Type Here to Get Search Results !

24th NOVEMBER 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

கி.பி. 8-ஆம் நூற்றாண்டு நடுகல் கண்டெடுப்பு
  • திருப்பத்தூர் அருகே கி.பி. 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கழுமரம் ஏறிய அரசனின் நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூரில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள நரியனேரி பேருந்து நிறுத்தத்தில் இருந்து வலது புறமாகச் செல்லும் உட்புறச் சாலையில் விவசாய நிலத்தின் நடுவில் பழைமையான நடுகல் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இக்கல்லானது 11 அடி நீலமும் 3 அடி அகலமும் உள்ளது.
  • இக்கல்லில் நீண்ட கழுமரத்தில் ஆண் ஒருவர் அமர்ந்த நிலையில் உள்ளார். அவரது இடது கை மார்பிலும், வலது கை மேல்நோக்கி உயர்த்தியவாறும் உள்ளன. தலைக்கு மேல்புறம் பெரிய அளவிலான குடை சித்தரிக்கப்பட்டுள்ளது. இக்குடை அவரை ஒரு அரசன் என அடையாளப்படுத்துகிறது.
  • கல்லின் இடதுபுறத்தில் நின்ற நிலையில் பெண், எரியும் விளக்கை ஏந்தியவாறு காட்சிப்படுத்தப்பட்டுள்ளாள். இது இறந்த அரசனை தெய்வமாக வழிபடும் நிலையை எடுத்துரைப்பதாக உள்ளது.



முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்தியா
  • இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதிய முதல் பகல்-இரவு டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் கடந்த 22ஆம் தேதி ஆரம்பித்த நிலையில், மூன்றே நாள்களில் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
  • அதேபோல் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்களையும் வீழ்த்திய இஷாந்த் ஷர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 
  • ந்த வெற்றியின் மூலம் உள்ளூரில் இந்திய அணி தொடர்ச்சியாக வென்ற 12-வது டெஸ்ட் தொடரை வென்று சாதித்துள்ளது. இந்திய அணி உள்நாட்டில் 2013-ம் ஆண்டு பிப்ரவரியில் இருந்து இப்போது 2019-ம் ஆண்டு நவம்பர் வரை தொடர்ச்சியாக வென்ற 12 டெஸ்ட் தொடர்கள் வென்றுள்ளது.
சீன மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி; இந்திய வீரர்கள் அபாரம்
  • சீனாவின் தைச்சுங்கில் நடைபெற்று வரும் ஆசிய 15 வயதுக்குட்பட்ட மல்யுத்த சாம்பியன்ஷிப்பின் இரண்டாவது நாளில் இந்திய மல்யுத்த வீரர்கள் ஆறு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர். உலக கேடட் சாம்பியனான கோமல் (39 கிலோ) பிரிவில் தங்கம் வென்று தொடங்கியுள்ளார்.
  • பெண்கள் பிரிவில் கோமனைத் தவிர சலோனி (33 கிலோ), பாப்லி (36 கிலோ) தங்கம் வென்றுள்ளனர்.
  • ஆதாரங்களின்படி, இரண்டாவது நாளிலும் ஃப்ரீஸ்டைலில் இந்திய சிறுவர்கள் ஆதிக்கம் செலுத்தியது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
  • 48 கிலோ பிரிவில் ஆகாஷ் 8-3 என்ற கோல் கணக்கில் ஜப்பானின் டெய்கி ஓக்வாவை வீழ்த்தி வென்றார். அறிமுக உதித் குமார் 57 கிலோ பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் வென்று தந்தார்.
  • கிடைத்த தகவல்களின்படி, 52 கிலோ பிரிவில் கபில் வெண்கலப் பதக்கம் வென்றார். இந்திய அணியில் உள்ள ஆறு இலவச பாணி மல்யுத்த வீரர்கள் பதக்கங்களை வென்றுள்ளனர்.
  • இதனையடுத்து அணி தரவரிசை பட்டியலில் 125 புள்ளிகளுடன் இந்தியா முதல் இடத்தைப் பிடித்தது.
தேசிய கார்பந்தயம்: சேத்தன் சாம்பியன்
  • தேசிய கார்பந்தய சாம்பியன்ஷிப் போட்டியில் சேத்தன் ஷிவ்ராம் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.பெங்களூருவில், இந்திய தேசிய கார்பந்தய சாம்பியன்ஷிப் 4வது சுற்று நடந்தது. 
  • இதில் பந்தய துாரத்தை ஒரு மணி நேரம், 47 நிமிடம், 37.300 வினாடியில் கடந்து முதலிடம் பிடித்த 'அக்சரா' அணியின் சேத்தன் ஷிவ்ராம் சாம்பியன் பட்டம் வென்றார். 
  • இரண்டாவது இடத்தை 'டீம் சாம்பியன்ஸ்' அணியின் பிக்கு பாபு (ஒரு மணி நேரம், 47 நிமிடம், 49.900 வினாடி) கைப்பற்றினார். மூன்றாவது இடத்தை 'மஹிந்திரா அட்வென்சர்' அணியின் அமித்ராஜித் கோஷ் (ஒரு மணி நேரம், 51 நிமிடம், 04.300 வினாடி) பிடித்தார். காரில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, 'நடப்பு சாம்பியன்' கவுரவ் கில் விலக நேர்ந்தது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel