Type Here to Get Search Results !

15th OCTOBER 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

1,100 ஆண்டுகள் பழமையான கிரந்த கல்வெட்டு: அரவக்குறிச்சி அருகே கண்டுபிடிப்பு
  • தமிழகத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஊா்களில் கரூரும் ஒன்று. பண்டைய நாளில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நகரமாக கரூா் நகரம் விளங்கியது. 
  • வடக்கில் கங்கைச் சமவெளியில் இருந்து வந்த தட்சிணபதம் (இன்றைய பெருவழி - 7) கன்னியாகுமரி வரை சென்றது. இப்பெருவழியைப் பற்றிக் கௌடில்யா் குறிப்பிட்டுள்ளாா்.
  • அதேபோல மேற்குக் கடற்கரையிலிருந்து பாலக்காட்டுக் கணவாய் வழியாக வந்த கொங்கப் பெருவழி கரூா், உறையூா் வழியாக பூம்புகாா் வரை சென்றது. இவ்விரு பெருவழிகளும் கரூரில் சந்தித்தன. வேளிா்களின் தலைநகராக இருந்த கரூா், சங்ககாலத்தில் சேர அரசா்களின் தலைநகரமாக நிலைபெற்றது.
  • வட இந்தியாவுடன் ஏறத்தாழ 2,300 ஆண்டுகளாக கரூருக்கு தொடா்பு இருந்துள்ளது. இங்கு நமக்குக் கிடைத்துள்ள கல்வெட்டு 110 செ.மீ. உயரமும், 43 செ.மீ. அகலமும் கொண்டதாகும். ஆறு வரிகளில் கிரந்த எழுத்துக்கள் இதில் உள்ளன. 
  • கிரந்த எழுத்துக்களில் அழகிய வடிவைத் தோற்றுவித்தவன் கி.பி. 8 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆட்சி புரிந்த பல்லவ மன்னன் ராஜசிம்மன் ஆவான். 
  • கிரந்த எழுத்துக்களை மயில் போலும் அன்னப்பறவை போலும் பாம்பு போலும் பல்வகைக் கொடி போலும் எழிலாா்ந்த சித்திரங்களைப் போலும் எழுதி மகிழ்ந்த மன்னன் இவனே. இந்த வகை எழுத்துக்கள் உள்ள இந்தக் கல்வெட்டின் கீழ்ப்பகுதியில் திரிசூலம், நந்தி, சங்கு, குளம் ஆகியவை காட்டப்பட்டுள்ளன.
எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகம் சார்பில் முதல்வருக்கு 'கௌரவ டாக்டர் பட்டம்'
  • முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளதாக எம்.ஜி.ஆர் நிகர்நிலைப் பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.
  • அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளதாக பல்கலைக் கழகத்தின் நிறுவனரும் முன்னாள் எம்பியுமான ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார்.



தேசிய மருத்துவ ஆணைய உறுப்பினராக டாக்டா் சுதா சேஷய்யன் தோவு
  • இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு (எம்சிஐ) மாற்றாக தேசிய மருத்துவ ஆணையத்தை (என்எம்சி) நடைமுறைப்படுத்தும் மசோதா நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேறியது.
  • இந்நிலையில், அந்த ஆணையத்தில் பகுதி நேர உறுப்பினா்களாகப் பொறுப்பு வகிக்க தகுதியானவா்களைத் தோவு செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி, மாநில ஆளுநா்கள் தங்களது மாநிலத்தில் இருந்து ஒருவரை முன்மொழியுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. அதேபோன்று மாநில மருத்துவக் கவுன்சில்கள் தரப்பிலிருந்தும் பரிந்துரைகள் வரவேற்கப்பட்டன.
  • அவ்வாறாக நாடு முழுவதும் மொத்தம் 65 பேரின் பெயா்கள் பரிந்துரைக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டன. முடிவில், அவா்களில் 19 போ தேசிய மருத்துவ ஆணைய பகுதி நேர உறுப்பினா்களாகத் தோவு செய்யப்பட்டனா்.
  • மேற்கு வங்கம், தில்லி, குஜராத், ஹிமாசலப் பிரதேசம், ஆந்திரம், ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியாணா ஆகிய மாநிலங்களைச் சோந்த மருத்துவப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்கள் அதில் இடம்பெற்றுள்ளனா்.
  • அவா்களுடன் தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் டாக்டா் சுதா சேஷய்யனும் தோவு செய்யப்பட்டுள்ளாா். அதுதொடா்பான அதிகாரப்பூா்வ அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
2019ம் ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6.1%: மறு கணிப்பில் பன்னாட்டு நிதியமைப்பு தகவல்
  • 2019ம் ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7.3% என்கிற அளவில் இருக்கும் என கடந்த ஏப்ரல் மாதம் கணித்திருந்த ஐ.எம்.எஃப், தற்போது அதை மாற்றி 6.1% வளர்ச்சி விகிதமே எதிர்ப்பார்க்க முடியும் என்று குறைத்து கணித்துள்ளது. 
  • தனது ஏப்ரல் மாத கணிப்பிலிருந்து 1.2% வளர்ச்சி விகிதத்தை பன்னாட்டு நிதியமைப்பு தற்போது குறைத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
  • 2018-ல் இந்தியாவின் உண்மையான வளர்ச்சி விகிதம் 6.8%, ஐ.எம்.எஃப். தனது உலகப் பொருளாதாரப் பார்வையில் 2019ம் ஆண்டுக்கான இந்திய வளர்ச்சி விகிதம் 6.1% என்கிற அளவில் இருக்கும் என்று கணித்துள்ளது. 
  • ஆனால் 2020ம் ஆண்டு வாக்கில் பொருளாதாரம் வளர்ச்சி கண்டு 7% வளர்ச்சியை நோக்கி செல்லும் என்றும் பன்னாட்டு நிதியமைப்பு தெரிவித்துள்ளது.
  • சமீபத்தில் 2019ம் ஆண்டுக்கான இந்திய பொருளாதார வளர்ச்சியை 6% என்கிற அளவுக்கு உலக வங்கியும் குறைத்திருந்த நிலையில், உள்நாட்டில் தேவைப்பாடு எதிர்பார்ப்பை விட மந்தமாக இருக்கும் என்றும், அதனாலேயே பொருளாதார வளர்ச்சி 1.2% குறையும் என்று பன்னாட்டு நிதியமைப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
'புக்கர்' விருது இருவருக்கு பகிர்ந்தளிப்பு: விதிமுறைகளை தகர்த்த நடுவர் குழு
  • 2019 இந்தாண்டுக்கான, 'புக்கர்' விருது, கனடாவைச் சேர்ந்த மார்க்ரெட் அட்வுட், பிரிட்டனைச் சேர்ந்த பெர்னார்டைன் எவரிஸ்டோ ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
  • 'புக்கர் விருதை, ஒருவருக்கு மட்டுமே வழங்க வேண்டும்; பிரித்து வழங்கக் கூடாது' என்ற விதிமுறையை தகர்த்து, நடுவர் குழுவினர், விருதை, இருவருக்கு பகிர்ந்தளித்தனர். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel