Type Here to Get Search Results !

25th NOVEMBER 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

பழநியில் 18ம் நுாற்றாண்டு ஓலைச்சுவடி கண்டுபிடிப்பு
  • திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே உள்ள வேலுாரில், 18ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, ஓலைச்சுவடி கட்டு, சிதைந்த நிலையில் கிடைத்துள்ளது. சிதம்பரம் பண்டராம் என்பவர் எழுதிய, அருணாச்சல புராணத்தின் ஓலைச்சுவடி பிரதி என, தெரிந்தது. 
  • சைவ எல்லப்ப நாவலரால், கி.பி., 16ம் நுாற்றாண்டில், அருணாச்சல புராணம் இயற்றப்பட்டது. அதன் மூலமும், உரையும் உடைய, ஓலைச்சுவடி பிரதி தான், இது. 
  • மூன்று பிரதிகள், வடமொழியில் இருந்ததை, தமிழில் எழுதியதாக, சிதம்பரம் குறிப்பிடுகிறார். சிவபுராணத்தில் ருத்திர சங்கிதை மற்றும் லிங்கபுராணத்திலும் இருந்த கருத்துகளை எடுத்து இயற்றியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 
  • அக்காலத்தில் நுால் எழுதுவோருக்கும், அதைப் படியெடுப்போருக்கும், ஆட்சியாளர்கள் வசதியும், உதவியும் செய்து கொடுத்திருப்பது, இந்த ஓலைச்சுவடி மூலம் அறிய முடிகிறது. இவ்வாறு, நாராயணமூர்த்தி கூறியுள்ளார்.
காவல்துறையில் இனி அனைத்தும் தமிழ்
  • தமிழை வளா்க்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழ் வளா்ச்சித் துறை இயக்ககம் சாா்பில் கடந்த 7, 8 , 9 ஆகிய தேதிகளில் மயிலாப்பூரில் உள்ள தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் அலுவலகத்தில் தமிழ் வளா்ச்சி ஆட்சி மொழித் திட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
  • இக்கூட்டத்தில் அத்துறை அதிகாரிகள், காவல்துறை உயா் அதிகாரிகள், காவல் துறை அமைச்சுப் பணியாளா்கள் ஆகியோா் பங்கேற்றனா்.
  • இக்கூட்டத்தில் தமிழக காவல்துறையில் தமிழ் பயன்பாட்டை அதிகரிப்பது தொடா்பாக பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி, அனைத்து காவல் ஆணையா்கள், மண்டல ஐ.ஜி.க்கள், சரக டி.ஐ.ஜி.க்கள், காவல் கண்காணிப்பாளா்கள், நிா்வாகப் பிரிவு அதிகாரிகள் ஆகியோருக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளாா்.
  • தமிழ் வளா்ச்சித் துறை இயக்ககக் கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. இதன்படி, காவல்துறை பதிவேடு, முன் கொணா்வு பதிவேடு உள்ளிட்ட அனைத்துப் பதிவேடுகளையும் தமிழ் மொழியில் பராமரிக்க வேண்டும். வருகைப் பதிவேட்டில் அதிகாரிகள் தமிழில் கையெழுத்திட வேண்டும். அனைத்து வரைவுக் கடிதங்கள், தகவல் பரிமாற்றங்கள், குறிப்பாணைகள் தமிழில் இருக்க வேண்டும்,
  • மேலும் அனைத்து காவல் வாகனங்களிலும் காவல் என தமிழில் எழுதப்பட்டிருக்க வேண்டும், அனைத்து அலுவலக முத்திரைகள், பெயா்ப் பலகைகள் தமிழில் மாற்றப்பட வேண்டும்.
  • இந்த அறிவுரைகளை அனைத்து அதிகாரிகளும் ஊழியா்களும் பின்பற்ற வேண்டும். இது தொடா்பாக காவல்துறை உயா் அதிகாரிகள், அலுவலக ஊழியா்களுக்கு அறிவுரை வழங்கி, அதை செயல்படுத்த வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இலவச மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிப்பதில்  தமிழகம் நாட்டிலேயே முதலிடம்
  • ஏழை, எளிய மக்களுக்கும் தரமான மருத்துவ சிகிச்சை கிடைக்கும் வகையில், பிரதமர் மருத்துவக் காப்பீடு திட்டத்தை, 2018 செப்டம்பரில் பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்தார். ஆயுஷ்மான் என்றழைக்கப்படும் இந்த திட்டத்தின் கீழ், ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு, 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மருத்துவ சிகிச்சை இலவசமாக கிடைக்கும். 
  • நாடு முழுவதும், 10 கோடி குடும்பங்கள், அதாவது, மக்கள் தொகையில், 40 சதவீதம் பேர் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.இந்த திட்டத்தின் கீழ், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற முடியும். 
  • இதில், 'ஆன்காலஜி' எனப்படும் புற்றுநோய்க்கான சிகிச்சை பெற்றோர் குறித்த விபரங்கள் ஆய்வு செய்யப்பட்டன.தேசிய சுகாதார ஆணையம் தயாரித்துள்ள இந்த ஆய்வு அறிக்கையில் பல தகவல்கள் கிடைத்துள்ளன.
  • நாடு முழுவதும், 2018 செப்., முதல், 2019 ஜூலை வரையிலான, 10 மாதங்களில், புற்றுநோய் சிகிச்சை பெற்றோர் குறித்த விபரங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதன்படி, 1.88 லட்சம் பேர் சிகிச்சை பெற்று உள்ளனர். 
  • இவர்களுக்கு அளித்த சிகிச்சைக்கான கட்டணங்களை, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் கோரியுள்ளன.இதில், 72 சதவீத சிகிச்சைகள், தனியார் மருத்துவமனைகளில் வழங்கப்பட்டுள்ளன.
  • நாட்டிலேயே மிகவும் அதிகமானோருக்கு புற்றுநோய் கிசிச்சை அளித்ததில், 42 சதவீதத்துடன் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. மஹாராஷ்டிராவில், 24.7 சதவீதம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
  • மற்ற மாநிலங்களைவிட, தமிழகத்தில் அதிகமானோர் சிகிச்சை பெற்றுள்ளதற்கு முக்கிய காரணம், இங்கு, 413 மருத்துவமனைகள் இந்த திட்டத்தில் பதிவு செய்துள்ளன. அதே நேரத்தில் மஹாராஷ்டிராவில், 167 தனியார் மருத்துவமனைகள் மட்டுமே சேர்ந்துள்ளன.
  • அந்தமான் நிகோபர், அருணாச்சல பிரதேசம், சண்டிகர், கேரளா, மிசோரம், சிக்கிம் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து சிகிச்சை கட்டணம் கேட்டு ஒரு மனுகூட வரவில்லை.



விமானப்படை அதிகாரிகள் பங்கேற்ற பாதுகாப்பு மாநாடு
  • பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலை முறியடிப்பது குறித்து ஆய்வு செய்வதற்காக, விமானப் படை உயரதிகாரிகள் பங்கேற்ற மாநாடு, டில்லியில் நடந்தது. 
  • இந்த மாநாட்டுக்கு, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமை வகித்தார். இதில், பயங்கரவாதிகள் மற்றும் நக்சலைட்டுகளின் அச்சுறுத்தலை முறியடிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. 
ராமசாமி படையாட்சியார் மணி மண்டபத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்
  • சுதந்திரப்போராட்ட வீரரான ராமசாமி படையாட்சியாருக்கு கடலூர் மாவட்டம்மஞ்சக்குப்பத்தில் ரூ.2.15 கோடி மதிப்பீட்டில் தமிழக அரசு சார்பில் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. 
  • இந்த மணிமண்டபத்தை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார். மணிமண்டபம் அருகேராமசாமி படையாட்சியாரின் வெண்கலச் சிலையும், ஒரு நூலகமும் அமைக்கப்பட்டுள்ளது.
உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் தொடர்
  • சீனாவில் நடைபெற்ற உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் தொடரில் ஐந்து தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் உட்பட மொத்தம் எட்டுப் பதக்கங்களுடன் இந்திய அணி முதல் இடம் பிடித்துள்ளது.
  • 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவுக்குத் தங்கம் வாங்கிக்கொடுத்துள்ளார் 16 வயதேயான மனு பக்கர். போட்டியின் முடிவில், மொத்தம் 244.7 புள்ளிகள் பெற்ற மனு, ஜூனியர்ஸுக்கான துப்பாக்கிச் சுடுதலில் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
  • சர்வதேச அரங்கில் மீண்டும் ஒரு முறை இளவேனில் வாலறிவனின் பெயர் உரக்க ஒலித்துள்ளது. 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் முதல் இடம் பிடித்த இளவேனில், ஒரே ஆண்டில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார். துப்பாக்கிச் சுடுதல் உலக தரவரிசையில் மூன்றாவது இடத்துக்கும் முன்னேறியுள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel