Type Here to Get Search Results !

8th NOVEMBER 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

ஏலகிரி மலையில் பல்லவா் கால 3 நடுகற்கள் கண்டெடுப்பு
  • ஏலகிரிமலை பழந்தமிழரின் வரலாற்றுப் பெட்டகமாக உள்ளது. ஏராளமான வரலாற்றுக் குறிப்புகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. ஏலகிரி மலையில் உள்ள 14 கிராமங்களில் ஒன்று நிலாவூா். 
  • இங்கு மிகவும் பழைமை வாய்ந்த கி.பி. 6-ஆம் நூற்றாண்டைச் சோந்த பல்லவா் கால 3 நடுகற்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் 2 எழுத்துடை நடுகற்கள். எழுத்துகள் முழுமையும் எண்ணெய் பூசப்பெற்று, பொறிந்த நிலையில் உள்ளதால் படிப்பதில் தொடா்ச்சி இல்லாமல் இருக்கிறது. 
  • இந்த 3 நடுகற்களும் நிலாவூரில் உள்ள கதவ நாச்சியம்மன் கோயிலில் உள்ளன. இந்த நடுகற்களை இவ்வூா் மக்கள் வெளி தெய்வங்கள் என்றழைக்கின்றனா்.
  • முதல் நடுகல் 3 அடி உயரமும் 3 அடி அகலமும் கொண்ட பலகைக் கல்லில் நோத்தியாக செதுக்கப்பட்டுள்ளது. வலது கையில் குறுவாளும், இடது கையில் வில்லும் உள்ளன. 
  • போரிடும் கோலத்தோடு இவ்வீரன் சித்தரிக்கப்பட்டுள்ளான். காலின் இரண்டு பக்கங்களிலும் 2 கள் குடங்கள் உள்ளன. இவை இவ்வீரன் வீர மரணமடைந்து, அவனுக்கு படைக்கப்படும் படையலாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கல்லின் மேற்புறத்தில் எழுத்துகள் உள்ளன. இவை தெளிவின்றி உள்ளன.
  • -ஆவது நடுகல் மூன்றடி உயரமும் 3 அடி அகலமும் கொண்ட பலகைக் கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. இந்த நடுக்கலில் உள்ள வீரன் வலது கையில் குறுவாளும், இடதுகையில் வில்லும் உள்ளன. வாரி முடிக்கப்பட்ட கொண்டையுடன் ஆக்ரோஷத்தோடு போரிடுவது போலக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
  • 3-ஆவது நடுகல் மூன்றடி உயரமும் மூன்றடி அகலமும் கொண்ட பலகைக் கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. வலது கையில் குறுவாளும், இடது கையில் வில்லும் உள்ளன. வீரனின் தலைமுடி அழகிய வடிவில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இடது காலை மடக்கிப் போரிடும் கோலத்தோடு இந்த நடுகல் சித்தரிக்கப்பட்டுள்ளது.
  • இம்மூன்று நடுகற்களும் ஒரே காலத்தில் (பல்லவா்) வீரமரணம் அடைந்த வீரா்களுக்கு அவா்களின் வீரத்தைப் போற்றும் விதத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடுகற்களில் உள்ள எழுத்துப் பொறிப்புகள் மூலம் ஏலகிரி மலைவாழ் பழங்குடிகள் 1,400 ஆண்டுகளுக்கு முன்பே எழுத்தறிவும், சிற்பக்கலையிலும் சிறந்து விளங்கினா் என்பதை அறிய முடிகிறது.
9,000 புதிய தமிழ் சொற்கள் அறிமுகம்
  • ''தமிழ் எழுத்துகளை சீர்திருத்தியவர் வீரமாமுனிவர்,'' என, தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் பேசினார். செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்டத்தின் சார்பில், சென்னை, எத்திராஜ் மகளிர் கல்லுாரியில், அகராதியியல் தினம் கொண்டாடப்பட்டது. 
  • புதிய சொல்லகராதி இதில், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் பேசியதாவது:தமிழில், சொல்லுக்கு பொருள் கூறும் நிகண்டு கள் ஏற்கனவே இருந்தாலும், எளிமையான அகராதிகள் இல்லாத நிலையில், வீரமாமுனிவர் தான், மேலைநாட்டு வழக்கப்படி, தமிழ்ச் சொற்களுக்கான பொருளை, அகரவரிசைப்படி தொகுத்து, சதுரகராதியை உருவாக்கினார். அவர் பிறந்த நாளை, தற்போது, அகராதியியல் தினமாக கொண்டாடுகிறோம். 
  • அவர், தமிழ் எழுத்துகளில், புள்ளி, சுழி உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட சீர்திருத்தங்களை செய்து எளிமைப்படுத்தினார். சொற்பிறப்பியல் அகரமுதலி திட்டத்தின் வழியாக, மிகப்பிரபலமான, 9 அகராதிகளில் இருந்து, 4 லட்சத்து, 12 ஆயிரம் தனித்துவம் மிக்க சொற்களை எடுத்து, புதிய சொல்லகராதியை உருவாக்கியுள்ளோம். 
  • இது, ஆங்கில மொழியின், 'ஆக்ஸ்போர்டு டிக்ஸ்னரி'யில் உள்ளதை விட, மும்மடங்கு அதிகம். கலைச்சொல் மன்றத்தின் வழியாக, 9,000 புதிய சொற்களை உருவாக்கி, இன்று வெளியிட்டுள்ளோம்.
2019 ஆம் ஆண்டிற்கான இந்திய நீதி அறிக்கை
  • இந்தியாவிலேயே தமிழக காவல் துறை தான் சிறப்பாக பணியாற்றுவதாக 2019 ஆம் ஆண்டிற்கான இந்திய நீதி அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.
  • காவல், தடயவியல், நீதிமன்றம் உள்ளிட்ட துறைகளின் செயல்பாடுகள் குறித்து ஆண்டுதோறும் நீதி அறிக்கை வெளியிடப்படுகிறது. அதன் படி சிறப்பாக பணியாற்றுவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு காவல்துறை முதலிடம் வகித்துள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
  • மேலும் நீதி வழங்குவதில் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. முதலிடத்தை மஹாராஷ்டிரா மாநிலமும், கடைசி இடத்தை பீகார் மாநிலமும் தக்கவைத்துக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சோனியா குடும்பத்தினரின் சிறப்பு பாதுகாப்பு வாபஸ்
  • காங்., தலைவர் சோனியா குடும்பத்தினருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு பாதுகாப்பு வாபஸ் பெறப்படுவதாக டில்லி வட்டாரம் தெரிவிக்கிறது.காங்., தலைவர் சோனியா அவரது மகன் ராகுல் மற்றும் பிரியங்கா குடும்பத்தினருக்கு நாட்டின் உயரிய எஸ்.பி.ஜி., ( Special Protection Group) , சிறப்பு பாதுகாப்பு குழுவினர் பாதுகாப்பு அளித்து வந்தனர். 
  • பிரதமர், ஜனாதிபதியும் இந்த பாதுகாப்பில் உள்ளனர்.இந்நிலையில் சோனியா குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டு வந்த இந்த எஸ்.பி.ஜி., பாதுகாப்பை வாபஸ் பெற மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 
  • ஆனாலும் இசட் பிளஸ் என்ற பாதுகாப்பு சோனியா குடும்பத்தினருக்கு வழங்கப்படும். மத்திய பாதுகாப்பு படையினர் இதற்கான பொறுப்புகளை ஏற்பர்.



முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் தேவேந்திர ஃபட்னாவிஸ்
  • மகாராஷ்டிரத்தில் 288 தொகுதிகளுக்கு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவும், சிவசேனாவும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. இதில் பாஜக 105 தொகுதிகளிலும் சிவசேனா 56 தொகுதிகளிலும் வெற்றிபெற்றன. 
  • பெரும்பான்மைக்கும் அதிகமாக 161 இடங்களில் இந்த கூட்டணி வெற்றிபெற்றாலும், ஆட்சியமைக்க முடியாத நிலை நீடித்து வருகிறது. இந்நிலையில், சிவசேனாவின் ஒரு குழு முட்டுக்கட்டைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், பாரதிய ஜனதாவுடன் (BJP) இணைந்து ஒரு அரசாங்கத்தை அமைப்பதற்கும் ஆதரவாக உள்ளது, மற்றொன்று 50:50 சூத்திரத்தில் பிடிவாதமாக உள்ளது.
  • அதாவது, முதலவர் பதவியை தலா 2½ ஆண்டுகள் சுழற்சி அடிப்படையிலும், மந்திரி பதவிகளை சரிசமமாகவும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற சிவசேனாவின் கோரிக்கையை பா.ஜ.க. நிராகரித்துவிட்டதால் இந்த இழுபறி தொடர்கிறது. 
  • இந்த பரபரப்பான அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் ஆயுட்காலம் நள்ளிரவுடன் நிறைவடையும் நிலையில் மகாராஷ்டிரா ஆளுநரை சந்தித்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தேவேந்திர ஃபட்னாவிஸ் கடிதத்தை வழங்கியுள்ளார்.
இந்திய தொழில்துறை கூட்டமைப்புடன் எம்.ஐ.டி., கல்லுாரி புரிந்துணர்வு ஒப்பந்தம்
  • மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரி, இந்திய தொழில்துறை கூட்டமைப்பு யங் இந்தியன்ஸ் மாணவர் அமைப்புடன்புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. 
என்இஎப்டி கட்டணம் ஜனவரி 1 முதல் ரத்து
  • சேமிப்பு கணக்கில் இருந்து ஆன்லைனில் பணம் அனுப்புவதற்கான என்இஎப்டி கட்டணம் ஜனவரி 1ம் தேதியில் இருந்து ரத்து செய்யப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 
  • வங்கிக் கணக்கில் இருந்து ஆன்லைன் மூலம் என்இஎப்டி மற்றும் ஆர்டிஜிஎஸ் முறையில் பணம் அனுப்பப்படுகிறது. என்இஎப்டி முறையில் 2 லட்சம் வரையிலான பரிவர்த்தனைகளும், அதற்கு மேல் ஆர்டிஜிஎஸ் முறையிலும் பணம் அனுப்பப்படுகிறது.
  • இந்நிலையில், டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக, என்இஎப்டி முறையில் சேமிப்பு கணக்கில் இருந்து ஆன்லைன் மூலம் பணத்தை அனுப்புவதற்கான கட்டணம் ஜனவரி 1ம் தேதி முதல் ரத்து செய்யப்படுகிறது எனவும், இதன் பலனை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.



'இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி குறையும்' - ரேட்டிங்கை குறைத்த மூடீஸ் நிறுவனம்
  • பிரபல மூடீஸ் முதலீட்டு சேவை நிறுவனம் இந்தியாவில் முதலீடு செய்வதற்கான ரேட்டிங்கை குறைத்துள்ளது. அதாவது இந்தியாவின் ரேட்டிங்கை 'ஸ்டேபிள்'(Stable) என்ற இடத்திலிருந்து 'நெகடிவ்' (Negative) இடத்திற்கு குறைத்துள்ளது. 
  • இதற்கு தற்போது இந்தியாவில் நிலவி வரும் பொருளாதார மந்தநிலை காரணமாக தெரிவித்துள்ளது. அத்துடன் தற்போது நிலவி வரும் பொருளாதார மந்தநிலை இன்னும் சில மாதங்களுக்கு நீடிக்கும் என்றும் இந்த நிறுவனம் கணித்துள்ளது. 
  • ஏனென்றால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை 5 சதவிகிதமாக பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
வீரமரணமடைந்த இங்கிலாந்தை சேர்ந்தவருக்கு சிறந்த குடிமகன் விருது வழங்கல்
  • 2001ம் ஆண்டு உலக வர்த்தக மையம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீரமரணமடைந்த ரிக் ரெஸ்கார்லாவின் குடும்பத்துக்கு அமெரிக்க அதிபரின் சிறந்த குடிமகனுக்கான விருது வழங்கப்பட்டது.
  • கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி, இரட்டை கோபுரம் உள்ளிட்ட 4 கட்டிடங்கள் மீது விமானங்களை மோதவிட்டு பயங்கவாத தாக்குதல் நடத்தப்பட்டது. 
  • தெற்கு கோபுரம் மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது, ராணுவ அதிகாரியாக இருந்த ரிக் ரெஸ்கார்லா அங்கிருந்த ஆயிரக்கணக்கானவர்களை பத்திரமாக வெளியேற்றி கோபுர இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார். இவர் இங்கிலாந்தை சேர்ந்தவர்.
  • இந்தநிலையில், சுமார் 2,700 பேரை காப்பாற்றி வீரமரணமடைந்த ரிக் ரெஸ்கார்லாவின் செயலை பாராட்டும் விதமாக அவருக்கு அதிபரின் சிறந்த குடிமகனுக்கான விருது அவரது மனைவி சூசன்னாவிடம் வழங்கப்பட்டது.
இந்தியாவில் உலக கோப்பை ஹாக்கி: வரும் 2023ல் நடத்த அனுமதி
  • சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு (எப்.ஐ.எச்.,) சார்பில் ஆண்களுக்கான 15வது உலக கோப்பை தொடர் வரும் 2023, ஜன. 13-29ல் நடக்க உள்ளது. இத்தொடரை நடத்த இந்தியா, பெல்ஜியம், ஜெர்மனி, மலேசியா, ஸ்பெயின் நாடுகள் விருப்பம் தெரிவித்தன. 
  • பின் ஜெர்மனி, ஸ்பெயின் நாடுகள் விலகிக் கொண்டன. முடிவில் இந்தியாவுக்கு தொடரை நடத்தும் உரிமை வழங்கப்பட்டது. போட்டி நடக்கும் இடம் பின்னர் அறிவிக்கப்படும். இதனையடுத்து இந்திய மண்ணில் தொடர்ந்து 2வது முறையாக ஆண்களுக்கான உலக கோப்பை ஹாக்கி தொடர் நடக்கவுள்ளது. கடந்த 2018ல் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடந்தது.
  • தவிர இந்திய மண்ணில் 4வது முறையாக ஆண்களுக்கான உலக கோப்பை ஹாக்கி தொடர் நடக்கவுள்ளது. இதற்கு முன் 1982 (மும்பை), 2010 (புதுடில்லி), 2018ல் (புவனேஸ்வர்) நடந்தன. இதன்மூலம் அதிக முறை இத்தொடரை நடத்தும் நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைக்க உள்ளது. ஏற்கனவே நெதர்லாந்து 3 முறை (1973, 1990, 1998) இத்தொடரை நடத்தி உள்ளது.
  • வரும் 2023ல், 75 ஆண்டு சுதந்திரத்தை இந்தியா நிறைவு செய்யும். எனவே இச்சந்தர்ப்பத்தில் ஹாக்கியின் வளர்ச்சியை காண்பிப்பதற்காக உலக கோப்பை தொடரை நடத்த ஹாக்கி இந்தியா (ஹெச்.ஐ.,) விரும்பியது.
  • ஆண்களுக்கான உலக கோப்பை (2018) தொடர் தவிர்த்து இதுவரை இந்திய மண்ணில் சாம்பியன்ஸ் டிராபி (2014), ஆண்களுக்கான ஜூனியர் உலக கோப்பை (2016), உலக லீக் பைனல் (2017), ஆண்களுக்கான சீரிஸ் பைனல்ஸ் (2019), டோக்கியோ ஒலிம்பிக் தகுதிச் சுற்று (2019) போன்ற மிகப் பெரிய ஹாக்கி தொடர்கள் நடத்தப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel