Type Here to Get Search Results !

11th DECEMBER 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

மக்களவையை அடுத்து மாநிலங்களைவையிலும் குடியுரிமை சட்டதிருத்தம் வெற்றி
  • மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்ட மசோதா கடந்த திங்களன்று மக்களவையில் வெற்றிகரமாக நிறைவேறியது. இந்த மசோதாவிற்கு 300 எம்பிக்களுக்கு மேல் ஆதரவும் 80 எம்பிக்கள் மட்டும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து இந்த மசோதா மக்களவையில் வெற்றிகரமாக நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது
  • மக்களவையில் வெற்றிகரமாக நிறைவேறிய இந்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி இந்த மசோதாவுக்கு ஆதரவாக 117 வாக்குகளும் எதிர்த்து 92 வாக்குகள் பதிவானது. இதனை அடுத்து இந்த மசோதா மாநிலங்களவையிலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதுகுடியுரிமை சட்டத் திருத்த 
  • மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளிலும் வெற்றி பெற்றதை அடுத்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் என்றும் அவரது ஒப்புதல் கிடைத்த பின்னர் இந்த சட்டம் அமலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
இசைக் கலைஞா்கள் இருவருக்கு விஸ்வ கலா புரஸ்காா் விருது
  • விஸ்வ கலா சங்கம் சாா்பில் சிறந்த இசைக் கலைஞா்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, இந்த ஆண்டு கா்நாடக இசைக் கலைஞா் நெய்வேலி சந்தானகோபாலன் மற்றும் புல்லாங்குழல் இசைக் கலைஞா் ரோனு மஜும்தாா் ஆகிய இருவரும் 'விஸ்வ கலா புரஸ்காா்-2019' விருதுக்குத் தோந்தெடுக்கப்பட்டனா்.
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி., 50-வது ராக்கெட்
  • 'இஸ்ரோ' எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், பி.எஸ்.எல்.வி., -- சி 48 ராக்கெட் உதவியுடன், 10 செயற்கைக் கோள்களை, வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தியது.
  • இஸ்ரோ நிறுவனம், நாட்டின் தகவல் தொடர்பு, பாதுகாப்பு, இயற்கை வளங்களை கண்டறிதல் உள்ளிட்ட ஆய்வுகளுக்காக, பி.எஸ்.எல்.வி., -- ஜி.எஸ்.எல்.வி., வகை ராக்கெட்கள் உதவியுடன், செயற்கைக் கோள்களை, விண்ணில் செலுத்தி வருகிறது. 
  • தற்போது, நாட்டின் எல்லை பாதுகாப்பு, விவசாயம், காடுகளை பாதுகாத்தல், பேரிடர் முன்னெச்சரிக்கை ஆகியவற்றுக்கு பயன்படுத்த, 'ரிசாட் - 2 பி.ஆர்., 1' என்ற அதிநவீன செயற்கைக் கோளை வடிவமைத்துள்ளது.
  • இதை சுமந்தபடி, பி.எஸ்.எல்.வி., வகையில், 50வது ராக்கெட்டான, பி.எஸ்.எல்.வி., -- சி 48 ராக்கெட், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின், முதலாவது ஏவுதளத்தில் இருந்து, நேற்று பிற்பகல், 3:25 மணிக்கு விண்ணில் பாய்ந்தது. 
  • அந்த ராக்கெட்டில், வணிக ரீதியாக, அமெரிக்காவின் ஆறு; இஸ்ரேல், இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகளின் தலா ஒன்று என, ஒன்பது செயற்கைக் கோள்களும் அனுப்பப்பட்டன. 
  • ராக்கெட் புறப்பட்ட, 16 நிமிடம், 33வது வினாடியில், ரிசாட் செயற்கைக் கோள், 576 கி.மீ., உயரம் உள்ள, புவி சுற்றுவட்ட பாதையில், வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது.
  • தொடர்ந்து, அமெரிக்கா உள்ளிட்ட மற்ற நாடுகளின், செயற்கைக் கோள்களும் தனித்தனியாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டன.ரிசாட் செயற்கைக் கோள், ஐந்து ஆண்டுகள் விண்ணில் இருந்தபடி, நாட்டின் எல்லை உள்ளிட்ட பகுதிகளை, துல்லியமாக புகைப்படங்கள் எடுத்து, இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்துக்கு அனுப்பும்.



மருமகளுக்கும் தண்டனை; மசோதா தாக்கல்
  • வயதான மாமனார், மாமியாரை பராமரிக்காத, மருமகன், மருமகளுக்கு தண்டனை விதிக்கும் வகையில், பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் மற்றும் பராமரிப்பு சட்டத்தில், திருத்தம் செய்யப்பட்டுள்ளது. 
  • இந்த மசோதாவுக்கு, மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இந்நிலையில் இந்த மசோதா லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது.
பொருளாதார வளர்ச்சி 5.1% தான் சாத்தியம் : ஆசிய வளர்ச்சி வங்கி கணிப்பு
  • நடப்பு நிதியாண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை, 6.5 சதவீதத்தில் இருந்து 5.1 சதவீதமாக ஆசிய வளர்ச்சி வங்கி குறைத்துள்ளது. இந்திய பொருளாதாரம் அதல பாதாளத்தை நோக்கி சென்று விட்டது. 
  • பொருளாதார வளர்ச்சி குறியீடாக கருதப்படும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) நடப்பு நிதியாண்டில் 6.1 சதவீதமாக இருக்கும் என கடந்த அக்டோபரில் ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது. 
  • ஆனால், இதை மேலும் குறைத்து 5 சதவீதமாக நிர்ணயித்துள்ளது. கடந்த செப்டம்பர் காலாண்டில் 6 ஆண்டுகளில் இல்லாத சரிவாக பொருளாதார வளர்ச்சி 4.5 சதவீதமாக குறைந்துள்ளது.
சௌதி அரம்கோ நிறுவனம்: பங்குச்சந்தை வரலாற்றில் சாதனை படைத்தது
  • சௌதி அரேபிய அரசுக்கு சொந்தமான உலகின் மிகப் பெரிய எண்ணெய் உற்பத்தி நிறுவனமான சௌதி அரம்கோ, சமீபத்தில் தனது நிறுவனத்தின் பங்குகளை முதல் முறையாக விற்பனை செய்தது. 
  • சௌதி அரம்கோ நிறுவனத்தின் பங்குகள் அந்நாட்டு பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு வணிகத்துக்கு வந்தபோது, 25.6 பில்லியன் டாலர்களை திரட்டி அந்நிறுவனம் பெரும் சாதனை படைத்துள்ளது.



2019 ஆம் ஆண்டின் சிறந்த நபராக தேர்வு 
  • பருவநிலை மாற்றம் தொடர்பான போராட்டங்களில் முன்னிலை வகித்த போராடிய ஸ்வீடன் நாட்டு பள்ளி மாணவியான கிரெட்டா துன்பெர்க் 2019 ஆம் ஆண்டிற்கான சிறந்த நபராக 'டைம்' பத்திரிகையால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • 1927ம் ஆண்டில் இருந்து டைம் பத்திரிக்கையின் வரலாற்றில் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவட்டர்களில் 16 வயதுடைய கிரேட்டா துன்பெர்க் தான் மிகவும் இளையவர்.
  • கடந்த ஆண்டு ஸ்வீடன் நாட்டு நாடாளுமன்றத்திற்கு வெளியே வகுப்புகளை புறக்கணித்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பருவநிலை மாற்றத்திற்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது தான் உலகளவில் #FridaysForFuture என்ற ஹாஷ்டெக் மிகவும் பிரபலமானது.
  • அந்த போராட்டத்தில் மில்லியன் கணக்கான மாணவர்கள் பங்கேற்பதற்கு கிரேட்டா முக்கிய உந்துதலாக திகழ்ந்தார். இந்த ஆண்டின் துவக்கத்தில் அமைதிக்கான நோபல் பரிசுக்கும் கிரேட்டா பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
  • கடந்த செப்டம்பர் மாதம், நியூயார்க்கில் நடந்த ஐ.நா வின் பருவநிலை மாற்றத்திற்கான மாநாட்டில், தேசிய அளவிலான அரசியல் தலைவர்களை குற்றம் சாட்டி பேசினார்
விண்டீஸ் அணிக்கு எதிரான  'டுவென்டி-20 கோப்பை வென்றது இந்தியா
  • விண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 'டுவென்டி-20' தொடரை 2-1 என கைப்பற்றியது. ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், கோஹ்லி அரைசதம் விளாசினர்.
  • 'டுவென்டி-20' தொடரில் அதிக ரன் எடுத்த வீரர்கள் இந்தியாவின் கோஹ்லி (183) முதலிடம் பிடித்து, தொடர் நாயகன் ஆனார். இந்தியாவின் ராகுல் (164), விண்டீசின் ஹெட்மயர் (120) அடுத்த இரு இடங்களில் உள்ளனர்.
  • இரு அணிகள் மோதிய 'டுவென்டி-20' தொடரில், இந்தியா நேற்று நான்காவது முறையாக (2011, 2018, 2019ல் 2) கோப்பை வென்றது. விண்டீஸ் அணி இரு முறை (2016, 2017) வென்றது.
  • நேற்று 70 ரன்கள் எடுத்த கோஹ்லி, சர்வதேச அரங்கில் மூன்று வித கிரிக்கெட்டில் 100வது அரைசதம் அடித்தார். இவர் டெஸ்டில் 22, ஒருநாள் அரங்கில் 54, 'டுவென்டி-20'ல் 24 அரைசதங்கள் எடுத்துள்ளார்.
  • இதில் கேப்டனாக 39 அரைசதம், சொந்தமண்ணில் 39 அரைசதம் விளாசினார்.
  • 'டுவென்டி-20'ல் இந்திய அணியில் இரண்டு துவக்க வீரர்களும் அரைசதம் எட்டியது 5வது முறையாக நேற்று நடந்தது. ரோகித் 71, ராகுல் 91 ரன்கள் எடுத்தனர்.
400 சிக்சர் விளாசினார் 'ஹிட் மேன்' ரோகித்
  • சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 400 சிக்சர் அடித்த முதல் இந்தியர் ஆனார் ரோகித் சர்மா. இந்த மைல்கல்லை எட்டிய முதல் இந்தியர் ஆனார். தோனி (359) அடுத்த இடத்தில் உள்ளார்.
  • சர்வதேச அளவில் 400 சிக்சர் அடித்த மூன்றாவது வீரர் என்ற பெருமை ரோகித்துக்கு கிடைத்தது. முதல் இரு இடங்களில் விண்டீஸ் வீரர் கெய்ல் (534), பாகிஸ்தானின் அப்ரிதி (476) உள்ளனர்.
  • தவிர சர்வதேச 'டுவென்டி-20' அரங்கில் அதிக சிக்சர் அடித்த வீரர்களில் ரோகித் (116) முதலிடத்தில் தொடர்கிறார். நியூசிலாந்தின் கப்டில் (113), விண்டீசின் கெய்ல் (105) அடுத்த இரு இடங்களில் உள்ளனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel