Type Here to Get Search Results !

16th NOVEMBER 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

வாடகை வீட்டு வசதி சட்டத்தில் திருத்தம் அவசர சட்டம் பிறப்பிப்பு
  • தமிழ்நாடு வாடகை வீட்டு வசதி சட்டப்படி, வாடகை ஒப்பந்தங்கள் ஏற்படுத்துவதற்கான அவகாசத்தை, ஓராண்டுக்கு நீட்டித்து, அவசர சட்டம் பிறப்பிக்கப் பட்டுள்ளது.
  • தமிழகத்தில், வாடகை வீட்டு வசதி சட்டம் எனப்படும், நில உரிமையாளர்கள், குத்தகைதாரர்கள் பொறுப்புகள், உரிமைகள் சட்டம், 2017ல் நிறைவேற்றப் பட்டது. இதற்கான விதிமுறைகள், 2019 பிப்., 22ல் அமலுக்கு வந்தன. 
  • இந்த சட்ட விதிகள் அமலுக்கு வந்ததில் இருந்து, 90 நாட்களுக்குள், வீடு மற்றும் நிலத்தை வாடகைக்கு விடுவோரும், பெறுவோரும் சட்ட ரீதியான, ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும். நிர்வாக நடைமுறைகள் காரணமாக, இதை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது.
  • எனவே, ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான அவகாசத்தை, 210 நாட்களாக நீட்டித்து, சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. தற்போது, இந்த அவகாசத்தையும் நீட்டிக்க வேண்டும் என, பல்வேறு தரப்பில் இருந்து, அரசுக்கு கோரிக்கை வந்துள்ளது. 
  • அதனால், இச்சட்டத்தின் நான்காவது பிரிவின், உட்பிரிவு இரண்டில், வாடகை ஒப்பந்தங்கள் செய்து கொள்வதற்கான அவகாசம், 210 நாட்கள் என்பது, 575 நாட்களாக திருத்தப் பட்டுள்ளது. இந்த திருத்தத்துக்கான அவசர சட்டத்தை, கவர்னர் பன்வாரிலால் புரோஹித் பிறப்பித்து உள்ளார். 
பழுப்பு நிலக்கரி படிமம் ஆய்வு: என்எல்சி புரிந்துணர்வு ஒப்பந்தம்
  • ராமநாதபுரம் மாவட்டத்தில் பழுப்பு நிலக்கரிப் படிமங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக என்எல்சி இந்தியா நிறுவனமும், மத்திய கனிம வளம் கண்டறியும் நிறுவனமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டன.
  • இதன் ஒரு பகுதியாக, ராமநாதபுரம் மாவட்டத்தின் பாண்டியூர், ஆர்.எஸ்.மங்கலம் பகுதிகளில் பழுப்பு நிலக்கரி வளங்களை 2019-20ஆம் நிதியாண்டில் ஆய்வு செய்ய மத்திய நிலக்கரித் துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது. 



ரூ.3,400 கோடியில் நவீன மின்நிலையம் முதல் முறையாக தமிழகத்தில் தயாரானது 800 கிலோ வோல்ட் திறனில் அமைக்கப்பட்டு வரும் துணை மின் நிலையம்
  • தென் மாநிலங்களில், முதல் முறையாக, தமிழகத்தில், 3,400 கோடி ரூபாய் செலவில், 800 கிலோ வோல்ட் திறனில் அமைக்கப்பட்டு வரும், அதிநவீன துணை மின் நிலையத்தின் கட்டுமான பணி முடிவடைந்துள்ளது.
  • மத்திய அரசின், 'பவர்கிரிட் கார்ப்பரேஷன்' நிறுவனம், பிற மாநிலங்களில் இருந்து, மின் வழித்தடங்கள் வாயிலாக, தமிழகத்தில் உள்ள, அதன், 765, 400 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்களுக்கு மின்சாரம் எடுத்து வருகிறது. 
  • அங்கிருந்து, அவற்றின் அருகில் உள்ள, தமிழக மின் வாரியத்தின், 400 கி.வோ., துணை மின் நிலையங்களில் மின்சாரம் பெறப்பட்டு, மின் இணைப்புகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. 
  • இதனால், சத்தீஸ்கரில் இருந்து தமிழகத்திற்கும்; தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கும், அதிக மின்சாரம் எடுத்துச் செல்ல முடியும்.
அக்னி -2 ஏவுகணை சோதனை வெற்றி
  • ஒடிசா மாநிலத்தில் நடத்தப்பட்ட அக்னி-2 ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது .ராணுவத்திற்கு உதவும் வகையில் தயாரிக்கப்பட்ட அக்னி-2 ஏவுகனை ஒடிசா மாநிலம் பாசோர் பகுதியில் பரிசோதிக்கப்பட்டது.
  • இதனையடுத்து 2 ஆயிரம் கி.மீ.,தொலைவு சென்று தாக்கும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாகனம் ஓட்டுவதற்கு உலகிலேயே மோசமான இடம் மும்பை
  • 100 நகரங்களில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், கனடாவில் உள்ள கல்கரிஎனும் நகரம், வாகனம் ஓட்டுவதற்குச் சிறந்த நகரமாகத்தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. வாகனநெரிசலும் விபத்துகளும் குறைவாக இருப்பது மற்றும் வாகனபயன்பாட்டுச்செலவு உள்ளிட்ட 15 காரணிகளின் அடிப்படையில் இது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
  • இந்த ஆய்வு முடிவில், ஜப்பானின் ஒசாகா நகரம் மிகக் குறைவான சாலை இடையூறுகள் கொண்ட நகரமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 100 நகரங்களின் பட்டியலில், மும்பை 100-வது இடத்தில் உள்ளது. 
  • வாகனம் ஓட்டுவதற்கு மோசமான சூழல் கொண்ட நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது, மும்பை. 
  • பெட்ரோல் விலை, சாலை வரி, அதிக வாகன விபத்து உயிரிழப்புகள், வாகன நெரிசல், கார்களின் சராசரி வயது மற்றும் சிட்டியின் ஆவரேஜ் வேகம் போன்ற விஷயங்களைக் கணக்கிட்டதில், 100 மதிப்பெண்களுக்கு 1 மதிப்பெண் மட்டுமே வாங்கி கடைசி இடத்தைப் பெற்றுள்ளது மும்பை. 
  • இந்த வரிசையில், கொல்கத்தா 3-ம் இடத்தில் உள்ளது. 
  • பெட்ரோல் விலை, நார்வேயில் இருக்கும் ஓஸ்லோ எனும் நகரத்தில் அதிகமாக இருப்பதாக இந்த ஆய்வு சொல்கிறது (இங்கே எலெக்ட்ரிக் கார்களின் பயன்பாடு அதிகம்). 
  • இந்த நகரத்தில், ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 1.91 டாலர் (137 ரூபாய்). பெட்ரோல் விலை குறைவான இடமாக நைஜீரியாவில் இருக்கும் லகோஸ் நகரம் உள்ளது. இங்கே, பெட்ரோல் விலை 0.40 டாலர்/லிட்டர்(29 ரூபாய்).



20 லட்சம் மரங்களை நட்ட பெண்மணியை கௌரவித்த UNESCO
  • இந்தியாவின் தெலுங்கானாவின் சங்கரெட்டி மாவட்டத்தில் உள்ள பாஸ்தாபூர் கிராமத்தில் வசிக்கும் சில்கப்பள்ளி அனுசயம்மா 22 கிராமங்களில் 20 லட்சம் மரங்களை நட்டு நல்வழி காண்பித்துள்ளார்.
  • அவற்றை நடவு செய்வதோடு, அதை பராமரித்து வருவதையும் தனது வழக்கமாக கொண்டு வந்துள்ளார். அவரது இந்த பணிக்காக யுனெஸ்கோ அவரை கௌரவித்துள்ளது.
டைபாய்டுக்கு புதிய தடுப்பூசி: முதலில் அறிமுகப்படுத்திய பாக்.,
  • உலகிலேயே டைபாய்டு காய்ச்சலுக்கு முதன் முறையாக தடுப்பூசியைப் பாகிஸ்தான் அறிமுகம் செய்துவைத்துள்ளது. பாகிஸ்தானின்சிந்து மாகாணத்தில் டைபாய்டு காய்ச்சலில் ஏராளமானோர் ஆண்டுதோறும் உயிரிழப்பதால், அங்கு முதன்முதலில் இந்த தடுப்பூசியைப் பாகிஸ்தான் அறிமுகம்செய்துள்ளது.
  • கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து தடுப்பூசிகளால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு சல்மோனெல்லா டைபி பாக்டீரியா எனப்படும் சூப்பர்பக் டைபாய்டு காய்ச்சல் பரவியது. சிந்து மாகாணத்தில் மட்டும் 11 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு, உயிரிழப்பு 20 சதவீதம் அதிகரித்தது. 
  • உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல் இதையடுத்து சூப்பர்பக் டைபாய்டு காய்ச்சலுக்காக "தி டைபாய்ட் கான்ஜுகேட் வாக்ஸின்"(டிசிவி) தடுப்பூசியை பாகிஸ்தான் அறிமுகம் செய்துள்ளது. 
ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.30,142 கோடி இழப்பு இயக்குநர் பொறுப்பில் இருந்து அனில் அம்பானி விலகல்
  • இந்திய தொலைத்தொடர்பு துறையில் மிக முக்கியமான நிறுவனம் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம். அந் நிறுவனத்தின் இயக்குனர் பொறுப்பிலிருந்து அனில் அம்பானி ராஜினாமா செய்துள்ளார். அவருடன் 4 உயரதிகாரிகளும் விலகி இருக்கின்றனர்.
  • சாயா விரானி, ரைனா கரானி, மஞ்சரி காகேர், சுரேஷ் ரங்காச்சார் ஆகியோரும் இயக்குனர் பொறுப்பிலிருந்து விலகி உள்ளனர். ரிலையன்ஸ் நிறுவனத்தின் 2020ம் ஆண்டுக்க்கான முதல் காலாண்டு அறிக்கை ஏற்கனவே வெளியானது.
  • அதில், 366 கோடி ரூபாய் இழப்பு என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. தற்போது, 2வது காலாண்டில் அந்த இழப்பு அதிகரித்து, 30,142 கோடியாக மாறி இருக்கிறது. அதன் விளைவாக இந்த ராஜினாமா நிகழ்ந்திருக்கிறது.
  • முன்னதாக கடந்த அக்டோபர் மாதத்தில் இயக்குனர் மற்றும் தலைமை நிதி அலுவலராக பணியாற்றி வந்த மணிகண்டன் ராஜினாமா செய்திருந்தார்.



விண்வெளி மிகப்பெரிய வெப்ப அணுவெடிப்பு! நாசா கண்டுபிடிப்பு
  • நாசா சமீபத்தில் வெளிப்புற விண்வெளியில் இருந்து ஒரு மிகப்பெரிய வெப்ப அணுவெடிப்பை (தெர்மோநியூக்ளியர்) கண்டறிந்ததுள்ளது. இதற்கு காரணம் ஒரு தொலைதூர விண்வெளி நட்சத்திரம் என்று தெரிவித்துள்ள விண்வெளி நிறுவனத்தின் அறிக்கை, இது சூப்பர்நோவாவில் வெடித்த ஒரு நட்சத்திரத்தின் நட்சத்திர எச்சங்கள் எனவும், ஆனால் இது கருந்துளை உருவாவதற்கு தேவையானதை விட மிகவும் சிறியதாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளது. 
  • நாசா இந்த வெடிப்பைக் கண்டறிந்தது எப்படியெனில், அது அனுப்பிய சக்திவாய்ந்த எக்ஸ்-கதிர்களை, இந்த ஏஜென்சியின் சுற்றுப்பாதை ஆய்வு விண்கலமான NICER கண்டறிந்தது. ஒட்டுமொத்தத்தில் இது ஒரு சக்திவாய்ந்த நினைவூட்டலாக செயல்படுகிறது. விண்வெளி மிகவும் ஆபத்தான மற்றும் மிகவும் உலோக இடம் ஆகும்.
  • கடந்த ஆகஸ்ட் மாத வெடிப்பின் போது 20 வினாடிகளில் வெளியிடப்பட்ட அதே அளவுள்ள ஆற்றலை, நமது சூரியன் வெளியிட 10 நாட்கள் தேவைப்படும் என்று கடந்த மாதம் தி ஆஸ்ட்ரோபிசிகல் ஜர்னல் ஆய்வுக்கட்டுரையில் வெளியிடப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் இளம் வயது பட்டதாரியான நெதர்லாந்து சிறுவன்
  • நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டம் நகரை சேர்ந்த சிறுவன், 9 வயதில் பல்கலையில் பட்டம் வாங்க உள்ளார். இதன் மூலம், உலகளவில் இளம் வயது பட்டதாரி என்ற பெயர் அவருக்கு கிடைத்துள்ளது.
  • லாரன்ட் சிமன்ஸ் என்ற அச்சிறுவன், எய்ந்தோவன் தொழில்நுட்ப பல்கலையில், எலெக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் வரும் டிசம்பர் மாதம் பட்டம் பெற உள்ளார். 
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: இந்தியா ஒரு இன்னிங்ஸ், 130 ரன் வித்தியாசத்தில் வெற்றி
  • வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா ஒரு இன்னிங்ஸ், 130 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் இன்னிங்சில் 150 ரங்களுக்கு சுருண்ட வங்கதேசம் இரண்டாவது இன்னிங்சில் 213 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel