Type Here to Get Search Results !

11th NOVEMBER 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

மருத்துவ சாதனங்கள் பூங்கா: தமிழகத்துக்கு மத்திய அரசு அனுமதி
  • தமிழ்நாடு உள்ளிட்ட நான்கு மாநிலங்களில், மருத்துவ சாதனங்கள் பூங்கா அமைப்பதற்கு, மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கேரளா ஆகிய மாநிலங்களில் மொத்தம், நான்கு மருத்துவ சாதனங்கள் பூங்காவை அமைப்பதற்கு, மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.
  • 'மேக் இன் இந்தியா' திட்டத்துக்கு ஆதரவளிக்கும் வகையிலும், உலகத் தரத்திலான மருத்துவ வசதி குறைந்த விலையில் கிடைப்பதற்கு உதவும் வகையிலும், இந்த பூங்காக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • ஆலைகளை எளிதில் அமைத்து, உற்பத்தியில் ஈடுபடும் வகையில் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளுடன் இந்த பூங்காக்கள் அமைக்கப்படும்.
  • இந்த பூங்காக்களில் ஆலைகள் அமைக்கப்படுவதால், இறக்குமதி வரி குறைவதுடன், தரமான மருத்துவ சோதனை வசதிகள் குறைந்த விலையில் கிடைக்கவும் உதவுவதாக இருக்கும்.
  • நாட்டில் மருத்துவ சாதனங்களுக்கான சில்லரை சந்தை, 70 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பு கொண்டதாகும். 
  • ஆசியாவில், இறக்குமதியில் நான்காவது மிகப்பெரிய சந்தையாக இருந்த போதிலும், உள்நாட்டில் தொழிற்சாலை மிகவும் குறைவாகும்.பூங்காக்கள் அமைக்கப்படுவதன் மூலம், இறக்குமதி செய்யும் நிலையில் மாற்றம் ஏற்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தொழில்துறை உற்பத்தி 4.3 சதவீதமாக சரிவு
  • தயாரிப்புத் துறையின் செயல்பாடு மோசமாக இருந்ததையடுத்து செப்டம்பரில் தொழில்துறை உற்பத்தி 4.3 சதவீதமாக குறைந்தது. இது, கடந்த 2018-செப்டம்பரில் 4.6 சதவீதமாக அதிகரித்திருந்தது.
  • தயாரிப்புத் துறையின் உற்பத்தி கடந்த ஆண்டு செப்டம்பரில் 4.8 சதவீதமாக அதிகரித்து காணப்பட்ட நிலையில், நடப்பாண்டில் இது 3.9 சதவீதமாக சரிந்தது.
  • மின்துறை உற்பத்தியும் 8.2 சதவீதத்திலிருந்து 2.6 சதவீதமாக வீழ்ச்சியடைந்தது.
  • சுரங்கத் துறை கடந்த ஆண்டில் 0.1 சதவீத வளா்ச்சியை பதிவு செய்திருந்த நிலையில், நடப்பாண்டில் 8.5 சதவீத பின்னடைவை சந்தித்துள்ளதாக புள்ளிவிவரத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் 49ஆவது தலைமை நீதிபதியாக ஏ.பி. சாஹி பதவியேற்பு
  • சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமாணியை கொலிஜீயம் பரிந்துரைத்ததன் பேரில் மேகாலயா நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரமாணி, தனது பதவியை ராஜினாமா செய்தார்.
  • இதையடுத்து பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியான அமரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி உத்தரவிட்டார்.
  • இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் 49-ஆவது தலைமை நீதிபதியாகவும் சுதந்திர இந்தியாவின் 30-ஆவது தலைமை நீதிபதியாகவும் ஏபி சாஹி பதவியேற்று கொண்டார்.
  • இவர் 1985-ஆம் ஆண்டு முதல் அலகாபாத் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக தனது பணியை தொடங்கினார். இதையடுத்து 2005-ஆம் ஆண்டு முதல் அலகாபாத் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்த்தப்பட்டார். 2018-ஆம் ஆண்டு நவம்பர் 17-ஆம் தேதி முதல் பாட்னா தலைமை நீதிபதியாக பதவியேற்றார். 1959-ஆம் ஆண்டு பிறந்தார் சாஹி.



விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகம் விதித்த தடையை உறுதி செய்தது தீர்ப்பாயம்
  • தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகம் விதித்திருந்த 5 ஆண்டுகால தடையை டெல்லி தீர்ப்பாயம் உறுதி செய்துள்ளது.
  • தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான 5 ஆண்டுகால தடை மே மாதம் முடிவடைந்தது. இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்தது.
  • இத்தடை தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்ற நீதிபட்தி சங்கீதா திங்ரா செகல் தலைமையில் தீர்ப்பாயத்தையும் ஜூன் மாதம் மத்திய அரசு அமைத்தது. இதனைத் தொடர்ந்து இத்தீர்பாயம் விசாரணை நடத்தியது.
மகளிர் டென்னிஸ் போட்டியில் பிரான்ஸ் வெற்றி பெற்று கோப்பையை பெற்றது
  • பெர்த் நகரில் இருநாடுகளை சேர்ந்த வீராங்கனைகளுக்கு இடையே ஒற்றையர், இரட்டையர் பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இதில் இரு அணிகளும் வென்று தலா 2 புள்ளிகள் பெற்று சமநிலை வகித்த நிலையில் இறுதி போட்டி நடைபெற்றது.
  • இறுதி போட்டியில் பிரான்சின் கிறிஸ்டினா மளதிநோவிச்சும், கரோலின் கார்சியா ஜோடியும், ஆஸ்திரேலியாவின் ஆஸ் பார்டி, சாம் ஸ்டோசர் ஜோடியும் மோதியது. இதில் 6-4, 6-3 என்ற செட் கணக்கில் பிரான்ஸ் ஜோடி வென்றது.
  • இந்த வெற்றியின் மூலம், 3க்கு 2 என்ற புள்ளி கணக்கில் பிரான்ஸ் அணி, பெட் கோப்பையை 16 ஆண்டுகளுக்கு பிறகு கைப்பற்றியது. மகளிர் போட்டியில் பிரான்ஸ் கைப்பற்றும் 3ஆவது ஃபெட் கோப்பை இதுவாகும்.
வீடியோ கேம் போட்டியில் சீன அணி வெற்றி
  • மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு லீக் ஆஃப் லெஜன்ட்ஸ் (League of Legends) என்ற விளையாட்டை வடிவமைத்தது. குழுவாக விளையாடும் இந்த கேமை மையமாக வைத்து, பிரான்ஸ் தலைநகர் பாரீசில், சர்வதேச வீடியோ கேம் போட்டி நடைபெற்றது.
  • இறுதிப் போட்டியில், சீனா மற்றும் ஐரோப்பிய அணிகள் பங்கேற்றன. விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில், சீன வீரர்கள் சிறப்பாக விளையாடி வெற்றிபெற்றனர். 
  • வெற்றி பெற்ற சீன வீரர்களுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. இந்தப்போட்டியை 15 ஆயிரம் பேர் பார்வையிட்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel