ஓ.பி.எஸ்.,சுக்கு தங்க தமிழ் மகன் விருது
- அமெரிக்கா சென்றுள்ள, தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு, தங்க தமிழ்மகன் விருது வழங்கப் பட்டது. துணை முதல்வர் பன்னீர்செல்வம், 10 நாட்கள் அரசு முறை பயணமாக, அமெரிக்கா சென்றுஉள்ளார்.
- பத்தாவது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு சிறப்பாக முடிந்ததற்கான பாராட்டு விழா, சிகாகோ நகரில் நேற்று நடந்தது. இந்த விழாவில், துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை கவுரவிக்கும் வகையில், அவருக்கு, தங்க தமிழ்மகன் விருது வழங்கப்பட்டது.
உலகின் உயரமான சிவலிங்கம் திறப்பு
- தமிழக கேரள எல்லை பகுதியில் உள்ள சிவ பார்வதிகோவிலில் உலகின் உயரமான சிவலிங்கம் பொதுமக்கள் வழிபாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.
- கேரளாவின் திருவனந்தபுரம் அருகே செங்கல் பகுதியில் மகேஸ்வரம் சிவ பார்வதி கோவில் அமைந்துள்ளது. இக்கோயில் நிர்வாகம் கடந்த 2012ல் மிகப்பெரிய சிவலிங்கம் அமைக்க முடிவு செய்தது.
- அதன்படி தற்போது ரூ. 10 கோடி மதிப்பீட்டில் சிவலிங்கம் கட்டப்பட்டுள்ளது. சிவலிங்கத்தின் மொத்த உயரம் 111.2 அடி. இந்த சிவலிங்கம் எட்டு அடுக்குகளாக அமைக்கப்பட்டுள்ளது.
- ஒவ்வொரு அடுக்கிலும் தியான மண்டபங்களும் சிவலிங்கத்தின் உள்ளே குகைக்குள் செல்வது போன்றும் கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு தளத்திலும் கடவுள் சிலைகளும் அகத்தியர் பரசுராமர் சிலைகளும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
- தரைதளத்தில் பக்தர்கள் வழிபட சிவலிங்க சிலையும். எட்டாவதுஅடுக்கில் கைலாய மலையில் சிவன் பார்வதி தியானம் செய்வது போன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இது இந்தியா புக் ஆப் ரிக்கார்டு மற்றும் ஆசியா புக் ஆப் ரிக்கார்டில் இடம் பிடித்துள்ளது.
மஹா., ஆட்சி ; சிவசேனாவுக்கு அழைப்பு
- 'மஹாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க மாட்டோம்' என,பா.ஜ., தலைவர்கள் அறிவித்ததை அடுத்து, ஆட்சி அமைக்க வரும்படி, சிவசேனாவுக்கு, கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி, நேற்று அழைப்பு விடுத்தார்.
- அதே நேரத்தில், 'எங்களின் ஆதரவு வேண்டுமானால், தே.ஜ., கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டும்' என, சிவசேனாவுக்கு, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் அதிரடி நிபந்தனை விதித்துள்ளது.
அரியவகை சிலந்திக்கு 'மரேங்கோ சச்சின் டெண்டுல்கர்' என பெயர்
- துருவ் பிரஜாபதி என அடையாளம் காணப்பட்ட அகமதாபாத் சூழலியல் நிபுணர், இரண்டு புதிய வகை சிலந்தியைக் கண்டுபிடித்தார். அவரது கண்டுபிடிப்பு சூழலியல் துறையில் சிறந்தது என்று கூறப்படும் இடத்தில், அனைவரையும் பேச வைக்கும் உயிரினங்களின் பெயர் அது. பிரஜாபதி சிலந்திக்கு 'மரேங்கோ சச்சின் டெண்டுல்கர்' மற்றும் 'இன்னோமரெங்கோ சவரபதேரா' என்று பெயரிட்டார்.
- உலகெங்கிலும் உள்ள பலரைப் போலவே சச்சினும் மக்களின் விருப்பமான கிரிக்கெட் வீரர் ஆவார். அவரது ஆய்வின் முடிவுகள் ஆர்த்ரோபோடா செலக்டா என்ற ரஷ்ய இதழில் வெளியிடப்பட்டுள்ளன.
- பிரஜாபதி குஜராத் சுற்றுச்சூழல் கல்வி மற்றும் ஆராய்ச்சி (GEER) அறக்கட்டளையின் இளைய ஆராய்ச்சியாளர் ஆவார். அவர் ஸ்பைடர் வகைபிரிப்பில் PhD படித்து வருகிறார்.
- இரண்டு புதிய இனங்கள் ஆசிய ஜம்பிங் சிலந்திகளின் இந்தோமரெங்கோ மற்றும் மரேங்கோ இனத்தைச் சேர்ந்தவை. கேரளா, தமிழ்நாடு மற்றும் குஜராத்தில் 'மரேங்கோ சச்சின் டெண்டுல்கர்' கண்டுபிடிக்கப்பட்டது, அங்கு கேரளாவில் 'இன்னோமரெங்கோ சவரபதேரா' கண்டுபிடிக்கப்பட்டது.
மக்கள் போராட்டத்துக்கு அடி பணிந்து பதவி விலகிய பொலிவியா அதிபர்
- கடந்த மாதம் 20ம் தேதி தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது.
- தற்போதைய அதிபர் இவோ மோரல்ஸ் (சோசலிச இயக்கம்), முன்னாள் அதிபரும் புரட்சிகர இடது முன்னணி தலைவருமான கார்லஸ் மெசா ஆகியோருக்கிடையே கடும் போட்டி நிலவியது. தேர்தலில் மொத்தம் 88.31 சதவீத வாக்குகள் பதிவானது.
- அந்நாட்டுத் தேர்தல் ஆணையம் அதிபர் இவோ மாரல்ஸ் 47.07 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவித்தது. ஆனால் இந்த தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட அக்டோபர் 25ம் தேதிக்கு முன்தினமே தான் வெற்றி பெற்றதாக இவோமாரல்ஸ் அறிவித்திருந்தார். எனவே இந்த முடிவை கார்லஸ் மெசா ஏற்கவில்லை.
- அவர் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்திருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். பொலியா நாட்டின் வாக்கு எண்ணும் நடைமுறைகளை விமர்சித்து நாடு முழுவதும் மக்களின் போராட்டங்கள் நடைபெற்றன. அத்துடன் அதிபர் இவா மோரல்ஸ் அவசர கூட்டத்தை நடத்த வேண்டி, மீண்டும் நாடு தழுவிய போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றன.
- இந்த போராட்டத்தில் பொதுமக்களுடன் காவல்துறையினரும் கலந்துக் கொள்ளத் தொடங்கினர். இதனால் போராட்டத்தை கட்டுப்படுத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. அதையொட்டி அதிபர் இவோ மாரல்ஸ் மற்றும் துணை அதிபர் அல்வாரோ கார்சியோ ஆகிய இருவரும் பதவி விலகுவதாக நேற்று அறிவித்துள்ளனர்.
50 பில்லியன் பேரல் புதிய எண்ணெய் கிணறை கண்டுபிடித்த ஈரான்
- ஈரானில் 50 பில்லியன் பேரல் அளவு கொண்ட புதிய கச்சா எண்ணெய் கிணறு கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார்.
- ஈரானிடம் எண்ணெய் வாங்க கூடாது என்று சீனா, இந்தியா உள்ளிட்ட எல்லா நாடுகளுக்கும் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதை இந்தியாவும் பின்பற்றி வருகிறது. இதனால் கச்சா எண்ணெயை மட்டும் நம்பி இருக்கும் ஈரானின் பொருளாதாரம் பெரிய அடியை சந்தித்துள்ளது.
- ஈரான் ஒரு பக்கம் கஷ்டப்பட்டாலும் மற்ற உலக நாடுகளும் இதனால் கச்சா எண்ணெய் வாங்க முடியாமல் கஷ்டப்படுகிறது. ஆம், ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்க முடியாததால், கச்சா எண்ணெய் விற்கும் சவுதி போன்ற நாடுகளிடம் டிமாண்ட் கூடி இருக்கிறது. இதனால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
- நாட்டின் தென் பகுதியில் இந்த கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே ஈரானில் இருக்கும் மொத்த எண்ணெய் கிணறுகள் மூலம் 150 பில்லியன் பேரல் கச்சா எண்ணெய் எடுக்க முடியும். தற்போது கூடுதலாக 50 பில்லியன் பேரல் கிடைக்க போகிறது. இது ஈரானில் இரண்டாவது பெரிய எண்ணெய் கிணறு என்பது குறிப்பிடத்தக்கது.
மின்னல் தாக்குவதை முன்னதாகவே கண்டுபிடிக்கும் தொழில்நுட்பம்
- குறிப்பிட்ட இடத்தில் மின்னல் தாக்குவதை அரை மணி நேரம் முன்கூட்டியே கண்டுபிடிக்கும் தொழில் நுட்பத்தை இங்கிலாந்து மாணவர் கண்டுபிடித்துள்ளார்
- குறிப்பிட்ட இடத்தில் மின்னல் தாக்குவதை அரை மணி நேரம் முன் கூட்டியே கண்டுபிடிக்கும் தொழில் நுட்பத்தை அவர் கண்டுபிடித்துள்ளார்.
- Artificial intelligence எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் மூலம் எளிமையான, செலவு குறைவான முறையில் இவ்வசதி உருவாக்கப்பட்டுள்ளதாக அதைக் கண்டுபிடித்த அமீர் ஹூசைன் மொஸ்தபி தெரிவித்துள்ளார்.
சீனாவுடன் இணைந்து தனது முதல் செயற்கைக்கோளை ஏவிய சூடான்
- இராணுவம், பொருளாதாரம் மற்றும் விண்வெளி தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக, சூடானின் முதல் செயற்கைக்கோள் சீனாவால் ஏவப்பட்டதாக அந்நாட்டின் நிர்வாக சபை தெரிவித்துள்ளது.
- சூடானின் இறையாண்மை கவுன்சிலின் தலைவர் ஜெனரல் அப்துல் பத்தா அல்-புர்ஹான் தலைநகர் கார்ட்டூமில் நடைபெற்ற அவரது உயர் பாதுகாப்பு அதிகாரிகளின் கூட்டத்தில் செயற்கைக்கோளை ஏவுவதாக அறிவித்தார்.
- சூடான் ரிமோட் சென்சிங் செயற்கைக்கோள் (எஸ்.ஆர்.எஸ்.எஸ் -1) ஞாயிற்றுக்கிழமை வடக்கு சீன மாகாணமான ஷாங்க்சியில் இருந்து ஏவப்பட்டதாக சீனாவின் அரசு செய்தி நிறுவனமான ஜின்ஹுவாவும் தெரிவித்துள்ளது.
கோப்பை வென்றது இந்தியா: சகார் 'ஹாட்ரிக்' சாதனை
- இந்தியா வந்துள்ள வங்கதேச அணி மூன்று 'டுவென்டி-20' போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டிகள் முடிவில், தொடர் 1-1 என சமநிலையில் இருந்தது. மூன்றாவது போட்டி மஹாராஷ்டிராவின் நாக்பூரில் நடக்கிறது.
- வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது 'டுவென்டி-20' போட்டியில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி தொடரை 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
- ஸ்ரேயாஸ் அரை சதம், சகார் 'ஹாட்ரிக்' கைகொடுக்க தொடரையும் வென்றது. இதன் மூலம், சர்வதேச 'டுவென்டி-20' போட்டியில் 'ஹாட்ரிக்' சாதனை நிகழ்த்திய முதல் இந்திய பவுலர் என்ற பெருமை பெற்றார்.