Type Here to Get Search Results !

14th & 15th NOVEMBER 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

சென்னை துறைமுகத்தில் ரூ. 185 கோடி செலவிலான வளா்ச்சித் திட்டங்கள்
  • சென்னை துறைமுகத்தில் சுமாா் ரூ.185 மதிப்பிலான வளா்ச்சித் திட்டங்களை, மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சா் (தனிப்பொறுப்பு) மன்சூக் எல். மாண்டேவியா தொடக்கி வைத்தாா்.
  • இதனையடுத்து, ரூ. 14 கோடி செலவில் புதிதாக வாங்கப்பட்டுள்ள எண்ணெய்யை உறிஞ்சி எடுக்கும் 'மருதம்' எனப் பெயரிடப்பட்ட கப்பலை அமைச்சா் மாண்டேவியா கொடியசைத்து இயக்கி வைத்தாா். 
  • பின்னா், ரூ. 58 கோடி செலவில் ஐந்தாண்டு ஒப்பந்த அடிப்படையில் தனியாா் நிறுவனம் வழங்கியுள்ள அதிநவீன இழுவைக் கப்பலை இயக்கி வைத்த அவா், துறைமுகத்தின் பல்வேறு பகுதிகளையும் பாா்வையிட்டாா்.
துணை முதலமைச்சருக்கு 'பண்பின் சிகரம்' விருது
  • அமெரிக்கா சென்றுள்ள துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பண்பின் சிகரம் விருது, வீரத்தமிழன் பட்டம் வழங்கப்பட்டது. பத்மினி ரங்கநாதன் டிரஸ்டி சார்பில் பண்பின் சிகரம் விருது, தமிழ்ச்சங்கம் சார்பிலி வீரத்தமிழன் பட்டம் வழங்கப்பட்டது.
  • மேலும், பல்வேறு தமிழ் அமைப்புகள் சார்பில் நடைபெற்ற விழாவில் டெக்சாஸின் ஃபேர்லாண்ட் டாம்ரிட் நவம்பர் 14ஆம் தேதியை 'ஓபிஎஸ் நாள்' என அறிவித்து துணை முதலமைச்சரை கவுரவப்படுத்தினார்கள்.
ரபேல்' ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை; மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நற்சான்று
  • 'பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, 'ரபேல்' போர் விமானம் வாங்கியதில் முறைகேடில் ஈடுபட்டதாகக் கூறப்படும் புகாரில், எந்த முகாந்திரமும் இல்லை. 
  • ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக, எப்.ஐ.ஆர்., பதிவு செய்து, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களிலும், எந்த முகாந்திரமும் இல்லை' என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 
ஹிந்து பெண்களுக்கு மட்டுமானது இல்லை! பொது கொள்கை வகுக்க சுப்ரீம் கோர்ட் முடிவு
  • சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள், அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்களை, ஏழு நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றி, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 
  • மொத்தம் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வில், மூன்று பேர், இந்த மாற்றத்துக்கு பரிந்துரை செய்தனர். மீதமுள்ள இரண்டு நீதிபதிகள், மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர். இந்நிலையில், ஏழு பேர் அடங்கிய அமர்வு மறு ஆய்வு செய்து தீர்ப்பு வழங்கும் வரை, சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்ல, தடை இல்லை என, நீதிபதிகள் தெரிவித்தனர்.



2019-20ம் நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 5.6 % ஆகலாம் கணிப்பை குறைத்தது மூடிஸ்
  • முதலீட்டாளர்கள் சேவை நிறுவனமான மூடிஸ் வெளியிட்டுள்ள தகவலின்படி, 'மார்ச் 2020ல் முடியும் இந்தியாவின் 2019 நிதி ஆண்டின் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 2018 நிதி ஆண்டின் 6.8 சதவீதத்தில் இருந்து குறைந்து, 5.8 சதவீதமாக இருக்கும். 2020 நிதி ஆண்டின் வளர்ச்சி 6.6 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை இருக்கக்கூடும்' என்று ஒரு மாதத்திற்கு முன்பு கணிப்பு வெளியிட்டது. 
  • அந்த கணிப்பை தற்போது மேலும் குறைத்துள்ளது. அதாவது ஜிடிபி வளர்ச்சி 5.6 சதவீதமாக இருக்கும் என்று குறைத்துள்ளது.மந்தமான பொருளாதார வளர்ச்சி நீடிப்பதால், அரசின் நிதி திரட்டும் திட்டங்களுக்கான வாய்ப்புகள் குறைந்து, கடன் சுமை அதிகரிப்பதையும் தவிர்க்க முடியாத நிலை ஏற்படும் என்று மூடிஸ் எச்சரித்துள்ளது. 
ஸ்கேட்டிங்கில் இந்திய சிறுமி கின்னஸ் சாதனை
  • கண்களை கட்டிக் கொண்டு அதிவேகமாக ஸ்கேட்டிங் செய்து, கர்நாடகாவை சேர்ந்த 12 வயது சிறுமி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
  • கர்நாடக மாநிலம் ஹப்பல்லியை சேர்ந்த 7ம் வகுப்பு படிக்கும் சிறுமி ஓஜல் நலாவடே என்பவர், கண்களை கட்டிக் கொண்டு ஸ்கேட்டிங் செய்து, 400 மீட்டர் தூரத்தை 51 நொடிகளில் அதிவேகமாக கடந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இவரது சாதனையை பலரும் பாராட்டி வருகின்றனர்.
முதல் பெண் அட்வகேட் ஜெனரல் நியமனம்
  • இந்திய ராணுவம் வெளியிட்ட செய்தி குறிப்பில், இந்திய ராணுவத்தின் முதல் பெண் அட்வகேட் ஜெனராலாக லெப்டினன்ட் கர்னல் ஜோதி சர்மா நியமிக்கப்படுகிறார். இவர் ஷெசல்ஸ் நாட்டின் ராணுவ சட்ட நிபுணராக நியமிக்கப்படுகிறார் என கூறப்பட்டுள்ளது.
கர்நாடகாவுக்கு அணை கட்ட அனுமதி: தமிழக மனு தள்ளுபடி
  • கர்நாடகாவில் தொடங்கி கிருஷ்ணகிரி வழியாக கடலூர் வரை செல்கிறது தென்பெண்ணை ஆறு. இதன் கிளை ஆறான மார்க்கண்டேய நதியில் அணை கட்டுவதற்கு கர்நாடகா திட்டமிட்டது. இதனால் தமிழகத்துக்கு நீர்வரத்து குறையும் என கர்நாடகா அணை திட்டத்திற்கு எதிராக தமிழகம் வழக்கு தொடர்ந்தது.
  • இன்று இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கர்நாடகாவுக்கு அணை கட்ட அனுமதி அளித்து தமிழகத்தின் மனுவை தள்ளுபடி செய்தது.



அரசுப் பணி பதவி உயர்வில் இடஒதுக்கீடு சட்டத் திருத்தம் ரத்து - உயர்நீதிமன்றம்
  • தமிழகத்தில் அரசு பணிகளில் 69 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. பணி நியமனத்தில் மட்டுமல்லாது, ஏற்கெனவே பணியில் உள்ளவர்களுக்கும் பணி மூப்பு மற்றும் பதவி உயர்விலும் சுழற்சி முறையில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. 
  • இதை எதிர்த்து கடந்த 2003ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில், சுழற்சி முறை இடஒதுக்கீட்டை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை, கடந்த 2016-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
  • இந்நிலையில், அரசு பணியில் உள்ளவர்களுக்கு பணி மூப்பு, பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்கும் வகையில், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சட்ட விதியில் அரசு புதிதாக திருத்தங்களை கொண்டு வந்தது. 
  • இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், டீக்கா ராமன் அமர்வு, தமிழக அரசின் இந்த நடைமுறையால் 69 சதவீதத்துக்கும் அதிகமாக இடஒதுக்கீடு வழங்கப்படுவதாக கூறினர். 
  • விதிகளுக்கு புறம்பாக பின்பற்றப்பட்ட இந்த நடைமுறையை ஏற்றுக்கொள்ள முடியாது என கூறிய நீதிபதிகள், தமிழக அரசின் இந்த சட்ட விதிகள், அரசியல் சாசனத்திற்கு எதிரானது என தீர்ப்பளித்தனர். 
  • மேலும் அரசு ஊழியர்களின் மதிப்பெண் தகுதி அடிப்படையில் புதிய பணி மூப்பு பட்டியலை 12 வாரங்களுக்குள் தயாரிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
'நீர் பதிவு' மொபைல் செயலி அறிமுகம்
  • புதுச்சேரியில் அமைந்துள்ள ஏரி, குளம் உள்ளிட்ட அனைத்து நீர் நிலைகள் குறித்த விபரங்களை டிஜிட்டல் மயமாக்கும் நோக்கத்தில், 'நீர் பதிவு' என்ற மொபைல் செயலியை, புதுச்சேரி அரசுடன் இணைந்து, தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (நீரி) உருவாக்கி உள்ளது. 
  • இந்த மொபைல் செயலி மூலமாக, புதுச்சேரியில் அமைந்துள்ள நீர் நிலைகள் குறித்த முழுமையான விபரங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ள முடியும். நீர் நிலைகள் தொடர்பான புகார்களையும் செயலி மூலமாக பதிவு செய்யலாம்.
3000 ஆண்டு பழமையான நகரம் பாக்.கில் கண்டுபிடிப்பு
  • பாகிஸ்தான் மற்றும் இத்தாலியைச் சேர்ந்த தொல்பொருள் ஆய்வாளர்கள் இணைந்து பாகிஸ்தானில் பண்டைய நகரங்கள் குறித்த தொல்பொருள் ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர். கூட்டு அகழ்வாராய்ச்சியில் வடமேற்கு பாகிஸ்தானில் 3000 ஆண்டுகள் பழமையான நகரத்தைக் கண்டறிந்துள்ளனர். அதன் பெயர் பசிரா என்று தெரிவித்துள்ளனர்.
  • அந்நகரத்தில் ஹிந்து கோயில்கள் நாணயங்கள் பானைகள் மற்றும் ஆயுதங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அந்நகரத்தில் பேரரசர் அலெக்ஸாண்டர் கி.பி. 326ல் படைகளுடன் வந்து எதிரிகளுடன் போரிட்டு 'பசிரா' என்ற கோட்டையை உருவாக்கியதாக அங்கு கிடைத்துள்ள ஆதரங்கள் மூலம் தொல்பொருள் ஆய்வாளர்கள் நம்புகின்றனர். 
  • அலெக்ஸாண்டர் வருகைக்கு முன்னர் அந்நகரத்தில் ஹிந்து ஷாகி புத்த மதத்தினர் வாழ்ந்து வந்ததாக தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel