எழுத்தாளா் சோ.தா்மனுக்கு சாகித்திய அகாதெமி விருது
- சாகித்ய அகாதெமி 23 மொழிகளுக்கான விருதை புதன்கிழமை அறிவித்தது. இதில், ஏழு கவிதைப் புத்தகங்கள், நான்கு நாவல்கள், ஆறு சிறுகதைத் தொகுப்புகளும், மூன்று கட்டுரைத் தொகுப்பு, அபுனைவு, சுயசரிதை, வாழ்க்கை வரலாறு ஆகியவற்றுக்கு தலா ஒரு புத்தகங்களுக்கு விருது கிடைத்துள்ளது.
- விருது பெற்றவா்களுக்கு பட்டயம், சால்வையுடன் ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசும் வழங்கப்படும். தில்லியில் 2020, பிப்ரவரி 25-ஆம் தேதி நடைபெறவுள்ள விழாவில் இந்த விருது வழங்கப்படவுள்ளது.
- 23 மொழிகளைச் சோந்த சாகித்ய அகாதெமியின் நடுவா் குழு விருதுக்கானவா்களைத் தோந்தெடுத்தது
- இந்த ஆண்டுக்கான விருது தமிழில், எழுத்தாளர் சோ.தர்மனுக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழில் சூல் என்ற நாவலுக்காக சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
- சோ.தர்மராஜ் என்ற இயற்பெயர் கொண்ட இவர், சோ.தர்மன் என்ற பெயரில் எழுதுகிறார். இவர் கோவில்பட்டி அருகே உள்ள உருளைகுடி பகுதியைச் சார்ந்தவர். ஈரம், தூர்வை, சோகவனம் உள்ளிட்ட 7 நூல்களை சோ.தர்மன் எழுதியுள்ளார்.
- ஏற்கனவே 'கூகை' என்ற நாவலுக்காகத் தமிழக அரசின் விருதை தர்மன் பெற்றிருக்கிறார்.
- அசாமிய மொழி ஜோயஸ்ரீ கோஸ்வாமி மகந்தா
- வங்க மொழி சின்மோய் குகா
- போடோ புகான் பாசுமதரி
- டோக்ரி ஓம் சர்மா ஜந்தாரி
- ஆங்கிலம் சசி தரூர்
- குஜராத்தி ரதிலால் பொன்சாகர்
- இந்தி நந்த் கிஷோர் ஆசார்யா
- கன்னடம் விஜயா
- காஷ்மீரி அப்துல் அகத் ஹஜினி
- கொங்கணி நிபா ஏ காண்டேகர்
- மைதிலி குமார் மனிஷ் அரவிந்த்
- மலையாளம் மதுசூதன்நாயர்
- மணிப்புரி பிர்மங்கோல் சிங்
- மராத்தி அனுராதா பாடில்
- ஒரியா தருன் காந்தி மிஷ்ரா
- பஞ்சாபி கிர்பால் கஸக்
- ராஜஸ்தானி ராம்ஸ்வரூப் கிசான்
- சமஸ்கிருதம் பென்னா மதுசூதன்
- சந்தாலி காளிச்ரண் ஹெம்பரம்
- சிந்தி ஈஸ்வ்ர் மூர்ஜானி
- தமிழ் சோ தர்மன்
- தெலுங்கு பண்டி நாராயணசாமி
- உருது ஷஃபி குத்வாய்
சந்திராயன் -3 திட்ட இயக்குனராக வீர முத்துவேல் நியமனம்
- சந்திரயான் 3 திட்டத்திற்கான பணிகள் நடைபெறுவதாக கூறப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கான திட்ட இயக்குநராக வீரமுத்து வேல் நியமிக்கப்பட்டுள்ளதாவும், அவரது தலைமையிலான குழு சந்திரயான் 3 பணிகளை முன்னெடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
- சந்திரயான் 3 திட்டத்தின் மூலம் நிலாவின் ஆய்வு கலத்தை தரையிறக்கி ஆய்வுகளை மேற்கொள்ள இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. மேலும் சந்திரயான் -2 திட்டத்தில் நிகழ்ந்த தவறுகளை சரி செய்து, சந்திரயான்3 திட்டத்தை வெற்றிகரமாக முடிக்கவும் இஸ்ரோ உறுதி பூண்டுள்ளது.
சேலம் ரயில்வே கோட்டத்துக்கு தேசிய எரிசக்தி பாதுகாப்பு விருது
- புது தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எரிசக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க மரபுசாரா அமைச்சா் ஆா்.கே.சிங் இந்த விருதை வழங்க, சேலம் ரயில்வே கோட்ட முதுநிலை மின் பொறியாளா் அரவிந்தன் விருதை பெற்றாா்.
- சேலம் ரயில்வே கோட்டம் மின் பிரிவில், மூன்று தேசிய எரிசக்தி பாதுகாப்பு விருதானது, எரிசக்தி ஆற்றல் முகமை சாா்பில் வழங்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே தலைமையகம் போக்குவரத்து துறை, மண்டல ரயில்வே பிரிவின் கீழ் தகுதிச் சான்றிதழைப் பெற்றது. பள்ளிகள் பிரிவில் ஈரோடு ரயில்வே பள்ளி முதலிடத்தையும், போத்தனூா் ரயில்வே பள்ளி தகுதிச் சான்றிதழும் பெற்றுள்ளது.
டாடா நிறுவன தலைவராக சைரஸ் மிஸ்திரி மீண்டும் நியமிக்க தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு
- டாடா நிறுவன தலைவராக சந்திரசேகரன் நியமிக்கப்பட்டது சட்டவிரோதம் என கூறியுள்ள தீர்ப்பாயம், சைரஸ் மிஸ்திரியை மீண்டும் டாடா நிறுவன தலைவராக நியமிக்க அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
- உப்பு முதல் சாப்ட்வேர் தொழில் வரை ஈடுபட்டுள்ள டாடா நிறுவனத்தின் 6வது தலைவராக சைரஸ் மிஸ்திரி கடந்த 2012ம் ஆண்டு பொறுப்பேற்றார்.
- கடந்த 2016ம் ஆண்டு அவர் நீக்கப்பட்டு, சந்திரசேகரன் நியமிக்கப்பட்டார். டாடா சன்ஸ் நிறுவனத்தில் சைரஸ் மிஸ்திரி குடும்பத்துக்கு 18.4 சதவீத பங்குகள் உள்ளன.
- இந்நிலையில் தான் நீக்கப்பட்டதற்கு எதிராக தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயம்(என்சிஎல்டி)யில் சைரஸ் மிஸ்திரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை தீர்ப்பாயம் கடந்த 2017ம் ஆண்டு நிராகரித்தது. இதை எதிர்த்து மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் சைரஸ் மிஸ்திரி மனு செய்தார்.
- இதை விசாரித்து வந்த நீதிபதி எஸ்.ஜே.முகபாத்யாய் தலைமையிலான இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு நேற்று தனது தீர்ப்பை வழங்கியது. அதில் டாடா நிறுவன தலைவராக சந்திரசேகரன் நியமிக்கப்பட்டது சட்ட விரோதம் என்றும், சைரஸ் மிஸ்திரியை ஒரு மாதத்துக்கும் மீண்டும் தலைவராக நியமிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
- பொது நிறுவனமாக இருந்ததை தனியார் நிறுவனமாக டாடா சன்ஸ் மாற்றியது சட்டத்துக்கு விரோதமானது என்றும் தீர்ப்பில் நீதிபதிகள் தெரித்தனர். இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய டாடா நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியா வந்தார் போர்ச்சுகல் பிரதமர்
- போர்ச்சுகல் பிரதமர் அண்டோனியா கோஸ்டா இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்தார். டில்லி விமான நிலையத்தில் அவருக்கு அதிகாரிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
- மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் விழா, இந்த ஆண்டு கொண்டாடப்பட்ட நிலையில், மத்திய சிறப்பு குழு ஏற்பாடு செய்துள்ள 2ம் கட்ட சந்திப்பில், அவர் இன்று(டிச.,19) கலந்து கொள்ள உள்ளார். பிரதமர் மோடியையும் அவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
அனைத்து லாட்டரிகளுக்கும் 28 சதவீத ஜி.எஸ்.டி
- டெல்லியில், ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அரசு லாட்டரி, தனியார் லாட்டரி என அனைத்து வகை லாட்டரிகளுக்கும் அதிகபட்ச வரிவிகிதமான 28 சதவீத வரி விதிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இந்த புதிய வரிவிகிதம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து அமலுக்கு வருகிறது.
- நெய்யப்பட்ட பை மற்றும் நெய்யப்படாத பைகளுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி. வசூலிக்க முடிவு செய்யப்பட்டது. மவ்லும் தொழிற்பூங்கா அமைக்க வசதியாக தொழிற்சாலை மனைகளுக்கான நீண்டகால குத்தகைக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்க முடிவு எடுக்கப்பட்டது
அறிவியல் ஆய்வில், இந்தியாவுக்கு 3வது இடம்
- உலகளவில், அறிவியல் மற்றும் பொறியியல் ஆய்வறிக்கைகளை வெளியிடுவதில், இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. கடந்த, 2018ல், இந்தியா,1.35 லட்சம் அறிவியல்கட்டுரைகளை வெளியிட்டுள்ளது. சீனா, 5.28 லட்சம்ஆய்வறிக்கைகளுடன், முதலிடத்தை பிடித்துள்ளது.
- இரண்டாவது இடத்தில் உள்ள அமெரிக்கா, 4.22 லட்சம் அறிவியல் ஆய்வறிக்கைகளை வெளியிட்டுள்ளது. 'கடந்த, 2008ல், உலகளில், 17,55 லட்சம் அறிவியல் ஆய்வறிக்கைகள் வெளியிடப்பட்டன. இது, 2018ல், 25.55 லட்சமாக உயர்ந்துள்ளது' என, அமெரிக்க தேசிய அறிவியல் அமைப்பு தெரிவித்துள்ளது.
இரண்டாவது முறையாக ஹாட்ரிக் விக்கெட் வரலாற்று சாதனை படைத்த குல்தீப் யாதவ்
- இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஹட்ரிக் விக்கெட் எடுத்து சாதனை படைத்துள்ளார்.
- இந்த போட்டியின் 33வது ஓவரை வீசிய குல்தீப் யாதவ், மேற்கிந்திய வீரர்கள் ஹோப், ஹோல்டர், அல்சாரி ஜோசப் ஆகியோரை அடுத்தடுத்து அவுட்டாக்கி ஹட்ரிக் எடுத்தார்.
- சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 2 முறை ஹட்ரிக் விக்கெட் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை குல்தீப் யாதவ் படைத்துள்ளார்.