Type Here to Get Search Results !

9th NOVEMBER 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அனுமதி
  • பாபர் மசூதி சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்துக்கு 3 தரப்பு உரிமை கோரியது. சன்னு வபு வாரியம், நிர்மோஹி அஹாரா , ராம் லல்லா அமைப்புகள் அலஹாபாத் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இதனைத் தொடர்ந்து இம்மூன்று அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் கடந்த 2010 ஆம் ஆண்டில் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
  • இடத்தை சரிசமமாக பிரித்துக் கொள்ளலாமென அளித்த நீதிமன்றத்தி இந்த தீர்பை எதிர்த்து மூன்று அமைப்புகளும் உச்ச நீதிமன்றத்தில் 14 மேல் முறையீடு மனுக்களைத் தாக்கல் செய்தனர். நீண்ட காலமாக நீடித்து வரும் இந்த வழக்கை முடிக்க மூன்று பேர் கொண்ட சமரச குழு அமைக்கப்பட்டும் தீர்வுகள் எட்டப்படவில்லை.
  • இதனையடுத்து , இன்று இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கூறப்பட்டு வருவதாவது, சர்ச்சைக்குரிய இடம் இரு மதத்தினராலும் தங்கள் நம்பிக்கையை வெளிபடுத்தக்கூடிய இடமாக இருந்துள்ளது. அயோத்தி தங்கள் இடம் என இந்துக்கள் நம்புவதைபோல் இஸ்லாமியர்களும் பாபர் மசூதியை நம்புகின்றனர்.
  • சர்ச்சைக்குரிய இடத்தில் இந்துக்களை தவிர்த்துவிட்டு இஸ்லாமியர்கள் மட்டுமே வழிபாடு செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்கள் இல்லை. அகழாய்வில் கண்டறியப்பட்ட கட்டுமானங்களில் அங்கு இந்து கோயில் இருந்தது என உச்சநீதிமன்றமே கூறினாலும் அதை மட்டுமே வைத்து முடிவெடுத்துவிட முடியாது.
  • அதேபோல கடந்த 2010 ஆம் ஆண்டு அலகாபாத் நீதிமன்றம் அயோத்தி நிலத்தை மூன்றாக பிரித்து கொடுத்தது தவறு என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மேலும் நிலத்துக்கு உரிமை கோரிய நிர்மோஹி அமைப்பின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
  • இதனைத்தொடர்ந்து, நிலத்தின் முற்றத்தை இந்துக்கள் தங்கள் வசம் வைத்திருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. அயோத்தி நிலம் ராம்லல்லா அமைப்பிற்கே சொந்தம். சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் எனவும் அயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம் எனவும் உச்சநீதிமன்றம் ஹிந்துக்களுக்கு ஆதரவாக தீர்ப்பு அளித்துள்ளது.
இந்திய நீதித்துறை வரலாற்றில் நீண்ட நாட்கள் விசாரிக்கப்பட்ட வழக்குகள் அயோத்திக்கு 2வது இடம்
  • உச்ச நீதிமன்ற வரலாற்றில் நீண்ட நாட்கள் விசாரிக்கப்பட்ட இரண்டாவது வழக்கு என்ற பெயரை அயோத்தி வழக்கு பெற்றுள்ளது. முதல் இடத்தை கேசவானந்த பாரதி நிலச் சீர்திருத்த சட்டத்திற்கு எதிராக தொடர்ந்த வழக்கு விளங்குகிறது.
  • உச்ச நீதிமன்றம் 1950ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இந்த 69 ஆண்டுகளில் பல வழக்குகளை உச்ச நீதிமன்றம் விசாரித்துள்ளது. இந்நிலையில் 1970களில் நிலச் சீர்திருத்த சட்டத்தின் கீழ் கேரளாவில் எதனீர் மடத்தின் சொத்துகள் முடக்கப்பட்டன. இந்நிலையில் நிலச் சீர்திருத்த சட்டத்திற்கு எதிராக பீடாதிபதி கேசவானந்த பாரதி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
  • 1973ம் ஆண்டு நடந்த இந்த வழக்கு தான் இந்திய நீதித்துறை வரலாற்றிலேயே அதிக நாட்கள் நடைபெற்ற வழக்கு ஆகும். இந்த வழக்கை விசாரித்த அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சிக்ரி 13 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வை ஏற்படுத்தினார். நிலச்சீர்திருத்த சட்டத்திற்கு எதிராக இந்த அமர்வு 68 நாட்கள் விசாரித்து தீர்ப்பு வழங்கியது.
  • அதன் பிறகு, 2018ஆம் ஆண்டு ஆதார் வழக்கு அதிக நாட்கள் விசாரணை நடந்தது. நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு ஆதார் கட்டாயம் என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு எதிரான வழக்கு, தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு 38 நாட்கள் விசாரித்தது.
  • அதன்பிற்கு தற்போது அயோத்தி வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அடங்கிய ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு 40 நாட்கள் விசாரித்து தீர்ப்பு வழங்கி இருக்கிறது. இந்த அயோத்தி வழக்கு, இந்திய நீதித்துறை வரலாற்றில் அதிக நாட்கள் விசாரணை நடைபெற்ற 2ஆவது பெரிய வழக்கு ஆகும்.
சீக்கிய யாத்ரீகர்களுக்காக கர்தார்பூர் சிறப்பு பாதை பாக்., பிரதமர் இம்ரான் கானுக்கு பிரதமர் மோடி நன்றி
  • சீக்கியர்களின் மதகுருவான, குருநானக்கின், 550வது பிறந்த நாள், வரும், 12ல் கொண்டாடப்பட உள்ளது. அண்டை நாடான பாக்.,கின் கர்தார்பூரில், குருநானக் தன் இறுதி காலத்தை கழித்தார். 
  • அங்கு, அவருடைய உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தில், தர்பார் சாஹிப் குருத்வாரா அமைந்துள்ளது.பயணம்இந்த குருத்வாராவுக்கு, இந்தியாவில் இருந்து சீக்கிய யாத்ரீகர்கள் பயணம் மேற்கொண்டு வந்தனர். 
  • இந்நிலையில், இந்தியாவின், பஞ்சாப் மாநிலத்திலிருக்கும் குர்தாஸ்பூரில் உள்ள தேரா பாபா நானக் குருத்வாராவில் இருந்து, கர்தார்பூர் செல்வதற்கு, சிறப்பு பாதை அமைப்பது தொடர்பாக பேசப்பட்டு வந்தது.அதன்படி, பஞ்சாபில் உள்ள குருத்வாராவில் இருந்து, எல்லை வரை, நம் அரசு சிறப்பு பாதை அமைத்தது. 
  • அதேபோல, பாக்., அரசு, அந்நாட்டின் எல்லையில் இருந்து, கர்தார்பூர் குருத்வாராவுக்கு, பாதை அமைத்தது.இந்த பாதை வழியாக சீக்கியர்கள் யாத்திரை மேற்கொள்ள, இரு நாடுகளும், சமீபத்தில் ஒப்பந்தம் செய்தன. 
  • அதன்படி, ஒரு நாளைக்கு, 5,000 பேர் அனுமதிக்கப்படுவர்; சிறப்பு நாட்களில், அதிகமானோர் அனுமதிக்கப்படுவர்.இந்த சிறப்பு பாதையை, குர்தாஸ்பூரில் நடந்த நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து, முதல் குழு, தன் பயணத்தை நேற்று துவக்கியது.
  • இந்திய மக்களின் மத உணர்வுகளை புரிந்து கொண்டு, இந்த பாதையை அமைக்க பாக்., அரசு அனுமதி அளித்தது. இதற்காக, பாக்., பிரதமர் இம்ரான் கானுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.



1 லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி மத்திய அரசு முடிவு
  • விலை உயர்வை கட்டுக்குள் கொண்டுவர 1 லட்சம் டன் வெங்காயத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வரத்து குறைவு காரணமாக, வெங்காயத்தின் விலை கடந்த ஒரு மாதமாக கடுமையாக உயர்ந்துள்ளது. 
  • விலையை கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில், வெளிநாடுகளில் இருந்து 1 லட்சம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய உணவு, நுகர்வோர் பாதுகாப்பு துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். 
  • இறக்குமதியாகும் வெங்காயம் உள்ளூர் சந்தையில் வரும் 15ம் தேதி முதல் டிசம்பர் 15க்குள் சப்ளை செய்யப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஹா.,வில் பா.ஜ., ஆட்சி; கவர்னர் அழைப்பு
  • மஹாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க பட்னாவிஸ்க்கு, அம்மாநில கவர்னர் அழைப்பு விடுத்துள்ளார். நவ.,11ம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் எனவும், அவர் பா.ஜ.,வுக்கு கெடு விதித்துள்ளார்.
  • மஹாராஷ்டிராவில், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., - சிவசேனா கூட்டணி அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றும், முதல்வர் பதவி யாருக்கு என்பதில், கடந்த இரு வாரங்களாக இழுபறி நீடித்தது. 
  • சட்டசபையின் பதவிக்காலம் நவ.,9 முடிவடையும் நிலையில், தேவேந்திர பட்னவிஸ், நேற்று, தன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, மஹாராஷ்டிராவில், ஜனாதிபதி ஆட்சி அமையும் சூழல் உருவாகி இருந்தது.
  • இந்நிலையில் திடீர் திருப்பமாக, தனிப்பெரும் கட்சி என்ற முறையில், பா.ஜ.,வின் தேவேந்திர பட்னாவிஸ்ஸை ஆட்சி அமைக்க, கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி அழைப்பு விடுத்துள்ளார். 
  • மேலும் நவ., 11ம் தேதிக்குள் சட்டசபையில், தங்கள் பெரும்பான்மையை பா.ஜ., நிரூபிக்க வேண்டும் எனவும் அவர் கெடு விதித்துள்ளார். மஹாராஷ்டிர சட்டசபையில், மொத்தமுள்ள 288 இடங்களில், 105 இடங்களை பா.ஜ., கைபற்றியது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel