Type Here to Get Search Results !

21st NOVEMBER 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

தமிழ்நாட்டில் பாசன வேளாண்மை நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் தமிழக அரசு ரூ.650 கோடி ஒதுக்கீடு
  • தமிழ்நாட்டில் பாசன வேளாண்மை நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் தமிழக அரசு ரூ.650 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. புதிய அணைக்கட்டுகள் கட்டுதல் மற்றும் நிலத்தடி நீர் செறியூட்டும் பணிகளும் ரூ.650 கோடியில் மேற்கொள்ளப்படும்.
6-10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 'ஷூ' வழங்க அரசாணை
  • அரசு பள்ளியில் 6 முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஷூ, சாக்ஸ் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
  • விலையில்லா காலணிகளுக்கு பதிலாக மாணவர்களுக்கு விலையில்லா ஷூ மற்றும் சாக்ஸ் வழங்கப்படவுள்ளது. 2020-21ஆம் கல்வியாண்டில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளின் மாணவர்களுக்கு ஷூ,சாக்ஸ் வழங்கப்படுகிறது.



ராஜ்நாத் தலைமையிலான பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்றக் குழுவில் சாத்வி பிரக்யா
  • பாதுகாப்பு அமைச்சகம் தொடர்பாக நாடாளுமன்ற நிலைக்குழுவில் சர்ச்சைக்குரிய சாத்வி பிரக்யாவுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. 
  • செப்டம்பர் 29, 2008 ஆம் ஆண்டு மும்பையில் இருந்து 270 கிமீ தொலைவில் இருக்கும் மலேகான் பகுதியில் இரண்டு பைக்குகளில் வைக்கப்பட்டு இருந்த வெடிகுண்டு வெடித்தது. இந்த மோசமான சம்பவத்தில் 7 பேர் பலியானார்கள்.
  • இதில் குற்றஞ்சாட்டப்பட்டு வழக்குகளை சந்தித்து வரும் ஒருவர்தான் சாத்வி பிரக்யா தாக்கூர். பெயிலில் வெளியே வந்த இவர் தற்போது பாஜக சார்பாக போபால் தேர்தலில் போட்டியிட்டு எம்பியாகிவிட்டார். 
  • இந்த நிலையில் தற்போது பிரக்யா தாக்கூர் மத்திய பாதுகாப்பு துறையின் பாராளுமன்ற ஆலோசனை குழுவில் இடம்பெற்றுள்ளார். மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான 21 உறுப்பினர்களை கொண்டது நாடாளுமன்ற ஆலோசனைக் குழு. 
  • இந்த குழுவில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் உறுப்பினர்களாக உள்ளனர். காங்கிரஸ்கட்சியை சேர்ந்த பரூக் அப்துல்லா, திக்விஜய சிங், சரத் பவார் உள்ளிட்டோரும் இந்த ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
உலகளவில் உண்ண உணவில்லாதோர் பட்டியலில் இந்தியா 102வது இடம்: திட்டத்துறை அமைச்சகம் தகவல்
  • உலகளவில் உண்ண உணவில்லாதோர் பட்டியலில் இந்தியா 102வது இடத்தை பெற்றுள்ளது. 2018ஆம் ஆண்டு பட்டியலில் இந்தியா 103வது இடத்தில் இருந்தது என திட்டத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உணவின்றி பசியுடன் இருப்போர் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரம் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ஒருமுறை பயன்படும் பிளாஸ்டிக் பொருள்களுக்கும் கேரளாவில் தடை
  • மக்காத பொருளாக உள்ள பிளாஸ்டிக்குகளுக்கு கேரளாவில் ஏற்கனவே தடை உள்ளது. மாநில எல்லையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பில் கேரள அரசு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. 
  • இந்நிலையில் ஒரு முறை பயன்படுத்தி விட்டு துாக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருள்களுக்கும் வரும் 2020 -ம் ஆண்டு ஜன. 1-ம் தேதி முதல் தடை விதித்துள்ளது. இப்பொருள்கள் உற்பத்திக்கும் தடை விதிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
100 கோடி டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை இந்தியாவுக்கு விற்க அமெரிக்கா ஒப்புதல்
  • இந்திய நாட்டுக் கடற்படைக்கு 102 கோடி டாலருக்கு ஆயுதங்களை விற்க அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது
  • இந்நிலையில் இந்தியா 5 இன்ச் அளவில் 13 எம்.கே. 45 (MK 45) துப்பாக்கிகளை வாங்க விருப்பம் தெரிவித்ததாக அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பு நிறுவனம் கூறி உள்ளது. அத்துடன் 3,500 ஏவுகணை வெடி மருந்துகள் உட்பட மேலும் சில வெடி பொருட்களையும் உதிரிப் பாகங்களையும் வாங்க இந்தியா விருப்பம் தெரிவித்திருக்கிறது.
  • கடந்த நவம்பர் 19 ஆம் தேதி அமெரிக்காவின் பென்டகனின் கீழ் உள்ள பாதுகாப்பு ஒத்துழைப்பு நிறுவனம் இந்தியாவுக்குக் கடற்படை பயன்பாட்டுக்கான துப்பாக்கிகளை விற்பனை செய்வது குறித்த பரிந்துரையை அந்நாட்டுக் காங்கிரஸ் வசம் சமர்ப்பித்தது.



நாட்டின் மிக இளம் வயது நீதிபதி
  • ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர், மாயாங்க் பிரதாப் சிங், 21. ராஜஸ்தான் பல்கலையில், ஐந்தாண்டு எல்.எல்.பி., படிப்பை முடித்த இவர், ராஜஸ்தான் நீதித்துறை சேவைகள் தொடர்பான தேர்வில் வெற்றி பெற்றார். 
  • இதையடுத்து, விரைவில் அவர் நீதிபதியாக பதவியேற்கவுள்ளார். இதன் மூலம், நாட்டின் மிக இளம் வயது நீதிபதி என்ற பெருமை, அவருக்கு கிடைக்கவுள்ளது.
இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றார் மகிந்த ராஜபக்சே
  • இலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சே பதவியேற்றார். அவருக்கு அதிபர் கோத்தபாய ராஜபக்சே வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
  • இதனையடுத்து இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்க வருமாறு எதிர்க்கட்சித் தலைவரான மகிந்த ராஜபக்சேவை, கோத்தபாய அழைத்திருந்தார். இந்நிலையில் இன்று முற்பகல் கோத்தபாய ராஜபக்சேவை நேரில் சந்தித்து தமது பதவி விலகல் கடிதத்தை ரணில் கொடுத்தார்.
  • இலங்கையின் பிரதமராக 3-வது முறையாக மகிந்த ராஜபக்சே பதவியேற்றுள்ளார்.
உலக கோப்பை துப்பாக்கி சுடும் போட்டி: தங்கம் வென்ற தமிழக வீராங்கனை
  • தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் பிரேசிலில் நடைபெற்ற உலக கோப்பை துப்பாக்கி சூடு போட்டியில் தங்கம் வென்றுள்ளார்.
  • இந்நிலையில் சீனாவில் உலக கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டி நடைபெற்று வரும் நிலையில், பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் பங்கேற்றார். 
  • அதன் இறுதிச் சுற்று இன்று நடைபெற்ற நிலையில் 250.8 புள்ளிகள் பெற்று தங்க பதக்கத்தை வென்றுள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel