Type Here to Get Search Results !

14th DECEMBER 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

கிராம ஊராட்சிகளின் தரவரிசை
  • மத்திய அரசு செயல்படுத்தி வரும் மிஷன் அந்தியோதயா என்ற திட்டத்தின் கீழ் வருடா வருடம் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிகளின் தரவரிசை வெளியிடப்படுவது வாடிக்கை. அதன் அடிப்படையில் இந்த ஆண்டும் தரவரிசை பட்டியல்வெளியிடப்பட்டுள்ளது.
  • இந்த பட்டியலில் தமிழகத்தில் உள்ள திருவண்ணாமலை மாவட்டம் மொழுகம்பூண்டி கிராம பஞ்சாயத்து முதலிடத்தை பிடித்துள்ளது. இரண்டாம் இடம் குஜராத் மாநிலம் பாவ் நகரில் உள்ள பம்பானியா கிராம பஞ்சாயத்துக்கு கிடைத்துள்ளது.
  • மத்திய அரசின் திட்டங்கள், நிதி செலவிடுதல், பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாக கொண்டு இந்த தரவரிசை பிரிக்கப்படுகிறது. 
  • கடந்த ஆண்டு முதல் 50 இடங்களில் போட்டி போட்டு இடம் பிடித்த ஆந்திர மாநிலம் இம்முறை முதல் வரிசையை தவற விட்டுள்ளது. குஜராத்தின் சில பஞ்சாயத்துகளும் இதில் இடம் பெறவில்லை
இந்தோனீசிய குகையில் 44,000 ஆண்டுகள் பழமையான ஓவியம் கண்டுபிடிப்பு
  • இந்தோனீசிய குகை ஒன்றின் சுவரில் வரையப்பட்டிருந்த ஓவியம் 44,000 ஆண்டுகள் பழமையானது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாதி மனிதன் மற்றும் பாதி மிருகம் போன்ற உருவம் கொண்ட ஒருவர் ஈட்டி மற்றும் கயிறுகள் கொண்டு எருமை மாடு ஒன்றை வேட்டையாடுவது போன்று அந்த ஓவியம் இருக்கிறது.
  • இது இந்த உலகிலேயே பதிவு செய்யப்பட்டுள்ள மிகவும் பழமையான கதை என்று சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்தோனீசிய தீவான சுலவேசி என்ற பகுதியில் உள்ள ஒரு குகையில்தான் இந்த ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த தீவில் மட்டும் பழங்கால ஓவியங்கள் கொண்ட குறைந்தது 242 குகைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.



உலக அழகி 2019 போட்டி: உலக அழகியாக ஜமைக்காவின் டோனி ஆன் சிங் தேர்வு
  • உலக அழகி 2019 (Miss World 2019 )போட்டியில் உலக அழகியாக ஜமைக்காவின் டோனி ஆன் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தியாவைச் சேர்ந்த சுமன்ராவ் 3 வது இடத்தை பிடித்தார். பிரான்சின் ஓபிலி மெசினோ இரண்டாவது இடத்தையும் பிடித்தனர்.
  • மதிப்புமிக்க உலக அழகி பட்டத்தை ஜமைக்கா பல ஆண்டு கால இடைவெளிக்கு பிறகு இப்போது முதல்முறையாக வென்றுள்ளது. தீவு நாடான ஜமைக்காவின் லிசா ஹன்னா 1993 ஆம் ஆண்டில் உலக அழகி பட்டம் வென்றார்.
வரலாற்றில் முதல் முறையாக பிரிட்டன் மக்களவையில் 15 இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள்
  • பிரிட்டன் நாட்டில் நடந்த மக்களவை தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் போரிஸ் ஜான்சன் வெற்றி பெற்று பிரிட்டன் பிரதமரானார். 
  • பிரிட்டன் நாட்டில் ஆங்கிலேயர் மட்டுமின்றி பல நாட்டு மக்களும் வசித்து வருகின்றனர். இவர்களில் பலர் வெள்ளையர்கள் அல்லாதவர்கள் ஆவார்கள். இவர்களில் பலர் அந்நாட்டுக் குடியுரிமை பெற்று வாக்களிக்கும் உரிமை உடையவர்கள் ஆவார்கள்.
  • தற்போதைய தேர்தலில் 650 உறுப்பினர்களைக் கொண்ட புதிய அவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 65பேர் வெள்ளையர் அல்லாதவர்கள் ஆவார்கள். 
  • இதில் பதினைந்து இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர், இது நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையில் 10 சதவீதத்தைப் பிரதிபலிக்கிறது இது பிரிட்டன் நாடாளுமன்றத்தில் முதல் முறையாகும்.
  • இதற்கு முந்தைய அவையில் வெள்ளையர் அல்லாத பின்னணியில் இருந்து 52 உறுப்பினர்கள் இருந்தனர், தற்போதுதேர்வான 65 பேரில் இந்திய வம்சாவளியின் 15 உறுப்பினர்கள் தேர்வானார்கள். 
  • அங்குள்ள 1.5 மில்லியன் மக்கள் கொண்ட சமூகத்திற்கு ஒரு புதிய சாதனையாகும். இவர்களில் தொழிற்கட்சியைச் சேர்ந்த எட்டு பேரும் கன்சர்வேடிவ் கட்.சியைச் சேர்ந்த ஏழு பேரும் அடங்குவர். கடந்த அவையில் இந்திய வம்சாவளியினர் 12 பேர் இருந்தனர்.
  • தற்போது முதன்முறையாக ஆண்களை விட அதிகமான பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கடந்த 2009 தேர்தலில் இரு வெள்ளையர் அல்லாத பெண்கள் உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர் பத்து ஆண்டுகளில் 37 பெண் உறுப்பினர்கள் உள்ளனர்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel