Type Here to Get Search Results !

13th DECEMBER 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் 5 பேருக்கு 'தமிழ்ப் பேரவைச் செம்மல்' விருது
  • மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் 5 பேருக்கு 'தமிழ்ப் பேரவைச் செம்மல்' விருதுகளை குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் வழங்கினாா்.
இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி மதிப்பீடு குறைப்பு: மூடிஸ்
  • 2019-ஆம் ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 5.6 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது, 2018-ஆம் ஆண்டு ஜிடிபி வளா்ச்சியான 7.4 சதவீதத்துடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவான அளவாகும். இதற்கு, வேலைவாய்ப்பு வளா்ச்சி விகிதத்தில் காணப்படும் தொய்வு நுகா்வு நடவடிக்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்துவதே முக்கிய காரணம்.
  • இருப்பினும், பொருளாதார வளா்ச்சியானது 2020-ஆம் ஆண்டில் 6.6 சதவீதமாகவும், 2021-ஆம் ஆண்டில் 6.6 சதவீதமாகவும் இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இருப்பினும், முன்பை விட ஒப்பிடும்போது இதன் வளா்ச்சி வேகம் மிகவும் குறைவான அளவில்தான் காணப்படும்.
  • இந்தியாவின் பொருளாதார வளா்ச்சியானது 2018-ஆம் ஆண்டு நடுப்பகுதியிலிருந்து குறையத் தொடங்கியது. ஜிடிபியானது 8 சதவீதத்திலிருந்து 2019-ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் (ஏப்ரல்-ஜூன) 5 சதவீதமாக குறைந்து போனது. இது, ஜூலை-செப்டம்பா் காலாண்டில் மேலும் வலுவிழந்து 4.5 சதவீதமாக சரிந்தது என மூடிஸ் தெரிவித்துள்ளது.



பெண்கள் பாதுகாப்பிற்கு திஷா சட்டம்; ஆந்திராவில் நிறைவேற்றம்
  • ஆந்திர சட்டசபையில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை குறைப்பதற்கும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கும் அம்மாநில அரசு 2 புதிய சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
  • பெண்கள் மற்றும் குழந்தைகளை பாலியல் பிரச்னைகளிலிருந்து பாதுகாக்கவும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்குவது குறித்தும் ஆந்திர மாநில சட்டசபையில் 2 புதிய சட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. 
  • பெண்களுக்கு எதிரான குறிப்பிட்ட குற்றங்களில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்குவதையும், குற்றம் செய்த 21 நாட்களுக்குள் இதுபோன்ற வழக்குகளில் விசாரணையை விரைவுபடுத்துவதையும் இந்த சட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஆந்திர மாநில திஷா சட்டம் - பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குறிப்பிட்ட குற்றங்களுக்கான ஆந்திர சிறப்பு நீதிமன்றங்கள் 2019, மற்றும் ஆந்திர திஷா சட்டம் - குற்றவியல் சட்டம் (ஆந்திர திருத்தம்) 2019 ஆகிய இரண்டு மசோதாக்களை சட்டமன்றம் ஏகமனதாக நிறைவேற்றியது. முன்னதாக இந்த சட்டங்களை மாநில உள்துறை அமைச்சர் சுச்சாரிதா அறிமுகப்படுத்தினார்.
மத்திய நிதி அமைச்சக செயலாளராக தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி நியமனம்
  • தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சோமநாதன் மத்திய நிதி அமைச்சக செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிரதமர் அலுவலகத்தில் இணைச் செயலாளராக பணியமர்த்தப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி சோமநாதன் மத்திய அரசின்செலவினங்களை நிர்வகிக்கும் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • 1987 ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரியான சோமநாதன் தற்போது தமிழ்நாட்டில் பணியாற்றி வருகிறார். முன்னாள் மத்திய நிதி அமைச்சக செயலாளராக இருந்தகிரிஷ் சந்திர முர்மு அக்டோபரில் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் லெப்டினன்ட் கவர்னராக நியமிக்கப்பட்டார்.
  • இதேபோல், அமித் கரேவுக்கு பதிலாக ரவி மிட்டல் தகவல் மற்றும் ஒளிபரப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 
  • 1986 ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான ரவிமிட்டல், தற்போது நிதிச் சேவைத் துறையின் சிறப்புச் செயலாளராக உள்ளார். சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளஆர். சுப்ரமணியத்திற்கு பதிலாக, அமித் கரே இப்போது உயர்கல்வித் துறையின் செயலாளராக பணியாற்றுவார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel