Type Here to Get Search Results !

23rd NOVEMBER 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

ஆளுநர்கள் மற்றும் துணை நிலை ஆளுநர்களின் 50ஆவது மாநாடு 
  • டெல்லியில் நடைபெற்ற ஆளுநர்கள் மற்றும் துணை நிலை ஆளுநர்களின் 50ஆவது மாநாட்டை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைத்தார்.
  • அப்போது பேசிய அவர், அரசியலமைப்பு வழங்கியுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி, ஆட்சியாளர்களுக்கு முறையாக அனைத்து வழிகாட்டுதல்களையும் ஆளுநர்களால் வழங்க முடியும், நாட்டில் முக்கிய பங்கை ஆளுநர்களால் வகிக்க முடியும் என்றார்.
  • மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, காந்தியின் 150ஆவது பிறந்த தினத்தை கொண்டாடும் இவ்வேளையில், அரசியலமைப்பு சட்டத்தின் அடித்தளமாக விளங்கும் காந்திய சிந்தனைகள், போதனைகளை பின்பற்றுவோம் என உறுதியேற்க வேண்டும் என்றார்.
பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா உஸ்பெஸ்கிஸ்தான் இடையே ஒப்பந்தம்
  • பயங்கரவாதத்துக்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்படுவது தொடர்பாக இந்தியா-உஸ்பெகிஸ்தான் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • பயங்கரவாத எதிா்ப்பில் இருதரப்பும் நல்லுறவை வலுப்படுத்துவது, பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடா்பாக இரு நாட்டுத் தலைவா்களும் ஆலோசனை நடத்தினா்.
  • அதைத்தொடர்ந்து உஸ்பெகிஸ்தான் ராணுவ வீரா்களுக்கு எல்லைப் பாதுகாப்பு, பேரிடா் மேலாண்மை தொடர்பாக இந்தியாவில் பயிற்சியளிக்க இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒப்புக்கொண்டு இருப்பதாகவும் கூறப்பட்ட உள்ளது.



இந்தியா - சிங்கப்பூர் - தாய்லாந்து கடற்படை கூட்டு பயிற்சி
  • வருகின்ற 2020 ஆம் ஆண்டு முதல் இந்தியா சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து இடையே கூட்டு கடற்படை பயிற்சி நடைபெறுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. 
  • சமீபத்தில் இந்திய கத்தார் நாடுகள் இணைந்து போர் பயிற்சியில் ஈடுபடத்தை தொடர்ந்து இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. இந்திய பெருங்கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் தடுக்க முடியாத அளவிற்கு அதிகரித்து வருகிறது.
  • 2008 இல் "பேர்ல் கார்லண்ட்" என்ற திட்டத்தின் அடிப்படையில் இந்தியாவை சுற்றி ஒரு வளையம் போல கடல் வழியாக தன நிலைகளை ஒவொவ்ரு நாட்டிலும் ஏற்படுத்தியது. அதன் பிறகு பிரதமர் மோடி பதவி ஏற்ற பிறகு இந்தியாவின் ஆதிக்கத்தை இந்திய கடற்பகுதியில் நிலை நிறுத்துவதற்க்காக "லுக் ஈஸ்ட் ": (கிழக்கு நோக்கிய கவனம்) என்ற கோட்பாட்டுடன் தென் கிழக்கு ஆசிய நாடுகளுடன் பல ஒப்பந்தங்களை ஏற்படுத்தியது.
  • இந்திய சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே ஆன ராணுவ அமைச்சர்கள் கலந்து கொள்ளும் நான்காவது கட்ட பேச்சு வார்த்தையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்தியாவின் சார்பாக அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் சிங்கப்பூரின் சார்பாக நாக் எங் ஹென் ம் இந்த பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டனர். 
  • அந்தமான் கடற் பகுதியில் நாடாகும் இந்த கூட்டு பயிற்சியின் நோக்கம் இந்திய பசிபிக் கட்டிட பரப்பில் பாதுகாப்பை உறுதி செய்வது மேலும் மூன்று நாடுகளுக்கான கடல் வழி தகவல் தொடர்புகள் எந்த விதத்திலும் பாதிக்காத வண்ணம் ஒத்துழைப்பது, மேலும் இந்த பகுதியில் உள்ள மற்ற நாடுகளின் முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பிற்கு உறுதுணையாக இருப்பதும் இந்த மூன்று நாடுகளின் கூட்டு பயிற்சின் நோக்கமாகும்
பி.சி.ஸ்ரீராமுக்கு உயரிய விருது
  • கோவா திரைப்பட விழாவில், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது.கோவாவில், 50வது சர்வதேச திரைப்பட விழா, 20ல் துவங்கியது. இதில், நடிகர் ரஜினிக்கு, 'கோல்டன் ஐகான்' விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. 
  • இதைத்தொடர்ந்து, நேற்று இந்திய திரைப்பட துறையின் உயரிய விருதுகளில் ஒன்றான, 'லெஜன்ட் ஆப் தி இந்தியன் சினிமா' என்ற விருதை, ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமுக்கு வழங்கியுள்ளனர். விருதை, ஹிந்தி நடிகர் அமிதாப் வழங்கினார். 
வங்கதேச அணிக்கு எதிரான பகல் இரவு டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி சதம்
  • வங்கதேச அணிக்கு எதிரான பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி சதமடித்தார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விராட் கோலி அடித்துள்ள 27 வது சதம் இதுவாகும்.
  • பிங்க் நிறப் பந்துகளில் விளையாடும் பகலிரவு போட்டியில் சதமடித்த முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார்.விராட் கோலி
  • மேலும், சர்வதேச அரங்கில் அதிக சதங்களை விளாசிய வீரர்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். கோலி சர்வதேச அரங்கில் முன்று வகையான போட்டிகளையும் சேர்த்து 70 சதங்களை விளாசியுள்ளார். 
  • அதேநேரத்தில் சர்வதேசப் போட்டிகளில் கேப்டனாக அதிக சதங்களை அடித்த ரிங்கி பாண்டிங்கின் சாதனையையும் கோலி சமன் செய்தார். 
  • பாண்டிங் 376 இன்னிங்ஸில் கேப்டனாக செயல்பட்டு 41 சதங்களைப் பதிவு செய்துள்ளார். கோலி 188 இன்னிங்ஸில் விளையாடி 41 சதம் விளாசியுள்ளார். தொடர்ந்து விளையாடிய கோலி 136 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel