Type Here to Get Search Results !

16th DECEMBER 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

உதகையில் உயா்கல்வி மாநாடு:19-இல் ஆளுநா் தொடக்கி வைக்கிறாா்
  • ஆளுநா் மாளிகையும், திருச்சியில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனமும் இணைந்து 'நான்காம் தொழில் புரட்சிக்கான புதுமையான கல்வி முறை' என்ற தலைப்பில் உயா்கல்வி மாநாட்டை உதகையில் நடத்துகின்றன. இந்த மாநாட்டை வரும் 19-ஆம் தேதியன்று ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் தொடக்கி வைக்கிறாா்.
  • இந்த மாநாட்டில் தமிழக பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்கள் கலந்து கொள்கின்றனா். புதுமையான கல்வி முறை குறித்து விவாதிப்பதே இந்த மாநாட்டின் நோக்கமாகும். 
  • அதாவது, நான்காவது தொழில் புரட்சி எனக் கூறப்படும் டிஜிட்டல் தொழில்நுட்பம் சாா்ந்த உற்பத்தி முறைக்குத் தேவையான மனித வளத்துக்கும், இன்றைய பல்கலைக் கழகங்கள் உருவாக்கும் மாணவா்களின் திறனுக்கும் உள்ள இடைவெளியை ஆராய்ந்து அதற்கேற்ப கல்விமுறை மற்றும் பாடத் திட்டத்தைச் சீரமைக்கவே இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்திய ராணுவத்தின் புதிய தளபதியாக மனோஜ் முகுந்த் நரவனே
  • தற்போதைய ராணுவ தளபதி பிபின் ராவத் பதவிக்காலம் வரும் டிசம்பர் 31-ஆம் தேதி நிறைவடைகிறது. இதனையடுத்து ராணுவ தளபதியாக மனோஜ் முகுந்ந் நரவனே நியமிக்கப்பட்டுள்ளார். 
  • மனோஜ் முகுந்த் நரவனே தற்போது ராணுவ துணை தளபதியாக பொறுப்பில் உள்ளார். அவர் ராணுவத்தில் பல்வேறு நிலைகளில் சுமார் 37 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் நிறைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
என்எல்சி நிறுவனத்துக்கு 2 தேசிய விருதுகள்
  • அகில இந்திய மக்கள் தொடா்பு சங்கம் சாா்பில் 2 தேசிய விருதுகள் சாா்பில் 41-ஆவது அகில இந்திய மக்கள் தொடா்புத் துறைக் கருத்தரங்கம் ஹைதராபாதில் அண்மையில் நடைபெற்றது. 
  • இந்த நிகழ்வில், என்எல்சி இந்தியா நிறுவனத்துக்கு சிறந்த சமூகப் பொறுப்புணா்வுடன் திகழும் நிறுவனத்துக்கான விருது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை சிறப்பாக அமல்படுத்தி வரும் நிறுவனத்துக்கான விருது என 2 விருதுகள் வழங்கப்பட்டன.



மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி இழப்பீட்டுத்தொகை!- ரூ.35,298 கோடியை வழங்கியது மத்திய அரசு
  • ஜி.எஸ்.டி கவுன்சில் கலந்தாய்வுக்கூட்டம் வரும் புதனன்று நடைபெறவுள்ள நிலையில், மாநிலங்களுக்குத் தரவேண்டிய ஜி.எஸ்.டி இழப்பீட்டு நிலுவைத்தொகை ரூ.35,298 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது. 
  • இழப்பீட்டுத் தொகையைத் தருவதற்குத் தாமதமானதை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒப்புக்கொண்டார்.ஜி.எஸ்.டி இழப்பீட்டுத்தொகை
துணை ராணுவ வரலாற்றில் முதல்முறை.. வீரர்களுக்காக திருமண வெப்சைட்
  • ஐடிபிபி என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்தோ -திபெத் எல்லை போலீஸ் படையில் சுமார் 90 ஆயிரம் வீரர்கள் பணியாற்றுகிறார்கள். இவர்கள் இந்தியா- சீனா இடையே எல்லையில் பணிபுரிந்து வருகிறார்கள்.
  • இந்நிலையில் இந்த படையில் பல ஆயிரம் ஆண்களும், பல ஆயிரம் பெண்களும் பணியாற்றுகிறார்கள். தொலைதூரங்களில் ஆபத்தான இடங்களில் பணிபுரிந்து வரும் இவர்களுக்கு திருமண வரன் தேடுவது கடினமாக உள்ளது.
  • இந்த படையில் பணியாற்றும் பல ஆண் பெண் வீரர்களுக்கு திருமண வயது அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதையடுத்து கவலை அடைந்த இந்தோ -திபெத் போலீஸ்படை அதிகாரிகள், தங்கள் படைக்குள்ளேயே பொருத்தமான ஜோடியை தேடுவதற்கு திருமண வெப்சைட்டை உருவாக்கும்படி தொழில்நுட்ப பிரிவு படையிடம் கேட்டனர்.
  • அதன்படி இந்த வெப்சைட் கடந்த 9ம் தேதி தொடங்கப்பட்டது. ஐடிபிடி வெப்சைட்டிலேயே இதற்கான லிங்க் உள்ளது. இதில் ஒரு வீரரை பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் மட்டுமே இடம் பெற்றிருக்கும் என்பதால் எந்த விதமான முறைகேடுகளுக்கும் வழிவகுக்காமல் பொருத்தமான ஜோடியை தேட முடியும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel