Type Here to Get Search Results !

15th DECEMBER 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

சிறந்த செய்தி தொலைக்காட்சிக்கான விருதை பெற்றது Zee Hindustan
  • உலகின் முதல் நெறியாளர் அற்ற மற்றும் பன்மொழி செய்தி சேனலான Zee Hindustan-க்கு சிறந்த செய்தி தொலைக்காட்சி என்ற பட்டத்தை இந்திய செய்தித்தாள் சங்கமான NAI வழங்கியுள்ளது.
  • இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் ஒளிபரப்பாகும் Zee Hindustan என்ற செய்தி தொலைக்காட்சி இன்று தேசத்தின் குரலாக மாறியுள்ளது.
  • இந்த சிறப்பு விருதை நாட்டின் தலைநகரான டெல்லியில் டிசம்பர் 15 ஆம் தேதி நடைபெற்ற சிறப்பு கௌரவ விழாவில் ஜீ இந்துஸ்தான் செய்திப்பிரிவுத் தலைவர் ரமேஷ் சந்திரா பெற்றுக்கொண்டார்.
  • Zee Hindustan-ன் புரொடியூசர் மாதுரி கலால், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து மக்களின் குரலையும் அவர்களது தேர்தல் சிந்தனையையும் நாட்டு மக்கள் முன் கொண்டு வந்ததற்காக, இந்த நிகழ்வில் சிறந்த ஆங்க்கர்- புரொடியூசர் விருது வழங்கப்பட்டது.



வங்காளதேச சர்வதேச பேட்மிண்டன் - லக்‌ஷயா சாம்பியன்
  • வங்காளதேச சர்வதேச பேட்மிண்டன் போட்டி டாக்காவில் நடந்தது. இதில் நேற்று நடந்த ஒற்றையர் இறுதி போட்டியில் இந்திய வீரர் லக்‌ஷயா சென் 22-20, 21-18 என்ற நேர் செட் கணக்கில் லியோங் ஜன் ஹாவை (மலேசியா) தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். கடைசியாக விளையாடிய 7 தொடர்களில் லக்‌ஷயா சென் வென்ற 5-வது பட்டம் இதுவாகும்.
உலக பேட்மிண்டனில் பட்டம் வென்ற ஜப்பான் வீரர் கென்டோ மோமோட்டா புதிய சாதனை
  • உலக டூர் இறுதி சுற்று பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் குவாங்ஜோவ் நகரில் நடந்து வந்தது. இதில் ஆண்கள் பிரிவில் 'நம்பர் ஒன்' வீரரும், உலக சாம்பியனுமான கென்டோ மோமோட்டா (ஜப்பான்) 17-21, 21-17, 21-14 என்ற செட் கணக்கில் அந்தோணி சினிசுகாவை (இந்தோனேஷியா) போராடி வீழ்த்தி பட்டத்தை வசப்படுத்தினார். 
  • இந்த ஆட்டம் 1 மணி 27 நிமிடங்கள் நடந்தது. 25 வயதான மோமோட்டா இந்த ஆண்டில் கைப்பற்றிய 11-வது பட்டம் இதுவாகும். இதன் மூலம் ஒரு சீசனில் அதிக பட்டங்கள் வென்றவரான மலேசியாவின் லீ சோங் வெய்யின் (2010-ம் ஆண்டில் 10 பட்டம்) சாதனையை முறியடித்தார்.
  • மகளிா் ஒற்றையா் பிரிவில் சீனாவின் சென் யு ஃபெய் 12-21, 21-12, 21-17 என்ற கேம் கணக்கில் சீன தைபேயின் டை ஸூ இங்கை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றாா். இந்த சீசனில் 7-ஆவது பட்டத்தை வெல்லும் சென், உலகின் முதல்நிலை வீராங்கனை அந்தஸ்தையும் பெற்றாா்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel