Type Here to Get Search Results !

13th NOVEMBER 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

தமிழ்நாடு உள்கட்டமைப்பு நிதிக்கு ரூ.720 கோடி: சிகாகோ நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்
  • அப்போது, சிகாகோ குளோ பல் ஸ்ட்ராஜிக் அலையன்ஸ் நிறுவனத்தின் உதவியுடன், தமிழ்நாடு உள்கட்டமைப்பு நிதி மற்றும் உறைவிட நிதிக்கு ரூ.720 கோடியை ஈர்ப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. 
  • இந்த ஒப்பந்தத்தில் குளோபல் ஸ்ட்ராஜிக் அலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் விஜயபிரபாகர், தமிழ்நாடு நிதித் துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
  • அமெரிக்கா சென்றுள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை கையெழுத்தானது.



சென்னை பாண்டி பஜால் ஸ்மார்ட் நடைபாதை வளாகம் திறந்தார் முதல்வர்
  • சென்னை பாண்டி பஜாரில் ஸ்மார்ட் நடைபாதை வளாகம் திறக்கப்பட்டுள்ளது. இதை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பார்வையிட்டார்.
  • ரூ 40 கோடி மதிப்பில் நடைபெற்ற இந்த பணிகளால் தமிழகத்தில் முதல் முறையாக பாண்டி பஜார் சாலை முழுமை அடைந்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 23 சாலைகள் அமைக்கப்பட்டன. பாதசாரிகளுக்கு முன்னுரிமை அளித்து வாகன போக்குவரத்தை சீரமைப்பதே இதன் நோக்கமாகும்.
  • இந்த நிலையில் இதற்கான பணிகள் நிறைவடைந்து இன்று மக்கள் பயன்பாட்டுக்காக திறந்துவிடப்பட்டது. இதை கோயில் மணி அடித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்துவைத்தார்.
விலை உயர்வு காரணமாக சில்லறை பணவீக்கம் அக்டோபரில் 4.62% ஆக உயர்ந்தது
  • இந்தியாவின் சில்லறை பணவீக்க விகிதம் அக்டோபரில் 4.62 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதாவது இந்த சில்லறை பணவீக்கத்தை முந்தைய மாதத்துடன் (செப்டம்பர்) 3.99% உடன் ஒப்பிடும்போது, அக்டோபரில் பணவீக்க விகிதம் அதிகமாக இருந்துள்ளது என பொருளாதார ஆய்வாளர்களின் கணித்துள்ளனர்.
உலகின் முதல் எழுந்து நிற்கும் வகையிலான வீல்சேரை தயார் செய்த ஐஐடி மெட்ராஸ்
  • மெட்ராஸ் ஐஐடியில் படிக்கும் மாணவர்கள் குழு ஒன்று முதல்முறையாக எழுந்து நிற்கும் வகையிலான வீல்சேரை உருவாக்கியுள்ளனர்.
  • இந்த வீல்சேரில் உட்கார்ந்து கொண்டும் செல்லலாம், தேவையான போது எழுந்து நிற்கவும் செய்யலாம். எனவே இனி மாற்றுத்திறனாளிகள் உட்கார்ந்து கொண்டே இருக்க வேண்டிய அவசியம் இல்லை. 
  • இந்த வித்தியாசமான வீல்சேரின் விலை ரூ.15 ஆயிரம் மட்டுமே என்றும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்,



தீர்ப்பாயங்களைப் பாதிக்கும் 2017ஆம் ஆண்டு நிதி சட்டத்தின் விதிமுறைகள் ரத்து: உச்சநீதிமன்றம் உத்தரவு
  • தீர்ப்பாயங்களைப் பாதிக்கும் 2017ஆம் ஆண்டு நிதி சட்டத்தின் விதிமுறைகளை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இந்த நிதி சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள விதிகள் மூலம் சட்டத்தை மீறும் வகையில் உள்ளது. எனவே புதிய விதிகளை உருவாக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகாவில் 17 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் ஏற்பு
  • கர்நாடகாவில், 17 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை, உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. எனினும், 2023ம் ஆண்டு வரை தேர்தலில் போட்டியிட, அவர்களுக்கு, அப்போதைய சபாநாயகர் விதித்த தடையை ரத்து செய்த நீதிபதிகள், அவர்கள், தேர்தலில் போட்டியிடலாம் என, அறிவித்தனர். 
'உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் வரும்'
  • உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் அலுவலகம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வரையறைக்குள் வரும் என்று இந்திய உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
  • தலைமை நீதிபதியின் அலுவலகம் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005இல் வரையறுக்கப்பட்டுள்ள 'பொதுமக்களுடன் தொடர்புடைய அமைப்பு' எனும் விளக்கத்துக்குள் வருவதாக ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று ஏக மனதாக தீர்ப்பளித்துள்ளது.
  • "வெளிப்படைத்தன்மை நீதித்துறையின் சுதந்திரத்தை பாதிக்காது; அதை வலுப்படுத்தவே செய்யும்," என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
புடினுடன்- பிரதமர் மோடி சந்திப்பு
  • பிரிக்ஸ் மாநாட்டில்பங்கேற்பதற்காக பிரேசில் சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்தார். அப்போது இரு தரப்பு உறவுகள் குறித்து இருவரும் விவாதித்தனர்.
அமெரிக்க அருங்காட்சியக அறங்காவலராக நீடா அம்பானி
  • அமெரிக்காவின் நியூயார்க் நகரத்திலுள்ள பெருநகர கலை அருங்காட்சியகம் 1870-ம் ஆண்டு அமெரிக்க குடிமகன்கள், தொழிலதிபர்கள், நிதியாளர்களால் தொடங்கப்பட்டது. 
  • தற்போது அந்த அருங்காட்சியகத்தில், 5,000 ஆண்டுகளை உள்ளடக்கும் வகையில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட கலைப் பொருள்கள் பார்வையாளர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
  • இந்த அருங்காட்சியகத்தின் கௌரவ அறங்காவலராக ரிலையன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனர் நீடா அம்பானிக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பை அருங்காட்சியகத்தின் தலைவர் டேனியல் பிராட்ஸ்கி அறிவித்தார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel