Type Here to Get Search Results !

20th NOVEMBER 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

தமிழகத்தில் ரூ.100 கோடியில் மின்சார ஆட்டோக்கள்: துபை தொழில் குழுவிடம் முதல்வா் பழனிசாமி தகவல்
  • மின்சார ஆட்டோக்கள் ஒப்பந்தங்களின் அடிப்படையில், ஐக்கிய அரபு அமீரக நிறுவனமாகிய டிபி வோல்டு நிறுவனமானது, சென்னை எண்ணூா் அருகே ரூ.1,000 கோடி முதலீட்டில் சரக்கு பெட்டக பூங்காவுக்கான பணிகளை தொடங்கியுள்ளது. 
  • மேலும், பெட்ரோல் ஆட்டோக்களை சூழலுக்கு உகந்த மின்சார ஆட்டோக்களாக மாற்றி இயக்கும் திட்டத்தில் ரூ.100 கோடி முதலீட்டில் கே.எம்.சி., மற்றும் மெளடோ எலெக்ட்ரிக் நிறுவனங்கள் இணைந்து மின்சார ஆட்டோக்களை இந்த மாத இறுதியில் இருந்து படிப்படியாக உற்பத்தி செய்யவுள்ளன.
தெலுங்கானா எம்.எல்.ஏ.,வின் இந்திய குடியுரிமை ரத்து
  • தெலுங்கானாவின் ஆளும் கட்சியான தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி எம்.எல்.ஏ.,வாக ரமேஷ் சென்னாமனேனி பதவி வகித்து வந்தார். இவர் ஐரோப்பிய நாடான ஜெர்மன் குடியுரிமை பெற்றவர் என்றும், போலி ஆவணங்கள் மூலம், இந்திய குடியுரிமை பெற்றுள்ளார் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. 
  • விசாரித்த மத்திய உள்துறை அமைச்சகம் எம்.எல்.ஏ., ரமேஷின் இந்திய குடியுரிமையை ரத்து செய்து உத்தரவிட்டது.
மேயா் பதவிக்கு மறைமுகத் தோதல்: அவசரச் சட்டம் பிறப்பிப்பு
  • தமிழகத்தில் மாநகராட்சி மேயா், நகராட்சி, பேரூராட்சித் தலைவா்கள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிகளுக்கு மறைமுகத் தோதல் மூலமாகத் தோவு செய்வதற்கான அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்துக்கு தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் தெரிவித்துள்ளாா்.



3 ரபேல் விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைப்பு
  • இந்திய விமானப்படை வீரர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களின் பயிற்சிக்காக, மூன்று ரபேல் போர் விமானங்கள், நேற்று ஒப்படைக்கப்பட்டன.
  • ஐரோப்பிய நாடான பிரான்சிடம் இருந்து, 59 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், 36 ரபேல் போர் விமானங்கள் வாங்க, 2016ல் ஒப்பந்தம் போடப்பட்டது.
  • முதல் ரபேல் போர் விமானம், கடந்த அக்.8ல், இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், முதல் தவணையாக, நான்கு ரபேல் விமானங்கள், 2020ல், ஒப்படைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 
  • இந்நிலையில், இந்திய விமானப்படை பைலட்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக, மூன்று ரபேல் போர் விமானங்களை, அந்நிறுவனம் நேற்று ஒப்படைத்தது. 'பிரான்சில் உள்ள நமது வீரர்கள், இந்த விமானத்தில் பயிற்சி மேற்கொள்வர்' என, தெரிவிக்கப்பட்டது.
அணு ஆயுதங்களை ஏந்திச்செல்லும் பிருத்வி ஏவுகணை சோதனை வெற்றி
  • அணு ஆயுதங்களை சுமந்து சென்று குறிப்பிட்ட இலக்குகளைத் தாக்கவல்ல பிருத்வி ஏவுகணை சோதனை ஒடிசா மாநிலத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. 
  • இரவு நேரத்திலும், சுமார் 300 கி.மீ. தூரம் பறந்து சென்று அங்குள்ள இலக்கை தாக்கி அழிக்கவல்ல பிரித்வி ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது.
  • ஒடிசாவில் வழக்கமாக ஏவுகணை சோதனை நடத்தப்படும் கடற்கரைப் பகுதியில் இச்சோதனை நடத்தப்பட்டது. இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டிஆர்டிஓ அமைப்புதான் ஏவுகணைகளை தயாரித்து ராணுவத்திற்கு வழங்கி வருகிறது.
பிபிசிஎல் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • இந்திய பொருளாதாரத்தில் தற்போது மந்தநிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளது. இதற்காக மத்திய அரசு சார்பில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் அவ்வப்போது அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
  • இந்நிலையில், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் உள்ளிட்ட 5 பொதுத்துறை வங்கிகளின் பங்குகளை விற்பனை செய்ய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 
  • இந்திய கப்பல் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் உள்ளிட்ட 5 பொதுத்துறை நிறுவனங்கள் அதில் அடங்கும். பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனின் 53.29 சதவீதம் பங்குகளை விற்பனை செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.



கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்குச் சிறப்பு விருது வழங்கப்பட்டது
  • இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சா்வதேச திரைப்பட விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 50-ஆவது சா்வதேச திரைப்பட விழா கோவாவில் இன்று முதல் 28-ம் தேதி வரை 9 நாள்கள் மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. 
  • 50-ஆவது ஆண்டு சா்வதேச திரைப்பட விழாவின் கெளரவ விருதை நடிகா் ரஜினிகாந்துக்கு வழங்குவதாக அறிவித்தது மத்திய அரசு. 'ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி' என்ற விருது இன்று ரஜினிக்கு வழங்கப்பட்டது. ரஜினிக்கு இந்த விருதை பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் வழங்கினார். விருது வழங்குவதற்கு முன்பு ரஜினி குறித்த குறும்படம் ஒன்று விழா 
குருவாயூர் போல சபரிமலை கோயிலுக்கும் தனிச் சட்டம் கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
  • சபரிமலை விவகாரம் தொடர்பாக நீதிபதி ரமணா முன்பு வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. அதில் குருவாயூர் உள்ளிட்ட கோயில்களை போல சபரிமலைக்கும் கோயில் நிர்வாகம் மற்றும் பக்தர்களின் நலனுக்காக தனிச்சட்டத்தை கேரள அரசு உருவாக்க வேண்டும்.
  • ஜனவரி 3-ஆம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜப்பானின் நீண்ட கால பிரதமர்; ஷின்ஸோ அபே சாதனை
  • ஜப்பானில் மிக நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் என்ற சாதனையை ஷின்ஸோ அபே படைத்துள்ளார்.ஜப்பான் பிரதமராக ஷின்ஸோ அபே பொறுப்பேற்று நவ.,20 2,887 நாள்கள் நிறைவடைந்தன. 
  • இதன் மூலம் அந்த நாட்டில் மிக நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். அவருக்கு முன்னதாக டாரோ கட்சுரா, ஜப்பானில் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த பிரதமர் என்ற பெருமையை பெற்றிருந்தார். 
  • 1901 முதல் 1913ம் ஆண்டு வரை அவர் பிரதமராக இருந்தா். அவரது சாதனையை ஷின்ஸோ அபே முறியடித்துள்ளார்.இதுமட்டுமன்றி, ஜி7 நாடுகளில் மிக நீண்ட காலம் பிரதமர் பொறுப்பை வகித்த 2வது தலைவர் என்ற பெருமையையும் ஷின்ஸோ அபே பெற்றுள்ளார். 
  • இந்த வரிசையில், 2005 முதல் ஜெர்மன் பிரதமராக பொறுப்பு வகித்து வரும் ஏஞ்சலா மெர்கல் முதலிடத்தில் உள்ளார். ஷின்ஸோ அபேயின் தற்போதைய பதவிக்காலம் 2021ம் ஆண்டு நிறைவடைகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel