Type Here to Get Search Results !

12th DECEMBER 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

சட்டமன்றங்களில் SC, ST இட ஒதுக்கீடு மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு
  • மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் உள்ள பட்டியல் இனத்தவர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்க அரசியலமைப்பு திருத்த மசோதாவை மாநிலங்களவை வியாழக்கிழமை நிறைவேற்றியது.
  • அரசியலமைப்பின் 334-வது பிரிவை மேலும் திருத்துவதற்கு உதவும் அரசியலமைப்பு (126-வது திருத்தம்) மசோதா, 2019 செவ்வாயன்று மக்களவையால் நிறைவேற்றப்பட்டது.
அமலுக்கு வந்தது குடியுரிமை சட்டத்திருத்த மசோதா 
  • மக்களவையிலும் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஒப்புதல்கோரி, குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டது. 
  • இதற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து, குடியுரிமை சட்டத்திருத்தம் உடனடியாக அமலுக்கு வருகிறது.



சமஸ்கிருத மத்திய பல்கலை. மசோதா நிறைவேற்றம்
  • இந்தியா முழுவதும் 40-க்கும் மேற்பட்ட மத்திய பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றன. அவற்றில் சில மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இயக்கி வருகிறது. 
  • இதற்கிடையே நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக இயங்கி வரும் மூன்று சமஸ்கிருதப் பல்கலை.களை மத்தியப் பல்கலைக்கழகங்களாக மாற்ற, கடந்த 4-ம் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
  • இதன்படி மூன்று சமஸ்கிருத நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களை மத்திய பல்கலை.களாக மாற்றுவதற்கான மசோதா 2019-ஐ, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் லோக்சபாவில் தாக்கல் செய்தார். இந்த மசோதா நிறைவேற்றப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உலகத் தமிழிசை மாநாடு மதுரையில் நாளை தொடக்கம்: 50 நாடுகளைச் சோந்த இசைக் கலைஞா்கள் பங்கேற்பு
  • தமிழிசையின் தொன்மங்களை மீட்டெடுக்கும் வகையில் உலகத் தமிழிசை மாநாடு 100 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெறவுள்ளது.
  • சென்னையில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாட்டில் அமெரிக்கா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூா், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மோரீஷஸ், சீனா, ஹாங்காங், இந்தியா உள்பட 50 நாடுகளிலிருந்து தமிழிசைக் கலைஞா்கள் பங்கேற்றுத் தமிழிசை நடன நிகழ்ச்சிகளையும் பண்ணிசை நிகழ்ச்சியினையும் நிகழ்த்த உள்ளனா்.
சேப்பாக்கம் மைதானத்துக்கான குத்தகையை 21 ஆண்டுகள் நீட்டிப்பு
  • சேப்பாக்கம் மைதானத்துக்கான குத்தகையை 21 ஆண்டுகள் நீட்டித்து தந்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்னர். தமிழக அரசுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் ரூபா குருநாத், செயலாளர் ராமசாமி நன்றி தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel