Type Here to Get Search Results !

17th NOVEMBER 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

உச்சநீதிமன்ற கொலீஜியம் குழுவில் இடம்பெற்றார் தமிழகத்தின் பெண் நீதிபதி பானுமதி
  • உச்சநீதிமன்ற கொலீஜியம் குழுவில், சுமார் 13 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, 1 பெண் நீதிபதி இடம்பெற்றுள்ளார். இவர் தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி பானுமதி.
  • இந்தக் கொலீஜியம் என்ற குழுதான், உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்வது தொடர்பாக மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்யும் சக்திவாய்ந்த அமைப்பாகும்.
  • உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன்கோகாய் ஓய்வுபெற்ற நிலையில், இக்குழுவில் இடம்பெறும் வாய்ப்பைப் பெற்றார் நீதிபதி பானுமதி.
  • இதன்படி, இனி கொலீஜியம் குழுவில் தலைமை நீதிபதி எஸ்ஏ பாப்டே, என்வி ரமணா, அருண் மிஸ்ரா, ரோகிண்டன் பாலி நாரிமன் மற்றும் ஆர் பானுமதி ஆகிய 5 நீதிபதிகள் இடம்பெற்றிருப்பர்.
  • தமிழகத்‍தைச் சேர்ந்த நீதிபதி பானுமதி, கடந்த 2014ம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் நீதிபதி அனுபவம், மாவட்ட மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் துவங்கியது. பின்னர், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, ஜார்க்கண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி என்று இவரின் பணிநிலைகள் மேல்நோக்கிச் சென்றன.
இந்திய - ஜப்பான் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் சந்திப்பு
  • ஆசியான எனப்படும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் அமைப்பின் சார்பில் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் மாநாடு தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காங்கில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் கல்ந்துக் கொண்டுள்ளனர்.
  • இந்தியாவின் சார்பில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நத் சிங் தாய்லாந்து சென்றுள்ளார். பாங்காங் நகரில் ராஜ்நாத் சிங்குக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. இதே மாநாட்டில் கலந்துக் கொள்ள ஜப்பான் நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் தாரோ கோனோ அங்கு வந்துள்ளார்.
  • இவர்கள் இருவரும் இன்று சந்திப்பு ஒன்றை நிகழ்த்தி உள்ளனர். அந்த சந்திப்பில் பாதுகாப்புத் துறையில் இரு நாடுகள் இடையே உள்ள ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து பேச்சு வார்த்தைகள் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



மார்ச் மாதத்துக்குள் ஏர் இந்தியா விற்கப்படும்: நிர்மலா சீதாராமன் தகவல்
  • பொதுத்துறை நிறுவனங்களான ஏர் இந்தியா மற்றும் பாரத் பெட்ரோலியம் நிறுவனங்கள் விற்பனை மார்ச் மாதத்துக்குள் விற்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். 
  • ஏர்-இந்தியா மற்றும் பாரத் பெட்ரோலியம் நிறுவன பங்குகளை மட்டும் விற்பதன் மூலம் நடப்பு நிதியாண்டில் ஒரு லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. 
  • இதில், ஏர் இந்தியா நிறுவனம் சுமார் 60,000 கோடிக்கு மேல் கடன் சுமையில் சிக்கித் தவிக்கிறது. கடந்த நிதியாண்டில் இந்த நிறுவனத்துக்கு இயக்க நஷ்டம் 4,600 கோடி. கடந்த ஆண்டு பெரும்பகுதி பங்குகளை விற்பனை செய்யும் திட்டம் தோல்வியில் முடிந்தது. இதை தொடர்ந்து, அனைத்து பங்குகளையும் விற்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
  • இதுபோல் பாரத் பெட்ரோலியம் நிறுவன பங்குகளின் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் 1.02 லட்சம் கோடி. இதில் மத்திய அரசின் 53 சதவீத பங்குகளை விற்பதன் மூலம் 65,000 கோடி திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. 
  • மேற்கண்ட இந்த நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்தது தொடர்பான தகவல்கள் அவ்வப்போது வெளியாகின. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானும் உறுதிப்படுத்தியிருந்தார். 
இலங்கையின் புதிய அதிபராகிறார் கோத்தபய ராஜபக்சே
  • லங்கை அதிபர் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நிறைவு அடைந்தது. இலங்கையின் தற்போதைய அதிபர் மைத்திரிபால சிறிசேனாவின் பதவிக் காலம் முடிந்ததால் அங்கு தேர்தல் நடந்துள்ளது.
  • இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே தொடர்ந்து காலையில் இருந்து முன்னிலை வகித்து வந்தார். 
  • இவருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கும் போட்டி நிலவி வருகிறது.
  • இறுதியில் இலங்கை அதிபர் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றுள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச தோல்வி அடைந்துள்ளார்.
  • 52.25 சதவீத வாக்குகளை பெற்று கோத்தபய வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சஜித் பிரேமதாசாவுக்கு 41.99 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜபக்சே 6924255 வாக்குகள் பெற்றார்.
  • ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 5564239 வாக்குகள் பெற்றார். 
தொடரை வென்றது ஆப்கானிஸ்தான்: விண்டீஸ் அணி ஏமாற்றம்
  • விண்டீசுக்கு எதிரான மூன்றாவது 'டுவென்டி-20' போட்டியில் அசத்திய ஆப்கானிஸ்தான் அணி 29 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடரை 2-1 எனக் கைப்பற்றி கோப்பை வென்றது.
  • இதன்மூலம் ஆப்கானிஸ்தான் அணி, சர்வதேச 'டுவென்டி-20' அரங்கில் விண்டீஸ் அணிக்கு எதிராக முதன்முறையாக தொடரை கைப்பற்றி புதிய வரலாறு படைத்தது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel