Type Here to Get Search Results !

22nd NOVEMBER 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

டாக்டர்கள் எண்ணிக்கையில் தமிழகம் 2வது இடம்
  • இந்தியாவில் டாக்டர்கள் எண்ணிக்கை குறித்த பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 
  • அதில், நாட்டிலேயே அதிக டாக்டர்களை கொண்ட மாநிலங்களில் மஹாராஷ்டிரா முதலிடத்தை பிடித்துள்ளது. அந்த மாநிலத்தில் மட்டும் பதிவு செய்யப்பட்ட டாக்டர்கள், 1,73,384 உள்ளனர். 1,35,456 டாக்டர்களுடன் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது.
  • மூன்றாவது இடத்தை கர்நாடகா (1,22,875), நான்காவது இடத்தை குஜராத் (66,944,) ஐந்தாவது இடத்தை ராஜஸ்தான் (43,388) மாநிலங்கள் பிடித்துள்ளன.
  • நாட்டிலேயே குறைவான டாக்டர்களை கொண்ட மாநிலமாக மிசோரம் இடம் பெற்றுள்ளது. மிசோரமில் வெறும் 74 டாக்டர்களே உள்ளனர்.
விலை உயர்வை கட்டுப்படுத்த 1.2 லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு
  • வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த 1.2 லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வெங்காயம் விலை உயர்வு தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.



சிறந்த செயல்பாட்டுக்காக தமிழக அரசுக்கு 3 விருதுகள்
  • 'இந்தியா டுடே' பத்திரிகையின் சாா்பில் 'மாநிலங்களில் சிறந்த மாநிலம்' விருதுகள் 2019 வழங்கும் விழா தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
  • 'இந்தியா டுடே' குழுமத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இந்தியாவில் பெரிய மாநிலங்களில் அனைத்துத் துறைகளின் செயல்பாட்டில் மிகச் சிறந்த மாநிலம், சட்டம் ஒழுங்கைச் சிறப்பாகப் பராமரிப்பதில் மிகச் சிறந்த மாநிலம், சட்டம் ஒழுங்கு பராமரிப்பில் மிகச்சிறந்த முன்னேற்றம் அடைந்த மாநிலம் ஆகிய மூன்று விருதுகள் தமிழகத்திற்கு வழங்கப்பட்டன.
தென்காசி புதிய மாவட்டம் துவக்கினார் முதல்வர்
  • தென்காசி புதிய மாவட்டத்தை, முதல்வர் இ.பி.எஸ்., துவக்கி வைத்தார்.'திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து பிரித்து, தென்காசியை தலைமையிடமாக வைத்து புதிய மாவட்டம் ஏற்படுத்தப்படும்' என, முதல்வர் ஜூலை, 18ல் அறிவித்தார்.
  • கலெக்டராக, அருண் சுந்தர் தயாளன், எஸ்,பி.,யாக சுகுணா சிங் நியமிக்கப்பட்டுள்ளனர். 
கல்விக்கொள்கை: இந்தியா - ஆஸி., ஆலோசனை
  • டில்லியில் 5வது ஆஸ்திரேலியா- இந்தியா கல்வி கவுன்சில் கூட்டம் நடந்தது. இந்தியா - ஆஸ்திரேலியா நாடுகளுக்கிடையிலான எதிர்கால இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க், ஆஸ்திரேலிய கல்வி அமைச்சர் ஸ்ரீ டான் தெஹானுடன் முக்கிய கல்வி கொள்கை மற்றும் திட்டங்கள் குறித்து பேசினார். 
  • அப்போது அமைச்சர் போக்ரியால் கூறுகையில், உயர்கல்வியில் மேம்பட்ட ஒத்துழைப்புடன் இரு நாடுகளும் தங்கள் உறவை ஆழப்படுத்தும். 
  • உயர்கல்வியின் சர்வதேசமயமாக்கல் மூலம் உயர் கல்வியின் தரத்தை மேம்படுத்த பல திட்டங்களை அரசு தொடங்கியுள்ளது. கல்வி ஆராய்ச்சி மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 
  • கூட்டு ஆராய்ச்சி திட்டங்கள் மூலம் கல்வி ஆராய்ச்சி மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்தும் திட்டத்தை கடந்த ஆண்டு மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் துவக்கியது. இந்த திட்டத்தின் மூலம் 1 வருடத்திற்கும் குறைந்த காலத்தில் 54 கூட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
  • 'ஸ்டடி இன் இந்தியா' திட்டம் சர்வதேச மாணவர் சமூகத்திற்கு தரமான கல்வியை வழங்குவதையும் சர்வதேச மன்றத்தில் இந்திய கல்வி முறையை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.



மகாராஷ்டிரா முதல்வரானார் பட்னாவிஸ்
  • மகாராஷ்டிராவில் நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்காததால் அங்குக் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. 
  • நேற்று வரை சிவசேனா- தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்கப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தது. 
  • இதற்கிடையில் மூன்று நாள் பயணமாக டெல்லி செல்ல இருந்த மகாராஷ்டிரா ஆளுநர் தன் பயணத்தை திடீரென ரத்து செய்தார்.
  • ஒரே இரவில் தேசியவாத காங்கிரஸ் பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்து, தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் முதல்வராக பதவியேற்றுள்ளார். துணை முதல்வராக என்.சி.பியின் அஜித் பவார் பதவியேற்றுள்ளார்.தேவேந்திர பட்னாவிஸ்
காலநிலை அவசரம்!' - 2019-ம் ஆண்டின் வார்த்தையாக அங்கீகரித்த ஆக்ஸ்ஃபோர்டு அகராதி
  • ஆக்ஸ்ஃபோர்ட் அகராதி, ஆண்டுதோறும் அந்த வருடத்தில் அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட, அதிக முக்கியத்துவம் வாய்ந்த வார்த்தைக்கு 'அந்த ஆண்டின் வார்த்தை' என்ற அங்கீகாரத்தை வழங்கும். 
  • அதுபோல், இந்த வருடம் அதிக முக்கியத்துவம் வாய்ந்த வார்த்தையாக, 2019-ம் ஆண்டுக்கான வார்த்தையாக (Word of 2019) 'காலநிலை அவசரம்' (Climate Emergency) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
  • இந்த வருடத்தில் மட்டும், இந்த வார்த்தையின் பயன்பாடு 10,796% அதிகரித்துள்ளது. பொதுவாக, 'எமெர்ஜென்சி' என்ற வார்த்தையுடன் பயன்படுத்தப்படும் வார்த்தையாக இருந்த 'ஹெல்த் எமெர்ஜென்சி'யை விட மூன்று மடங்கு அதிகமாக இது பயன்படுத்தப்பட்டுள்ளது.
  • இந்த வருடம் மட்டும் உலகின் பல நாடுகளில் 'காலநிலை அவசரம்' அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்தில் ஸ்காட்லாந்திலும் அதைத் தொடர்ந்து மே மாதத்தில் கனடாவிலும் பிரான்ஸிலும் ஆஸ்திரேலியாவின் சிட்னியிலும் 'காலநிலை அவசரம்' அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் முதல் 'பகலிரவு' டெஸ்ட் போட்டி
  • இந்தியாவில் முதன் முதலில் 1997ல் மும்பை-டில்லி அணிகள் மோதிய ரஞ்சி கோப்பை போட்டி பகலிரவு ஆட்டமாக நடந்தது. ஆனால் இதில் வெள்ளை நிற பந்து பயன்படுத்தினர்.
  • பகலிரவு டெஸ்ட் போட்டிக்காக முதலில் மஞ்சள், மின்னும் ஆரஞ்ச் நிற பந்துகள் பயன்படுத்தி சோதனை செய்யப்பட்டன. 'டிவி' கேமராக்கள் பந்தை படம் பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. வீரர்களுக்கும் தொல்லை தர, 16 நிறங்கள் மாறி மாறி சோதிக்கப்பட்டு, கடைசியில் 'பிங்க்' பந்து பயன்படுத்தப்படுகிறது.
  • முதலில் பந்தின் தையல் பச்சை நிறத்தில் இருந்தது. தற்போது கருப்பு நிறத்தில் தையல் உள்ளது.
  • வங்கதேச பிரதமரும் மேற்கு வங்க முதல்வரும் இணைந்து இந்த வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் போட்டியைத் தொடங்கி வைத்தனர். வங்கதேச பிரதமருக்கு இந்திய கேப்டன் கோலியை பிசிசிஐ தலைவர் கங்குலி அறிமுகப்படுத்தி வைத்தார். மேற்குவங்க முதல்வர் மம்தாவுக்கு மற்ற வீரர்களைக் கோலி அறிமுகப்படுத்தினார்.
  • இந்திய அணியின் பவுலிங் அட்டாக்கை தாக்குப்பிடிக்க முடியாமல் வங்க தேச வீரர்கள் திணறினர். முடிவில் 30.3 ஓவர்களில் அந்த அணி 106 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
  • இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் விக்கெட் வேட்டையை நடத்தினர். இந்திய அணி சார்பில் இஷாந்த் சர்மா 5 , உமேஷ் 3, முகமது ஷமி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 
  • இந்திய மண்ணில் கடந்த 12 ஆண்டுகளில் இஷாந்த் சர்மா 5 விக்கெட்டுகளை வீழ்த்துவது இதுவே முதல்முறை. அதுமட்டுமல்லாமல் பிங்க் நிறப் பந்துகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரரானார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel