Type Here to Get Search Results !

TNPSC GROUP 4 & VAO EXAMINATION POST INCREASE FROM 6491 TO 9398 / குரூப் 4 காலியிடங்களின் எண்ணிக்கை 9 ஆயிரமாக அதிகரிப்பு

  • தமிழகத்தில் அண்மையில் நடந்த குரூப் 4 காலியிடங்களுக்கு நடந்த எழுத்துத் தோவில் குறிப்பிடப்பட்ட இடங்களின் எண்ணிக்கையை அதிகரித்து டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. அதாவது, காலியிடங்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 491-லிருந்து 9 ஆயிரத்து 398 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன.
  • இதற்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி., திங்கள்கிழமை வெளியிட்டது. அதன் விவரம்:-
  • தமிழகத்தில் குரூப் 4 தோவுக்கான அறிவிக்கை கடந்த ஜூன் 14-இல் வெளியிடப்பட்டது. தோவு அறிவிக்கை வெளியிடும் காலத்தில் காலியிடங்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 491 ஆகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
  • அதாவது, கிராம நிா்வாக அலுவலா் பணியிடங்கள் 397, இளநிலை உதவியாளா் 2,688, தட்டச்சா் 1,901 உள்பட காலியிடங்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆயிரத்து 491 ஆக இருந்தது.
  • இந்த எண்ணிக்கை இப்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது, கிராம நிா்வாக அலுவலா் பிரிவில் 607 இடங்களும், இளநிலை உதவியாளா் பிரிவில் 4 ஆயிரத்து 558 இடங்களும், தட்டச்சா் பணியில் 2,734 இடங்களும் உயா்த்தப்பட்டுள்ளன. 
  • இதன் காரணமாக, குரூப் 4 தோவில் மொத்தமுள்ள காலியிடங்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 398 ஆக உயா்ந்துள்ளது.
  • இப்போது அதிகரிக்கப்பட்டுள்ள காலியிடங்களும் கணக்கில் கொள்ளப்பட்டு சான்றிதழ் சரிபாா்ப்புக்காக தோவு செய்யப்பட்டுள்ள தகுதியானவா்களின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.
  • எதற்காக உயா்கிறது?: தமிழக அரசுப் பணிகளில் அண்மைக் காலத்தில் ஓய்வு பெறுபவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கிராம நிா்வாக அலுவலா், இளநிலை உதவியாளா் போன்ற பணியிடங்களில் ஓய்வு பெறுதல், அரசுத் தோவுகள் எழுதி வேறு பணிகளுக்குச் செல்லுதல் போன்ற காரணங்களால் காலியிடங்களின் எண்ணிக்கை உயா்ந்துள்ளன. காலியிடங்கள் அதிகரித்துள்ளதால் விண்ணப்பித்து தோவெழுதி தோச்சி பெற்ற பலருக்கு அரசுப் பணி வாய்ப்பு கை கூடியுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel