Type Here to Get Search Results !

14th SEPTEMBER 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF


புதிய கல்விக் கொள்கைபடி தமிழகத்தில் 5, 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இனி பொதுத் தேர்வு
  • நாடு முழுவதும் தற்போது ஒன்றாம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் கட்டாயத் தேர்ச்சி செய்யும் முறை அமலில் உள்ளது. இதனால் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கி 5, 8-ஆம் மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்த வேண்டும் என மத்திய அரசு தெரிவித்து வந்தது.
  • இந்த நிலையில் புதிய கல்விக் கொள்கையின்படி கடந்த பிப்ரவரி மாதம் 11-ஆம் தேதி 5, 8 -ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என தகவல்கள் வெளியாகின. இதில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்க தேர்வு முடிவு வெளியான 2 மாதங்களில் உடனடித் தேர்வு நடத்த வேண்டும்.
  • இந்த நிலையில் தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தை பின்பற்றி வரும் அனைத்து பள்ளிகளிலும் நிகழாண்டு முதல் 5,8 -ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
அமலாக்கத் துறை ஐ.ஜி.யாக எச்.எம்.ஜெயராம் நியமனம்
  • அமலாக்கத் துறை ஐ.ஜி.யாக எச்.எம்.ஜெயராம் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி சனிக்கிழமை வெளியிட்டார்.
அந்நியச் செலாவணி கையிருப்பில் 100 கோடி டாலர் அதிகரிப்பு
  • நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு செப்டம்பர் 6-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 100 கோடி டாலர் (ரூ.7,000 கோடி) அதிகரித்து 42,960 கோடி டாலரை (ரூ.30.07 லட்சம் கோடி) எட்டியுள்ளது. 
  • அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு அதிகரித்ததையடுத்து செலாவணி கையிருப்பு கணிசமான அளவில் அதிகரித்துள்ளது. இது, முந்தைய வாரத்தில் 44 கோடி டாலர் குறைந்து 42,860 கோடி டாலராக காணப்பட்டது.
  • செப்டம்பர் 6-ஆம் தேதி வாரத்தில், ஒட்டுமொத்த கையிருப்பில் முக்கிய அங்கமாக உள்ள அந்நியச் செலாவணி சொத்துகள் 120 கோடி டாலர் உயர்ந்து 39,720 கோடி டாலராக இருந்தது. தங்கத்தின் கையிருப்பு 20 கோடி டாலர் குறைந்து 2,735 கோடி டாலரானது. 
  • சர்வதேச நிதியத்தில் எஸ்டிஆர் மதிப்பு மாற்றம் ஏதுமின்றி 143 கோடி டாலராகவும், நாட்டின் இருப்பு நிலை 20 லட்சம் டாலர் அதிகரித்து 362 கோடி டாலராகவும் இருந்தது என அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • நடப்பாண்டு ஆகஸ்ட் மாதத்தில்தான் அந்நியச் செலாவணி கையிருப்பானது முன்னெப்போதும் இல்லாத அளவாக 43,057 கோடி டாலரை எட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சுவிஸ்சில் காந்தி சிலையை திறந்தார் ஜனாதிபதி
  • சுவிஸ் நாட்டில் வில்நியூ நகரில் நடந்த விழாவில் ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த், காந்தி சிலையை திறந்து வைத்தார். அரசு முறைப் பயணமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சுவிஸ் சென்றார். 
  • அப்பகுதிக்கு காந்தி சதுக்கம் என்று பெயரிடப்பட்டதற்கு மக்களுக்கு நன்றி தெரிவித்தார். 



ரூ.10 ஆயிரம் கோடியில் வீடு கட்டும் திட்டம்
  • தொழில் மற்றும் ஏற்றுமதியை ஊக்கவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். 
  • மேலும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு வீடு கட்டி வழங்கிட ரூ. 10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். 
  • சிறுகுறு தொழில் முனைவோருக்கான காப்பீடு அதிகரிக்கப்படும். சிறுகுறு தொழில் துறையினருக்கு அதிக கடன் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜவுளி துறைக்கான புதிய திட்டம் 2020 ஜன.,1 ல் துவங்கப்படும். 
துபாய் பாணியில் இந்தியாவில் ஷாப்பிங் திருவிழா நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு
  • துபாய் பாணியில் ஆண்டுதோறும், இந்தியாவில், ஷாப்பிங் திருவிழா நடத்தப்படும் என்று, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
  • 6 வருடங்களில் இல்லாத அளவுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதமாக சரிவடைந்துள்ள சூழ்நிலையில் மத்திய நிதியமைச்சகம் பல்வேறு பொருளாதார ஊக்க, நடவடிக்கைகளை அறிவித்து வருகிறது.
  • துபாய் போலவே இந்தியாவில் மெகா ஷாப்பிங் திருவிழாக்கள் நடத்தி இதற்காக ஊக்கம் தரப்படும். பெரிய அளவிலான கொள்முதல் மற்றும் தொழில் இணைப்பு திட்டங்களுக்கு இது உதவும்.
  • Non-Tariff தடையை சீராக்கவும், நமது ஏற்றுமதியாளர்களுக்கு தரச்சான்று வழங்கவும், பிபிபி நடைமுறையில் ஏற்பாடுகள் செய்யப்படும்.
இளையோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சாம்பியன்
  • இளையோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இறுதி போட்டியில் வங்கதேச அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி கோப்பை வென்றது.



அரியானா விளையாட்டுப் பல்கலைக்கழக முதல் வேந்தராக கபில் தேவ் நியமனம்
  • அரியானா மாநில சட்டப்பேரவை மழைக்காலத் தொடரில் கடந்த மாதம் விளையாட்டுக்காக தனிப் பல்கலைக்கழகம் அமைக்க தீர்மானம் செய்யப்பட்டது. அந்த பல்கலைக்கழகம் அரியானா மாநிலத்தில் உள்ள சோனாபேட் பகுதியில் ராய் விளையாட்டுப் பல்கலைக் கழகம் என்னும் பெயரில் அமைக்கப்பட்டுள்ளது.
  • இந்த மாநிலத்தின் முதல் விளையாட்டுப் பல்கலைக் கழகமான ராய் விளையாட்டுப் பலகலைக் கழகத்துக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் கபில் தேவ் வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார். 
தேசிய துப்பாக்கிசுடுதல் உலக சாதனையை தானே முறியடித்த இளம் வீரர்
  • தேசிய துப்பாக்கிசுடுதல் தகுதிப் போட்டியில் இளம் வீரர் சவுரவ் சவுத்ரி உலக சாதனையை முறியடித்து அசத்தினார். ஆண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் களமிறங்கிய அவர் 246.8 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார். முன்னதாக 246.3 புள்ளிகளுடன் தான் படைத்த உலக சாதனையை அவரே முறியடித்தது குறிப்பிடத்தக்கது.
ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி: தமிழக வீராங்கனை சாதனை
  • கர்நாடக மாநிலம் உடுப்பியில் 31-வது தென்மண்டல ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி தொடங்கியது. 
  • இதில் 18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீராங்கனை பி.எம்.தபிதா 14.34 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். 
  • 7 ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடக வீராங்கனை மேகனா ஷெட்டி இந்த போட்டியில் 14.53 வினாடியில் பந்தய தூரத்தை கடந்ததே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை தபிதா தகர்த்தார். 
  • இதேபிரிவில் பெண்களுக்கான நீளம் தாண்டுதலில் தமிழக வீராங்கனை தபிதா 5.89 மீட்டர் தூரம் தாண்டி தங்கப்பதக்கம் வென்றார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel