- ஆக்ஸ்ஃபோர்ட் அகராதி, ஆண்டுதோறும் அந்த வருடத்தில் அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட, அதிக முக்கியத்துவம் வாய்ந்த வார்த்தைக்கு 'அந்த ஆண்டின் வார்த்தை' என்ற அங்கீகாரத்தை வழங்கும்.
- அதுபோல், இந்த வருடம் அதிக முக்கியத்துவம் வாய்ந்த வார்த்தையாக, 2019-ம் ஆண்டுக்கான வார்த்தையாக (Word of 2019) 'காலநிலை அவசரம்' (Climate Emergency) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
- இந்த வருடத்தில் மட்டும், இந்த வார்த்தையின் பயன்பாடு 10,796% அதிகரித்துள்ளது. பொதுவாக, 'எமெர்ஜென்சி' என்ற வார்த்தையுடன் பயன்படுத்தப்படும் வார்த்தையாக இருந்த 'ஹெல்த் எமெர்ஜென்சி'யை விட மூன்று மடங்கு அதிகமாக இது பயன்படுத்தப்பட்டுள்ளது.
- இந்த வருடம் மட்டும் உலகின் பல நாடுகளில் 'காலநிலை அவசரம்' அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்தில் ஸ்காட்லாந்திலும் அதைத் தொடர்ந்து மே மாதத்தில் கனடாவிலும் பிரான்ஸிலும் ஆஸ்திரேலியாவின் சிட்னியிலும் 'காலநிலை அவசரம்' அறிவிக்கப்பட்டுள்ளது.
காலநிலை அவசரம்!' - 2019-ம் ஆண்டின் வார்த்தையாக அங்கீகரித்த ஆக்ஸ்ஃபோர்டு அகராதி / 2019 BEST WORD BY OXFORD DICTIONARY
November 23, 2019
0
Tags