Type Here to Get Search Results !

நோபல் பரிசு 2019 (NOBEL PRIZE 2019)

2019-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு 
NOBEL PRIZE FOR PHYSICS 2019
  • இயற்பியலுக்கான நோபல் பரிசு, மூன்று பேருக்கு பகிர்ந்தளிப்பதாக நோபல் கமிட்டி அறிவித்துள்ளது. ஐரோப்பிய நாடான, ஸ்வீடனை சேர்ந்த விஞ்ஞானி, ஆல்பிரட் நோபல் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும், பல்வேறு துறைகளில், சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு, நோபல் பரிசு வழங்கப்படுகிறது. 
  • ஸ்வீடன் தலைநகர், ஸ்டாக்ஹோம் நகரில், 2019ம் ஆண்டிற்கான நோபல் பரிசு அறிவிப்புகள், நேற்று முன்தினம் துவங்கியது. நேற்று முன்தினம், மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 
  • 2019ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு, ஜேம்ஸ் பீபிள்ஸ், மைக்கேல் மேயர், டிடியர் கியூலோஸ் ஆகிய 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. 
  • அண்டம் பற்றிய ஆய்வுக்காக, ஜேம்ஸ் பீபிளிஸ்க்கும், சூர்ய குடும்பத்தை போல மற்றொரு நட்சத்திர குடும்பத்தை கண்டுபிடித்ததற்காக மேயர், கியூலோஸ் ஆகியோருக்கு, நோபல் பரிசு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதில், ஜேம்ஸ் பீபிள்ஸ், வட அமெரிக்க நாடான கனடாவை சேர்ந்தவர். 
  • மற்ற இருவரும், ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தை சேர்ந்தவர்கள். பீபிள்ஸ், அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலையில் பேராசிரியராக பணியாற்றுகிறார், சுவிட்சர்லாந்தின் ஜெனிவா பல்கலையில், மைக்கேல் மேயர், கியூலோஸ் பேராசிரியர்களாக பணியாற்றுகின்றனர். பரிசுத் தொகையான, 6.58 கோடி ரூபாயில் பாதியை, பீபிள்சுக்கும், அடுத்த பாதியை, மேயர் மற்றும் கியூலோசுக்கு பகிர்ந்து வழங்கவும், அறிவிக்கப்பட்டுள்ளது.
2019ம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு 
NOBEL PRIZE FOR MEDICINE 2019

  • உடலில் ஆக்சிஜன் அளவு எவ்வளவு உள்ளது என்பதை உணர்ந்து அதற்கேற்ப அணுக்கள் செயல்படுவது குறித்து கண்டுபிடித்த, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த, மூன்று விஞ்ஞானிகள், மருத்துவத்துக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 
  • ஐரோப்பிய நாடான ஸ்வீடனைச் சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக, ஒவ்வோர் ஆண்டும், பல்வேறு துறைகளில் சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு, நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விருதுகள் அறிவிப்பு நேற்று துவங்கியது. 
  • முதலில் மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் வில்லியம் கெலின், கிரெக் சிமென்சா மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த பீட்டர் ராட்கிலிப், மருத்துவத்துக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 
  • இவர்களுக்கு, 6.5 கோடி ரூபாய் பரிசு பகிர்ந்தளிக்கப்பட உள்ளது. வரும், டிசம்பர், 10ல் நோபலின் நினைவு நாளில் நடக்கும் நிகழ்ச்சியில் இந்த விருது வழங்கப்பட உள்ளது.
  • 'உடலில் உள்ள ஆக்சிஜன் அளவை உணர்ந்துக் கொண்டு அதற்கு ஏற்ப அணுக்கள் செயல்படுவது குறித்து ஆய்வு செய்ததற்காக, இவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது. இந்த ஆராய்ச்சியின் மூலம், அனீமியா, புற்றுநோய் உள்பட பல நோய்களுக்கான சிகிச்சை அளிப்பதற்கு வழி ஏற்பட்டுள்ளது' என, தேர்வுக் குழு தெரிவித்துள்ளது. 
  • வில்லியம் கெலின், அமெரிக்காவின் ஹாவர்டு ஹூக்ஸ் மருத்துவ மையத்தில் ஆராய்ச்சி யாளராக உள்ளார்.
  • கிரெக் சிமன்சா, ஜான் ஹாப்கின்ஸ் செல் பொறியியல் மையத்தின் தசை ஆராய்ச்சி திட்ட இயக்குனராக உள்ளார். பிரிட்டனைச் சேர்ந்த பீட்டர் ராட்கிலிப், லண்டனில் உள்ள பிரான்சிஸ் கிரிக் மையத்தின் இயக்குனராக உள்ளார்.
2019 ம் ஆண்டு வேதியலில் நோபல் பரிசு NOBEL PRIZE FOR CHEMISTRY 2019
  • வேதியியல் துறையில், 2019ம் ஆண்டுக்கான நோபல் பரிசு, மூவருக்கு நேற்றுஅறிவிக்கப்பட்டது. சர்வதேச அளவில், உயரிய விருதான நோபல் பரிசு, ஆல்பிரட் நோபலின் நினைவாக, ஆறு துறைகளுக்கு வழங்கப்படுகிறது. 
  • நோபல் பரிசுடன், 6.5 கோடி ரூபாயும் வழங்கப்படுகிறது. இயற்பியலுக்கான நோபல் பரிசு, நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, வேதியலுக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது. 
  • அமெரிக்காவை சேர்ந்த, ஜான் குடெனாப், ஐரோப்பிய நாடான பிரிட்டனை சேர்ந்த, ஸ்டான்லி விட்டிங்ஹாம் மற்றும் கிழக்கு ஆசிய நாடான ஜப்பானை சேர்ந்த, அகிரா யோஷினோ ஆகியோருக்கு இந்த நோபல் பரிசு, பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. 
  • மேம்படுத்தப்பட்ட, 'லித்தியம் அயன் பேட்டரிகள்' ஆய்வில் புதிய சாதனைகள் படைத்ததற்காக, அவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது. 
  • அதிக எடை இல்லாத, சிறிய வடிவிலான, 'லித்தியம் அயன்' பேட்டரிகள், 'மொபைல் போன்கள்' முதல் மடிக்கணினிகள் மற்றும் மின்சார வாகனங்கள் வரை அனைத்திலும் பயன்படுத்தப்படுகின்றன. நோபல் பரிசு பெற்றுள்ள, அமெரிக்காவை சேர்ந்த, ஜான் குடெனாப், 97 வயதில் இந்த பரிசை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
2019ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு 
NOBEL PRIZE FOR PEACE 2019
  • ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி, ஆல்பிரட் நோபல் நினைவாக, பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு, ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. 
  • அமைதிக்கான நோபல் பரிசு, ஆப்ரிக்க நாடான, எதியோப்பியாவின் பிரதமர் அபே அகமதுக்கு வழங்கப்படுவதாக, விருது குழுவினர் அறிவித்துள்ளனர்.
  • அண்டை நாடான எரித்ரியாவுடனான, 20 ஆண்டுகளுக்கு மேல் நீடித்த எல்லை பிரச்னையை தீர்த்து வைத்ததற்காகவும், சர்வதேச ஒத்துழைப்புக்காக அவர் மேற்கொண்ட முயற்சிக்காகவும், அகமதுக்கு விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
  • மேலும், அமைதிக்கான, 100வது நோபல் பரிசு பெறுபவர் என்ற பெருமையும், அகமதுக்கு கிடைத்துள்ளது. 
2018 மற்றும் 2019ம் ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு
NOBEL PRIZE FOR LITERATURE 2018 & 2019

  • இலக்கியத்திற்கான, 2018ம் ஆண்டுக்கான நோபல் பரிசு போலந்து நாட்டின் எழுத்தாளர் ஓல்கா டோகார்சுக்கு வழங்கப்படுவதாகவும். 
  • 2019ம் ஆண்டுக்கான நோபல் பரிசு ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த பீட்டர் ஹேண்ட்கேவிற்கு வழங்கப்படுவதாகவும் நோபல் கமிட்டி அறிவித்துள்ளது.
2019-ம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு 
NOBEL PRIZE FOR ECONOMICS 2019
  • ஐரோப்பிய நாடான ஸ்வீடனைச் சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதார துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 
  • இதுவரை மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, உள்ளிட்ட பிரிவுகளுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு விட்டன.பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. 
  • இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் வசிக்கும் பொருளாதார அறிஞர் அபிஜித் பானர்ஜி அவரது மனைவியும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவருமான எஸ்தர் டப்லோ அமெரிக்காவைச் சேர்ந்த பொருளாதார அறிஞர் மைக்கேல் கிரிமர் ஆகியோருக்கு இந்த ஆண்டுக்கான பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது. 
  • இந்தப் பரிசு தங்கப் பதக்கம் 6.52 கோடி ரூபாய் ரொக்கமும் கொண்டது.உலக அளவில் வறுமை ஒழிப்பிற்கான முன்னோடி திட்டங்களை வகுத்ததால் இந்த மூவருக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளதாக நோபல் கமிட்டி தெரிவித்துள்ளது. 
  • பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற இரண்டாவது பெண் என்ற பெருமையை எஸ்தர் டப்லோ பெற்றுள்ளார். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel