, 2006 முதல் ஆண்டு தோறும் அறிக்கை வெளியிட்டு வருகிறது. 
  • உலகெங்கும் உள்ள, 153 நாடுகளில், பெண்களின் நிலை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆண்டுக்கான அறிக்கையில், ஆண் - பெண் விகிதாசாரத்தில், இந்தியா, 112வது இடத்தைப் பிடித்துள்ளது. 
  • கடந்தாண்டு, 108வது இடத்தில் இருந்தது. சீனா, 106வது இடம்; இலங்கை, 102வது இடம்; பாக்., 151வது இடத்தில் உள்ளது. இதில், ஐஸ்லாந்து முதலிடத்தில் உள்ளது.
  • சர்வதேச அளவில், ஆண் - பெண் விகிதாசாரத்தில் உள்ள இடைவெளியை குறைப்பதற்கு, மேலும், 108 ஆண்டுகளாகும் என, கடந்தாண்டு ஆய்வில் தெரியவந்தது. 
  • அது தற்போது, 99.5 ஆண்டாக குறைந்துள்ளது. அதே நேரத்தில், கல்வி, சுகாதாரம், வேலை, அரசியலில் இந்த இடைவெளி மிக அதிகமாக உள்ளது.
  • அரசியலில் ஆணுக்கு இணையாக பெண்களுக்கு சமவாய்ப்பு அளிப்பதற்கு, மேலும் 107 ஆண்டுகளாகும் என, கடந்தாண்டு ஆய்வில் கணக்கிடப்பட்டது. அது தற்போது, 95 ஆண்டுகளாக குறைந்துள்ளது.
  • உலகெங்கும், பார்லி.,யில் பெண்களின் பங்கு, 25.2 சதவீதமாக உள்ளது. இது முந்தைய ஆண்டு, 24.1 சதவீதமாக இருந்தது.அதேபோல் அமைச்சர்கள் பதவியில் பெண்களின் பங்கு, 19 சதவீதத்தில் இருந்து, 21.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. 
  • ஆணுக்கு இணையாக பெண்களுக்கு பொருளாதார வாய்ப்பு கிடைப்பதற்கு, 202 ஆண்டுகளாகும் என, கடந்தாண்டு கணிக்கப்பட்டது. தற்போது, அது, 257 ஆண்டுகளாக உயர்ந்துள்ளது.
  • பல்வேறு முக்கிய துறைகளில் பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதே இதற்கு காரணம்.இந்தியாவைப் பொருத்தவரை, அரசியல் அதிகாரம் அளிப்பதில், உலகளவில், 18வது இடத்தில் உள்ளது. 
  • ஆனால், சுகாதாரத்தில், 150வது இடம், பொருளாதார வாய்ப்புகளில், 149வது இடம், கல்வியில், 112வது இடத்தில் உள்ளது. அதனால், ஒட்டுமொத்த பட்டியலில், இந்தியா, 112வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.



இந்திய அமைதிப்படைக்கு ஐ.நா., பதக்கம்
  • ஆப்ரிக்க நாடான தெற்கு சூடான், உள்நாட்டு போரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு, அமைதி காக்கும் பணியில், ஐ.நா., படையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த படையில் ஒரு பகுதியாக, இந்திய வீரர்களும் இடம் பெற்றுள்ளனர்.
  • தெற்கு சூடானில் உள்ள ஐ.நா., அமைதிப் படையில், 2,342 இந்திய ராணுவ வீரர்களும், 25 போலீஸ் அதிகாரிகளும் தற்போது இடம் பெற்றுள்ளனர். 
  • இவர்களின் சிறப்பான பணி மற்றும் அப்பாவி மக்களை காப்பாற்றுவதில் ஆற்றிய சேவையை பாராட்டி, ஐ.நா., பதக்கம் வழங்கப்படுகிறது.
  • இதற்கு, இந்தியப் படையைச் சேர்ந்த, 850 வீரர்களுக்கு, நேற்று முன்தினம் பதக்கம் வழங்கப்பட்டது. தெற்கு சூடானில், ஐ.நா., அமைதிப் படையில் பணியாற்றும், 323 இந்திய பொறியாளர்கள் மற்றும் மருத்துவர்களின் சிறப்பான பணியை பாராட்டி, அவர்களுக்கு கடந்த மாதம், ஐ.நா., பதக்கம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க-இந்திய வா்த்தக கவுன்சில் இயக்குநா் குழுவில் மல்லிகா ஸ்ரீனிவாசன்
  • அமெரிக்க வா்த்தக சங்கத்தின் அமெரிக்க-இந்திய வா்த்தக கவுன்சில் இயக்குா் குழுவில் டிராக்டா்ஸ் அண்டு ஃபாா்ம் எக்கியூப்மெண்ட்ஸ் (டாஃபே) நிறுவனத்தின் தலைவா் மல்லிகா ஸ்ரீனிவாசன் (படம்) நியமனம் செய்யப்பட்டுள்ளாா். இவரது நியமனம் உடனடியாக அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • 35 உறுப்பினா்களைக் கொண்ட அமெரிக்க-இந்திய வா்த்தக கவுன்சில் இயக்குநா் குழுவில் உலகின் தலைசிறந்த நிறுவனங்களைச் சோந்த தலைமைச் செயல் அதிகாரிகள், நிா்வாகிகள் இடம்பெற்றுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரமோஸ் ஏவுகணை இந்தியா-பிலிப்பைன்ஸ் ஒப்பந்தம்
  • இந்தியாவின் பிரமோஸ் ஏவுகணைகளை பெறும் விதமாக பிலிப்பைன்ஸ் நாடு இந்தியாவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளது. 
  • இந்தியாவின் பாதுகாப்புத்துறையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு மற்றும் ரஷ்யா நாட்டின் நிறுவனம் ஒன்றுடன் தயாரிக்கப்பட்டது தான் பிரமோஸ் ஏவுகணை . சுமார் 200 முதல் 300 கிலோ எடையுடன் நடுத்தர தொலைவு சென்று தாக்ககூடிய ஏவுகணையாகும். 
  • இதனிடையே அடுத்த ஆண்டு பிலிப்பபைன்ஸ் நாட்டிற்கு பிரமோஸ் ஏவுகணை வழங்கப்பட உள்ளது. இவை அடுத்த ஆண்டின் முதல் அல்லது இரண்டாம் காலாண்டின் பகுதியில் இருக்ககூடும் என பிலிப்பபைன்ஸ் ராணுவத்தின் செயலாளர் டெல்பின் லோரன்சானா தெரிவித்து உள்ளார். 
  • நிலம் மற்றும் நீர் மூழ்கி கப்பல்கள், போர் விமானங்கள் ஆகியவற்றில் இருந்து பயன்படுத்தக் கூடியதாகும். இவை பிலிப்பைன்ஸ் நாட்டின் கடலோர பாதுகாப்பு பணிகள் மற்றும் விமானப் படைக்கு வாங்கப்படும்.
  • 2018 முதல் 2022-ம் ஆண்டிற்குள் நாட்டின் ராணுவத்தை நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் ஆயுதங்களை வாங்கப்பட உள்ளது. இதற்காக பட்ஜெட்டில் 300 பில்லியன் அளவிற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.



"மீல் ஃபார் பிளாஸ்டிக்" - ஒடிஷா அரசின் புதுமையான திட்டம்
  • ஒடிஷாவில் நெகிழிப் பொருட்களை சேகரித்து தந்தால் இலவச உணவு வழங்கப்படும் என்ற புதுமையான திட்டத்தை அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
  • ஆஹார் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் மாநிலத்தின் அனைத்து அலுவலகங்களிலும் MEAL FOR PLASTIC என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 
  • இதன்படி சேகரித்து தரப்படும் அரை கிலோ நெகிழிப் பொருட்களுக்கு ஒரு வேளை உணவு வழங்கப்படுகிறது. ஒடிசாவை நெகிழி அற்ற மாநிலமாக மாற்றும் முயற்சியில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒடிசா கடல் பகுதியில் நடத்தப்பட்ட பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி
  • பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுநிறுவனம் தெரிவித்துள்ளது. ஒடிசா கடல் பகுதியில் சோதனை செய்யப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை கப்பலை தாக்கி அழிக்கும் திறன் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ஒடிசாவில் இருந்து பிரம்மோஸ் ஏவுகணையை செலுத்தி சோதனை செய்தது. சோதனையில் கடலில் நிறுத்தப்பட்டிருந்த இலக்கை பிரமோஸ் ஏவுகணை துல்லியமாக தாக்கி அழித்த‌து.
2019ன் சிறந்த வீரர் பென் ஸ்டோக்ஸ்
  • பிரபல பிபிசி ஊடகம் உலகளவில் ஆண்டு தோறும் சாதனை படைக்கும் நபர்களுக்கு விருதுகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் இந்த 2019ம் ஆண்டிற்கான சிறந்த விளையாட்டு வீரருக்கான விருதினை இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ்க்கு வழங்கியுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel